search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராகு கேது
    X
    ராகு கேது

    ராகு - கேது தாக்கத்தை குறைக்க பரிகாரம்

    ராகு - கேது தாக்கத்தை குறைக்க தினமும் திருக்கோளறு பதிகம் படிக்க வேண்டும். விநாயகர், வராஹி, ஆஞ்சநேயர், சரபேஸ்வரர், நரசிம்மர் போன்ற தெய்வங்களை வழிபடுங்கள்.
    போகர் நவபாஷணத்தால் உருவாக்கிய பழனி மலை முருகன் சிலையை, வீட்டிலிருந்தே மனதார வழிபடவும்.

    தலை வேறு, உடல் வேறு என்ற நிலையில் அசுர முகமும் பாம்பு உடலும் கொண்டவர் ராகு, அசுர உடலும் பாம்பு முகமும் கொண்டவர் கேது. எனவே மனித முகம் இல்லாத தெய்வங்களை வழிபடலாம். விநாயகர், வராஹி, ஆஞ்சநேயர், சரபேஸ்வரர், நரசிம்மர் போன்ற தெய்வங்களை வழிபடுங்கள்.

    ஆஞ்சநேயர், கால பைரவருக்கு உளுந்து வடை மாலை சாற்றி வழிபடலாம்.

    ஆடம்பரமாக பூஜை செய்து ராகுவையும், கீழ்படிந்து செய்யும் நடைமுறை பரிகாரங்களால் கேதுவையும் வணங்கலாம்.

    மாரியம்மன் குறிப்பாக சமயபுரம் மாரியம்மன், திருவேற்காடு கருமாரி மற்றும் படவேடு ரேணுகாதேவி, பெரியபாளையம் பவானி அம்மன், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி போன்ற அம்மன்களை ராகு, கேது தோஷம் நீங்க மனதால் வேண்டலாம்.

    கொரோனா பாதிப்பு இருப்பவர்கள் கருப்பு ஆடு, கருப்பு உளுந்து தானம் செய்யலாம். காளி, துர்க்கை, பிரத்யங்கிரா அம்மனுக்கு புடவை வாங்கிக் கொடுத்து, கருப்பு திராட்சை நிவேதனம் செய்யலாம்.

    ராகு, காற்று ராசியான மிதுனத்தில் சஞ்சாரம் செய்வதால், பரிகாரங்கள் பாராயணம் செய்யும் மந்திர ஜபமாக இருப்பது மிகவும் நன்மை தரும். நாட்டு நலனுக்கு வீட்டு உறுப்பினர்கள் தினமும் கூட்டாக இணைந்து சாந்தி மந்திரத்தை ஆத்மார்த்தமாக ஜெபித்து வர அளவிட முடியாத நன்மை உண்டாகும்.

    ‘ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனது ஸஹ வீர்யம்

    கரவாவஹை தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை

    ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி’

    ராகு - கேதுக்களின் தாக்கத்தை குறைக்க தினமும் திருக்கோளறு பதிகம் படிக்க வேண்டும்.

    Next Story
    ×