என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    ஆலங்குடி அபயவரதர் கோவிலில் உள்ள கல்யாண லட்சுமி நரசிம்மரை திருமணத் தடை நீக்கி மணவாழ்க்கை அமைத்துக் கொடுப்பதாக நம்பிக்கையுடன் இவரைச் சேவிக்கிறார்கள்.
    ஆலங்குடியில் உள்ள ஏலவார்குழலி அம்மை உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் செல்லுவோர், அதனருகில் திகழும் திருமாலின் திருத்தலத்திற்கும் சென்று வழிபட்டால், அனைத்து நற்பலன்களும் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    சுவாமி சன்னிதி முன்புள்ள அர்த்த மண்டபத்தில் தெற்கு திசை பார்த்த வண்ணம் லட்சுமி தேவியுடன் நரசிம்மர் தோற்றமளிக்கிறார். இதிலும் மற்ற ஆலயங்களில் இல்லாத ஒரு தனிச்சிறப்பு உள்ளது. எல்லா இடங்களிலும் நரசிம்மரின் இடதுபுறத்தில் அமர்ந்து காட்சிதரும் லட்சுமி தேவியை, இங்கு சுவாமி வலதுபுறத்தில் அமர்த்தி கைகளால் அணைத்தபடி காட்சி தருவது வேறெங்கும் காணமுடியாதது.

    கணவரின் வலப்புறம் மனைவி இருப்பது திருமணமான கோலத்தைக் காட்டுவதாகக் கொள்வது நமது நடைமுறை. எனவே இவர் ‘கல்யாண லட்சுமி நரசிம்மர்’ என்று போற்றப்படுகிறார். திருமணத் தடை நீக்கி மணவாழ்க்கை அமைத்துக் கொடுப்பதாக நம்பிக்கையுடன் இவரைச் சேவிக்கிறார்கள்.

    நரசிம்ம மூர்த்திக்கு உகந்த பிரதோஷ காலம், சுவாதி நட்சத்திரம் அல்லது தங்களது ஜென்ம நட்சத்திரத்தில் கல்யாண நரசிம்மரை வழிபட்டால் நல்வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.

    கோவில் வளாகத்தில் வலதுபுறத்தில் தனிக்கோவிலில் மேற்கு பார்த்தபடி பதினாறு கரங்களுடன் சக்கரத்தாழ்வார் சுதர்சனராக அருள் வழங்குகிறார். அவருக்குப் பின்புறம் யோகநரசிம்மர் வீற்றிருக்கிறார்.இவர்கள் தங்கள் பக்தர்களின் பகை, ஏவல், கண்ணேறு போன்ற தீவினைகள் தீர அருள்பாலிக்கிறார்கள்.
    அன்றாட வாழ்வில் ஏராளமானவர்கள் சந்திக்கும் முக்கிய தோஷங்களும், அதற்கான பரிகாரங்களும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தினால் விரைவில் தீர்வு கிடைக்கும்.
    ‘கண் திருஷ்டி’ என்பது பொறாமை, கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலால் ஏற்படும். ஒருவரின் சுப அதிர்வலைகளானது, அசுப உணர்வு, தீய எண்ணம் கொண்டவர்களின் பார்வை பலத்தால் அசுப அதிர்வாக மாற்றப்பட்டுவிடும்.

    அதனால் ஏற்படும் பாதிப்பு சிலருக்கு சிறியதாகவும், பலருக்கு தொடர்ச்சியான பின் விளைவுகளையும் தரும். திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு, வரவுக்கு மீறிய செலவு போன்றவை இருந்து கொண்டே இருக்கும்.

    பரிகாரம்

    * உப்பு சுற்றி போடுவது நல்ல பலன் தரும்.

    * கற்பூரங்களை தலையைச் சுற்றி வீட்டு வாசலில் ஏற்றலாம்.

    * தேங்காயில் கற்பூரம் ஏற்றி தோஷம் இருப்பவர்களின் தலையை சுற்றி, ஊர் எல்லையில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் விடலை போட வேண்டும்.

    * திருஷ்டி தோஷம் மிகுதியாக இருந்தால் மகாகணபதி, மகா சுதர்சன ஹோமம் செய்தால் நல்ல பலன் தெரியும்.
    திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் தினமும் அதிகாலையில் இங்கு கோ பூஜை நடக்கிறது. தொடர்ந்து 21 நாட்கள் அதில் தவறாமல் கலந்து கொண்டால் நம் கர்ம வினைகள் அகன்று, வாழ்வில் நலம் பிறக்கும்.
    சென்னை திருவான்மியூரில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் வழங்கப்படும் ஈசனின் திருநீறு நம் நோய்களை போக்கும் வல்லமை உடையது.

    கண்ணபிரான் தன்னுடைய பாவம் நீங்க, இங்கு உள்ள பாவ நாசினி தீர்த்தத்தில் நீராடியுள்ளார். காமதேனு இங்குள்ள மூலவர் ஈசனுக்கு பால் சொரிந்து வழிபட்டு, தனது கொடூர குணம் அகலப் பெற்றது. எனவே வீட்டுக்கு அடங்காத பிள்ளைகள், சேட்டை அதிகம் செய்யும் குழந்தைகளை இத்தலம் அழைத்து வந்து, பாவ நாசினி தீர்த்தத்தில் நீராடி 48 நாட்கள் இங்குஉள்ள ஈசனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட, குழந்தைகள் நற்குணம் அடைவார்கள்.

    தினமும் அதிகாலையில் இங்கு கோ பூஜை நடக்கிறது. தொடர்ந்து 21 நாட்கள் அதில் தவறாமல் கலந்து கொண்டால் நம் கர்ம வினைகள் அகன்று, வாழ்வில் நலம் பிறக்கும்.

    கோசாலை அருகில் உள்ள தேவாசிரியர் திருமுறை மண்டபத்தில் தினமும் மாலையில் சைவ சமய சொற்பொழிவுகள் நடக்கிறது. செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மாலையில் இங்கு ‘அபிராமி அந்தாதி முற்றும் ஓதுதல்’ நடைபெறுகிறது. அபிராமி அந்தாதி முற்றோதலில் கலந்துகொண்டு தொடர்ந்து வீடுகளிலும் அதிகாலை, இரவு நேரங்களில் என தினமும் இருமுறை அபிராமி அந்தாதி பாராயணம் செய்துவர பதினாறு வகை பெரும் பேறுகளும் கிட்டும் என்கிறார்கள்.
    வாஸ்து சம்பந்தமாக அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி செய்யக் கூடியவராக இத்தல இறைவன் பூமிநாத சுவாமி விளங்குகிறார். தோஷம் விலக சில வரைமுறைகள் இங்கு கடைப்பிடிக்கப்படுகின்றன.
    வாஸ்து தோஷங்களை நீக்கும் சக்திவாய்ந்தவராக, மண்ணச்சநல்லூரில் உள்ள பூமிநாதர் கோவிலில் அருளும் பூமிநாதசுவாமி இருக்கிறார். வாஸ்து சம்பந்தமாக அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி செய்யக் கூடியவராக இத்தல இறைவன் பூமிநாத சுவாமி விளங்குகிறார். தோஷம் விலக சில வரைமுறைகள் இங்கு கடைப்பிடிக்கப்படுகின்றன.

    வீடுகட்ட விரும்புவோர், தன் வீட்டில் உள்ள வாஸ்து தோஷம் நீங்க வேண்டும் என நினைப்பவர்கள், வீட்டின் அல்லது மனையின் வடகிழக்கு மூலையில் மூன்று பிடி மண் எடுத்து, அதை மஞ்சள் துணியில் கட்டி ஆலயம் கொண்டு வருகின்றனர். அந்த மண் அர்ச்சனை தட்டில் பூ, பழங்கள், மாலையுடன் வைத்து, இறைவனுக்கு அர்ச்சிக்கப்படுகிறது.

    அர்ச்சனை முடிந்தபின் ஆலயத்தை வலம் வர வேண்டும். முதல் சுற்றின்போது, மண்ணில் ஒரு பிடியை ஆலய தல விருட்சமான வில்வ மரத்தடியில் போட வேண்டும். இரண்டாம் சுற்றின்போது, மற்றொரு பிடி மண்ணை வன்னி மரத்தடியில் போடுகிறார்கள். அப்போது மகா ருத்ர யாகம் செய்த சாம்பலில் ஒரு பிடி எடுத்து தங்கள் கையில் இருக்கும் துணி முடிப்பில், எஞ்சிய ஒரு பிடி மண்ணோடு சேர்த்து வைத்துக் கொள்கின்றனர்.

    மூன்றாவது முறை ஆலயத்தை வலம் வந்து நவக்கிரக நாயகர்களை வழிபடுகிறார்கள். வீட்டிற்கு வந்ததும், மண்ணோடு கலந்த சாம்பலை வீட்டின் பூஜை அறையில் வைத்து விடுகிறார்கள். 5 நாட்களுக்குப் பின்னர், அதில் பாதியை எடுத்து மண் எடுக்கப்பட்ட இடத்தில் போட வேண்டுமாம். அப்படி செய்தால் மூன்று மாதங்களுக்குள் நினைத்தது நடக்கும் என்கிறார்கள்.

    திருச்சியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மண்ணச்சநல்லூரில் சாலை அருகில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
    சிவராத்திரி நன்னாளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால், சர்ப்ப தோஷங்கள், ராகு- கேதுவால் ஏற்படும் திருமணத் தடை, குழந்தை பாக்கியமின்மை போன்ற பாதிப்புகள் நீங்கும்.
    ஆதிசேஷன் பூலோகத்தை தன் தலையில் சுமந்து, தன் பலம் அனைத்தையும் இழந்து தவித்தார். ஒருமுறை அவர் மகா சிவராத்திரி அன்று முதல் ஜாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமியையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரநாதரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் தரிசித்தார். அப்போது சிவபெருமான் பூமி முழுவதையும் தாங்கும்படியான வலிமையை அவருக்கு வழங்கினார்.

    எனவே சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால், சர்ப்ப தோஷங்கள், ராகு- கேதுவால் ஏற்படும் திருமணத் தடை, குழந்தை பாக்கியமின்மை போன்ற பாதிப்புகள் நீங்கும்.
    குழந்தை பாக்கியம், திருமண தடையால் அவதிப்படுபவர்கள் நாகராஜா கோவிலுக்கு சென்று கல் நாகர் வைத்து வழிபட்டால் நிச்சயம் திருமணம் கைகூடும்.
    ஒருவரது ஜாதகத்தில் லக்கனத்தில் இருந்து 2, 4, 7, 8, 12-ம் இடங்களில் ராகு இருந்தால் அது நாக தோஷம் ஆகும். இதனால் திருமணம் கைகூடுவது தள்ளிக்கொண்டே போகும். அதுமட்டுமின்றி ராகுவின் செயல்பாடுகள் காரணமாக வேறுசில பிரச்சினைகளும் ஏற்படும். 2-ம் இடத்து ராகு தனம் மற்றும் கண் பிரச்சினையை உண்டு பண்ணும். 4-ம் இடத்து ராகு வீடு, வியாபாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

    5-ம் இடத்து ராகு குழந்தை பாக்கியத்தில் தாமதம் தரும். 7-ம் இடம் களத்திர ஸ்தானம் ஆகும். 8-ம் இடம் ஜீவனை குறிக்கும். 10-ம் இடம் தொழிலைலையும், 12-ம் இடம் விரையத்தையும் சுட்டிக் காட்டும். எனவே ராகுவின் இடத்துக்கு ஏற்ப லாபமோ நஷ்டமோ ஏற்படும். இவற்றில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் அவசியம் நாகராஜா கோவிலில் பூஜை செய்ய வேண்டும். குறிப்பாக கல் நாகர் வைத்து வழிபட்டால் நிச்சயம் திருமணம் கைகூடும்.

    வேப்பமரம் நட்டால் குழந்தை பாக்கியம்

    ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு, ஏழாம் இடத்தில் கேது இருந்தால் அந்த ஜாதகருக்கு நாகதோஷத்தால் திருமண தடை ஏற்படும். ஜன்ம லக்னத்திற்கு 5-ம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும். புத்திர ஸ்தானத்திற்கு 1,5,9 ஆகிய மூன்று திரிகோண ஸதானங்களில் எங்காவது ராகு அல்லது கேது இடம் பெற்றிருந்தால் அது புத்திர தோஷத்தை அளிக்கக்கூடியது. இவர்கள் அடிக்கடி சர்ப்ப சாந்தியைச் செய்து கொள்ள நன்மை உண்டாகும். மேலும் நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்கள் வேப்ப மரம் நடுவது நன்மை தரும்.

    போகர் கூறிய எளிய பரிகாரம்


    “நாக சதுர்த்தி திதி” அன்று, அரச மரம் ஒன்றின் அடியில் நாக எந்திரம் ஒன்றினை பீடத்தில் அமைத்து அதன் மேல் சிவ லிங்கத்தினை ஏந்திய வண்ணம் இருக்கும் நாகத்தின் கருங்கல் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதன் மூலம் நாகதோஷத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு நலமுடன் வாழலாம் என்கிறார் போகர்.
    குழந்தை பாக்கியம் இல்லாததற்கும், ஆன்மிகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உரிய பூஜைகள் செய்ததால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
    கடந்த சில ஆண்டுகளில் குழந்தை பேறு இல்லாதவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதற்கு அறிவியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் குழந்தை பாக்கியம் இல்லாததற்கும், ஆன்மிகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உரிய பூஜைகள் செய்ததால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    இந்த பாக்கியத்தை தரும் ஆன்மிக தலங்களில் ஒன்றாக நாகர்கோவில் நாகராஜா ஆலயம் திகழ்கிறது. குறிப்பிட்ட நாளில் இந்த ஆலயத்துக்கு வந்து வெள்ளி அல்லது கல் நாகர் சிலைகளை சமர்ப்பித்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கைகூடுவதை காணலாம். வெள்ளி நாகர் சிலைகள் வைத்து பூஜை செய்ய ரூ. 500 வரை செலவாகும்.

    அந்த வெள்ளி நாகரை பூஜை செய்த பிறகு தலையை சுற்றி உண்டியலுக்குள் செலுத்திவிட வேண்டும். கல்லால் செய்யப்பட்ட நாகரை வைத்து பூஜை செய்ய வேண்டுமானால் ரூ. 13 ஆயிரம் வரை செலவாகும். ஜாதகத்தில் மிகமிக கடுமையான தோஷங்கள் இருப்பவர்கள் கல் நாகர் வைத்து பரிகார பூஜை செய்வது அவசியமாகும். ஆலயத்தின் கன்னி மூலை பகுதியில் இதற்கான பூஜைகள் நடத்துவார்கள். இந்த பூஜை மூலம் எவ்வளவு பெரிய கால சர்ப்ப தோஷமும் விலகி சென்றுவிடும்.
    பொதுவாக 27 நட்சத்திரக்காரர்கள் செல்வச் செழிப்போடு வாழ, குறிப்பிட்ட தெய்வங்களுக்கு செய்ய வேண்டிய அபிஷேக ரகசியங்களை சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
    ஒரு மனிதன் பிறந்தது முதல், ஒருவருடைய ராசியில் இருக்கும் நட்சத்திரங்களே அவரை வழிநடத்துகின்றன. ஒருவருடைய ஜென்ம நட்சத்திரம் என்றைக்கும் மாறாது. வாழ்வின் இறுதி காலம் வரை அவரோடு பயணிக்கக்கூடியது.

    பொதுவாக 27 நட்சத்திரக்காரர்கள் செல்வச் செழிப்போடு வாழ, குறிப்பிட்ட தெய்வங்களுக்கு செய்ய வேண்டிய அபிஷேக ரகசியங்களை சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. அதனை அந்தந்த நட்சத்திரக்காரர்கள், தங்களது வாழ்வில் கடைப்பிடித்து வந்தால், செல்வ வளம் கொழித்து, சீரும் சிறப்புமாக வாழலாம்.

    எந்தெந்த நட்சத்திரக்காரர்கள் எந்த தெய்வங்களை வணங்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

    அஸ்வினி:- சரஸ்வதியை சந்தன எண்ணெய் சாற்றி வழிபட வேண்டும்.

    பரணி:- துர்க்கை அம்மனை பச்சரிசி மாவால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    கார்த்திகை:- நெய்யால் அக்னீஸ்வரரை அபிஷேகிக்க வேண்டும்.

    ரோகிணி:- பிரம்மதேவனை மஞ்சள்பொடியால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    மிருகசீரிஷம்:- வாசனை திரவியங்கள் கலந்த மஞ்சள் பொடி கொண்டு, சந்திர பகவானை அபிஷேகித்து வர வேண்டும்.

    திருவாதிரை:- அதிகாலை வேளையில் பஞ்ச கவ்யம் கொண்டு சிவலிங்கத்தை அபிஷேகம் செய்ய வேண்டும்.

    புனர்பூசம்:- பஞ்சாமிர்தத்தால் ஸ்ரீராமபிரானின் திருமேனியை அபிஷேகிக்க வேண்டும்.

    பூசம்:- பசும் பால் அல்லது மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை பாலுடன் கலந்து பாலாமிர்தமாக குரு பகவானை அபிஷேகம் செய்ய வேண்டும்.

    ஆயில்யம்:- ஆதிசேஷன் அல்லது நாகம்மனை பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    மகம்:- சூரியநாராயணரை, வெள்ளிக்கிழமைகளில் சுத்தமான பசுநெய் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    பூரம்:- பசுத் தயிர் கொண்டு அம்மனை அபிஷேகம் செய்ய வேண்டும்.

    உத்திரம்:- தேனால், மகாலட்சுமிதேவியை அபிஷேகிக்க வேண்டும்.

    அஸ்தம்:- காயத்ரி தேவியை, தேன் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    சித்திரை:- கரும்புச்சாறு கொண்டு சக்கரத்தாழ்வாரை அபிஷேகம் செய்ய வேண்டும்.

    சுவாதி:- நரசிம்ம பெருமாளை, பானகம் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    விசாகம்:- பழச்சாறு கொண்டு முருகப்பெருமானை அபிஷேகிக்க வேண்டும்.

    அனுஷம்:- இளநீர் கொண்டு லட்சுமிநாராயணரை அபிஷேகம் செய்ய வேண்டும்.

    கேட்டை:- இந்திர லிங்கத்திற்கு பசு சாண விபூதியால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    மூலம்:- ஆஞ்சநேயருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    பூராடம்:- பசும்பால் அல்லது வில்வ இலை கொண்டு ஜம்புகேஸ்வரரை அபிஷேகம் செய்ய வேண்டும்.

    உத்திராடம்:- சிவலிங்கத்திற்கு வில்வ இலை அபிஷேகம் அல்லது செப்பு பாத்திரத்தில் துளையிட்டு, சொட்டு சொட்டாக நீர் லிங்கத்தின் மீது படுவதுபோல் செய்ய வேண்டும்.

    திருவோணம்:- செப்பு பாத்திர நீர் வழியும் வகையில் மகாவிஷ்ணுவை அபிஷேகம் செய்ய வேண்டும்.

    அவிட்டம்:- துளசி இலையால் அனந்த சயனப் பெருமாளை அபிஷேகிக்க வேண்டும்.

    சதயம்:- பன்னீர் கொண்டு மிருத்யுஞ்சேஸ்வரரை அபிஷேகம் செய்ய வேண்டும்.

    பூரட்டாதி:- தங்கப் பாத்திரத்தில் வைக்கப்பட்ட தீர்த்தம் கொண்டு குபேரனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    உத்திரட்டாதி:- வெள்ளி பாத்திரத்தில் வைக்கப்பட்ட தீர்த்தம் கொண்டு சிவலிங்கத்தை அபிஷேகம் செய்ய வேண்டும்.

    ரேவதி:- ஐந்துவகையான தீர்த்தம் கொண்டு சனீஸ்வரரை அபிஷேகிக்க வேண்டும்.

    தொகுப்பு:- தஞ்சை தொல்காப்பியன்
    வெண்ணந்தூரில் முத்துக்குமார சுவாமி கோவில் உற்சவமூர்த்திகள் ஊர்வலம் வரும்போது, திருமணத் தடை உள்ளவர்கள் வடை மாலை அணிவித்து வணங்கினால் திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.
    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகில் உள்ளது வெண்ணந்தூர். இதன் தென்மேற்கில் திருச்செங்கோடு மலையில் அர்த்தநாரீஸ்வரர். தென் கிழக்கில் அலவாய் மலையில் சுப்ராயர் என்ற சுப்பிரமணியர். வடமேற்கில் கஞ்சமலையில் சித்தேஸ்வரர் ஆகியோர் அருள்புரிகிறார்கள்.

    வடகிழக்கில் சீதை விரும்பி கேட்ட மானைப் பிடிக்க, ராமர் விரட்டிச் சென்ற பொய்மான் கரடு உள்ளது. மேற்கில் திருமணிமுத்தாறும், கிழக்கில் அத்தனூர் அம்மன் கோவிலும் உள்ளன. இந்தச் சூழலில் உள்ள வெண்ணந்தூரில் முத்துக்குமார சுவாமி கோவில் கொண்டிருக்கிறார்.

    இங்கு உற்சவராக வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் அருள்கிறார். இந்த உற்சவமூர்த்திகள் ஊர்வலம் வரும்போது, திருமணத் தடை உள்ளவர்கள் வடை மாலை அணிவித்து வணங்கினால் திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.
    பக்தர்கள் இறைவனை தேடி பாதயாத்திரையாக வருவதால் நம் முன்ஜென்ம பாவ வினைகள் நீங்கி நம் வாழ்வு சிறப்பு பெறும் என்பது ஐதீகமாக உள்ளது.
    பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவில் “பாதயாத்திரை” என்பது தனி சிறப்பு பெற்று விளங்குகிறது. இதற்காக பக்தர்கள் சிலர் மார்கழி மாதத்தில் துளசி மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். ஒருசிலர் தை மாதத்தில் இருந்து முருகனை எண்ணி தங்கள் விரதத்தை தொடங்குகின்றனர். ஆகவே தை மாதம் தொடங்கி விட்டாலே பழனியில் பக்தர்கள் கூட்டத்தை அதிகம் பார்க்க முடியும்.

    குறிப்பாக காரைக்குடி, தேவகோட்டை, நத்தம், திருச்சி, ராமநாதபுரம் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திண்டுக்கல் வழியே காவடி சுமந்து, முருகா...! முருகா...! என்ற சரணகோஷம் முழங்க பாதயாத்திரையாக வருகின்றனர். அப்போது அவர்கள் முருகனுக்கு பிடித்த காவி உடையை அணிந்து பக்தி பரவசத்துடன் வருவதை பார்க்கலாம்.

    இதில் செட்டிநாடு என்றழைக்கப்படும் காரைக்குடி நகரத்தார் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மயில்காவடி, சேவல்காவடி, வேல்காவடி எடுத்து ஆடிக் கொண்டே வருகின்றனர். இவ்வாறு பாதயாத்திரையாக வருவதால் நம் முன்ஜென்ம பாவ வினைகள் நீங்கி நம் வாழ்வு சிறப்பு பெறும் என்பது ஐதீகமாக உள்ளது.
    கேதுதிசை, கேது புத்தி நடப்பவர்கள், ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்களுக்கும் திருமுருகன்பூண்டிக்கு சிறந்த கேது பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
    சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமாக விளங்குவது, திருமுருகன்பூண்டி. இது திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இருந்து தென்கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் நொய்யல் நதியின் வடக்கே அமைந்துள்ளது.

    இந்த ஆலயத்தின் வடமேற்கு மூலையில் ஐந்து தலை நாகமும் மனித உடலுமாக கேது பகவான் தனிக் கோவில் கொண்டு விளங்குகிறார். இங்கே இவர்தான் சிறப்பு மூர்த்தி. ஒரு கோவிலில் ஒன்பது கிரகங்களும் இருக்கும் இடத்தினை ஆராய்ந்தால், கேது அங்கே வடமேற்கில்தான் வீற்றிருப்பார். அதேபோல இந்த ஆலயத்தின் வடமேற்கில் கேது சன்னிதி அமைந்திருப்பது மிகச் சிறப்பானதாகும்.

    கேதுதிசை, கேது புத்தி நடப்பவர்கள், ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், கொள்ளு தானியம் முடிச்சு போட்டு, பல வண்ண நிற திரி போட்டு, நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றுகிறார்கள். கொள்ளு சாதம் நைவேத்தியமும் படைக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு கேது பகவானுக்கு, சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடை பெறுகிறது.

    இவருக்கு எதிரே மாவிலங்க மரம் தல விருட்சமாக தழைத்து நிற்கிறது. இங்கே நாகப் பிரதிஷ்டை செய்து கொள்கிறார்கள். திருக்காளகஸ்தி தவிர, சோழ நாட்டில் கேதுவுக்குத் தனி சன்னிதியுள்ள கீழப் பெரும்பள்ளம், ராகு -கேது ஏக சரீரமாக விளங்கும் திருப்பாம்புரம், மன்னை பாமணி போல கொங்கு நாட்டில் திருமுருகன் பூண்டி கேது பகவானுக்கு தனியான பரிகாரத்தலமாக சிறந்து விளங்குகிறது.
    27 நட்சத்திரக்காரர்களும் வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்க அவர்கள் நட்சத்திரத்திற்கு உகந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது வந்தால் நல்ல பலனை காணலாம்.
    27 நட்சத்திரக்காரர்களும் வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்க அவர்கள் நட்சத்திரத்திற்கு உகந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது வந்தால் நல்ல பலனை காணலாம்.

    அசுவதி : வைத்தீஸ்வரன் கோவில்

    பரணி : திருக்கடையூர்

    கார்த்திகை : குன்றக்குடி

    ரோகிணி : திருவரங்கம்

    மிருகசீர்ஷம் : பழநி


    திருவாதிரை : திருப்பாம்புரம்

    புனர்பூசம் : பட்டாபிஷேக ராமர் கோவில்

    பூசம் : திருச்செந்தூர்

    ஆயில்யம் : திருந்து தேவன்குடி


    மகம் : பிள்ளையார்பட்டி

    பூரம் : பட்டீஸ்வரம்

    உத்ரம் : திருக்கண்டியூர்

    ஹஸ்தம் : திருவெண்காடு


    சித்திரை : பில்லமங்கலம் பொன்னழகி

    சுவாதி : திருநாகேஸ்வரம்

    விசாகம் : மாத்தூர் ஐநூற்றீஸ்வரர்

    அனுஷம் : திருநள்ளாறு


    கேட்டை : வைரவன்பட்டி வைரவர்

    மூலம் : சொற்கேட்ட விநாயகர்

    பூராடம் : திருக்கருகாவூர்

    உத்ராடம் : சூரியனார் கோவில்


    திருவோணம் : காரைக்குடி அருகில் கல்லாங்குடி

    அவிட்டம் : இளையாற்றங்குடி

    சதயம் : திருக்காளகஸ்தி


    பூரட்டாதி : திருப்பதி

    உத்ரட்டாதி : திருவெற்றியூர்

    ரேவதி : திருச்சி உத்தமர் கோவில்
    ×