search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜப் பெருமாள்
    X
    ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜப் பெருமாள்

    திருமணத் தடை நீக்கும் ஆலங்குடி அபயவரதர்

    ஆலங்குடி அபயவரதர் கோவிலில் உள்ள கல்யாண லட்சுமி நரசிம்மரை திருமணத் தடை நீக்கி மணவாழ்க்கை அமைத்துக் கொடுப்பதாக நம்பிக்கையுடன் இவரைச் சேவிக்கிறார்கள்.
    ஆலங்குடியில் உள்ள ஏலவார்குழலி அம்மை உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் செல்லுவோர், அதனருகில் திகழும் திருமாலின் திருத்தலத்திற்கும் சென்று வழிபட்டால், அனைத்து நற்பலன்களும் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    சுவாமி சன்னிதி முன்புள்ள அர்த்த மண்டபத்தில் தெற்கு திசை பார்த்த வண்ணம் லட்சுமி தேவியுடன் நரசிம்மர் தோற்றமளிக்கிறார். இதிலும் மற்ற ஆலயங்களில் இல்லாத ஒரு தனிச்சிறப்பு உள்ளது. எல்லா இடங்களிலும் நரசிம்மரின் இடதுபுறத்தில் அமர்ந்து காட்சிதரும் லட்சுமி தேவியை, இங்கு சுவாமி வலதுபுறத்தில் அமர்த்தி கைகளால் அணைத்தபடி காட்சி தருவது வேறெங்கும் காணமுடியாதது.

    கணவரின் வலப்புறம் மனைவி இருப்பது திருமணமான கோலத்தைக் காட்டுவதாகக் கொள்வது நமது நடைமுறை. எனவே இவர் ‘கல்யாண லட்சுமி நரசிம்மர்’ என்று போற்றப்படுகிறார். திருமணத் தடை நீக்கி மணவாழ்க்கை அமைத்துக் கொடுப்பதாக நம்பிக்கையுடன் இவரைச் சேவிக்கிறார்கள்.

    நரசிம்ம மூர்த்திக்கு உகந்த பிரதோஷ காலம், சுவாதி நட்சத்திரம் அல்லது தங்களது ஜென்ம நட்சத்திரத்தில் கல்யாண நரசிம்மரை வழிபட்டால் நல்வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.

    கோவில் வளாகத்தில் வலதுபுறத்தில் தனிக்கோவிலில் மேற்கு பார்த்தபடி பதினாறு கரங்களுடன் சக்கரத்தாழ்வார் சுதர்சனராக அருள் வழங்குகிறார். அவருக்குப் பின்புறம் யோகநரசிம்மர் வீற்றிருக்கிறார்.இவர்கள் தங்கள் பக்தர்களின் பகை, ஏவல், கண்ணேறு போன்ற தீவினைகள் தீர அருள்பாலிக்கிறார்கள்.
    Next Story
    ×