என் மலர்
ரஷ்யா
- ரஷியாவில் உள்ள பள்ளியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
- இதில் 6 குழந்தைகள் உள்பட 13 பேர் பலியாகினர்.
மாஸ்கோ:
ரஷியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இஜவ்ஸ்க் நகரில் உள்ள பள்ளியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 6 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் 20-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.
முதல் கட்ட விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் நாஜி குறியீடுடன் கருப்பு கலர் டீ ஷர்ட் அணிந்திருந்ததும், துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதும் தெரிய வந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
- ரஷிய வீரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கட்டளைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.
மாஸ்கோ:
உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷியா முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ரஷிய ராணுவத்துக்கு படையை திரட்டும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது.
ரஷிய ராணுவத்துக்கு சுமார் 3 லட்சம் படை வீரர்களை திரட்ட அந்நாட்டு ராணுவம் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே உக்ரைனிடம் ரஷிய ராணுவ வீரர்கள் தானாக சரண் அடைந்தால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று ரஷிய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். ரஷிய வீரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கட்டளைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.
பின்பற்ற மறுத்தாலோ, சண்டையிட மறுத்தாலோ, உக்ரைனிடம் தானாக சரண் அடைந்தாலோ அவர்களுக்கு 10 ஆண்டுகளுகள் ஜெயில் தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு ரஷிய அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த நிலையில் புதினின் அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் உக்ரைனிடம் ரஷிய வீரர்கள் சரண் அடைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவ்வாறு சரண் அடையும் ரஷிய வீரர்கள் பொதுமக்களை போன்று நடத்தப்படுவார்கள் என்று ரஷிய மொழியில் ஜெலன்ஸ்கி உறுதி அளித்துள்ளார்
- ரஷியா-ஜார்ஜியா எல்லையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
- பல கி.மீ. தொலைவுக்கு கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.
மாஸ்கோ :
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போரை தொடங்கி இன்றுடன் (சனக்கிழமை) 7 மாதங்கள் ஆகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது.
இதனால் உக்ரைனை தன்வசப்படுத்தும் ரஷியாவின் எண்ணம் ஈடேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. எனினும் இலக்கை அடையும் வரை போர் தொடரும் என ரஷிய அதிபர் புதின் திட்டவட்டமாக கூறி வருகிறார்.
அதை உறுதிப்படுத்தும் விதமாக உக்ரைன் மீதான போரை மேலும் தீவிரப்படுத்த 3 லட்சம் ரஷியர்களை அணி திரட்ட உள்ளதாக அண்மையில் அறிவித்தார்.
போருக்காக அணி திரட்டப்படுபவர்கள் யாரும் கட்டாயப்படுத்தப்பட மட்டார்கள் என்றும், ஆயுதப்படைகளில் பணியாற்றியவர்கள், பொருத்தமான அனுபவம் உள்ளவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் ரஷிய ராணுவ மந்திரி செர்ஜி ஷோய்கு கூறினார்.
எனினும் போருக்கு அணி திரட்டும் புதினின் அறிவிப்பு வெளியானது முதல் ரஷியாவை சேர்ந்த ஆண்கள் அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஷியர்கள் தங்களின் அண்டை நாடான ஜார்ஜியாவுக்கு செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் போரில் பங்கேற்பதை தவிர்க்க விரும்பும் ரஷிய ஆண்கள் பலரும் சாலை மார்க்கமாக ஜார்ஜியாவுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக ரஷியா-ஜார்ஜியா எல்லையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல கி.மீ. தொலைவுக்கு கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.
அதேபோல் ரஷியாவின் மற்றொரு அண்டை நாடான பின்லாந்தில் ஒரே இரவில் அந்த நாட்டுக்கு வரும் மக்களின் கூட்டம் அதிகமாகியிருப்பதாக பின்லாந்து அரசு தெரிவித்துள்ளது. சாலை மார்க்கமாக மக்கள் வந்த வண்ணம் இருப்பதாக பின்லாந்து அதிகாரிகள் கூறுகின்றனர்.
புதினின் அறிவிப்பை தொடர்ந்து, ரஷியாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பன் மடங்கு உயர்ந்ததோடு, குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்லும் விமான டிக்கெட்டுகள் முற்றிலுமாக விற்று தீர்ந்துவிட்டன.
இது ஒருபுறம் இருக்க 18 முதல் 65 வயது வரையுள்ள ஆண்களுக்கு விமான டிக்கெட் விற்பனை செய்வதை ரஷிய விமான நிறுவனங்கள் நிறுத்திவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இதனாலேயே ரஷியாவை சேர்ந்த ஆண்கள் சாலை மார்க்கமாக அண்டை நாடுகளை நோக்கி படையெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் நாட்டை விட்டு ஆண்கள் வெளியேறுவது தொடர்பாக வரும் தகவல்கள், மிகைப்படுத்தப்பட்டவை என ரஷிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
- ஐந்து விமான நிறுவனங்கள் மற்றும் 10 விமான நிலையங்களின் ஊழியர்கள் ராணுவச் சேர்க்கை பதிவு குறித்து அலுவலகங்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
- 50- 80% ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படலாம் என்று மூன்று நிறுவனங்களின் வட்டாரங்கள் தெரிவித்தன.
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவதற்காக, 3 லட்சம் வீரர்களை திரட்ட ரஷிய அதிபர் புதின் திட்டமிட்டு உள்ளார். இதுதொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் புதின், ஆயுதப்படைகளில் பணியாற்றியவர்கள் பொருத்தமான அனுபவம் உள்ளவர்கள் ராணுவத்திற்கு அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.
ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ராணுவ ஆள்சேர்ப்பு பற்றிய அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. பொதுமக்கள் பேரணி, போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போர் வேண்டாம்.உடனே நிறுத்துங்கள் என்று கோஷங்களை எழுப்பினர். போலீசார் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து போராடுவோர் கைது செய்யப்படுகின்றனர்.
நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 1300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதற்கிடையே ராணுவ ஆள்சேர்ப்பு பற்றி புதின் அறிவிப்பு வெளியிட்ட பிறகு ரஷியாவில் இருந்த பலர் வெளிநாடுகளுக்கு செல்வதில் மும்முரமாக உள்ளனர். போரில் ஈடுபட விரும்பாத மக்கள் நாட்டில் இருந்து வெளியேறுகிறார்கள்.
ரஷியாவில் இருந்து புறப்படும் விமானங்கள் இந்த வாரம் முழுவதுமாக கிட்டத்தட்ட முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. ராணுவச் சட்டம் விதிக்கப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில், ரஷிய விமான நிறுவனங்கள் 18 முதல் 65 வயதுக்குட்பட்ட (போருக்கு தகுதியான வயது) ரஷிய ஆண்களுக்கு டிக்கெட் விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளதாக பல்வேறு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியாகின.
இந்நிலையில், ரஷியன் ஏர்லைன்ஸ், விமான நிலைய ஊழியர்கள் ராணுவத்தில் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரஷ்யாவில் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கட்டாய அறிவிப்புகள் வரத் தொடங்கியுள்ளன. குறைந்தபட்சம் ஐந்து விமான நிறுவனங்கள் மற்றும் 10 விமான நிலையங்களின் ஊழியர்கள் ராணுவச் சேர்க்கை பதிவு குறித்து அலுவலகங்களுக்குத் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் தலைசிறந்த விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் குழுமம் உட்பட ஐந்து ரஷ்ய விமான நிறுவனங்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட விமான நிலையங்களின் பணியாளர்கள் ராணுவத்திற்கு சேவை செய்ய சம்மன் பெற்றனர். இதில், 50- 80% ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படலாம் என்று மூன்று நிறுவனங்களின் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏரோஃப்ளோட் குழுமத்திற்கு நெருக்கமான ஆதாரத்தின்படி, குழுவின் மூன்று விமான நிறுவனங்களின் ஊழியர்களில் பாதி பேர் பணியமர்த்தப்படலாம் என்றும் இவர்களில் ரோசியா ஏர்லைன்ஸ் மற்றும் போபெடா ஏர்லைன்ஸ் ஊழியர்களும் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் ஏரோஃப்ளோட் அதிகாரப்பூர்வமான கருத்தை வழங்கவில்லை என்றாலும், குழு இப்போது வெவ்வேறு சிறப்புகளில் இடஒதுக்கீட்டிற்கான பட்டியலைத் தயாரிக்க பணிக்குழுக்களை அமைத்துள்ளது.
இதைத்தவிர, குறைந்தபட்சம் ஐந்து நிறுவனங்கள், வரைவில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டிய ஊழியர்களின் பட்டியலைத் தொகுக்கத் தொடங்கியுள்ளன. இவற்றில் இரண்டு விமான நிறுவனங்கள் பட்டியலை அனுப்பியுள்ளன. இதில் ஒன்று உள்ளூர் நிர்வாகத்திற்கு வழங்கியது. மற்றொன்று போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. விமானக் கட்டுப்பாட்டாளர்கள், விமானிகள் மற்றும் பிற வணிக, தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு இந்த விலக்கு முக்கியமானதாகக் கூறப்படுகிறது.
- ராணுவ ஆள்சேர்ப்பு பற்றிய அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
- புதின் அறிவிப்பு வெளியிட்ட பிறகு பலர் வெளிநாடுகளுக்கு செல்வதில் மும்முரமாக உள்ளனர்.
மாஸ்கோ:
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவதற்காக, 3 லட்சம் வீரர்களை திரட்ட ரஷிய அதிபர் புதின் திட்டமிட்டு உள்ளார். இதுதொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் புதின், ஆயுதப்படைகளில் பணியாற்றியவர்கள் பொருத்தமான அனுபவம் உள்ளவர்கள் ராணுவத்திற்கு அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ராணுவ ஆள்சேர்ப்பு பற்றிய அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. பொதுமக்கள் பேரணி, போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போர் வேண்டாம். உடனே நிறுத்துங்கள் என்று கோஷங்களை எழுப்பினர். போலீசார் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து போராடுவோர் கைது செய்யப்படுகின்றனர். நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 1300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே ராணுவ ஆள்சேர்ப்பு பற்றி புதின் அறிவிப்பு வெளியிட்ட பிறகு ரஷியாவில் இருந்த பலர் வெளிநாடுகளுக்கு செல்வதில் மும்முரமாக உள்ளனர். போரில் ஈடுபட விரும்பாத மக்கள் நாட்டில் இருந்து வெளியேறுகிறார்கள். ரஷியாவில் இருந்து புறப்படும் விமானங்கள் இந்த வாரம் முழுவதுமாக கிட்டத்தட்ட முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.
ராணுவச் சட்டம் விதிக்கப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில், ரஷிய விமான நிறுவனங்கள் 18 முதல் 65 வயதுக்குட்பட்ட (போருக்கு தகுதியான வயது) ரஷிய ஆண்களுக்கு டிக்கெட் விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளதாக பல்வேறு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி பெற்ற இளைஞர்கள் மட்டுமே நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று ஃபார்ச்சூன் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைனின் லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் மாகாணங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்து ரஷிய பிரதேசமாக மாற்ற, அதிபர் புதினுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில், இந்த வார இறுதியில் இரண்டு மாகாணங்களிலும் வாக்கெடுப்பு நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- போர் வேண்டாம். உடனே நிறுத்துங்கள் என்று போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போரை தொடங்கியது. 7 மாதங்களாக ரஷிய படைகளின் போர் தாக்குதல் நீடிக்கிறது. ரஷியாவுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் உக்ரைன் போருக்கு 3 லட்சம் வீரர்களை திரட்ட ரஷிய அதிபர் புதின் திட்டமிட்டு உள்ளார்.
இதுதொடர்பாக புதின் நேற்று தொலைக்காட்சியில் உரையாற்றிய போது, உக்ரைனில் போரிட மேலும் 3 லட்சம் பேர் அழைக்கப்படுவார்கள். இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளேன். ஆயுதப்படை களில் பணியாற்றியவர்கள் பொருத்தமான அனுபவம் உள்ளவர்கள் அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.
ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராணுவ ஆள்சேர்ப்பு பற்றி ரஷிய அதிபர் புதினின் அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. 38 நகரங்களில் பொதுமக்கள் பேரணி, போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அப்போது போர் வேண்டாம். உடனே நிறுத்துங்கள் என்று கோஷங்களை எழுப்பினர். போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து முன்னேறி சென்றதால் கைது செய்யப்பட்டனர்.
தலைநகர் மாஸ்கோவில் 50 பேரை போலீசார் கைது செய்தனர். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் போராட்டக்காரர்களை கைது செய்து பஸ்சில் ஏற்றி சென்றனர். இதுபோல் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 1332 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே ராணுவ ஆள்சேர்ப்பு பற்றி புதின் அறிவிப்பு வெளியிட்ட பிறகு ரஷியாவில் இருந்த பலர் வெளிநாடுகளுக்கு செல்வதில் மும்முரமாக உள்ளனர். போரில் ஈடுபட விரும்பாத மக்கள் நாட்டில் இருந்து வெளியேறுவதாக கூறப்படுகிறது.
ரஷியாவில் இருந்து புறப்படும் விமானங்கள் இந்த வாரம் முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.
- ரஷிய ராணுவத்திற்கு அணி திரட்டல் அறிவிப்பை அதிபர் புதின் வெளியிட்டுள்ளார்.
- எங்களிடம் உள்ள அணு ஆயுதங்கள் நேட்டோ அமைப்பின் ஆயுதங்களை விட அதிக ஆற்றல் மிக்கவை என புதின் பேச்சு
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர், இன்று 210-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. தற்போது உக்ரைன் படைகளின் ஆதிக்கம் சற்று அதிகரித்து வருகிறது. ரஷிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகிறது. இந்த பின்னடைவு ரஷியாவின் தோல்விக்கான அறிகுறியாக மேற்கத்திய நாடுகள் கட்டமைத்து வருகின்றன.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், ரஷிய ராணுவத்திற்கு அணி திரட்டல் அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். 2-ம் உலகப்போருக்கு பின்னர் முதல் முறையாக ரஷிய ராணுவ அணி திரட்டல் அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாட்டு மக்களிடம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தொலைக்காட்சி வாயில் நிகழ்த்திய உரையில், 'ரஷிய ராணுவத்திற்கான அணி திரட்டல் இன்று முதல் தொடங்குகிறது. ராணுவத்தில் பணியாற்றி, பயிற்சி பெற்று தற்போது வேறு பணிகளில் உள்ள நாட்டு மக்கள் ராணுவ பணிக்கு மீண்டும் அழைக்கப்படுவார்கள்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகள் ராணுவ நடவடிக்கையை ரஷியா மண்ணில் மேற்கொள்ள உக்ரைனை தள்ளுகின்றன. மேற்கத்திய நாடுகள் அணு ஆயுதத்தை வைத்து ரஷியாவை மிரட்டுகின்றன. அவ்வாறு மிரட்டல் விடும் நாடுகளுக்கு நான் ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன். பதிலடி கொடுக்க எங்களிடமும் நிறைய ஆயுதங்கள் (அணு ஆயுதங்கள்) உள்ளன. அவை நேட்டோ அமைப்பின் ஆயுதங்களை விட அதிக ஆற்றல் மிக்கவை. எங்கள் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க எங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துவோம். இது ஒன்றும் மழுப்பல் அல்ல' என்றார்.
நாட்டு மக்களிடம் புதின் பேசிய சில நிமிடங்களில் ராணுவ அணி திரட்டலில் 3 லட்சம் பேர் படையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் அணு ஆயுத எச்சரிக்கை மட்டுமின்றி உக்ரைன் மீதான போரை ரஷியா தீவிரப்படுத்த உள்ளது. இந்த அச்சுறுத்தலால் உக்ரைன் - ரஷியா இடையேயான போர் முடிவின்றி தொடர்ந்து அதிக உயிரிழப்புகளையும், பாதிப்பையும் ஏற்படுத்த வழிவகுத்துள்ளது.
- உக்ரைனில் தீவிர தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷியா எச்சரித்து உள்ளதால் சிறிய அணு ஆயுதங்கள் அல்லது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று தகவல்.
- ரஷ்யா என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்து என்ன பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தீர்மானிக்கப்படும்.
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. சுமார் 7 மாதங்களாக போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வந்தன.
உக்ரைன் மீதான போரை நிறுத்தும்படி அமெரிக்கா, மேற்கத்திய நாடு விடுத்த எச்சரிக்கையை ரஷியா கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையே உக்ரைனின் வடகிழக்கில் ரஷிய படைகளின் வசம் இருந்த பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டது.
அதேபோல் கார்கிவ் புறநகர் பகுதிகளை மீட்டது. அங்கிருந்து ரஷிய படைகள் பின்வாங்கியது. இதற்கிடையே உக்ரைனில் தீவிர தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷியா எச்சரித்து உள்ளதால் சிறிய அணு ஆயுதங்கள் அல்லது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில் ரஷிய அதிபர் புதினுக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "அணு ஆயுதம் அல்லது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது 2-ம் உலக போருக்கு பிறகு போரின் முகத்தை மாற்றும். எனவே வேண்டாம். இதுபோன்ற ஆயுதங்களை பயன்படுத்தினால் அமெரிக்கா தக்க விளைவுகளை கொடுக்கும்.
அவர்கள் (ரஷியா) என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்து என்ன பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தீர்மானிக்கப்படும்" என்று கூறினார்.
இந்தநிலையில் உக்ரைனில் பல பகுதிகளில் உக்ரைன் படைகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. கெர்சன், கார்கிவ், டொனெட்ஸ்க், மைகோ லேவ் பகுதிகளில் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
- புதின் கார் மீது மர்ம மனிதர்கள் குண்டு வீசியதாகவும், அந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.
- என்னை கொல்ல இதுவரை 5 முறை முயற்சி நடந்ததாகவும். அதில் நான் உயிர் தப்பினேன் என்றார்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி 7 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கொல்ல முயற்சி நடந்ததாக ஸ்பெயினில் இருந்து வெளியாகும் யூரா வீக்லி நியூஸ் என்ற ஊடகம் தெரிவித்து உள்ளது.
சம்பவத்தன்று புதின் காரில் இல்லத்துக்கு திரும்பிகொண்டு இருந்தார். அவரது காருக்கு முன்னும் பின்னும் மற்ற கார்களில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டு இருந்தனர். புதின் கார் 3-வதாக சென்று கொண்டிருந்தது.
அப்போது புதின் கார் மீது மர்ம மனிதர்கள் குண்டு வீசியதாகவும், அந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
இதனால் புதின் சென்ற காரில் இருந்து புகை வெளியேறியது. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் காரில் இருந்து அவரை பத்திரமாக வெளியேற்றி பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இதனால் புதின் காயமின்றி உயிர் தப்பியதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. ஆனால் இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
என்னை கொல்ல இதுவரை 5 முறை முயற்சி நடந்ததாகவும். அதில் நான் உயிர் தப்பினேன் என்றும் கடந்த 2017-ம் ஆண்டு புதின் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
- கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளது.
- அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது.
மாஸ்கோ
நேட்டோ அமைப்பில் சேர்ந்து பாதுகாப்பு தேட முயன்ற உக்ரைனின் நடவடிக்கை, ரஷியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதற்காக அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது. அந்தப் போர் இன்னும் நீடிக்கிறது. இதனால் உக்ரைன், ரஷியா மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு முடிவு எடுத்ததற்காக அதிபர் புதினை பதவியில் இருந்து அகற்ற வேண்டும், அவர் மீது தேசத்துரோக வழக்கு போட்டு அவரைக் கைது செய்ய வேண்டும் என்று அங்குள்ள 5 அரசு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இது அங்கு பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. அதுவும் இந்த கோரிக்கை, புதினின் சொந்த ஊரான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் எழுந்துள்ளது.
இது தொடர்பாக அந்த அதிகாரிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளது.
இதுபற்றி முன்னாள் உளவுத்துறை அதிகாரி ரெபேக்கோ கோப்ளர் கருத்து தெரிவிக்கையில், "புதினின் சொந்த ஊரில், அவர் தேசத்துரோகம் செய்ததாக குற்றம்சாட்டி, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த கோரிக்கை விடுத்தவர்களுக்கு தங்களுக்கு கடும் தண்டனை கிடைக்கும் என்பது தெரியும். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒரு சில ரஷிய அதிகாரிகளின் இந்த மீறல் மற்றும் எதிர்ப்பின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்த முடியாது" என தெரிவித்தார்.
- 12 மலையேற்ற வீரர்களில் 9 பேர் மலைச்சிகரத்தை அடைய தொடர்ந்து மலையேற தொடங்கினர்.
- மோசமான வானிலையின் காரணமாக மீட்பு குழுவால் உடனடியாக அங்கு செல்லமுடியவில்லை.
மாஸ்கோ :
ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள காம்சட்கா தீபகற்பத்தில் குளூச்செவ்ஸ்கயா சோப்கா என்கிற மிகப்பெரிய எரிமலை ஒன்று உள்ளது.
15,884 அடி உயரம் கொண்ட இந்த எரிமலை யூரேசியாவின் மிக உயரமான எரிமலையாக அறியப்படுகிறது. மேலும் இது ரஷியா மற்றும் பிறநாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்களிடம் புகழ்பெற்ற மலைச்சிகரமாகவும் உள்ளது.
இந்த நிலையில் உள்நாட்டை சேர்ந்த 10 மலையேற்ற வீரர்கள் மற்றும் 2 வழிகாட்டிகள் கடந்த 30-ந்தேதி குளூச்செவ்ஸ்கயா சோப்கா எரிமலையில் மலையேறும் பயிற்சியை தொடங்கினர்.
4 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் அவர்கள் மலையின் 10,827 அடி உயரத்தை அடைந்தனர். அதை தொடர்ந்து அங்கு அவர்கள் முகாம் அமைத்து ஓய்வு எடுத்தனர்.
பின்னர் அந்த 12 மலையேற்ற வீரர்களில் 9 பேர் மலைச்சிகரத்தை அடைய தொடர்ந்து மலையேற தொடங்கினர். 3 பேர் மட்டும் முகாமில் இருந்தனர்.
இந்த நிலையில் அந்த மலையேற்ற வீரர்கள் 13,000 அடி உயரத்தில் ஏறி கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத விதமாக அவர்களில் 4 பேர் திடீரென கீழே விழுந்தனர்.
இதைக்கண்டு சக மலையேற்ற வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் மேலும் 2 மலையேற்ற வீரர்கள் கீழே விழுந்தனர். 13,000 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் மலையேற்ற வீரர்கள் 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் உடனடியாக ஹெலிகாப்டரில் சம்பவ இடத்துக்கு புறப்பட்டனர்.
ஆனால் மோசமான வானிலையின் காரணமாக மீட்பு குழுவால் உடனடியாக அங்கு செல்லமுடியவில்லை.
இதனால் எரிமலையில் 10,827 அடி உயரத்திலும், 13,000 அடி உயரத்திலும் சிக்கி இருக்கும் 6 மலையேற்ற வீரர்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. எனினும் அவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
- வரும் 7 வரை இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
- வீர, தீர பயிற்சிகளில் இந்திய ராணுவ குழு ஈடுபடுகிறது.
செர்ஜியேவ்ஸ்கி:
பல்முனை ராணுவ உக்தி மற்றும் செயல்திறன் பயிற்சியான வோஸ்டாக் - 2022, ரஷியாவின் கிழக்கு ராணுவ மாவட்ட செர்ஜியேவ்ஸ்கி பயிற்சி மைதானத்தில் நேற்று தொடங்கியுள்ளது. வரும் 7 வரை இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த பயிற்சி பிற ராணுவக் குழுக்கள், பார்வையாளர்களிடையே தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த முகாமில் கோர்க்கா ரைஃபிள்ஸ் படையை சேர்ந்த இந்திய ராணுவக் குழுவினர் பங்கேற்றுள்ளனர். 7 நாட்களில் கூட்டு களப்பயிற்சிகள், போர் விவாதங்கள் மற்றும் வீர, தீர பயிற்சிகளில் இந்திய ராணுவ குழுவினர் ஈடுபடுகின்றனர்.
ராணுவ அம்சங்கள், செயல் முறைகளை நடைமுறைப்படுத்துதல், புதிய தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்டவற்றை குறித்து ரஷிய ராணுவத்தினருடன் இந்திய ராணுவ குழுவினர் பகிர்ந்து கொள்வார்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன.






