என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    கேது, நாக தோஷத்தால் அவதிப்படுபவர்கள் செம்பங்குடி நாகநாதசுவாமி கோவில் இறைவனை வழிபாடு செய்தால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
    மகாவிஷ்ணு, கேதுவை கிரக மூர்த்தியாகவும், ஞான சக்தி மூர்த்தியாகவும் பலருக்கு உணர்த்திய தலம் செம்பங்குடி. இந்த அனுக்கிரகத்தை மகாவிஷ்ணுவிடம் இருந்து பெறுவதற்கு முன்பாக, ‘செம்பாம்புகுடி’ என்று அழைக்கப்பட்டு, தற்போது ‘செம்பங்குடி’ என்று அழைக்கப்படும் இந்த தலத்தில் பல ஆண்டுகளாக கேது பகவான் யோக நிலையில் இருந்து வழிபட்டு வந்தார். அதன்பிறகுதான், மகாவிஷ்ணு தோன்றி, கேது பகவானுக்கு அனுக்கிரகம் செய்தார்.

    இந்த ஊரில் தான் நாகநாத சுவாமி கோவில் இருக்கிறது. இத்தல இறைவனின் பெயர் ‘நாகநாத சுவாமி.’ இறைவியின் பெயர் ‘கற்பூரவல்லியம்மன்.’  இது கேது தோஷ நிவா்த்தி தலமாகவும் விளங்குகிறது. ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் கேது பகவான் யோக நிலையில், தனி ஆலயத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளை அள்ளி வழங்குகிறார். தனது சாபம் நீங்க, கேது பகவான் இத்தல இறைவனை ஆராதித்து சாபம் நீங்கப் பெற்றதாக செவி வழி புராண தகவல் ஒன்று சொல்லப்படுகிறது. கேது தோஷம் உள்ளவர்கள், கேது பகவானுக்கு வேத ஞான தானியமான முழு முந்திரியால் ஆன மாலையை, குரு மற்றும் புதன் ஓரை நேரத்தில் அணிவித்து வழிபாடு செய்து வந்தால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

    இத்தலம் நாகதோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. நாக மூர்த்திகள் அனைவரும், மானுட உருவில் பாத யாத்திரையாக வந்து வழிபட்ட தலம் இது என்று சொல்லப்படுகிறது. செம்பதனிருப்பு, சொர்ணபுரம், செம்பங்குடி ஆகியவை நாக தோஷ நிவர்த்தி தலங்களாக கருதப்படுகின்றன. எனவே நாக தோஷம் உள்ளவர்கள் இத்தலங்கள் ஏதாவது ஒன்றில் இருந்து, இன்னொரு தலத்திற்கு பாத யாத்திரை சென்று இறைவனை வழிபட தோஷம் நீங்குமாம். இந்த ஆலயத்தின் தல விருட்சம் புரச மரம்.

    நாகப்பட்டினம் மாவட்டம் சீா்காழியில் இருந்து திருமுல்லை வாசல் சாலையில், சீர்காழியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் செம்பங்குடி உள்ளது. சீா்காழி பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் மற்றும் ஆட்டோ வசதி உண்டு.

    இவ்வாலயத்தில் ஒரு கால பூஜைமட்டும் நடைபெறுகிறது. தகவல் தெரிவித்து தரிசனம் செய்யலாம்.
    ஆலய அர்ச்சகர்: - சட்டநாத குருக்கள்
    தொலைபேசி 4364 291582 
    பழனி மலையை சுற்றி முருகனுக்கு உகந்த கடம்ப மரங்கள் வளர்ந்துள்ளன. இவற்றில் பூக்கும் மலர்கள், பட்டை, பழங்கள் மருத்துவ குணம் கொண்டவை. இவை, வலியை குறைப்பதோடு, உடலில் உள்ள நச்சுத்தன்மையை போக்கக்கூடியது.
    ‘ சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை’ என்பது பழமொழி. ஞானப்பழத்துக்காக கோபித்து கொண்டு முருகன் நின்ற இடம் பழனிமலை. பல்வேறு சிறப்புகள் பெற்ற இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் ஞானத்தின் கடவுளான தண்டாயுதபாணியை நோக்கி பக்தர்கள் அருள் வேண்டி வருகின்றனர். ‘சரவணபவ’ என்ற ஆறெழுத்து மந்திரத்தை மனமுருகி சொல்பவர்களுக்கு செல்வம், கல்வி, முக்தி, எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயம் போக்கல் என்னும் பேறுகள் கிடைக்கின்றது.

    பொய்கையில் உள்ள நாணல் புற்களுக்கு மத்தியில் தாமரை மலர்களில் தோன்றியதால் முருகப்பெருமான் ‘சரவணன்’ என்று அழைக்கப்படுகிறார். மேலும் முருகன் திருத்தலங்களில் அமைந்திருக்கும் பொய்கைகள் அனைத்தும் ‘சரவண பொய்கை’ என்றே அழைக்கப்படுகிறது. பழனி மலையை சுற்றி முருகனுக்கு உகந்த கடம்ப மரங்கள் வளர்ந்துள்ளன. இவற்றில் பூக்கும் மலர்கள், பட்டை, பழங்கள் மருத்துவ குணம் கொண்டவை. இவை, வலியை குறைப்பதோடு, உடலில் உள்ள நச்சுத்தன்மையை போக்கக்கூடியது.

    உலக மக்களை காக்கும் பொருட்டு பதிணென் சித்தர்களில் ஒருவரான போகர் நவபாஷாணத்தால் முருகப்பெருமானின் சிலையை வடிவமைத்திருக்கிறார். இந்த சிலையில் அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தை அருந்தினால் தீராத பிணிகளும் வந்த இடம் தெரியாமல் தீர்ந்துவிடும். முக்கியமாக திருநீறு, சந்தனம், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை பொருட்களை கொண்டு முருகப்பெருமானின் திருமேனியில் அபிஷேகம் செய்யப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது கொடிய நோய்களையும் தீர்க்க கூடியது.

    ஆவினன்குடி பழங்காலத்தில் ‘சித்தன் வாழ்வு’ என்று அழைக்கப்பட்டு இருக்கின்றது. ‘சித்தன் வாழ்வு இல்லந்தோறும் முன்றெரியுத்து’ என்று அவ்வையார் பாடியுள்ளார். ‘சித்தர்க்கு உயிர்நிலை ஒத்துதிகழ் குகன்’ பழனி குன்றின் மேல் மனித மாதவன் என்று ஞான தண்டாயுதபாணியை பக்தர்கள் அழைக்கின்றனர். சித்தர்கள் தம்மை தெய்வநிலைக்கு மாற்றிக் கொள்ள விரும்பும்போது சித்தனாதனான முருகப்பெருமானே அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி இருக்கிறார் என்று புராணங்கள் மூலம் அறிய முடிகிறது. அவரின் அருளை நாமும் பெற்று சித்தநிலை அடைய முற்படுவோம்.
    தந்தையால் மன விரக்தி கொண்டவர்கள், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியில் இருந்து 11 மணிக்குள் வரும் சனி ஓரையில் சிவ வழிபாடு செய்து வர வேண்டும்.
    ஒரு மனிதன் பூமியில் பிறந்து வாழும் காலத்தில், சாதனை மனிதனாக வாழ வேண்டும். அதாவது எந்த வேலையை செய்தாலும் அதில் புகழ் வரும்படி செய்ய வேண்டும். இல்லை என்றால் அதைச் செய்யாமல் இருப்பதே நல்லது. இதைத்தான் திருவள்ளுவர், “தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்று எடுத்துரைக்கிறார்.

    ஒருவர் புகழுடன் வாழ வேண்டும் என்றால், 1, 5, 9 என்னும் பூர்வ ஜென்ம தொடர்புடைய பாவகங்களில் 9-ம் பாவகம் மிக முக்கியம். தந்தை என்ற 9-ம் பாவகம் இருந்தால் தான், 1-ம் பாவகம் என்ற ஜாதகர் ஜனனமாக முடியும். 1-ம் பாவகம் என்ற லக்ன பாவகம் சிறப்பாக இருந்தால்தான், 9-ம் பாவகம் என்ற பூர்வ புண்ணிய பலத்தால், 5-ம் பாவகம் என்ற குழந்தை பாக்கியம் கிடைக்கும். எனவே ஒரு ஜாதகரை வலிமை பெறச் செய்யும் திரிகோண ஸ்தானங்களான 1,5,9 ஆகியவற்றில் 9-ம் பாவகமானது வலிமையுடன் இருக்க வேண்டும்.

    உன்னைப் பெற்ற தந்தை யார்?, உன் உடம்பில் உள்ள டி.என்.ஏ.வை யாரிடம் இருந்து நீ பெற்றாய் ?, உன் குலம் - கோத்திரம் என்ன?, பெற்றவர்கள் செய்த புண்ணிய பலத்தால் நீ பிறந்தாயா? அல்லது பெற்றவர்களின் பாவத்தை தீர்க்கப் பிறந்தாயா?, உன்னால் உன் தந்தை புகழப்படுவாரா? அல்லது உன் தந்தையால் உனக்கு புகழ் கிடைக்கப் போகிறாதா?, முன்னோர்களின் சொத்துக்கள் உழைப்பால் வந்ததா? அல்லது அநீதியாக வந்ததா?, நீ முன்னோர்களின் சொத்து, சுகத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவனா?, உன் பிறப்பின் நோக்கம் என்ன? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் விடை தருவதுதான் 9-ம் பாவகம். மொத்தத்தத்தில் இந்த ஜென்மத்தில் உனக்கு என்ன கொடுப்பினை உள்ளது. நீ அனுபவிக்கப் போகும் நல்ல, தீய வினைப் பயன்கள் என்ன என்பதைப் பற்றி இதன் மூலம் அறிய முடியும்.

    ஒரு தாய் தன் குழந்தையை பத்து மாதம் கருவில் சுமக்கிறாள். தந்தை என்பவரோ, தன் வாரிசுக்கு முன் மாதிரியாக வாழ்பவர். அவர்கள் சொல்லும் முன்பாகவே அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவர். வாழ்நாள் முழுவதும் பிள்ளையை தன் நெஞ்சில் சுமந்து, சமுதாயத்தில் தலைசிறந்த குடிமகனாக மாற்றும் பொறுப்பு கொண்டவர்.

    இது ஒருபுறம் இருக்க பல குடும்பங்களில் தந்தையும் மகனும் பங்காளிகளைப் போல வாழ்கிறார்கள். பல இடங்களில் இன்னும் ஒரு படி மேலே போய் தந்தையும், மகனும் பேசிக் கொள்வதே கிடையாது. அல்லது கடும் பகைவர்களாக இருக்கிறார்கள்.

    தந்தை- மகன் உறவை மூன்றாக வகைப்படுத்தலாம். இதில் முதலாவது, தந்தையும் மகனும் ஒருமித்த கருத்துடன் வாழ்வது. இவர்களுடைய ஜாதகத்தில் தர்ம கர்மாதிபதி யோகம் இருக்கும். இல்லையெனில் 9-ம் இடத்திற்கு லக்ன சுபர் அல்லது குருவின் பார்வை இருக்கும். தா்ம கா்மாதிபதி யோகம் வரமாக செயல்படும். இவர்கள் பரம்பரை பரம்பரையாக தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற தாரக மந்திரத்துடன் வாழ்வார்கள்.

    தந்தை- மகனுக்கு இடையே கருத்துவேறுபாடு இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் இருப்பது இரண்டாவது வகை. இவர்களுடைய ஜாதகத்திலும் தர்ம கர்மாதிபதி யோகம் இருக்கும். அந்த யோகமானது இவர்களுக்கு சாபமாக செயல்படும். இவா்கள் ஜாதகத்தில் குரு, சனி வக்ரமாகவோ, பலம் இழந்தோ இருக்கும். குரு அல்லது சனிக்கு, செவ்வாய் சம்பந்தம் இருக்கும்.

    தந்தை மகன் கருத்துவேறுபாடு குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மன வருத்தத்தை தரும் விதத்தில் இருப்பது மூன்றாவது வகையாகும். இதனை தந்தையால் மகனுக்கு பாதிப்பு அல்லது மகனால் தந்தைக்கு மன வேததனை என்றும் வகைப்படுத்தலாம்.

    ஜனன கால ஜாதகத்தில் கிரக நிலவரம் எப்படி இருந்தாலும், தந்தை - மகன் கருத்து ஒற்றுமை என்பது மிக அவசியம். இதற்கு தீர்வு கிடைக்குமா? உண்டா? என்பதே பலரின் ஆதங்கம். இதை ஜாதக ரீதியாக மட்டுமின்றி, உளவியல் ரீதியாகவும் கொஞ்சம் அணுகவேண்டியதிருக்கிறது.

    உளவியல் ரீதியாக எந்த பிரச்சினைக்குமான தீா்வும், நம் கையில்தான் இருக்கிறது. ஒருவருடைய உணர்வை புரிந்து கொள்ளாமை, சிறிய பிரச்சினையை பெரிது படுத்துவது, சகிப்புத் தன்மை இன்மை போன்றவை கருத்து வேறுபாட்டிற்கு பிரதான காரணமாக இருக்கின்றன. நமது ஆழ்மனதில் நிலவும் மனக்குறையும் கூட பல பிரச்சினைக்கு மூலக் காரணமாக உள்ளது.

    உதாரணமாக யாராவது உங்களை பார்த்து “அப்பா சவுக்கியமா?”ன்னு கேட்டா, நீங்க என்ன பதில்களை சொல்றீங்க..

    “ஏதோ இருக்கிறார்”, “என்னமோ வண்டி ஓடுது”, “என்னத்த சொல்ல.. எல்லாம் என் தலையெழுத்து”, “ஏண்டா அவருக்கு பிள்ளையா பிறந்தோம்னு இருக்கு”, “எனக்கு மட்டும் நல்ல அப்பாவை தராமல் கடவுள் வஞ்சனை பண்ணிட்டாரு” -பலரிடம் இருந்து விரக்தியின் வெளிப்பாடாக இப்படியான பதில்கள்தான் பெரும்பாலும் வருகிறது.

    இதெல்லாம் அவர்களுடைய ஆழ்மனதில் இருந்து வருகிற வார்த்தைகள். இந்த வார்த்தைகள்தான் உங்களோட வாழ்க்கையை தீர்மானம் பண்ணுகிறது. ஏனெனில், ஒரு வார்த்தையை பத்து தடவை சொல்லும் போது, அந்த வார்த்தைக்கு சக்தி கிடைத்து, அது உடனடியாக வேலை செய்ய ஆரம்பித்து விடும். உங்க சொல்படிதான் அனைத்தும் நடக்கும்.

    எனவே “நாங்க சந்தோஷமாக இருக்கிறோம்”, “கடவுள் எங்களை நல்லபடியா வைத்து இருக்கிறார்” என்பது போன்ற நேர்மறை வார்த்தைகளை சொல்லிப் பழகுங்கள். அந்த வார்த்தைகள், உண்மையிலேயே உங்க வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வரும்.

    பிரபஞ்ச நியதிப்படி ஒரு மனிதன் தன் விருப்பத்திற்கு ஏற்ப, வீடு, வாகனம், தொழில், நண்பர்கள் போன்றவற்றை அமைத்துக்கொள்ள முயற்சிக்கலாம். தான் விரும்புவது போல் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் தாய்- தந்தை, முன்னோர்கள், உடன்பிறந்தவர்கள், நமக்கு பிறக்கும் பிள்ளைகள், உற்றார்- உறவினர்களை தேர்வு செய்யும் உரிமையை, இந்த பிரபஞ்சம் யாருக்கும் வழங்குவதில்லை. எத்தனை கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலும் இந்த பூர்வ ஜென்ம பந்த, ரத்த உறவுகளை உதறித் தள்ள முடியாது. “உறவுகளே வேண்டாம்” என்று ஒதுங்கி நின்றாலும், நம் முன்னோர்கள் மற்றும் தாய், தந்தை வழியாக நமக்குள் புகுந்த மரபணுக்களே நம்மை இயக்கும். எனவே வாழும் காலத்தில் அனுசரித்து வாழ்வதே அனைவருக்கும் நல்லது.

    தந்தையால் மகனுக்கு பயனற்ற நிலை

    9-ம் அதிபதி, 9-ல் நின்ற கிரகம் வக்ரம், நீச்சம், அஸ்தமனம் பெற்று இருந்தால் அல்லது 9-ல் சனி, ராகு-கேது இருந்தால் தந்தை - மகன் ஒற்றுமை இருக்காது.

    9-ம் அதிபதி 6, 8, 12-ல் மறைந்திருந்தால், அந்த நபருக்கு தந்தையால் பயன் ஒன்றும் கிடைக்காது.

    9-ல் சூரியன் இருந்தாலோ, சூரியன் மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ தந்தையின் ஆதரவு கிடைக்காது.

    9-ம் அதிபதி 6-ல் இருந்தால், பூர்வீகச் சொத்துக்களால் கடன், பூர்வீகச் சொத்து இழப்பு, எதிரி தொல்லை, புகழுக்கு களங்கம், முன்னேற்ற குறைவு போன்ற காரணங்களால், தந்தை- மகனுக்கு இடையே கருத்துவேறுபாடு நிலவும்.

    9-ம் அதிபதியானவர் 8, 12-ல் இருந்தால், அதிர்ஷ்ட குறைவு, அதிகச் செலவு, ஏழ்மை, பூர்வீக சொத்து பறிபோதல் போன்ற காரணங்களால் தந்தையின் அன்பும், அரவணைப்பும் கிடைக்காது.

    சனி, ராகு- கேது அல்லது மாந்தியால் சூரியனுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் தந்தையால் பயன் இருக்காது.

    9-ம் இடத்தில் சந்திரன் - சனி சேர்க்கை அல்லது சந்திரன் சனியின் பார்வை இருந்தால், அந்த ஜாதகர் தந்தையால் பலவிதமான துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.

    9-ல் தனித்த சனி அல்லது சூாியன் - சனி சம்பந்தம் இருந்தாலும், அந்த ஜாதகருக்கு தந்தையின் பாசம் கிடைக்காது.

    மகனால் தந்தைக்கு மன வருத்தம்

    5-ம் இடம் அல்லது 5-ம் அதிபதிக்கு செவ்வாய், சனி பார்வை அவ்வளவு நல்லதல்ல.

    5-ம் அதிபதி, 5-ல் நின்ற கிரகம் ஆகியவை நீச்சம், பகை, அஸ்தமனம், வக்ரம் அடைந்தாலும், 5-ல் ராகு ,கேது, சனி போன்ற பாவ கிரகங்கள் இருந்தாலும், வாரிசுகளால் மனவருத்தம் உண்டாகும்.

    5-ம் இடம் அல்லது 5-ம் அதிபதிக்கு 6, 8, 12 போன்ற மறைவு ஸ்தான சம்பந்தம் இருந்தால், பெற்றோர்களை பிரிந்து வாரிசுகள் வெளியூர், வெளிநாடு, வெளிமாநிலத்தில் வாழும் நிலையை ஏற்படுத்தும்.

    பரிகாரம்

    வாரிசுகளால் மன உளைச்சலை சந்திப்பவர்கள், சனிக்கிழமை காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள், சூரிய ஓரை நேரத்தில் சிவ வழிபாடு செய்து, எள் சாதம் தானம் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    தந்தையால் மன விரக்தி கொண்டவர்கள், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியில் இருந்து 11 மணிக்குள் வரும் சனி ஓரையில் சிவ வழிபாடு செய்து வர வேண்டும். அத்துடன் சிவன் கோவில் கருவறையில் எரியும் தீபத்திற்கு நல்லெண்ணெய் வாங்கிக் கொடுத்தால் விரைவில் மாற்றம் உண்டாகும்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
    தஞ்சை பெரிய கோவிலில் தனி சன்னதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வருகிறார். சப்த மாதர்களில் முக்கியமாக விளங்கும் வராகி அம்மனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
    தஞ்சை பெரிய கோவிலின் திருச்சுற்று மாளிகையில் பழங்காலத்தில் பிராம்மி, வை‌‌ஷ்ணவி, கவுமாரி, வராகி, இந்திராணி, மாகேஸ்வரி, சாமுண்டி என்ற சப்த மாதர்கள் எழுந்தருளி இருந்தனர். பின்னாளில் மற்ற தெய்வ திருமேனிகள் எல்லாம் மறைந்து விட்டன. திருமாலின் வராக அவதாரத்தின் சக்தி அம்சமான வராகி அம்மன் திருமேனி மட்டும் தெற்கு பிரகாரத்தில் இன்றும் அமைந்துள்ளது. காசியில் வராகி அம்மனுக்கு என தனி சன்னதி உள்ளது.

    அதற்கு அடுத்த படியாக தஞ்சை பெரிய கோவிலில் தனி சன்னதியில் வராகி அம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சப்த மாதர்களில் முக்கியமாக விளங்கும் வராகி அம்மனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். அம்மனின் போர்படை தளபதியாக வராகி அம்மன் உள்ளார். ஆதலால் நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற நினைப்பவர்கள் இந்த அம்மனை வேண்டினால் கண்டிப்பாக வெற்றி கிட்டுவதுடன், கேட்ட வரம் தருவதாகவும் இங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர்.

    ராஜராஜசோழன் எந்த செயலை செய்தாலும் முதலில் வராகி அம்மனை வழிபடுவது தான் வழக்கம். இங்கு நடைபெறும் ஆ‌ஷாட நவராத்திரி விழா மிகவும் சிறப்பு மிக்கது ஆகும். இந்த நவராத்திரி விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் கலந்து கொள்வர். விழாவையொட்டி அம்மனுக்கு தினமும் பல்வேறு அலங்காரமும், யாகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெறுவது வழக்கம்.
    ‘கந்த சஷ்டி கவசம்’ என்பது நம்மை தீமைகளில் இருந்து, துன்பங்களில் இருந்தும் காப்பாற்றுவதாகும். நாம் முருகப்பெருமானின் திருவடியை பற்றிக் கொண்டால், இல்லத்தில் கடன், வியாதி, எதிரிகள் பயம் விலகும்.
    ‘கவசம்’ என்பது, நம்மை காப்பாற்றக்கூடிய அணிகலனைக் குறிப்பதாகும். போரில் யுத்த வீரர்கள் தங்கள் உடலைக் காத்துக் கொள்ள கவசம் அணிந்து போரிட்டுள்ளனர். அதே போல் ‘கந்த சஷ்டி கவசம்’ என்பது நம்மை தீமைகளில் இருந்து, துன்பங்களில் இருந்தும் காப்பாற்றுவதாகும்.

    கந்தசஷ்டி கவசத்தை அருளியவர், ஸ்ரீ தேவநாய சுவாமிகள். இவர் பெரிய முருக பக்தர். இந்த சஷ்டி கவசத்தை தினமும் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் பாராயணம் செய்து வந்தால், முருகப்பெருமானின் அருள்காட்சி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    சஷ்டி என்பது அமாவாசை அல்லது பவுர்ணமிக்கு அடுத்த ஆறாம் நாள் வரும் திதியாகும். ஒருவரது ஜாதகத்தில் 6-ம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு ஆகியவற்றை குறிக்கும். செவ்வாய் ரோகக்காரகன். இவருக்குரிய தெய்வம் முருகப்பெருமான். 6-ம் இடத்து தோஷங்களை போக்கும் சக்தி முருகப்பெருமானுக்கு உண்டு.

    முருகப்பெருமானுக்கு உகந்த நாள் சஷ்டி. இது ஆறாவது திதியாகும். முருகனுக்கு ஆறு முகங்கள். ‘சரவணபவ’ என்னும் ஆறு அட்சரங்களைக் கொண்டவர். ஆறு படை வீடு உரியவர். ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர்.

    நாம் முருகப்பெருமானின் திருவடியை பற்றிக் கொண்டால், இல்லத்தில் கடன், வியாதி, எதிரிகள் பயம் விலகும்.

    -ஜெ.மாணிக்கவாசகம்
    எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வழிபாடு செய்தால் என்னவென்ன பிரச்சனைகள் தீரும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இறைவழிபாடு நம்முடைய அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் வலிமை கொண்டது. எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வழிபாடு செய்தால் என்னவென்ன பிரச்சனைகள் தீரும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    * ஞாயிறு: கண்ணுக்குத் தென்படும் கடவுளான சூரியனை வணங்க ஏதுவான நாள். ‘ஆதித்ய ஹிருதயம்’ என்ற சுலோகத்தைச் சொல்லி வணங்க வேண்டும்.

    * திங்கள்: சிவாலய தரிசனம் நன்மை தரும். தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி பாடல்களைக் கொண்டு அம்பிகையையும், சிவபெருமானையும் வழிபடுவது நல்லது.

    * செவ்வாய்: முருகப்பெருமான் ஆலயத்திற்குச் சென்று, ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் நினைத்தது நடக்கும். எதிரிகள் காணாமல் போவார்கள். கந்தசஷ்டி கவசம் படிப்பதும் நன்மை தரும்.

    * புதன்: பெருமாளை சேவிப்பதற்கு ஏற்ற தினம். துளசி மாடத்திற்கு பூஜை செய்ய உகந்த நாள். விஷ்ணு சஹஸ்ரநாமம், நாலாயிர திவ்யபிரபந்தம் ஆகிய பாடல்களைப் பாராயணம் செய்தால் வாழ்வில் வளம் சேரும்.

    * வியாழன்: நாம் குருவாக எண்ணும் மகான்களைப் போற்றுவதற்கு உகந்த நாள். சாயிபாபா, ராகவேந்திரர், ராமானுஜர், காஞ்சி பெரியவர் போன்ற மகான்களை ஆராதனை செய்யலாம். பகவத்கீதையைப் பொருள் புரிந்து படிப்பது நலன்களைப் பெற்றுத்தரும்.

    * வெள்ளி: மகாலட்சுமி வழிபாடு நன்மைதரும். கோ-பூஜை செய்வது, பஞ்சமுக குத்துவிளக்கை ஏற்றி வைத்து பூஜிப்பது மிகவும் விசேஷம். அம்பிகையின் ஆலயங்களை தரிசிப்பது நன்மை தரும். மகாலட்சுமி ஸ்தோத்ரம், மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ரம், அன்னபூர்ணா அஷ்டகம் ஆகியவற்றைப் படிப்பதும் நல்லது.

    * சனி: ஆஞ்சநேயர், கருடாழ்வார், நந்திகேஸ்வரர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என இறைவனுக்குத் தொண்டு செய்து இறைநிலை அடைந்த அடியவர்களை வணங்குவதற்கு சிறப்பான நாள். ராமாயணம், மகாபாரதம், சுந்தரகாண்டம், பெரியபுராணம் முதலான நூல்களைப் படித்தறியவும் இது ஏற்ற தினங்கள் ஆகும்.

    * விநாயகப்பெருமானை எல்லா நாட்களிலும், எல்லா நேரத்திலும் வணங்கலாம். நினைத்தவுடன் நம் மனக்கண் முன் தோன்றுபவர் விநாயகர்.

    பொ.பாலாஜிகணேஷ்
    திருப்போரூர் கந்தசுவாமியை வழிபட்டு வந்தால் வீடு, நிலம், நிறைந்த செல்வம், நல்ல மணவாழ்க்கை, குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு, கலை உலகில் புகழ், உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் என வேண்டியதை கந்தனிடம் வேண்டி பெறலாம்.
    சென்னை கேளம்பாக்கத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்பெற்ற திருப்போரூர் திருத்தலம் அமைந்துள்ளது. ஆலயத்தில் சம்ஹார முத்துக்குமார சுவாமியின் திருவடிவம் உள்ளது. இவர் வலது காலை மயில் மேல் ஊன்றி, வில்லேந்திய திருக்கோலத்தில் அருள்கிறார். இந்த சம்ஹார மூர்த்தியை தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது 6 சஷ்டி நாட்களிலோ சிவப்பு அரளி மாலை சூட்டி, பீட்ரூட் சாதம் நிவேதனம் செய்து 6 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, ‘சத்ரு சம்ஹார வேல்பதிகம்' பாராயணம் செய்து வந்தால் எதிரிகள் விலகுவர். கடன் தொல்லை விலகும்.

    இத்தல முருகப்பெருமானை தொடர்ந்து வழிபட்டு வந்தால், பிரிந்த குடும்பங்கள் ஒன்றாகும் என்கிறார்கள். இத்தல முருகப்பெருமான், பனை மர அடியில் கிடைத்ததால் அந்த பனை மரத்தினால் ஆன பெட்டியை ஆலய பிரகாரத்தில் வைத்துள்ளனர்.

    இங்கு மாதம்தோறும் கிருத்திகை நாட்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். ஆடி மற்றும் தை கிருத்திகை நாட்களில் அலகு குத்துதல், முடி காணிக்கை, காவடி எடுத்தல் என பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வழிபடுகிறார்கள். கிருத்திகை விரதம் முறைப்படி இருந்து திருப்போரூர் கந்தசுவாமியை வழிபட்டு வந்தால் வீடு, நிலம், நிறைந்த செல்வம், நல்ல மணவாழ்க்கை, குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு, கலை உலகில் புகழ், உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் என வேண்டியதை கந்தனிடம் வேண்டி பெறலாம். இத்தல சரவணப்பொய்கை தீர்த்தம் நீள்சதுர வடிவில் அமைந்துள்ளது.

    உட்பிரகாரத்தின் வடகிழக்கில் சிதம்பர சுவாமிகள் ஸ்தாபித்த, யந்திர ஸ்தாபனமாகிய ஸ்ரீசக்கரம் உள்ளது. இதில் விநாயகர், வள்ளி - தெய்வானையுடன் கூடிய முருகர், சிவன், உமையவள், சண்டேசர், அஷ்டதிக் பாலகர், பைரவர்களுக்கு உரிய மந்திர எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. கூர்மம், அஷ்டநாகம், அஷ்ட கஜங்கள், கணங்கள் ஆகியவை கொண்ட பீடத்தில் இச்சக்கரம் அமைந்துள்ளது. தினமும் இதற்கு பூஜைகள் நடைபெற்றாலும், கந்தசஷ்டி ஆறு நாட்களிலும் விசேஷ அபிஷேகமும், யந்திர மாலா சிறப்பு பூஜையும் செய்யப்படுகின்றன. இந்தச் சக்கர ஸ்தாபனத்தை வாசனை மலர்கள் தூவி, நெய் தீபம் ஏற்றி, தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டு வந்தால் பதினாறு வகைப்பேறுகளும் கிட்டும்.

    மாமல்லபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டா் தூரத்திலும், திருக்கழுக்குன்றத்தில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை கேளம்பாக்கத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்பெற்ற திருப்போரூர் திருத்தலம் அமைந்துள்ளது.
    திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு வந்து செய்ய வேண்டிய பரிகாரத்தை செய்தால் மூன்று ஜென்மமாக இருந்து வந்த தோஷங்கள் விலகி சகலவிதமான பாக்கியத்தையும் பெறுவார்கள்.
    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ளது திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில். இந்த கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 79-வது ஸ்தலமாக திகழ்கிறது.

    பிரம்மனின் கபாலம், சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொள்ள இங்குள்ள குறுங்குடிவல்லித் தாயாரால் அம்ருதபிஷையிட்டு, சாபம் நீங்கப் பெற்ற தலம் இது. இக்கோவிலில் இருந்து  கி.மீ. தூரத்தில் திருப்பாற்கடல் என்ற ஓடை பாய்கிறது. அதன் கரையில், திருப்பாற்கடல் நம்பி சன்னதி இருக்கிறது.

    இந்த தலத்திலிருந்து 10 கி.மீ. தூரத்தில் ஒரு குன்று இருக்கிறது. அக்குன்றின் மேல் மலை நம்பி சன்னதி இருக்கிறது. உடையவரை குருவாக ஏற்று உபதேசம் பெற்றதால், இந்த சேத்திரத்துப் பெருமாள் வைஷ்ணவ நம்பி என்ற நாமத்தைப் பெற்றார். இந்த தலத்திலிருந்து  கி.மீ. தூரத்தில் திருப்பாற்கடல் ஆறு ஓடுகிறது. அதன் நடுவில் உள்ள திருப்பரிவட்டப் பாறையில் உடையவர் சன்னதி இருக்கிறது.

    பெரியாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருத்தலம் இது. கொடிய பாவம் செய்து, அதன் காரணமாக குழந்தை குட்டிகளோடு சொல்லவொண்ணாத் துன்பத்தை அடைந்து கொண்டிருக்கும் அனைவரும் இந்த திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு வந்து செய்ய வேண்டிய பரிகாரத்தை செய்தால் மூன்று ஜென்மமாக இருந்து வந்த தோஷங்கள் விலகி சகலவிதமான பாக்கியத்தையும் பெறுவார்கள்.
    கர்ம வினையால் நம் ஜாதகத்தில் சில தோஷங்கள் இருக்கும். இதனால் வேலை கிடைப்பதில் பிரச்சனை இருக்கும். வேலை கிடைக்க பைரவருக்கு பரிகாரம் செய்தால் வழிபிறக்கும்.
    கர்ம வினையால் நம் ஜாதகத்தில் சில தோஷங்கள் இருக்கும். வேலை கிடைப்பதில் பிரச்சனை இருக்கும். தாமதம் ஆகும். கிடைத்தாலும் எதிர்பார்த்த வேலை இருக்காது. பிடித்த வேலை அமையாது. இவ்வாறாக வேலை சார்ந்த விஷயத்தில் தடங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். அதை சரி செய்ய சனி பகவானின் குருவான பைரவரை விரதம் இருந்து வழிபட வேண்டும். பைரவரை கவனித்தால் போதும். சனி பகவான் மகிழ்வார். கெடு பலன்கள் குறையும். தோஷம் நீங்கும். மனதிற்கு பிடித்த வேலை நிச்சயம் அமையும்.

    பரிகாரம்: சனிக்கிழமை அன்று காலை நீராடி விட்டு சுத்தமான ஆடை அணிந்து கொண்டு 7 மணிக்குள் பைரவர் சன்னதிக்கு சென்று அங்கு சிவப்பு நிற மலர்கள் கொண்டு அர்சித்து, சிவப்பு நிற பழங்கள் நிவேதனம் செய்து விட்டு ஒரு புதிய அகல் விளக்கு ஒன்றை வங்கி வைத்து கொள்ளுங்கள். அதற்கு மூன்று முகங்களில் சந்தனம், குங்குமம் இட்டு கொள்ளுங்கள். ஒரு கருப்பு நிற சுத்தமான நூல் துணி ஒன்றை சிறிய அளவில் சதுரமாக வெட்டி வைத்து கொள்ளுங்கள்.

    அதில் 27 என்ற எண்ணிக்கையில் மிளகுகளை ஒவ்வொன்றாக போட்டு கொள்ளுங்கள். பின்னர் அதை ஒரு மூட்டை போன்று நன்கு இறுக்கமாக நூல் கொண்டு கட்டி விடுங்கள். மிளகுகள் வெளிய வந்து விடக்கூடாது. பின்னர் அகல் விளக்கில் வைத்து விடுங்கள். இழுப்பை எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். இழுப்பை எண்ணெய் இல்லை என்றால் நல்லெண்ணெய் ஊற்றலாம். மிளகு மூட்டையின் திரியிலும் படும்படி ஊற்றி கொள்ளுங்கள். பின்னர் தீபம் ஏற்றி பைரவர் மூல மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
    சந்திரன் இரவு வேளைக்கு அதிபதி என்பதால் வளர்பிறை காலங்களில் சந்திர தரிசனம் செய்ய மனக்குழப்பம் நீங்கும். மனக்குழப்பத்தால் பய உணர்வு மிகுதியாக உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் மாலை நேரத்தில் வெண்ணிற மலர்களால் சிவபெருமானையும், அம்பிகையையும் வழிபட வேண்டும்.
    வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி, உலக இன்பங்கள் அனைத்தையும் நுகர வேண்டும் என்பதே ஒரு மனிதனுடைய விருப்பமாக இருக்கும். ஒருவருடைய எண்ணங்கள், விருப்பங்கள் பலிதமாகும் போதுதான், அடுத்த நிலையை நோக்கி அடியெடுத்து வைக்கும் ஆர்வம் ஏற்படும்.

    தன் வாழ்நாள் முழுவதும் மனிதன் ஒவ்வொரு நாளும் விதவிதமான பிரச்சினைகளையும், போட்டிகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. ஒரு கணம் அசந்தால் கூட, வெற்றி வாய்ப்பை இழந்துவிடுவோம். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே, வயதிற்கேற்ற போட்டியை சந்திக்கும் நிலையில்தான் மனிதர்களின் வாழ்க்கை கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் விதவிதமான போட்டியையும், எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகவும் இருக்கிறது.

    ஒருவரின் எண்ணங்கள் ஈடேறும் போது, அவர்கள் அடையும் சந்தோஷம், மன நிம்மதிக்கு அளவே கிடையாது. நிறைவேறாத எண்ணங்கள் கனவாக, கானல் நீராக ஆழ்மனதில் பதிந்து விடும். மன வலிமை உள்ளவர்கள், நிறைவேறாத எண்ணங்களை கனவாக நினைத்து மறந்துவிட்டு, அடுத்த முயற்சியை நோக்கி அடியெடுத்து வைப்பார்கள். மன வலிமை குறைந்தவர்கள் தனிமையில் யோசித்து, தன் மனதை தானே கெடுத்துக்கொண்டு உடன் இருப்பவர்களையும் காயப்படுத்தி விடுகிறார்கள்.

    உடன் பணிபுரிபவர்கள், அருகில் வசிப்பவர்கள், நண்பர்கள், குடும்பத்தாருடன் போட்டியிட்டு அவர்களை விட முன்னேற வேண்டும், அவர்களை விட வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என யோசித்து ஆனந்தத்தையும், நேரத்தையும், ஆற்றலையும் தொலைத்து சேர வேண்டிய உண்மையான இலக்கிற்கான பாதையை மறந்து மனக்குழப்பத்தை வரவழைப்பவர்கள் மிகுதியாக இருக்கிறார்கள்.

    இந்த ஆரோக்கியமற்ற போட்டியானது, ஒரு முடிவில்லாமல் சுழலும்போது உடலில் உள்ள அனைத்து சக்கரங்களின் இயக்கங்களும் பாதித்து மனக் குழப்பத்தால் தொல்லை ஏற்படுகிறது.

    மனக் குழப்பத்தை, மெல்லக் கொல்லும் விஷத்துடன் ஒப்பிடலாம். தீராத மனக்குழப்பம் மனிதனை சிறிது சிறிதாக அழித்து விடும். இது போன்ற மனக்குழப்பத்தால் 40 வயதை தொட்டவர்கள், உடல் அளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.

    மனக்குழப்பம் ஏற்பட ஜோதிட ரீதியான காரணங்களைப் பார்க்கலாம்.

    ஜனன ஜாதகத்தில் லக்னம், 3-ம் இடம், சந்திரன், சூரியன் ஆகியவை நல்ல நிலையில் இருந்தால் ஜாதகரின் எண்ணங்கள் 100 சதவீதம் பலிக்கும். நினைக்கும் காரியங்கள் அனைத்தையும் சாதிக்கும் வல்லமை படைத்தவராக அந்த ஜாதகர் இருப்பார். அவருடைய எண்ணங்களும் வலிமை கொண்டதாக இருக்கும்.

    மூன்றாம் இடத்தில் பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய் இருந்தால், அந்த நபர் மன தைரியம் கொண்டவராக இருப்பார். சுப கிரகங்கள் ஆதிக்கம் மிகுதியாக இருந்தால் சிறிய விஷயத்திற்கு கூட அதிகமாக யோசித்து பெரியதாக மனக்குழப்பத்தை ஏற்படுத்துவர்கள்.

    மூன்றாம் அதிபதி நீச்சம், அஸ்தமனம் அடைந்து, ஐந்தாம் அதிபதியுடன் சேர்ந்து இருந்தால் மனக்குழப்பமும், தைரியக் குறைவும் மிகுதியாகும்.

    ஐந்தாம் அதிபதி நீச்சம், அஸ்தமனம் அடைந்து மூன்றாம் அதிபதியுடன் சேர்ந்திருந்தால் எவ்வளவு தைரியமானவராக இருந்தாலும், தான் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்குமா? என்ற மனக்குழப்பம் ஆழ்மனதில் இருந்து கொண்டே இருக்கும்.

    ஒருவரின் ஆழ்ந்த சிந்தனை, ஆழ்மனதை குறிக்கும் கிரகம், 5-ம் அதிபதியான சூரியன். அப்படிப்பட்ட சூரியன், ராகு - கேது மற்றும் சனியுடன் இணைந்திருந்தாலோ, சூரியன் நீச்சம் பெற்றிருந்தாலோ, 6,8,12-ல் சூரியன் மறைந்தவர்கள், அஷ்டம, பாதக அதிபதியோடு சூரியன் சம்பந்தம் பெற்றவர்கள் மனவிரக்தியை அதிகம் சந்திக்கிறார்கள்.

    ஜாதகத்தில் மனோகாரகன் எனப்படும் சந்திரன் வலிமை குறைந்தால் மனரீதியான பாதிப்பு மிகும். லக்னத்திற்கோ, லக்னாதிபதிக்கோ 8-ல் சந்திரன் மறைந்தால் கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தும். சந்திரனுடன் சனி, ராகு- கேது இணைந்திருந்தாலோ, அஷ்டமாதிபதி, பாதகாதிபதியுடன் சந்திரன் சம்பந்தம் பெற்றிருந்தாலோ கடுமையான மன உளைச்சல் ஏற்படும். சனி - சந்திரன் சேர்க்கை, சனியும் சந்திரனும் சப்தம பார்வை, பாகை முறையில் சனி- சந்திரன் நெருக்கம் ஆகியவை முதன்மையான மனக்குழப்ப கிரக அமைப்பாகும்.

    ராசியின் அடிப்படையில் பார்க்கும் போது மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகாரர்களுக்கு சந்திரனால் மனரீதியான பாதிப்புகள் இருக்கும்.

    நட்சத்திர ரீதியாகப் பார்க்கும் போது சனி, புதன், ராகு, கேது ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் மன அழுத்தம் மிகுதியாக இருக்கும். குறிப்பாக சனி, புதனின் நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கு பாதிப்பு மிகுதியாக இருக்கும். புதன், சந்திரன், சனி நீச்சம் அடைந்தாலும் கடுமையான மனக் குழப்பம் ஏற்படும்.

    கோட்சார சந்திரன் ராசிக்கு எட்டில் மறையும் போது அல்லது ராகு-கேது, சனியை கோட்சார சந்திரன் தொடும்போது மனரீதியான பாதிப்பு நிச்சயம் உண்டு.

    கோட்சார ராகு, கேது, சனி சந்திரனுடன் சம்பந்தம் பெறும் போதும், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி, கண்டக சனி, ஜென்ம ராகு -கேது, ஆகிய காலகட்டங்களில் மனோரீதியான பாதிப்பு அதிகம் உருவாகும். லக்னத்தில் சனி, ராகு, கேது, அஷ்டமாதிபதி இருந்தாலோ அல்லது பார்வை சேர்க்கை பெற்றாலோ அல்லது லக்னாதி பதியுடன் சனி, ராகு, கேது இணைந்தாலோ அல்லது 6,8,12-ம் அதிபதியுடன் அமர்ந்தாலும் மன ரீதியான பாதிப்பு ஏற்படும்.

    ஜனன கால ஜாதகத்தில் அதிக வக்ர கிரகம் இருந்தாலும், மன அழுத்தம் உண்டாகும்.

    உளவியல் ரீதியாக பண அழுத்தமே மனக்குழப்பத்தத்திற்கு காரணமாகிறது. கண்ணுக்கு தெரியாமல் தொடங்கும் இந்த மன குழுப்பம், ஒற்றைத் தலைவலி முதல் மாரடைப்பு வரையான பல்வேறு நோய்களை மனிதனுக்கு தருகிறது.

    பரிகாரம்

    சந்திரன் இரவு வேளைக்கு அதிபதி என்பதால் வளர்பிறை காலங்களில் சந்திர தரிசனம் செய்ய மனக்குழப்பம் நீங்கும். மனக்குழப்பத்தால் பய உணர்வு மிகுதியாக உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் மாலை நேரத்தில் வெண்ணிற மலர்களால் சிவபெருமானையும், அம்பிகையையும் வழிபட வேண்டும்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
    குலதெய்வத்தை நினைத்து நம் வீட்டில் ஒரு இலுப்ப எண்ணெயில் தீபம் ஏற்றினால் நிச்சயம் உங்கள் குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை நீங்கள் பெற முடியும்.
    நம் வீட்டில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சினைக்கும் மூல காரணமாக இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது பெரும்பாலானோருக்கு பணமாகத்தான் இருக்கும். அந்தப் பணம் நம் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் நம் குல தெய்வத்தின் ஆசீர்வாதம் நமக்கு முழுமையாக கிடைத்திருக்க வேண்டும். அனேகமானவர்களின் வீட்டில் குலதெய்வ வழிபாட்டை மறந்துவிடுகிறார்கள்.

    அதாவது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவது என்பது வேறு. தினம்தோறும் நம் வீட்டில் அந்த குலதெய்வத்தை நினைத்து வழிபடுகின்றோமா, என்றால் பலரின் பதில் இல்லை என்றுதான் வரும். குலதெய்வத்தை நினைத்து நம் வீட்டில் ஒரு தீபம் ஏற்றினால் நிச்சயம் உங்கள் குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை நீங்கள் பெற முடியும். அது என்ன தீபம் என்பதை தெரிந்து கொள்வோம்.

    மண்ணால் செய்யப்பட்ட ஒரு அகல் விளக்கில், ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு, இலுப்பை எண்ணெய் ஊற்றி, இரண்டு திரிகளை ஒன்றாக சேர்த்து திரித்து, கிழக்கு பக்கம் நோக்கி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபத்தை ஏற்றும்போது உங்கள் குலதெய்வத்தின் பெயரை உங்கள் மனதிற்குள் உச்சரித்துக்கொண்டே ஏற்றுவது அவசியமாகும். இந்த தீபமானது உங்கள் குலதெய்வத்திற்க்கு மட்டும் என்ற எண்ணத்தோடு ஏற்றவேண்டும். இந்த தீபத்தை உங்களால் முடிந்தால் பிரம்ம முகூர்த்த நேரமான காலை 4.00 மணியிலிருந்து 5.30 மணிக்குள் ஏற்றுவது இன்னும் சிறந்தது. முடியாதபட்சத்தில் காலை ஏழு மணிக்குள்ளாவது இந்த தீபத்தை ஏற்றி விடுங்கள்.

    இலுப்பை எண்ணெய்க்கு அனைத்து தெய்வங்களின் சக்தியையும் ஈர்க்கும் தன்மை உடையது. சிவன் கோவில்களில் பெரும்பாலும் இலுப்பை எண்ணெயின் மூலம் தான் விளக்கினை ஏற்றி வந்தார்கள். குத்து விளக்கில் இலுப்பை எண்ணெய் ஊற்றி வெள்ளைதிரி போட்டு வெள்ளிக்கிழமையன்று பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றினால் அஷ்டலட்சுமி அருள் கிடைக்கும். இதே போல் மஞ்சள் திரையிட்டால் குபேரன் அருள் கிடைக்கும். சிகப்பு திரையிட்டால் நம் கடன் தொல்லை தீரும். இப்படியாக இலுப்ப எண்ணெயில் முறையாக தீபத்தை ஏற்றும்போது நம்மால் நல்ல பலனை அடைய முடியும்.

    எந்த தெய்வத்தை எப்படி வழிபட்டாலும் சரி, வழிபடவில்லை என்றாலும் சரி உங்கள் வீட்டு குலதெய்வத்தை மறந்தும்கூட தயவுசெய்து மறந்து விடாதீர்கள். ஏனென்றால் நம் குலத்திற்கு எந்த விதமான கஷ்டங்களும் ஏற்படாமல் பாதுகாத்து வர வேண்டும் என்று, நம் முன்னோர்கள் காலம் காலமாக வழிபட்டு வரும் தெய்வம் தான் குலதெய்வம். இப்படிப்பட்ட குல தெய்வத்தை மறப்பது என்பது நம் குடும்பத்திற்கு நல்லது அல்ல. 
    ஜனனகால ஜாதகத்தில் கேது சரியில்லை என்றால், திருமணத்தடை, குழந்தையின்மை போன்ற பல சிக்கல்கள் உருவாகும். இந்த பாதிப்பு உள்ளவர்களும், கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் சித்திரகுப்தரை வழிபட்டு, சிக்கல்கள் நீங்கப்பெறலாம்.
    சித்திரகுப்தருக்கு இந்தியாவில் 11 இடங்களில் தனிக்கோவில்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தர் கோவில் அனைவரும் அறிந்ததுதான். இது தவிர திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே நல்லூர் கிராமத்திலும் சிறிய கோவில் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இந்தக் கோவில் கருதப்படுகிறது. இவ்வாலயத்தை ‘நயினார்கோவில்’ என்று இப்பகுதி மக்கள் அழைத்து வருகின்றனர்.

    நவக்கிரகங்களுள் கேதுவுக்கு அதிபதியாகவும் சித்திரகுப்தர் விளங்குகிறார். ஜனனகால ஜாதகத்தில் கேது சரியில்லை என்றால், திருமணத்தடை, குழந்தையின்மை, உடல் உபாதை, நிம்மதியின்மை, சொத்துத் தகராறு போன்ற பல சிக்கல்கள் உருவாகும். இந்த பாதிப்பு உள்ளவர்களும், கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் சித்திரகுப்தரை வழிபட்டு, சிக்கல்கள் நீங்கப்பெறலாம்.

    சித்திரகுப்தர் அவதரித்த நாளில், தங்கள் விளைநிலங்களில் விளைந்த காய்கனிகள், தானியங்கள், பழங்கள், கிழங்குகளை சித்திரபுத்திர நயினாருக்குப் படைத்து மகிழ்கின்றனர். இனிப்புப் பலகாரங்கள், சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடும் வழக்கமும் உள்ளது. குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்ய விரும்பும் தம்பதியர் ஒரு வாரம் விரதமிருந்து, மூன்று வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் இரண்டு மல்லிகைப்பூ மாலை அல்லது ரோஜாப்பூ மாலை அணிவித்து, தேங்காய், பழம் கொடுத்து அர்ச்சனை செய்து, நான்காவது வாரம் பொங்கலிட்டு வழிபட பலன் கிடைப்பதாக கூறுகிறார்கள்.

    திருநெல்வேலியில் இருந்து 32 கி.மீ தொலைவில், தென்காசி செல்லும் மெயின் ரோட்டிலுள்ள சிறு நகரம் ஆலங்குளம். இங்கிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ளது நல்லூர் கிராமம். இங்கு வைத்திலிங்க சுவாமி கோவில் முன்புள்ள நயினார் தெருவில் சித்திரகுப்தர் கோவில் இருக்கிறது. ஆலங்குளத்தில் இருந்து பேருந்து, சிற்றுந்து வசதிகள் உள்ளன.
    ×