என் மலர்
ரஷ்யா
- ரஷியாவில் ராணுவ போர் விமானம் ஒன்று தீப்பிடித்து குடியிருப்பு கட்டிடத்தின் மீது மோதியது.
- இதில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாஸ்கோ:
ரஷியாவின் தெற்கே எயிஸ்க் நகரில் உள்ள குடியிருப்புக் கட்டிடம் ஒன்றின்மீது ராணுவ விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்தபடி பறந்து வந்து மோதி விபத்திற்கு உள்ளானது. இதைத் தொடர்ந்து கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து 9-வது தளம் வரை தீப்பற்றியது. அதனை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதில் அனைத்து தளங்களிலும் உள்ள குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.
இந்த விபத்தில் 2 பேர் பலியானதாகவும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், ராணுவ போர் விமானம் தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிஅக்ரித்துள்ளது என மீட்புக்குழு தெரிவித்தது.
- ரஷியாவில் ராணுவ போர் விமானம் ஒன்று தீப்பிடித்து குடியிருப்பு கட்டிடத்தின் மீது மோதியது.
- இதில் 2 பேர் பலியாகினர் என மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாஸ்கோ:
ரஷியாவின் தெற்கே எயிஸ்க் நகரில் உள்ள குடியிருப்புக் கட்டிடம் ஒன்றின்மீது ராணுவ விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்தபடி பறந்து வந்து மோதி விபத்திற்கு உள்ளானது. விமானத்தில் இருந்த விமானி குதித்து தப்பிவிட்டார்.
இதைத் தொடர்ந்து கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து 9-வது தளம் வரை தீப்பற்றியது. அதனை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதில் அனைத்து தளங்களிலும் உள்ள குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.
இந்த விபத்தில் 2 பேர் பலியானதாகவும், 15க்கும் மேற்பட்டொர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணையில், சுகோய்-34 ரக ஜெட் போர் விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்த நிலையில் விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.
- உக்ரைனுக்கு எதிரான போருக்கு தேவையான ராணுவ படைகளை திரட்ட ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டார்.
- ரஷிய ராணுவ வீரர்கள், மகிழ்ச்சியுடன் தங்கள் காதல் ஜோடியை கரம் பிடித்தனர்.
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி ரஷியா தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது.
ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த போரில் உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன. மேலும் ரஷியாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.
இதனையடுத்து உக்ரைனுக்கு எதிரான போருக்கு தேவையான ராணுவ படைகளை திரட்ட ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் போருக்கு செல்வதற்கு முன்பாக ரஷிய ராணுவத்தைச் சேர்ந்த 43 வீரர்களுக்கு மாஸ்கோ நகரில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.
ராணுவ உடையணிந்தபடி திருமணத்தில் கலந்து கொண்ட ரஷிய ராணுவ வீரர்கள், மகிழ்ச்சியுடன் தங்கள் காதல் ஜோடியை கரம் பிடித்தனர். இந்த திருமண நிகழ்ச்சி மிக எளிமையான முறையில் நடைபெற்றது.
- ரஷிய ராணுவ தளத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்
- இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என அந்நாட்டு அமைச்சகம் கூறியுள்ளது.
மாஸ்கோ:
உக்ரைனுக்கு அருகிலுள்ள ரஷிய ராணுவ தளத்தில் 2 வீரர்கள் மற்ற வீரர்களை நோக்கி திடீரென சுட்டனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர் என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் எல்லையை ஒட்டிய தென்மேற்கு ரஷியாவின் பெல்கோரோட் பகுதியில் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
முன்னாள் சோவியத் நாட்டைச் சேர்ந்த 2 தன்னார்வல வீரர்கள் பயிற்சியின் போது மற்ற வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றும், திருப்பித் தாக்கியதில் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என அந்நாட்டு அமைச்சகம் கூறியுள்ளது.
- உக்ரைன், ரஷியா இடையிலான போர் 7 மாதத்தைக் கடந்துள்ளது.
- அமைதி பேச்சுவார்த்தைக்கு இந்தியாவும், சீனாவும் ஆதரவளித்தன என அதிபர் புதின் தெரிவித்தார்.
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடுத்தது. ஏழு மாதம் கடந்தும் போர் நீடித்து வருகிறது.
இதற்கிடையே, உக்ரைனில் கைப்பற்றிய கிழக்கு மற்றும் தெற்கே உள்ள 4 பிராந்தியங்களை கடந்த 1-ம் தேதி ரஷியாவுடன் இணைத்துக் கொண்டார் அதிபர் புதின்.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் கஜகஸ்தான் சென்றிருந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:
உக்ரைன் விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தை மூலம் முடிவு காணவேண்டும் என இந்தியாவும், சீனாவும் வலியுறுத்தி வருகிறது. இரு நாடுகளுமே எங்களின் நட்புறவு நாடுகள். அவர்களின் நிலைப்பாட்டை நன்கு உணர்ந்துள்ளேன்.
இதில் உக்ரைனின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பது தெரிய வேண்டியது அவசியம். எனவே இந்த விவகாரத்தில் அமைதி பேச்சுவர்த்தைக்கு இந்தியாவும், சீனாவும் தனது ஆதரவை அளித்தன. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை என தெரிவித்தார்.
- உக்ரைனில் 40க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தினர்.
- போர் களத்தில் மீண்டும் தாக்குதல் அதிகரித்து இருக்கிறது.
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. தொடக்கத்தில் உக்ரைனின் அனைத்து நகரங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது.
சில மாதங்களுக்கு பிறகு கிழக்கு உக்ரைன் பகுதிகளை குறிவைத்து கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட சில நகரங்களில் தாக்குதல்களை ரஷியா குறைத்தது.
இதற்கிடையே ரஷியாவின் கிரிமியா தீபகற்பத்தில் உள்ள பாலத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதால் ஆத்திரம் அடைந்த ரஷியா ஆவேச தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைன் தலைநகர் கிவ்வில் ஒரே நாளில் 84 ஏவுகணைகள் வீசப்பட்டன.
நேற்று உக்ரைனில் 40க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தினர். இதனால் போர் களத்தில் மீண்டும் தாக்குதல் அதிகரித்து இருக்கிறது.
இந்தநிலையில் ரஷியாவின் ஆயுத கிடங்கு மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன்-ரஷியா எல்லைப் பகுதியான பெல் கோரட் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ரஷியாவின் வெடி மருந்து கிடங்கு ஒன்று உள்ளது. இந்த ஆயுத கிடங்கு மீது உக்ரைன் படையினர் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஆயுத கிடங்கு முற்றிலும் சேதமடைந்தது.
இதுகுறித்து பெல்கோரப் பிராந்தியத்தின் கவர்னர் வியாசெஸ்லாங் கிளாட் சோவ் கூறும் போது, பெல்கோரட் மாவட்டத்தில் உள்ள வெடி மருந்து கிடங்கு உக்ரைன் படையின் தாக்கு தலில் வெடித்து சிதறியது. அப்பகுதியில் இருந்த மக்கள் பாது காப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர் என்றார்.
- ரஷியாவுடன் கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் பாலத்தில் குண்டு வெடித்தது.
- கிரீமியா பாலத்தில் குண்டு வெடிப்பையடுத்து பாதுகாப்பை பலப்படுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 8 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ரஷிய படைகளின் தாக்குதலில் உக்ரைன் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் தெற்கு உக்ரைனில் உள்ள ஜபோரி ஜியா நகரில் ரஷிய படைகள் 7 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதிகாலையில் வீசப்பட்ட இந்த ஏவுகணைகள் நகர மையப் பகுதியில் விழுந்து வெடித்து சிதறியது.
இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 17 பேர் பலியானதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். முக்கிய சாலையில் உள்ள 5 மாடி குடியிருப்பு கட்டிடம் தரை மட்டமானதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே கார்கீவ் பிராந்தியததில் ரஷிய படைகள் கைப்பற்றிய குப்யான்ஸ்க் நகரை மீட்டு உக்ரைன் ராணுவம் முயன்ற போது ரஷியாவின் தாக்குதலில் உக்ரைன் ராணுவ வீரர்கள் 220 பேர் கொல்லப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஷியா ராணுவம் கூறும்போது, குப்யான்ஸ்க் நகரை கைப்பற்ற வந்த உக்ரைன் ராணுவத்தின் அனைத்து தாக்குதல்களும் ரஷிய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டன. இதில் உக்ரைனின் 220 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ளது. ஆனால் 220 வீரர்கள் பலியானதை உக்ரைன் உறுதிப்படுத்தவில்லை.
2019-ம் ஆண்டு உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷியா ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றியது. இதற்கிடையே ரஷியாவுடன் கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் பாலத்தில் குண்டு வெடித்தது.
பாலத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்து இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டியது. ஆனால் உக்ரைன் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த நிலையில் கிரீமியா பாலத்தில் குண்டு வெடிப்பையடுத்து பாதுகாப்பை பலப்படுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். ரஷியா-கிரீமியா இடையே உள்ள கியாஸ் குழாய் இணைப்பு, மின் இணைப்பு ஆகியவற்றின் பாதுகாப்பையும் பலப்படுத்த புதின் அறிவுறுத்தி உள்ளார்.
- தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது தீப்பொறி பறந்து தீப்பற்றியது.
- பாலத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு உக்ரைன் தரப்பு பொறுப்பேற்கவில்லை.
மாஸ்கோ:
ரஷியாவுடன் கிரீமியா தீபகற்ப பகுதி இணைக்கப்பட்ட பின்னர், ரஷிய அதிபர் புதின், புதிய பாலம் ஒன்றை உருவாக்கி 2018-ம் ஆண்டு திறந்து வைத்தார். கெர்ச் ஜலசந்தியின் குறுக்கே 19 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்ட இந்த பாலம் ஆனது ரஷியாவின் முக்கிய நிலப்பரப்புடன் கிரீமியாவை இணைக்கின்றது. இந்த பாலத்தில் ரெயில்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்வதற்கு என இரு பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. 2020-ம் ஆண்டு முழு அளவில் இந்த பாலம் செயல்பாட்டுக்கு வந்தது.
இந்த நிலையில், ரஷியாவுடன் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் மீது இன்று குண்டுவெடிப்பு நடத்தப்பட்டு உள்ளது. ஒரு லாரியில் வெடிபொருட்களை நிரப்பி அதை வெடிக்க செய்துள்ளனர். இதன் காரணமாக பாலத்தின் இரண்டு பகுதிகள் இடிந்து விழுந்தன. அப்போது பாலத்தின் வழியாக வாகனத்தில் பயணித்த 3 பேர் வெடிவிபத்தில் பலியாகினர்.
ரெயில்வே தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீதும் தீப்பொறி பறந்து தீப்பற்றியது. இதில், எரிபொருள் நிரப்பப்பட்ட 7 ரெயில் பெட்டிகள் தீப்பிடித்தன. இதனை தொடர்ந்து அந்த பாலத்தில், ரெயில் மற்றும் வாகன போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், குண்டு வெடிப்புக்கு காரணமான அந்த வாகனத்தின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டார் என்று ரஷியாவின் விசாரணைக் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கிரிமியாவின் பிராந்திய நாடாளுமன்றத்தின் சபாநாயகர், குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு உக்ரைன் மீது குற்றம் சாட்டினார். எனினும் உக்ரைன் தரப்பு இதற்கு பொறுப்பேற்கவில்லை.
இச்சம்பவம் குறித்து உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ போடோலியாக் கூறுகையில், "சட்டவிரோதமான அனைத்தும் அழிக்கப்பட வேண்டும், திருடப்பட்ட அனைத்தும் உக்ரைனுக்குத் திரும்ப வேண்டும், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்தும் வெளியேற்றப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- இணைப்பை அங்கீகரிக்க ஐ.நா. மற்றும் மேற்கு உலக நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளன.
- இது சர்வதேச சட்டங்களுக்கு புறம்பானது என்றும் கருத்து தெரிவித்துள்ளன.
உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்படுவதாக அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். உக்ரைனுடன் 7 மாதங்களுக்கு மேலாக போர் நீடித்துவரும் நிலையில் கைப்பற்றப்பட்ட 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மாஸ்கோவின் க்ரெம்லின் மாளிகையின் புனித ஜார்ஜ் அரங்கில் அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
உக்ரைனில் உள்ள டாநட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய பகுதிகளை இணைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுளளது. இந்த பகுதிகளில் இதற்கு முன்பாக பொது வாக்கெடுப்பை ரஷியா நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த இணைப்பை அங்கீகரிக்க ஐ.நா. மற்றும் மேற்கு உலக நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளன. மேலும், இது சர்வதேச சட்டங்களுக்கு புறம்பானது என்றும் கருத்து தெரிவித்துள்ளன.
- ஏழு மாதமாக நடைபெற்று வரும் போர் மூலம் நான்கு பிராந்தியங்கள் ரஷியா வசம் வந்தன.
- ரஷியாவுடன் இணைவது குறித்து உக்ரைன் மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மாஸ்கோ:
உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படைகள் வசம் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்கள் வந்துள்ளன. கடந்த ஏழு மாதமாக நடைபெற்று வரும் போர் மூலம் இந்த பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. அவற்றை சுதந்திர பிரதேசங்களாக அங்கீகரிக்கும் ஆணைகளில் ரஷிய அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார். முன்னதாக இந்த 4 பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைத்துக் கொள்வது குறித்து அந்த பகுதிகளை சேர்ந்த மக்களின் விருப்பத்தை தெரிந்து கொள்ள ரஷியா அங்கு பொதுவாக்கெடுப்பை நடத்தியது.
இதில் அந்த பகுதிகளை சேர்ந்த பெரும்பாலான உக்ரைன் மக்கள், ரஷியாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து முதல் கட்டமாக உக்ரைனின் இந்த 4 பிராந்தியங்களையும் சுதந்திர பிரதேசங்களாக ரஷியா அங்கீகரித்துள்ளது.
அடுத்ததாக அவற்றை அதிகாரபூர்வமாக ரஷியாவுடன் இணைத்து கொள்வது தொடர்பான நிகழ்ச்சி ரஷிய அதிபர் மாளிகையில் இன்று கோலகலமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நான்கு பிராந்தியங்களின் தலைவர்கள் மாஸ்கோ சென்றுள்ளனர். இந்நிலையில் உக்ரைன் பகுதிகளில் ரஷியா நடத்திய வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்றும், மக்களை கட்டாயப்படுத்தி நடத்தப்பட்ட மோசடி என்றும் உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
- நடமாடும் வாக்குப்பதிவு மையத்துடன் வீடு வீடாக சென்று வாக்கெடுப்பு நடத்தினர்.
- பொது வாக்கெடுப்பு ஒரு ஏமாற்று வேலை என்று உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. தலைநகர் கிவ், கார் கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
துறைமுக நகரமான மரியு போலை ரஷிய படைகள் கைப்பற்றியது. அதேபோல் சில நகரங்களையும் ரஷியா தன்வசப்படுத்தியது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே போரில் உக்ரைனின் லுகான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைக்க திட்டமிட்ட ரஷியா, அதற்காக அப்பகுதிகளில் பொது வாக்கெடுப்பை நடத்தியது.
நடமாடும் வாக்குப்பதிவு மையத்துடன் வீடு வீடாக சென்று வாக்கெடுப்பு நடத்தினர். நேற்று வரை 5 நாட்கள் வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டன.
இந்தநிலையில் உக்ரைனின் பகுதிகளை ரஷியாவுடன் இணைப்பதற்கான வாக்கெடுப்பில் வெற்றி கிடைத்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.
ரஷிய கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு லுகான்ஸ்க் பகுதியில் 98.42 சதவீதம் பேர் ரஷியாவுடன் இணைப்புக்கு ஆதரவாக வாக்களித்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜபோரி ஜியாவில் 93.11 சதவீதமும், தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சனில் 87.05 சதவீதமும், டொனெட்ஸ்கில் 99.23 சதவீதமும், ரஷியாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்கெடுப்பில் ரஷியாவுக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தநிலையில் உக்ரைன் பகுதிகளை ரஷியாவிடன் இணைத்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிபர் புதின் நாளை மறுநாள் (30-ந்தேதி) அறிவித்து உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக இங்கிலாந்து உளவுத்துறை அதிகாரிகள் கூறும்போது, "ரஷிய பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அதிபர் புதின் 30-ந்தேதி உரையாற்றுகிறார். அப்போது உக்ரைன் பகுதிகளை ரஷியாவுடன் இணைத்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை புதின் வெளியிட வாய்ப்பு உள்ளது" என்றனர்.
இந்த பொது வாக்கெடுப்பு ஒரு ஏமாற்று வேலை என்று உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, "ரஷியா கைப்பற்றிய பகுதிகளில் உள்ள மக்களை உக்ரைன் பாதுகாக்கும். இந்த வாக்கெடுப்புகள் ஒரு கேலிக்கூத்தாக உள்ளது. வாக்கெடுப்புக்கு பிறகு ரஷியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு ஏதும் இல்லை" என்றார்.
- ரஷிய பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உள்பட 13 பேர் பலியாகினர்.
- குழந்தைகள் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அதிபர் புதின் கண்டனம் தெரிவித்தார்.
மாஸ்கோ:
ரஷியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இஜவ்ஸ்க் நகரில் உள்ள பள்ளியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 6 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
குழந்தைகள் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் புதின், ரஷிய பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதல் மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதல் என கண்டனம் தெரிவித்தார் என கிரெம்ளின் மாளிகை குறிப்பிட்டுள்ளது.






