என் மலர்
தோஷ பரிகாரங்கள்
வாஸ்து குற்றம் உள்ள வீட்டில் குடியிருக்கும் நிலை, பூமியில் நீராதாரம் இல்லாமல் போவது. கட்டிய வீடு தலைமுறைகளைக் கடந்தும் அடமானத்திலேயே இருப்பது போன்ற குறைபாடுகள் இதனால் தோன்றும்.
பூமியின் அதிர்வலைகளில் உள்ள தோஷமே பூமி தோஷமாகும். பல தலைமுறையாக முன்னேற்றமின்மை சொந்த பூமியை பல தலைமுறையாக பயன்படுத்தவும் விற்கவும் முடியாமல் தவிப்பது. வாங்கிய நிலத்தில் வீடு கட்ட முடியாத நிலை. வீடு கட்டும் பொழுது தொடர் அசம்பாவிதம் ஏற்படுவது. பாதி கட்டிய நிலையில் வீட்டு வேலை நின்று விடுவது. இல்லத்தில் துர்ஷ்ட சக்திகள் இருப்பது போன்ற உணர்வு. நீங்காத நோய், தலைமுறையாக தொடர் நோய். வாஸ்து குற்றம் உள்ள வீட்டில் குடியிருக்கும் நிலை, பூமியில் நீராதாரம் இல்லாமல் போவது. கட்டிய வீடு தலைமுறைகளைக் கடந்தும் அடமானத்திலேயே இருப்பது போன்ற குறைபாடுகள் இதனால் தோன்றும்.
பரிகாரம்
* காலி மனையாக இருந்தால் பூமியின் அதிர்வலைகளை மாற்றக் கூடிய பூமி பூஜை செய்யலாம்.
* கட்டிய வீடு கட்டிடமாக இருந்தால், வாஸ்து சாந்தி ஹோமம் நிகழ்த்தலாம்.
* செவ்வாய்க்கிழமை சிவப்பு நிற ஆடை அணிந்து விரதமிருந்து முருகனை வழிபாடு செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
* துர்க்கை கவசம் படிக்க வேண்டும்.
* செவ்வாய், சனி கிரக சம்பந்தம் இருப்பவர்கள், லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.
* காலை, மாலை நேரங்களில் வீடு, அலுவலகத்தில் விஷ்ணு சகஸ்ஹர நாமம், காயத்ரி மந்திரம், சாந்தி மந்திரம், திருக்கோளறு பதிக பாராயணம் ஒலிக்கச் செய்ய வேண்டும்.
* சென்னை அருகில் உள்ள சிறுவாபுரி முருகனை வழிபட வேண்டும்.

பூர்வீகத்தில் வாழும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை. பூர்வீகத்தில் வசிக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்றும் அதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் என்னவென்றும் பார்க்கலாம்.
பிறந்த மண்ணிற்கு என்று எப்போது தனி மகிமை உண்டு. ‘சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரு போல வருமா.’
‘பூர்வீகம்’ என்பது தந்தை, தாத்தா (தந்தையின் தந்தை), தாத்தாவின் தாத்தாக்கள் பிறந்து வாழ்ந்த ஊர். பூர்வீகத்தில் வாழும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை. தொழில், வேலைவாய்ப்பு என பல்வேறு கால சூழ்நிலை காரணமாக, பலர் சொந்த மண்ணை விட்டு வெளியேறி, வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு சென்று வசிக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே, சொந்த மண்ணில் வாழ்நாள் முழுவதும் உற்றார், உறவினர், மாமன், மச்சான், அங்காளி, பங்காளி என அனைவருடன் சிறப்பாக வாழும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள்.
ஒரு பிரிவினர் வீட்டு விசேஷம், ஊர் பண்டிகை , கோவில் கொடை என விழாக் காலங்களில் மட்டும் சொந்த ஊருக்கு சென்று வருவார்கள். வெளி மாநிலம், வெளிநாட்டில் வாழும் பலருக்கு, பூர்வீகத்திற்கு செல்லும் வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைப்பது இல்லை. பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்களில் பலரும், சென்ற இடங்களில் பல்வேறு வசதி வாய்ப்புகளுடன், பெயர் புகழோடு வாழ்ந்தாலும், வயதான காலத்திலாவது பிறந்த ஊருக்கு சென்று விட வேண்டும் என்ற விருப்பத்தோடுதான் காலம் தள்ளுகிறார்கள்.
ஒருவர் பிறந்த மண்ணில் கால் வைத்தவுடன் தனி தெம்பு , தைரியம், உற்சாகம் பிறக்கும். மனம் ஆனந்த கூத்தாடும். வாழ்ந்த வீடு, படித்த பள்ளி, விளையாடிய இடம், நண்பர்கள், திரும்பிய திக்கு எல்லாம் சொந்த பந்தம் என குழந்தை பருவத்திற்கே சென்று விடுவார்கள். சிலர் பூர்வீகமே எது என்று தெரியாத வகையில், நகர வாழ்வில் ஒன்றி போய் இருப்பார்கள். இன்னும் சிலர் பூர்வீகம் தெரிந்தாலும், அது சிறிய ஊராக.. வளர்ச்சியடையாத சிறு கிராமமாக இருந்தால் கால் பதிக்க தயங்குவார்கள்.
பூர்வீக யோகம் யாருக்கு உண்டு என்பதை ஜோதிட ரீதியாக பார்ப்போம்..
ஒருவரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான வலிமையை, அவரது பூர்வீக அமைப்பை, ஐந்தாமிடம், ஐந்தாம் அதிபதி, ஐந்தில் நின்ற கிரகம், ஐந்தாமிடத்தை பார்த்த கிரகம், ஐந்தாம் அதிபதி பெற்ற நட்சத்திர சாரம் , ஐந்திற்கு ஐந்தாம் இடமான ஒன்பதாம் இடமே நிர்ணயம் செய்கின்றன. பூர்வீகத்திற்கான காரக கிரகம் சனி பகவான் ஆவார்.
ஐந்தாம் அதிபதியானவர், லக்னத்தில் சுப கிரகத்தின் சம்பந்தம் பெற்று இருந்தால், அந்த நபர் பூர்வீகத்திலேயே பிறந்து பூர்வீகத்தில் பெயரோடும் புகழோடும் வாழ்வார்கள். தலைமைப் பதவி அவர்களைத் தேடி வரும். உற்றார் உறவினர்களோடு வாழும் பாக்கியம் பெற்றவராக அவர் திகழ்வார். குலதெய்வ அருள் மிக்கவர். குலதெய்வ கோவிலை நிர்வகிப்பவராகவும் அவர் இருப்பார்.
ஐந்தாம் அதிபதி 2-ல் இருந்தால், பூர்வீக சொத்தால் ஆதாயம் கிடைக்கும். பூர்வீகத்திலேயே தொழில் அல்லது குலத்தொழில் செய்வார். சிறிய உழைப்பில் பெரிய வருவாய் ஈட்டுவர். தாத்தா வழி சொத்தை முழுமையாக அனுபவிப்பவராக இருப்பார்.
ஐந்தாம் அதிபதி மூன்றில் இருந்தால், பிறந்த ஊருக்கு அருகில் உள்ள ( சிறு தூர பயணம்) ஊருக்கு சென்று வாழ்வார். இவருடைய பூர்வீக சொத்தில் இவருடைய சகோதரன் இருப்பார். இவர்கள் நினைத்தவுடன் பூர்வீகத்திற்கு வந்து போகும் தூரத்தில் இருப்பார்கள்.
ஐந்தாம் அதிபதி நான்கில் இருந்தால், சொந்த மண்ணை விட்டு வேறு ஊருக்குச் சென்று பிழைப்பு நடத்துவார்கள்.
ஐந்தாம் அதிபதி ஐந்தில் இருந்தால், தாத்தாவின் தொழிலை செய்து பூர்வீகத்தில் பிழைப்பு நடத்துவார்கள். பூர்வ புண்ணியம் மிகுந்தவர். வாழ்நாள் முழுவதும் புகழ் அந்தஸ்துடன் இருப்பார்கள்.
ஐந்தாம் அதிபதி ஆறில் இருந்தால், தாய் மாமன் உறவில் விரிசல் ஏற்படும். உள்ளூரில் கடனாளியாக வாழும் நிலை உருவாகும். இவர்களுடைய குழந்தைகள் வெளிநாட்டில் வாழ்வார்கள். பூர்வீக சொத்தில் வம்பு வழக்கு உண்டு.
ஐந்தாம் அதிபதி ஏழில் இருந்தால், பூர்வீகத்தை விட்டு படிப்பிற்காக வெளியூர் சென்று அங்கேயே திருமணமாகி தங்கி விடுவார்கள்.
ஐந்தாம் அதிபதி எட்டில் இருந்தால், பூர்வீகத்தை விட்டு மனக் கஷ்டத்துடன் வெளிமாநிலம், வெளிநாடு செல்வார்கள். கடைசி காலத்தில் பூர்வீகம் திரும்ப விரும்புவார்கள்.
ஐந்தாம் அதிபதி ஒன்பதில் இருந்தால், வெளியூர், வெளிமாநிலத்தில், வெளிநாட்டில் வேலை செய்வார்கள். அங்கேயே குடியுரிமை பெற்று வாழ விரும்புவார்கள்.
ஐந்தாம் அதிபதி பத்தில் இருந்தால், உள்ளூரில் வீட்டுக்கு அருகில் தொழில் செய்வார்.
ஐந்தாம் அதிபதி பதினொன்றில் இருந்தால், எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். இவருடைய பூர்வீகச் சொத்தை மூத்த சகோதரர் அனுபவிப்பார். தாய்மாமன் ஆதரவு, குலதெய்வ அனுகிரகம் உண்டு.
ஐந்தாம் அதிபதி பன்னிரெண்டில் இருந்தால், வெளிநாடு சென்று திரும்ப முடியாத நிலை ஏற்படும்.
ஐந்தாம் அதிபதி மற்றும் சனி நீச்சம், அஸ்தமனம், வக்ரம் பெற்றவர்களுக்கு பூர்வீக வாழ்க்கை மன வருத்தத்தை தரும் விதமாகவே இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் இருந்தாலும், அப்பா, மகன், அண்ணன், தம்பி அங்கா, பங்காளி உறவுகளுக்கு இடையே வம்பு மற்றும் வழக்குகள் இருக்கும். குலதெய்வ அருள் இல்லாமல் போவதற்கும், குலதெய்வம் மறந்து போவதற்கும் ஐந்தாம் அதிபதி, சனி பலம் இழந்து இருப்பதே காரணமாகும். பூர்வீகத்தை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு வராமல் இருப்பவர்களுக்கு சில வருடங்களில் குல தெய்வம் மறந்து போகும்.
ஒரு சிலருக்கு ஐந்தாம் அதிபதி பலம் பெற்று பூர்வீகத்தில் இருந்தாலும், ஐந்தாம் இடத்திற்கு ராகு -கேது சம்பந்தம் இருந்தால் அவர்கள் பூர்வீகத்தில் வசித்தாலும் சுபீட்சம் பெற முடியாது.
பரிகாரம்
ஐந்தாம் அதிபதி பலம் இழந்தவர்கள், குலதெய்வம், இஷ்ட தெய்வம், காவல் தெய்வ வழிபாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மூன்று தலை முன்னோர்களுக்கு முறையான திதி, தர்ப்பணம் தர வேண்டும்.
பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

ஜனன கால ஜாதகத்தில் சனி பலம் குறைந்து நீச்சம், அஸ்தமனம், வக்ரம், குறைந்த பாகை பெற்றிருந்தால், அந்த நபருக்கு வம்சாவளியாக எலும்பு தொடர்பான பிரச்சினைகள் இருக்கும்.
மனித உடல், எலும்புகளால் ஆன கட்டமைப்பால் உருவாக்கப்பட்டு, தசைகளால் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டமைப்பு ‘எலும்பு மண்டலம்’ எனப்படுகிறது. உடலின் முக்கிய உறுப்புகளான மூளை, நுரையீரல், இதயம் போன்ற உறுப்புகளை எலும்பு மண்டலங்கள் பாதுகாக்கிறது. எலும்புகள் சீராக இருந்தால் மட்டுமே தசைகள் மற்றும் உடல் பாகங்கள் சிறப்பாக இயங்கும்.
ஒருவருக்கு வரும் நோய்களை 3 விதமாக பிரிக்கலாம். அவை:- வாதம், பித்தம், கபம் ஆகியவை. வாத நோய்க்கான காரக கிரகங்கள் சனி, புதன், ராகு. இது காற்று மற்றும் நிலத் தத்துவத்தை கொண்டது. அதாவது செயலற்ற அல்லது குறைவான இயக்கம். உதாரணமாக பக்கவாதம், ஜீரணக் கோளாறு, வாயு பிடிப்பு, மூச்சுப் பிடிப்பு போன்றவற்றைக் கூறலாம். அத்துடன் குளிர்காலங்களில் காலை எழுந்தவுடன் அல்லது அதிக நேரம் உட்கார்ந்து விட்டு நடக்கும் போது கால் பாதத்தில் இறுகப் பிடித்துக் கொள்ளும். ஒரு சில நிமிடங்களுக்கு கால் பிடிப்பு நீடித்து பின் சகஜ நிலைக்கு வரும். இதுவும் வாதத்தில் இது ஒரு வகைதான்.
பித்த நோய்க்கு காரக கிரகம் சூரியன், செவ்வாய், கேது. இவை நெருப்புத் தன்மை கொண்டவை. உடல் சூடு, நெஞ்செரிச்சல், தொண்டை எரிச்சல், நீர்கடுப்பு, மூலம், அலர்ஜி, அரிப்பு, அல்சர், குடல்புண், கட்டி, கொப்புளம், ரத்த அழுத்தம், தலைவலி, தலைசுற்றல், வாந்தி, படபடப்பு முதலானவை பித்தம் சம்பந்தப்பட்டவைதான்.
கபத்திற்கான காரக கிரகம் சந்திரன் மற்றும் சுக்ரன். இவை நீர் தத்துவத் தன்மை கொண்டவை. சளி, மூச்சிரைப்பு, ஆஸ்துமா, அலர்ஜி, சீதளம், பேதி, ஆறாத புண், சர்க்கரை நோய், கணையம், சிறுநீரக செயல்பாடு, தைராய்டு, நுரையீரல் தொற்று ஆகியவை கபம் சார்ந்தது.
ஒருவரின் நோய் தன்மை மூன்று விதமாக இருந்தாலும் கூட, வாதம் தொடர்பான ‘ஆர்த்ரைடிஸ்’ என்று கூறப்படும் எலும்பு பிரச்சினைகளால், சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் வயது வித்தியாசம் இன்றி பாதிக்கப்படுகின்றனர். 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களை இந்த நோய் அதிகமாக பாதிக்கிறது.
ஒருவரது ஜாதகத்தில் ஆறாம் அதிபதி எந்த கிரகத்தின் சாரத்தில் இருக்கிறாரோ, அதைப் பொறுத்து அவர்களுடைய நோயின் தன்மையை தீர்மானிக்கலாம். ராகுவோடு இணைந்த கிரகத்தின் உடல் உள்ளுறுப்பு அதிகமாக வேலை செய்யும். கேதுவோடு இணைந்த கிரகத்தின் உடல் உள்ளுறுப்பு சரியாக வேலை செய்யாது.
ஒரு சிலருக்கு எலும்பு தொடர்பான பிரச்சினைகள், குறுகிய காலத்திற்கு சிறிய பாதிப்பை தரும் விதமாக இருக்கும். ஒரு சாரருக்கு நீண்ட நாள் பிரச்சினையாகவும், அறுவை சிகிச்சை செய்யும் நிலையையும் ஏற்படுத்திவிடும். வயது வேறுபாடு இன்றி கடுமையாக ஒருவரை தாக்கும் மூட்டு, எலும்பு தொடர்பான நோய்கள் ஏற்பட காரணம் சனி பகவானே. சராசரியாக ஒரு மனிதன் தன்னுடைய ஆயுள் காலத்தில் குறைந்த பட்சம் 30 ஆண்டுகள் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டகச் சனி, அர்த்தாஷ்டமச் சனி என சனி பகவானின் கட்டுப்பாட்டில்தான் இருக்க முடியும். ராசி மண்டலத்தை சுற்றி வர 30 ஆண்டு கால அவகாசம் எடுக்கும். இவர் உடல் உறுப்பில் கால்களை குறிப்பவர்.
கோச்சார சனி பகவான், ஜனன கால ஜாதகத்தில் உள்ள கிரகங்களுடன் சம்பந்தம் பெறும் போது, தசாபுத்திக்கு ஏற்ப எலும்பு தொடர்பான பிரச்சினைகள் இருக்கும். ஜனன கால ஜாதகத்தில் சனி பலம் குறைந்து நீச்சம், அஸ்தமனம், வக்ரம், குறைந்த பாகை பெற்றிருந்தால், அந்த நபருக்கு வம்சாவளியாக எலும்பு தொடர்பான பிரச்சினைகள் இருக்கும்.
ஜனன கால ஜாதகத்தில் சனி வலுப் பெற்றவர்களுக்கு, கோச்சாரத்தில் சனியுடன் ராகு -கேதுக்கள், சூரியன், செவ்வாய் சம்பந்தம் பெறும்போது தசாபுத்திக்கு ஏற்ப குறுகிய காலத்திற்கு பாதிப்பு இருக்கும்.
சனி பகவான், ஜனன ஜாதகத்தில் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பத்தில் இருக்கும் நபர்களுக்கு, உடலில் எலும்பு பாதிப்பு இயல்பாகவே இருக்கும். லக்னம் பலம் பெற்றவர்களுக்கு பாதிப்பு சிறிதாக இருக்கும். வைட்டமின் ஈ குறைந்தவர்களுக்கும் எலும்பு தொடர்பான பாதிப்பு இருக்கும்.
அறுவை சிகிச்சை மூலம் நிவாரணம் பெற விரும்புபவர்கள், கோச்சார குரு லக்னாதிபதிக்கு சாதகமாக இருக்கும் காலகட்டத்தில் சிகிச்சை செய்வது நல்லது.
பரிகாரம்
உடலில் காற்றுத் தன்மை மிகுதியாக உடையவர்கள், எளிதில் செரிமானமாகும் உணவை உண்ண வேண்டும். தினமும் உணவில் நல்லெண்ணெய் சேர்க்க வேண்டும். இது எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தை உடலுக்கு தரும். பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.
சனிக்கிழமை காலை 9 -10.30 மணி வரை வரும் ராகு வேளையில், இனிப்பு கலந்த எள் உருண்டையை கருப்பு நிற பசு மாட்டிற்கு தர வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை வரும் ராகு வேளையில் ராகுவின் அதிதேவதை துர்க்கையை பூஜிக்க வேண்டும்.
கருப்பு நிற திராட்சை பழ ரசத்தை, அமாவாசை அன்று காளி அம்மனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். கருப்பு நிற உளுந்தை தானம் தர வேண்டும்.

சித்ரா பவுர்ணமியான இன்று ஒவ்வொரு ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய வழிமுறைகளும், எந்த தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
சித்ரா பவுர்ணமி நாளில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய வழிமுறைகள் வருமாறு:
மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வத்தை வழிபட்டு, ஏழைகளுக்கு சாம்பார் சாதம் தானமாக கொடுக்க வேண்டும்.
ரிஷப ராசிக்காரர்கள் வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்களுக்கு, கல்கண்டு சாதம் தானம் செய்து ஆசி பெற தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.
மிதுன ராசிக்காரர்கள் நடராஜர் வழிபாட்டுடன், ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு பணம் தானம் அல்லது நோட்டு, புத்தகம் பேனா கொடுப்பது நல்லது.
கடக ராசிக்காரர்கள் சத்திய நாராயணருக்கு விரதம் இருந்து வழிபட்டு, பச்சரிசியால் செய்த உணவை தானம் செய்தால் வறுமை நீங்கி செல்வம் சேரும்.
சிம்ம ராசிக்காரர்கள் சிவ வழிபாடு செய்வதுடன் தந்தை மற்றும் வயது முதிர்ந்த பெரியோர்களின் விருப்பங்களை நிறைவு செய்து நல் ஆசி பெற்றால் கோடி புண்ணியம் தேடி வரும்.
கன்னி ராசிக்காரர்கள் மகா விஷ்ணுவை வழிபட்டு, ஏழை நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை வாங்கி கொடுத்தால் நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.
துலாம் ராசியினர் செந்தாமரை பூவில் அமர்ந்த மகாலட்சுமியை வழிபட்டு ஏழை எளியோர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் தானம் செய்தால் மன அமைதி ஏற்படும்.
விருச்சிக ராசிக்காரர்கள் முருகனை வழிபட்டு பசு மாட்டுக்கு 9 மஞ்சள் வாழைப்பழம் தானம் தர, வறுமை நீங்கி செல்வம் சேரும்.
தனுசு ராசிக்காரர்கள் லட்சுமி நரசிம்மரை பானகம் படைத்து வழிபட வளர்ச்சி கூடும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் அன்பளிப்பாக தர வேண்டும்.
மகர ராசிக்காரர்கள் சிவன் கோவில் மூல ஸ்தானத்தில் எரியும் விளக்கிற்கு நல்லெண்ணெய் தானம் தர, தடைபட்ட காரியம் கூடி வரும்.
கும்ப ராசிக்காரர்கள் வராகரை வழிபடுவதுடன் ஆதரவற்ற முதியவர்களை பராமரிக்கும் இல்லங்களுக்கு உணவு, உடை தானம் தர, மன நிம்மதி கிட்டும்.
மீன ராசிக்காரர்கள் பைரவர் வழிபாட்டுடன் விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம் விவசாய தளவாட பொருட்கள் வாங்கி கொடுத்து விவசாயிகளின் வாழ்வா தாரத்தை உயர்த்த, உங்களின் பாவம் நீங்கி கூடுதல் நன்மை உண்டாகும்.

தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றமின்மை, அலுவலகத்தில் சக உழியர்களிடம் கருத்து வேறுபாடு, தொழிலாளிகள் பிரச்சினை, தொடர் பண இழப்பு, தொழில் நட்டம் ஏற்படும்.

* சனிக்குரிய பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில், அன்னதானம், வஸ்திர தானம், நல்லெண்ணெய் தானம், இரும்புச் சட்டி தானம் செய்வது சிறப்பு.
* பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.
* சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி வணங்கலாம்
* பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், தொழிலாளிகள், துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவி நல்ல பலன் தரும்.

திருமணத் தடை, திருமணத்திற்கு பிறகு கணவன் - மனைவி கருத்து வேறுபாடு, ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம், மன நிறைவு இல்லாத மண வாழ்க்கை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

* சூரியன், ராகு-கேது சேர்க்கையால் திருமணத் தடையை சந்திப்பவர்கள், ஸ்ரீ காளகஸ்தி சென்று காளகஸ்தீஸ்வரரையும், ஞானப் பூங்கோதை தாயாரையும் வழிபட வேண்டும்.
* சூரியன், சனி சேர்க்கையால் திருமணத்திற்கு முன்-பின் பிரச்சினை இருந்தால் சனிக்கிழமைகளில் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்தால் நலம் உண்டாகும்.
* சுக்ரன், கேது சேர்க்கை இருப்பவர்கள், சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலப் பொருட்களான வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பூ, மஞ்சள், குங்குமம் கொடுத்து ஆசி பெற வேண்டும்.
* செவ்வாய், கேது சேர்க்கை இருப்பவர்கள் அரச மரத்தடியில் இருக்கும் சர்ப்ப சிலைகளை செவ்வாய்க்கிழமை வழிபட வேண்டும்.
* சனி, ராகு-கேது சம்பந்தம் இருந்தால், ராகு கால வேளையில் பிரத்யங்கரா தேவியை வழிபட பலன் கிடைக்கும்.

திருமணத் தடை, குழந்தை பாக்கியமின்மை, குழந்தைகளுக்கு படிப்பில் கவனக்குறைவு, அடிக்கடி விபத்து கண்டங்களை சந்திப்பது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் சர்ப்ப தோஷத்திற்கான பரிகாரத்தை பார்க்கலாம்.
திருமணத் தடை, குழந்தை பாக்கியமின்மை, குழந்தைகளுக்கு படிப்பில் கவனக்குறைவு, காதல் கலப்பு திருமணம் நிகழ்வது, அடிக்கடி விபத்து கண்டங்களை சந்திப்பது, எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவன் போல் வாழ்வது போன்ற பிரச்சினைகள் இருக்கும்.
பரிகாரம்
* தினமும் ராகு வேளையில் துர்க்கை, காளி, பிரத்யங்கரா தேவி வழிபாடு சிறப்பான பலன் தரும்.
* வளரும் புற்றிற்கு சென்று வழிபாடு செய்தல்
* பஞ்சமி திதியில் கருட வழிபாடு
* சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடலாம்.
* ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி, வீட்டின் வாசலில் தொங்க விட வேண்டும்.

புத்திர பாக்கியம் கிடைப்பதில் தடை, குழந்தைகளுக்கு ஆரோக்கிய குறைவு மற்றும் குழந்தைகளால் மன வருத்தம் ஏற்படுவது போன்றவை இந்த தோஷத்தால் உண்டாகும். இதற்கான விரைவில் பலன் தரும் பரிகாரத்தை அறிந்து கொள்ளலாம்.
புத்திர பாக்கியம் கிடைப்பதில் தடை, குழந்தைகளுக்கு ஆரோக்கிய குறைவு மற்றும் குழந்தைகளால் மன வருத்தம் ஏற்படுவது போன்றவை இந்த தோஷத்தால் உண்டாகும்.
பரிகாரம்
* முறையான குலதெய்வ வழிபாடு, பித்ருக்கள் பூஜை நல்ல பலன் தரும்.
* சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை, கணபதி ஹோமம் செய்து வழிபடலாம்.
* பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்னும் மும்மூர்த்திகளின் சொரூபம் அரச மரம். அந்த மரத்தை வணங்குவதால் பாவமும், நோய்களும் நீங்கும்.
* குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் காலை வேளையில் நீராடிவிட்டு அரச மரத்தை வலம் வந்தால், அந்த மரத்திலிருந்து வெளியாகும் பிராண வாயுவின் சக்தியால் கர்ப்பக் கோளாறுகள் நீங்கி குழந்தை பாக்கியம் ஏற்படும். அதேபோல ஆண்களும் வலம் வந்தால், அவர்களுக்கு சுக்ல விருத்தி அதிகமாகும்.

வாழ்க்கையில் வெற்றி பெற, சாஸ்திரத்தில் சில வழிபாட்டு பூஜை முறைகள் செய்துவைக்கப்பட்டுள்ளன. முழுமையான ஆர்வம் மற்றும் ஈடுபாட்டுடன் வழிபாட்டு முறைகளை கையாண்டால், பரிபூரண பலன் கிடைக்கும்.
அதிகாலையிலேயே குடும்ப உறுப்பினர்களிடையே சண்டை, கருத்து வேறுபாடு, மன உளைச்சல், தூக்கமின்மை, பொருளாதார இழப்பு, பணப் பற்றாக்குறை போன்றவை இருக்கும்.
பரிகாரம்
* வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் குத்துவிளக்கு ஏற்றி மகாலட்சுமி வழிபாடு, பூஜை நடத்த வேண்டும்.
* வளர்பிறை ஏகாதசியன்று கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று, அவல் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
* வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்குள், லலிதா சஹஸ்ஹர நாமப் பாராயணம், குங்கும அர்ச்சனை செய்ய மாற்றமும் ஏற்றமும் உண்டு.

வீட்டில் உள்ள நெகடிவ் எனர்ஜியைப் போக்கவும் கண் திருஷ்டியைப் போக்கவும், ஆக்க பூர்வமான பாஸிடிவ் சக்தியை உருவாக்கவும் இந்த பரிகாரத்தை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.
வீட்டில் சுத்தம் மிகவும் அவசியம். அளவுக்கு மீறிய கடன்கள், வருமானமின்மை, வரவுக்கு மீறிய செலவு ஆகிய அனைத்திற்கும் வீட்டில் இருக்கும் அழுக்குகளே காரணம். இவை நெகடிவ் எனர்ஜியின் பெட்டகங்கள். பழைய பேப்பர்கள், பால் பைகள், கிழிந்த துணிகள், இதர தேவையற்ற குப்பைகள் ஆகியவற்றைச் சேர்த்து பின்னால் வெளியில் விற்பதால் வரும் வருமானம் பத்து ரூபாய் என்றால் அதனால் இழக்கும் பணமோ ஆயிரம் என்பதை நினைவில் கொண்டு இவற்றைச் சற்றும் தாமதிக்காமல் அகற்றி விட வேண்டும்.
வீட்டில் உள்ள நெகடிவ் எனர்ஜியைப் போக்கவும் கண் திருஷ்டியைப் போக்கவும், ஆக்க பூர்வமான பாஸிடிவ் சக்தியை உருவாக்கவும் தினமும் வீட்டு அறைகளை நீரால் மெழுகித் துடைக்கும் போது அந்த நீரில் சிறிது கல் உப்பைச் சேர்த்தல் வேண்டும். (பவுடர் உப்பு அல்ல) ரத்தினக் கற்களை அணியுங்கள் என்பது சரகர் தரும் அறிவுரை. அவரவர் தேவைக்குத் தக்க உரிய ரத்தினக் கற்களையும் உபரத்தினங்களையும் தேர்ந்தெடுத்து அணிதல் வேண்டும்.

சேலம் மாவட்டம் கண்ணூர் மாரியம்மன் கோவிலில் உள்ள அம்மனின் முன்னிலையில் தொட்டில் கட்டி, இங்குள்ள சஞ்சீவி தீர்த்தத்தை தெளித்து, அருகிலிருக்கும் தொட்டிலை ஆட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சேலம் மாவட்டம் கண்ணூரில் மாரியம்மன் கோவில் ஒன்று இருக்கிறது. இந்த ஆலயத்தின் கருவறையில் ஒரே பீடத்தில் வலதுபுறத்தில் மாரியம்மனும், இடதுபுறத்தில் காளியம்மனும் அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள்.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், இந்த அம்மனின் முன்னிலையில் தொட்டில் கட்டி, இங்குள்ள சஞ்சீவி தீர்த்தத்தை தெளித்து, அருகிலிருக்கும் தொட்டிலை ஆட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அதே போல் பேச்சுக் குறைபாடு உள்ளவர்கள், அம்பாளுக்கு மணி கட்டி, மாவிளக்கு எடுத்தால் குறைகள் நிவர்த்தியாகும் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறுபிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.
* நலிந்தோருக்கு உதவி செய்தால், மறு பிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும்.
* ஆடைகள் தானம் கொடுத்தால், நோய்கள் நீங்கும்.
* பழங்கள் தானம் கொடுத்தால், உயர் பதவிகள் கிடைக்கும்.
* நீர் மோர், பானகம் போன்றவை கொடுத்தால், கல்வி அறிவு பெருகும்.
* தானியங்கள் தானம் கொடுத்தால், அகால மரணம் ஏற்படாது.
* தயிர் சாதம் அளித்தால், பாவவிமோசனமும், வாழ்வில் முன்னேற்றமும் ஏற்படும்.
* புண்ணிய நதியில் நீராடி, இறைவனை தொழுதால் வாழ்வில் குறையாத செல்வம் பெருகும்.