என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    வருடம் ஒரு முறை என்ன வேலை இருந்தாலும் ஒதுக்கி விட்டு தகப்பன் வழி அனைத்து இரத்த சம்பந்தங்களும் ஒன்று சேர்ந்து குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள். கஷ்டங்களும் கவலைகளும் பறந்து போகும்.
    ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களையும் பித்ரு பூர்வ புண்ய ஸ்தானத்தின் காவல் தெய்வங்களான உங்கள் குல தெய்வம் தீர்க்கும்.

    உங்களுக்கு 365 நாட்கள் என்பது உங்களின் குல தேவதைகளுக்கு ஒரு நாள். அவர்கள் உங்களிடம் கேட்பது லட்ச லட்சமாய் பணமில்லை. உங்கள் கையால் ஒரு சாதாரண அபிஷேகம். ஒரு வஸ்த்ரம். ஒரு கவளம் அரிசி வெல்லம் கலந்த உணவு.

    வருடம் ஒரு முறை என்ன வேலை இருந்தாலும் ஒதுக்கி விட்டு தகப்பன் வழி அத்துனை ரத்த சம்பந்தங்களும் ஒன்று சேர்ந்து அதை செய்யுங்கள். கஷ்டங்களும் கவலைகளும் பறந்து போகும்.

    கோள்களால் ஏற்படும் தோஷங்களெல்லாம் குலதெய்வத்தால் குறைவில்லாமல் தீர்ந்து போகும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்ய வைக்கும்.
    பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும், கடன் தொல்லை நீங்கவும், தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் ஆலயத்தில் உள்ள லட்சுமி நரசிம்மருக்கு 12 புதன்கிழமை தொடர்ந்து 2 நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் காரிய சித்தி உண்டாகும் என்பது ஐதீகம்.
    தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப் பெருமாள் ஆலயத்தில் மூலவரின் பின்புறம் லட்சுமி நரசிம்மர் சன்னதி உள்ளது. பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும், கடன் தொல்லை நீங்கவும், வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு கிடைக்கவும், மன அழுத்தம் நீங்கவும் 12 புதன்கிழமை தொடர்ந்து 2 நெய் தீபம் ஏற்றி, லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் காரிய சித்தி உண்டாகும் என்பது ஐதீகம்.

    பிரகலாதனை காக்க நரசிம்ம அவதாரம் எடுத்த பெருமாள், இரணியனை வதம் செய்தது பிரதோஷ காலம் என்பதாலும், சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்ததாலும், பிரதோஷம் மற்றும் சுவாதி நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலுக்கு வந்து கடற்கரையில் நீராடி சுயம்புலிங்க சுவாமியை மனமுருக வழிபடுவதாலும், எந்த நோயாக இருந்தாலும் 41 நாட்கள் கடலில் நீராடி சுயம்புலிங்க நாதரை தொழுதால் தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
    நெல்லை மாவட்டத்தில் தூத்துக்குடி&கன்னியாகுமரி சாலையில் தூத்துக்குடியில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவிலும், திருச்செந்தூரில் இருந்து சுமார் 38 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது உவரி ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி கோவில்.

    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலை குல தெய்வமாக கொண்டுள்ள லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உவரிக்கு வந்து வழிபாடுகள் செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர். குடும்பத்திலும், தொழிலிலும் மேன்மையைத் தருவதாக இந்த குல தெய்வ வழிபாடு அமைந்துள்ளது. பங்குனியில் குல தெய்வத்தை உவரிக்கு வந்து வழிபட்டால் தான் மனதில் நிம்மதி பிறக்கும் என்று லட்சோப லட்சம் குடும்பத்தினர் நம்புகிறார்கள். இதனால் பங்குனி மாதம் முழுவதும் உவரியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

    இக்கோவிலுக்கு வந்து கடற்கரையில் நீராடி சுயம்புலிங்க சுவாமியை மனமுருக வழிபடுவதாலும், இந்த ஊற்று நீரை பருகுவதாலும் தீராத வயிற்றுவலியால் அவதிப்படுபவர்கள் மற்றும் மனநிலை சம்பந்தமான நோய்களை கொண்டவர்களின் நோய் பாதிப்புகள் நீங்குவதாகவும், துஷ்ட சக்திகளின் பாதிப்புகள், கிரக தோஷங்கள் போன்றவை நீங்கி வாழ்க்கை நிலை மேம்படுவதாகவும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைப்பதாகவும் அனுபவம் வாய்ந்தவர்களின் வாக்காக இருக்கிறது.  

    எந்த நோயாக இருந்தாலும் 41 நாட்கள் கடலில் நீராடி சுயம்புலிங்க நாதரை தொழுதால் தீர்ந்துவிடும்.  நொண்டி, கூன், குருடு உள்ளிட்ட பிரச்சினைகளும் இவரை வழிபட்டால் தீருகிறது.  கல்யாண வரம் வேண்டி வருவோருக்கு உடனடியாக திருமணம் நடைபெறும்.

    சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது சொந்த வீடு ஒருவருக்கு நிலைக்க வேண்டும் என்றால் ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் வலுவான நிலையில் இருக்கவேண்டும்.
    சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் நிறைவேறுமா? வீடு வாங்குவதற்கு வசதி இருந்தாலும் ஜாதகத்தில் அவர் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற யோகம் வேண்டும். சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது சொந்த வீடு ஒருவருக்கு நிலைக்க வேண்டும் என்றால் ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் வலுவான நிலையில் இருக்கவேண்டும்.

    சிலர் மூதாதையர் சேர்த்து வைத்த சொத்துக்களை வைத்துக் கொண்டு சொந்த வீட்டில் வாழும் யோகத்தைப் பெறுகிறார்கள். ஒரு சிலர் சிறுக சேமித்து ஒரு சொந்த வீட்டிற்கு அதிபதியாகவும் ஆகிவிடுகிறார்கள்.

    பரிகாரங்கள் :

    ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் பலமற்று இருந்தால் வீடு அமையும் யோகம் தடைப்படும். அத்தடை நீங்க, சிவப்பு நிற மலர்களால் செவ்வாயை பூஜித்து வர விரைவில் சொந்தவீடு அமையும்.

    நிலம் அமைந்து, வீடு அமைய தாமதமாக ஆகும்போது ஒரு முறை “திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவரை” வணங்கி “ஓம் சரவண பவ” எனும் மந்திரத்தை உச்சரித்து, ஆலயத்திலே ஆறு மணி நேரம் தங்கி, அந்தக் கடல் நீரை எடுத்து வந்து மஞ்சளுடன் கலந்து, நீங்கள் வீடு கட்டுகின்ற நிலத்தைச் சுற்றி நீங்கள் தௌpக்க வேண்டும்.

    வீடு அமையாதவர்கள், நிலங்களே கிடைக்காதவர்கள், வீடு அமைவதே கஷ்டம் என்று ஏங்குபவர்கள் ஒரு முறை “சிறுவாபுரி முருகனை” ஒன்பது செவ்வாயன்று வணங்கி வர வீடு கட்டும் கனவு நிஜமாகும்.

    நிலம், வீடுவாங்கு யோகம் அமைய பூமிக்காரகனான செவ்வாயின் அதிதேவதையான சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வரவேண்டும்.

    வீடு, வாசல் இல்லாமல் தெருத்தெருவாக அலைபவர்களுக்கு செம்புப் பாத்திரங்களைத் தானம் கொடுக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் வீடு வாங்குவீர்கள்.

    ராம நாமத்தை செங்கல்லில் எழுதி பெருமாள் ஆலயம் அமைக்கக் கொடுத்தால் வீடு வாங்கவும், கட்டவும் முடியும் என்பது ஐதீகம்.
    கணவன் மனைவி உறவுகள் நன்கு இறுக்கம் பெற, தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோவிலில் உள்ள கார்த்தவீரியார்ஜுனருக்கு எலுமிச்சை மாலை சாத்தி, நெய் தீபம் ஏற்றி வேண்டினால் நினைத்த கரரியம் சித்தியாகிறது.
    மதுரை அழகர்கோவிலுக்கு இணையான பெருமை பெற்ற திருத்தலம் தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோவில். இந்த கோவில் கட்டப்பட்டு சுமார் 1000 வருடங்கள் ஆகும். அட்சுத தேவராயர் என்ற விஜய நகர ஆட்சி வழி வந்த மன்னர் கட்டியதாக வரலாறு உள்ளது. ஒவ்வொரு திருவோணநட்சத்திரத்து அன்றும், சுவாமியின் பாதத்தில் தீபம் ஏற்றி வைத்து பூஜை செய்யப்படுகிறது.உற்சவமூர்த்தியை எடுத்து வலம் வரும் வைபவம் சிறப்பாக நடத்துகின்றனர். அப்பொழுது, சுவாமியின் முன்பு ஏற்றி வைத்த தீபம் முன்னே எடுத்து வரப்படும்.இந்த தரிசனத்தைக் காணும் பக்தர்கள் அனைவரும் பாவ விமோசனம் பெறுவர் என்பது உறுதி என்கின்றனர்.

    இந்த தலத்திலுள்ள அம்மையின் பெயருக்கு ஏற்றாற்போன்று, இவருக்கு,புடவை சாத்தி, பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து, அபிஷேகம் செய்ய,திருமணவரம், குழந்தை பாக்கியம், மற்றும், கல்வி அபிவிருத்தி, வியாபாரத்தில் நல்ல வளர்ச்சிகிட்டும் என்கின்றனர்.பக்தர்கள் பலர் இதைவேண்டியே இந்த கோவிலுக்கு வருவதாக கூறுகின்றனர்.

     இறை அருள் பெற்ற இடமாக இருப்பதால்,அனேக பலன்கள் கிடைக்கப்பெறுகின்றனர். இங்கு வரும் பக்தர்கள். தங்களின் உறவுகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் மறைந்து போக, தொலைந்து போன பொருட்கள் கிட்ட, கணவன்மனைவி உறவுகள் நன்கு இறுக்கம் பெற, இங்குள்ள, கார்த்தவீரியார்ஜுனருக்கு எலுமிச்சை மாலை சாத்தி, நெய் தீபம் ஏற்றி வேண்டினால் நினைத்த கரரியம் சித்தியாகிறது. வியாழன் தோறும், ஆண்டாள் இங்கு எழுந்தருளும் பொழுது வரன் தேடும் கன்னியர்களும் காளையர்களும், மஞ்சள் பொடி அபிஷேகம் செய்ய நல்ல வரன் கிட்டும் என்பது நம்பிக்கை. வெளிநாட்டு வரன் வேண்டினாலும் கிடைக்கும் என்கின்றனர். பொருளாதார சிக்கல்களை களைபவராக சொர்ண பைரவர் அருள் பாலிக்கிறார்.
    ஒரு வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் இருந்தால், அந்த வீட்டில் மன சஞ்சலங்கள் அதிகரிக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நல கோளாறுகள், சண்டை சச்சரவு ஏற்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
    உலகில் மனிதராய் பிறந்த அனைவரும், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவற்றை சந்திக்கும் போது சில நிலைகளில் ஆனந்தமும், பல நிலைகளில் சங்கடங்களும் ஏற்படுகிறது.

    இந்த முயற்சியில் ஒரு சிலருக்கு மனச் சோர்வு ஏற்பட்டு, எதிர்மறை சிந்தனை மிகுதியாகிவிடும். மேலும் பார்க்கும் வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது. எதிலும் எளிதில் முடிவு எடுக்க முடியாமல் திணறுவது, ஒரு செயலை செய்வதா? வேண்டாமா? என இருவிதமான மனநிலை போன்றவற்றை ஏற்படுத்தும்.

    கோட்சார ராகு, கேது, சனி ஆகிய கிரகங்கள் சந்திரனுடன் சம்பந்தம் பெறும் போதும், கோட்சார சந்திரன் ராசிக்கு எட்டில் மறையும் போதும், ராகு கேது, சனியை கோட்சார சந்திரன் தொடும் போதும், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி, ஜென்ம ராகு, கேது ஆகிய காலகட்டங்களில் எதிர்மறை சிந்தனை அதிகம் உருவாகும்.

    ஒரு வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் இருந்தால், அந்த வீட்டில் மன சஞ்சலங்கள் அதிகரிக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நல கோளாறுகள், சண்டை சச்சரவு ஏற்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    தொடர் பிரார்த்தனைகள் வீட்டில் நேர்மறை ஆற்றலை நூறு சதவிகிதம் அதிகப்படுத்தும். வீட்டில் அனைத்து ஜன்னல்களையும் நன்கு திறந்து வைக்க வேண்டும். நல்ல காற்றோட்டமும் சூரிய ஒளியும் உள்ளே வரும் போது, எதிர்மறை ஆற்றல்கள் உள்ளே புகுவது தடுக்கப்படும்.

    வீட்டில் தேவையற்ற பழைய பொருட்களை சேர்க்கக் கூடாது. மிகக் குறிப்பாக ஓடாத கடிகாரம், பழுதான தொலைக்காட்சி, தொலைபேசி, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இருந்தால் எதிர்மறை ஆற்றலை வீட்டிற்குள் ஈர்த்துக்கொள்ளும்.

    வீட்டிற்குள் வெறும் கால்களோடு நடந்தால், உடல் ஆற்றல் சமன்படுத்தப்படுவதுடன், உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை பூமி ஈர்த்துக் கொள்ளும். சமையல் அறையில் அடுப்புக்கு கீழே தண்ணீர் பிடித்து வைக்கக்கூடாது.

    அன்றாட உணவில் கல் உப்பை அதிகம் சேர்த்து சாப்பிடக் கூடாது. மாறாக வீட்டை துடைக்கும் போதோ, கழுவும் போதோ, ஒரு கை கல் உப்பை வாளியில் போட்டு அந்த நீரை உபயோகிப்பதும் அதிக பலனைத் தரும். கல் உப்பு கரைத்த நீரில் குளித்தால் உடலில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை சுத்தப்படுத்தும்.

    தினமும் அதிகாலையில் நடைபயிற்சி செய்வது, நேர்மறை ஆற்றல்களையும், புத்துணர்வையும் அளிக்கவல்லது. நமது எண்ணம், செயல், சிந்தனை, நடத்தை, பேச்சு, நட்பு வட்டாரம் அனைத்தையும், நேர்மறையாக, நேர்மையாக, தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வீட்டைச் சுற்றி தூய எண்ணத்தையும், அதிர்வலைகளையும் தரும் மரம், செடி, கொடிகளை வளர்ப்பது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
    சந்திராஷ்டம நாட்களில் முக்கியமான செயல்களை செய்ய வேண்டும் என்று நினைத்தால் கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்யலாம்.
    சந்திராஷ்டம நாட்களில் முக்கியமான செயல்களை செய்ய வேண்டும் என்று நினைத்தால் கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்யலாம்.

    நவக்கிரகங்களில் முக்கியமானவர் சந்திரன், இவர் மனதுகாரகன்.மனிதனின் மனநிலைகள் இவற்றின் சஞ்சாரத்தை வைத்தே அமைகிறது. ராசிகட்டத்தில் இவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அதுதான் ஜென்ம ராசியாகும்.

    ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டம்.ஒவ்வொரு ராசியிலும் சந்திரன் இரண்டேகால் நாட்கள் சஞ்சாரம் செய்வார்.

    மேஷ ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து, சுப்ரமணியர் வழிபாடு செய்து அதன் பிறகு காரியங்களைச் செய்யத் தொடங்கலாம். ரிஷப ராசிக்காரர்கள் மொச்சை தானம் செய்து மகா லட்சுமியை வழிபட்ட பிறகு செயல்படலாம்.

    மிதுன ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டதும் காரியங்களைத் தொடங்கலாம்.

    கடக ராசிக்காரர்கள் பச்சரிசி தானம் செய்து, அம்பிகை வழிபாடு முடித்து காரியத்தை தொடங்கலாம்.

    சிம்ம ராசிக்காரர்கள் அவல் தானம் கொடுத்து, சிவன் வழிபாடு செய்த பிறகு காரியத்தைக் தொடங்கலாம்.

    கன்னி ராசிக்காரர்கள் தேன் தானம் செய்து, கண்ணபிரானை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

    துலாம் ராசிக்காரர்கள் சர்க்கரை தானம் செய்து, சாந்தரூப அம்பிகையை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

    விருச்சிக ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து அங்காரகனை வழிபட்டு காரியங்களை தொடங்கலாம்.

    தனுசு ராசிக்காரர்கள் பேரீச்சம் பழம் தானம் செய்து, குருபகவானை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

    மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் எள் போன்ற கருப்பு நிற உணவுப்பொருட்களை தானம் செய்து, அனுமனை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

    மீன ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து, பைரவரை வழிபட்ட பிறகு காரியங்களைத் தொடங்கலாம். வழிபாட்டிற்குப் பிறகு சந்திராஷ்டம நாட்களில் தவிர்க்க முடியாத காரியங்களைச் செய்தால் ஓரளவாவது தடைகள் அகலும். தக்க விதத்தில் வெற்றியும் வந்து சேரும்.
    நம்முடைய முன்னோர்கள் விலங்குகளுக்கு உணவு கொடுப்பதால், நாம் செய்த பாவங்கள் அழியும் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் எந்தெந்த விலங்குகளுக்கு நாம் உணவு அளித்தால் கிரகப் பிரச்சனை, தோஷங்கள் தீரும் என்பதை இங்கு பார்ப்போம்.
    நம்முடைய முன்னோர்கள் பசுவிற்கு கீரை, பழங்கள் உள்ளிட்டவற்றை கொடுப்பதால், நாம் செய்த பாவங்கள் அழியும் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் எந்தெந்த விலங்குகளுக்கு நாம் உணவு அளித்தால் கிரகப் பிரச்சனைகள் தீரும் என்பதை இங்கு பார்ப்போம்.

    சூரியன் : சூரிய பகவானின் கிரகப் பிரச்சனைகள் உங்கள் ஜாதகத்தில் இருந்தால், குதிரைக்கு உணவளிப்பதன் மூலம் அந்த பிரச்சனை தீரும்.

    வியாழன் : உங்கள் ஜாதகத்தில் குருபகவானால் பிரச்சனைகள் இருந்தால் திருமணம் மற்றும் கல்வி பாதிக்கப்படும். அதை நிவர்த்தி செய்ய மாடுகளுக்கு தீவனம் அல்லது யானைக்கு உணவு அளிக்கலாம்.

    சந்திரன் : சந்திர பகவானின் பார்வை உங்கள் ஜாதகத்தில் உக்கிரமாக இருந்தால், அதை சரிசெய்ய நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்கலாம். அதாவது மீன், ஆமை உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்கலாம்.

    செவ்வாய் : செவ்வாய் கிரகம் திருமண விஷயத்தில் முக்கியமான தடையாக பார்க்கப்படுகின்றது. நாம் ஆடு அல்லது செம்மறி ஆட்டுக்கு உணவு கொடுப்பதன் மூலம் நம் கெட்ட வினைகள் குறைகின்றது. மேலும், குரங்குகளுக்கு தானியங்களையும் அளிக்கலாம்.

    புதன் : உங்கள் ஜாதகத்தில் புதன் அதிபதியாக இருக்கும் பட்சத்தில் அவர் மிகச்சிறந்த பேச்சாளராக இருப்பார். புதன் திசை பிரச்சனையாக உள்ளவர்கள், கிளிகளுக்கு உணவு வைப்பது சிறந்தது. அப்படி இல்லையெனில், தங்கள் வீட்டின் மேல் கூரையில் பறவைகளுக்கு உணவுகள் மற்றும் தண்ணீர் வைக்கலாம்.

    சுக்கிரன் : செல்வத்தை அளிக்கக்கூடிய கிரகம் சுக்கிரன். இந்த கிரகம் நல்ல முறையில் வலுப்பெற புறா உள்ளிட்ட பறவைகளுக்கு தானியங்களை உணவாக கொடுக்கலாம்.

    சனி : நாம் அனைவரும் மிகவும் பயப்படும் ஒரு கிரகம் சனி. சனி பகவானின் அருளைப் பெற கருப்பு நிற விலங்குகள், பறவைகளுக்கு உணவளிக்கலாம். உதாரணமாக எருமை, கருப்பு நிற நாய், காகம் உள்ளிட்டவை.

    ராகு - கேது : ராகு - கேது உங்கள் ஜாதகத்தில் வலுப்பெற நாய்களுக்கு ரொட்டி கொடுப்பதும், எறும்புகளுக்கு சர்க்கரை, மாவுப்பொருட்களை உணவாக கொடுப்பதும் நல்ல பலன்களைத் தரும்.
    மனித வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும் சோர்வு, பிரச்சினை, சிக்கலுக்கான தீர்வு சவுந்தரராஜபெருமாள் கோயிலில் உள்ளது.
    சவுந்தரராஜபெருமாள் ஆலயத்தில் சித்ரா பவுர்ணமிவிழா ஐந்து நாட்கள் நடைபெறும். ஆடிப்பெருவிழா பத்துநாட்கள், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி உற்சவம், கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திரத்தில் லட்சதீபம், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி என்ற சிறப்பு விழாக்கள் ந டைபெறுகிறது. தவிர பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி போன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சுவாமிகளுக்கும் வெவ்வேறு வழிபாட்டு பூஜைகளும் நடைபெறுகிறது.

    இங்குள்ள ரதி-, மன்மதனை ஐந்து வியாழக்கிழமைகளில் பூஜித்து வந்தால் திருமணத்தடை நீங்கும். வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களின் முதல்நாட்களில் காலை 9 மணியளவில் விஷ்ணுபதி புண்ணியகால பூஜை நடைபெறும். பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணங்களை செய்ய இயலாதவர்கள் இதில் கலந்து கொள்வதின் மூலம் அக்குறை நீங்கும். தொழில் அபிவிருத்தி போன்றவற்றிற்காக சுரைக்காயில் தீபம் ஏற்றப்படுவது மற்றுமொரு வழிபாட்டு சிறப்பு.

    மனித வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும் சோர்வு, பிரச்சினை, சிக்கலுக்கான தீர்வு இக்கோயிலில் உள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரையிலான பல்வேறு சிரமங்களை தீர்த்து வைக்கும் வழிபாடுகளும், பூஜைகளும் அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் பிரார்த்தனை தலமாகவும் இது பிரசித்தி பெற்றுள்ளது.
    வேண்டுதல்கள் நிறைவேறுவதால் வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர். சவுந்தரராஜ பெருமாள் சில குடும்பங்களுக்கு குலதெய்வமாகவும் மாறியுள்ளார்.

    அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள், கடன், எதிரிகள் தொல்லை , முன்வினை, பித்ரு சாபம், கர்ம வினைகள் நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.
    அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள், கடன், எதிரிகள் தொல்லை , முன்வினை, பித்ரு சாபம், கர்ம வினைகள் நீங்க பரிகாரம்.

    (1) தினசரி சுத்தமான பசு நெய்யினால் இஷ்ட தெய்வம் அல்லது குல தெய்வத்திற்க்கு விளக்கு.

    (2) தினசரி பசுவிற்கு சிறிது உணவு.

    (3) தினசரி மதியம் 12 மணிக்கு மேல் காகத்திற்கு சிறிது உணவு.

    (4) தினசரி எவவேனும் ஒருவருக்கு சிறிது உணவோ அல்லது குழந்தைகளுக்கு இனிப்பு சிறிதேனும் வழங்குதல்.

    (5) தினசரி சிறிது சர்க்கரை எறும்புகளுக்கு.

    மேற்கண்டவை மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரங்களாக நமது முன்னொல்கள் வழங்கியவை ஆகும்
    தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோவிலில் உள்ள சத்ய பாமா சமேத வேணு கோபால சுவாமியை வழிபட்ட பெண்களுக்கு குழந்தைபாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.
    தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோவிலில் அருள்மிகு ருக்மணி, சத்ய பாமா சமேத வேணு கோபால சுவாமி அஷ்ட புஜங்களுடன் காட்சி அளிக்கிறார். இந்த திருக்கோலம் தென் தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளதாகச் சொல்லப்படுகிறது. ரோகிணி நட்சத்திரத்தன்று பசு வெண்ணெய், அவல், சர்க்கரை நிவேதனமாக கொடுத்து வழிபடுவது சிறப்பு! குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த பூஜையில் பங்கேற்க நல்ல பலன் கிடைக்கும்.

    மூலவரின் இடது பாதத்தில், வெண்ணெய் வைத்துக் கொண்டு நர்த்தனம் ஆடுவது போன்ற வேணுகோபால சுவாமியின் சிறிய விக்ரகம், ரோகிணி நட்சத்திர பூஜையில் பங்கேற்கும் பெண்களின் மடியில் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. அவ்வாறு வழிபட்ட பெண்களுக்கு குழந்தைபாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.
    ஆன்மாவின் முக்கிய சக்திகளாகிய மனம் மற்றும் புத்தியை பிரபஞ்சத்திடம் சரணடைய செய்யும்போது, உன்னத சக்தியான இறைசக்தி வசப்பட்டு நிரந்தரமான சுப பலன்கள் அடைய முடியும். பரிகாரத்தை விட வழிபாடே நம்மை சிறப்பாக வழிநடத்தும்.
    மனிதன் தன் வாழ்நாளில் மூன்று வகையான கர்மவினைகளை அனுபவிக்கிறான். அவை:- சஞ்சித கர்மம், பிராப்த கர்மம், ஆகாமிய கர்மம் ஆகியவையாகும்.

    இதில் ‘சஞ்சித கர்மம்’ என்பது, ஒரு கரு உருவாகும் போதே உடன் உருவாவது. அதாவது தாய், தந்தை, முன்னோர்களிடம் இருந்தும், பல ஜென்மங்களில் ஆத்மா செய்த பாவ புண்ணியங்களும் இந்த பிறவியில் பற்றிக்கொள்ளும்.

    ‘பிராப்த கர்மம்’ என்பது, ஒரு ஆன்மா பல பிறவிகளில் செய்த பாவ புண்ணிய பலன் மூலம் இந்த பிறவியில் கிடைக்க கூடிய நன்மை தீமையாகும். இதையே வேறு விதமாக சொன்னால் ‘பிராப்தம்’, ‘விதி’, ‘கொடுப்பினை’ என்று கூறலாம். இந்த கர்மாவால் வரும் பலனையும் இந்த பிறவிலேயே அனுபவிக்கவேண்டும்.

    ‘ஆகாமிய கர்மம்’ மேற்கூறிய இரண்டு கர்மாக்களை கழிக்கச் செய்யும் செயல்கள் மூலம், இப்பிறவியில் வாழும் காலத்தில் ஆசைகளால் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் வருவது.

    இந்த மூன்று வகையான கர்மவினைகளில் இருந்து யாரும் தப்ப முடியாது. மனிதன் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், கடன்கள், பிரிவினைகள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் மேலே கூறிய கர்மவினை தாக்கத்தால் வருபவை.

    ஆனால் பலருக்கும் ‘பரிகாரம் செய்து கர்மவினையை தீர்க்க முடியும்’ என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் சில குறிப்பிட்ட பூஜை, வழிபாடு, விரத, பரிகார தலங்களும் உள்ளன. இவற்றையெல்லாம் முறையாக செய்வதன் மூலம் சிலருக்கு உடனே பலன் கிடைக்கலாம். ஒரு சிலருக்கு பலன் கிடைப்பது காலதாமதமாகும். ஒரு பிரிவினருக்கு பலனே கிடைப்பதில்லை.

    இப்படி பரிகாரம் பலிதமாகாமல் வருத்தப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். ‘ஏன் சிலருக்கு பரிகாரம் பலன் தருவதில்லை?’ என்று கேள்வி கேட்கும் முன்பு, நாம் அனைவரும் பரிகாரத்திற்கும் வழிபாட்டிற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும்.

    பரிகாரம் என்பதில் ‘வாழை மரத்திற்கு தாலி கட்டுவது - வெட்டுவது’, ‘தோஷ நிவர்த்தி ஹோமம்’ போன்றவை அடங்கும்.

    வழிபாடு என்பது, ‘தாங்கள் அனுபவிப்பது தங்களின் கர்மவினையின்படிதான்’ என்பதை உணர்ந்து, அதை அப்படியே ஏற்றுக்கொள்வதும். இறை நம்பிக்கையுடன் தர்ம காரியங்களைச் செய்து இறைவனின் கருணை தங்கள் மேல் விழுந்து பிறவா நிலையை அடைய முயற்சி செய்வதும் ஆகும்.

    ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதி, பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் பாக்கியாதிபதி என்னும் தசை, புத்தி, அந்தர காலங்களில் செய்யும் பரிகாரங்கள் உடனடியாக பலன் கொடுக்கும். ஆறாம், எட்டாம், பன்னிரண்டாம் அதிபதிகளின் தசா புத்திகள், நீச்ச கிரக தசா புத்திகளில் செய்யும் பரிகாரங்கள் பலன் கொடுக்காது. சில சமயங்களில் காலம் தாழ்த்தி பலன் தரலாம். ஆக சாதகமான கிரக தசா, புத்தி காலத்தில் செய்யும் பரிகார பூஜைகள் தான் உரிய பலனைத் தரும்.

    அத்துடன் ஜனன கால ஜாதகத்தில் கீழ்கண்ட அமைப்புகள் இருந்தாலும் பரிகாரங்கள் பலன் கொடுக்கும்.

    * குரு எந்த பாவகத்தில் இருக்கிறாரோ அல்லது எந்த பாவகத்தைப் பார்க்கிறாரோ, அந்த பாவக பலன்களை பரிகாரங்கள் மூலம் மாற்றி அமைக்க முடியும்.

    * சனியும், செவ்வாயும் இணைந்து எந்த பாவகத்தில் இருக்கிறார்களோ அல்லது எந்த பாவகத்தைப் பார்க்கிறார்களோ அந்த பாவக பலன்களை பரிகாரம் செய்து மாற்ற முடியாது. இந்த கிரகங்களுடன் குருவின் சம்பந்தம் இருந்தால் கடினமான பரிகாரம் ஓரளவு பலன் தரும்.

    * ஒன்பதுக்குரியவன் எந்த பாவகத்திற்கு அல்லது எந்த பாவக அதிபதிக்கு தொடர்பு பெறுகிறாரோ அந்த பாவ பலன்களை பரிகாரத்தால் அடையலாம்.

    * கோச்சாரத்தில் ஐந்து, ஒன்பதாம் அதிபதி வலுப்பெறும் போது செய்யும் பரிகாரமும் பலிதமாகும்.

    * குருவிற்கு செவ்வாய் சம்பந்தம் இருந்தால் பரிகாரத்தை விட வழிபாடே நிரந்தர தீர்வு தரும்.

    ஒருவர் தன் வாழ்நாளில் நற்பலன்களை அனுபவிக்க, நிகழ்காலத்தில் கட்டுப்பாட்டுடன் வாழ்வதற்கு ஒரு முயற்சியாகவே, நம் முன்னோர்கள் ஆன்மிகம் மற்றும் மதம் சார்ந்த விஷயங்களை உபதேசித்து இருக்கிறார்கள்.

    தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எவ்வளவு தவறு செய்தாலும் ‘என் மனதால் கூட யாருக்கும் எந்த கெடுதலும் செய்தது இல்லை’ என்றுதான் கூறுவார்கள். இதற்கு தான் செய்வது தவறு என்பதை உணராத அவர்களது அறியாமையும் ஒரு காரணம்.

    ‘தன் தவறை யாரும் பார்க்கவில்லை, சாட்சி இல்லை’ என்று தவறை மறைக்க முயற்சி செய்வது மற்றொரு காரணம். தவறை மறைக்க முயற்சிப்பவர்களுக்கு எந்த பரிகாரமும், வழிபாடும் பலன் தராது.

    சிறு தவறு முதல் பெரும் குற்றங்கள் வரை, மனித வாழ்வின் அனைத்து சம்பவங்களும் கால பகவான் என்னும் கண்காணிப்பு கேமராவால் படம் பிடிக்கப்பட்டு, காலப் பதிவேட்டில் பதியப்படும் என்பதை உணர்ந்தவர்கள் இறைவனிடம் சரணாகதி அடைந்து, அவனது அருட் கருணையால் கர்மவினை நீங்கி சுப வாழ்வு வாழ்கிறார்கள்.

    ஒருவன் ஒரு பரிகாரத்தை கடைப்பிடிக்க தொடங்கும் போதே, கர்மா அதன் வேலையை ஆரம்பித்து விடுகிறது. மனிதன் முக்தி அடைவதற்கும், பிறவாப் பெருநிலை அடைவதற்கும் ‘சஞ்சித கர்மா’ முற்றிலும் சரி செய்யப்பட்டு இருக்க வேண்டும். பிறவி எடுத்து சரி செய்வது என்பது முடியாத காரியம். ‘சரணாகதி’ என்னும் இறை வழிபாடே, சஞ்சித கர்மாவிற்கு முற்றுப்புள்ளி வைக்க பிரபஞ்சத்தால் வழங்கப்பட்ட அருட்கொடை.

    ஜாதகத்தில் எத்தகைய அமைப்பு இருந்தாலும், வழிபாட்டால் சரி செய்ய முடியாத பிரச்சினைகளே கிடையாது. மனிதன் வாழ்வில் முன்னேற வேண்டுமானால் மனதை நெறிப்படுத்த வேண்டும்.

    மனிதர்களுக்கு பொருள் தேடும் விஷயத்தில் உதவுகின்ற கருவியாகவும், ஆபத்து நிறைந்த வாழ்க்கைக் கடலைத் தாண்டும் விஷயத்தில் கப்பலாகவும், எதிரிகளை வெற்றிபெற விரும்பும் சமயங்களில் நல்ல மதிநுட்பம் நிறைந்த மந்திரியாகவும், சுருக்கமாகச் சொன்னால் ஜீவாத்மாவின் பயணத்தை எளிமையாக்கி தனது மார்க்கத்தை உணரச் செய்து, நமது இலக்கை அடைய பேருதவி புரிவது தியானம், யோகா போன்றவையே. இது உலகமறிந்த, மிகப் பழமையான மன, உடல் பயிற்சியாகும்.

    ஆன்மாவின் முக்கிய சக்திகளாகிய மனம் மற்றும் புத்தியை பிரபஞ்சத்திடம் சரணடைய செய்யும்போது, உன்னத சக்தியான இறைசக்தி வசப்பட்டு நிரந்தரமான சுப பலன்கள் அடைய முடியும். பரிகாரத்தை விட வழிபாடே நம்மை சிறப்பாக வழிநடத்தும்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
    ×