search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கார் மீது மர்ம மனிதர்கள் தாக்குதல்- ரஷிய அதிபர் புதினை கொல்ல முயற்சி
    X

    கார் மீது மர்ம மனிதர்கள் தாக்குதல்- ரஷிய அதிபர் புதினை கொல்ல முயற்சி

    • புதின் கார் மீது மர்ம மனிதர்கள் குண்டு வீசியதாகவும், அந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.
    • என்னை கொல்ல இதுவரை 5 முறை முயற்சி நடந்ததாகவும். அதில் நான் உயிர் தப்பினேன் என்றார்.

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி 7 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கொல்ல முயற்சி நடந்ததாக ஸ்பெயினில் இருந்து வெளியாகும் யூரா வீக்லி நியூஸ் என்ற ஊடகம் தெரிவித்து உள்ளது.

    சம்பவத்தன்று புதின் காரில் இல்லத்துக்கு திரும்பிகொண்டு இருந்தார். அவரது காருக்கு முன்னும் பின்னும் மற்ற கார்களில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டு இருந்தனர். புதின் கார் 3-வதாக சென்று கொண்டிருந்தது.

    அப்போது புதின் கார் மீது மர்ம மனிதர்கள் குண்டு வீசியதாகவும், அந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

    இதனால் புதின் சென்ற காரில் இருந்து புகை வெளியேறியது. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் காரில் இருந்து அவரை பத்திரமாக வெளியேற்றி பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இதனால் புதின் காயமின்றி உயிர் தப்பியதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. ஆனால் இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    என்னை கொல்ல இதுவரை 5 முறை முயற்சி நடந்ததாகவும். அதில் நான் உயிர் தப்பினேன் என்றும் கடந்த 2017-ம் ஆண்டு புதின் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×