search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வராகி அம்மன்
    X
    வராகி அம்மன்

    திருமணத்தடை, குழந்தை பாக்கியம் அருளும் வராகி அம்மன்

    தஞ்சை பெரிய கோவிலில் தனி சன்னதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வருகிறார். சப்த மாதர்களில் முக்கியமாக விளங்கும் வராகி அம்மனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
    தஞ்சை பெரிய கோவிலின் திருச்சுற்று மாளிகையில் பழங்காலத்தில் பிராம்மி, வை‌‌ஷ்ணவி, கவுமாரி, வராகி, இந்திராணி, மாகேஸ்வரி, சாமுண்டி என்ற சப்த மாதர்கள் எழுந்தருளி இருந்தனர். பின்னாளில் மற்ற தெய்வ திருமேனிகள் எல்லாம் மறைந்து விட்டன. திருமாலின் வராக அவதாரத்தின் சக்தி அம்சமான வராகி அம்மன் திருமேனி மட்டும் தெற்கு பிரகாரத்தில் இன்றும் அமைந்துள்ளது. காசியில் வராகி அம்மனுக்கு என தனி சன்னதி உள்ளது.

    அதற்கு அடுத்த படியாக தஞ்சை பெரிய கோவிலில் தனி சன்னதியில் வராகி அம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சப்த மாதர்களில் முக்கியமாக விளங்கும் வராகி அம்மனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். அம்மனின் போர்படை தளபதியாக வராகி அம்மன் உள்ளார். ஆதலால் நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற நினைப்பவர்கள் இந்த அம்மனை வேண்டினால் கண்டிப்பாக வெற்றி கிட்டுவதுடன், கேட்ட வரம் தருவதாகவும் இங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர்.

    ராஜராஜசோழன் எந்த செயலை செய்தாலும் முதலில் வராகி அம்மனை வழிபடுவது தான் வழக்கம். இங்கு நடைபெறும் ஆ‌ஷாட நவராத்திரி விழா மிகவும் சிறப்பு மிக்கது ஆகும். இந்த நவராத்திரி விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் கலந்து கொள்வர். விழாவையொட்டி அம்மனுக்கு தினமும் பல்வேறு அலங்காரமும், யாகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெறுவது வழக்கம்.
    Next Story
    ×