என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சிதான் இந்திய வம்சாவளி எம்.பி.க்களையும் அதிகமாக பாராளுமன்றத்துக்கு கொடுத்து இருக்கிறது.
    • பிரிட்டனை சேர்ந்த சீக்கியரான பிரீத்தி கவுர் கில், தன்மன்ஜீத் சிங் தேசி ஆகியோரும் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

    லண்டன்:

    பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் இந்த முறை அதிகமான இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்று எம்.பி.க்களாகி இருக்கின்றனர். அந்தவகையில் எப்போதும் இல்லாத அளவாக சுமார் 26 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை அலங்கரிக்க உள்ளனர்.

    இதில் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான ரிஷி சுனக் முக்கியமானவர். இவர் யார்க்ஷைர் கவுண்டியில் உள்ள தனது ரிச்மாண்ட்-நார்தலர்டன் தொகுதியை தக்க வைத்தார்.

    இதைப்போல முன்னாள் மந்திரிகள் சுவெல்லா பிரேவர்மன், பிரீதி படேல், கிளேர் கவுண்டினோ ஆகியோரும் கன்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து வெற்றி பெற்றனர். மேலும் ககன் மகிந்திரா, சிவானி ராஜா உள்ளிட்டோரும் வெற்றி பெற்றனர்.

    ஒட்டுமொத்தமாக அதிக இடங்களில் வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சிதான் இந்திய வம்சாவளி எம்.பி.க்களையும் அதிகமாக பாராளுமன்றத்துக்கு கொடுத்து இருக்கிறது.

    அந்த கட்சியை சேர்ந்த சீமா மல்கோத்ரா, வலேரி வாஸ், லிசா நண்டி ஆகியோர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்துள்ளனர். இதைப்போல பிரிட்டனை சேர்ந்த சீக்கியரான பிரீத்தி கவுர் கில், தன்மன்ஜீத் சிங் தேசி ஆகியோரும் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

    வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியினரில் புதுமுகங்களும் கணிசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் யுகி பாம்ப்ரி ஜோடி தோல்வி அடைந்தது.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி-பிரான்சின் ஆல்பனோ ஆலிவெட்டி ஜோடி, ஜெர்மனியின் கெவின் கிராவிட்ஸ்-டிம் புட்ஸ் ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் யுகி பாம்ப்ரி ஜோடி 6-4, 4-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் இத்தாலி வீராங்கனை 3-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி, கனடா வீராங்கனை பியன்கா ஆண்ட்ரிஸ் உடன் மோதினார்.

    இதில் பவுலினி 7-6 (7-4), 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் இந்த முறை எட்டு தமிழர்கள் களம் கண்டனர்.
    • இதில் தொழிலாளர் கட்சி சார்பில் ஸ்டராட்போர்டு தொகுதியில் உமா குமரன் போட்டியிட்டார்.

    லண்டன்:

    பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 410 இடங்களிலும், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 119 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பிற கட்சிகள் 112 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

    பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில்நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் என மொத்தம் 8 தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

    இந்நிலையில், பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன், லண்டன் ஸ்டராட்போர்டு தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்தத் தொகுதியில் 19,145 வாக்குகள் பெற்று வெற்றியைப் பதிவுசெய்துள்ளார் உமா குமரன். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான கேன் பிளாக்வெல் 3,144 வாக்குகள் மட்டும் பெற்று 4-வது இடம் பெற்றார்.

    ஈழத் தமிழ்ப் பெண்ணான உமா குமரன் பிரிட்டன் வரலாற்றில் முதல் தமிழ் எம்.பி. ஆவார். இவரது குடும்பம் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்கு பின் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் தோற்றார்.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த எமில் ரூசுவோரி உடன் மோதினார்.

    இதில் சிட்சிபாஸ் 6-7 (6-8), 6-7 (10-12), 6-3, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் யுகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி-பிரான்சின் ஆல்பனோ ஆலிவெட்டி ஜோடி, கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்-அலெக்சாண்டர் ஷெவ்சென்கோ ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் யுகி பாம்ப்ரி ஜோடி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி-இங்கிலாந்தின் லூக் ஜான்சன் ஜோடி, குரோசியாவின் மேட் பாவிக்-எல் சால்வடாரின் மார்செலோ அரிவலோ ஜோடி மோதியது. இதில் இந்தியாவின் பாலாஜி ஜோடி 4-6, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
    • மூன்றாவது சுற்று போட்டிகள் நாளை நடைபெற உள்ளன.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், பிரான்ஸ் வீரர் அலெக்சாண்டர் முல்லருடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் 6-7 (3-7), 7-6 (7-4), 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், சக நாட்டு வீரரான மேட்டியோ பிரெட்டினியுடன் மோதினார். இதில் சின்னர் 7-6 (7-3), 7-6 (7-4), 2-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • இங்கிலாந்தில் பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
    • இதில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், தொழிலாளர் கட்சிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.

    லண்டன்:

    இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    மொத்தம் உள்ள 650 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பிரதமர் ரிஷி சுனக் தன் மனைவி அக்ஷிதா மூர்த்தியுடன் நார்த் யார்க்ஷைரில் உள்ள ரிச்மாண்ட் அருகிலுள்ள வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்தார்.

    இதேபோல் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.

    இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியும் தொழிலாளர் கட்சியும் நேருக்கு நேர் மோதுகின்றன.

    தமிழகத்தில் இருந்து இங்கிலாந்தில் குடியேறியவர்களுக்கும், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் 8 தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.

    பிரதமர் ரிஷி சுனக் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் கீர் ஸ்டார்மர் ஆகியோர் பிரதமர் பதவிக்கான முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர். இந்த தேர்தலில் தொழிலாளா் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இன்று இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஜப்பான் வீராங்கனை 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பானைச் சேர்ந்த நவாமி ஒசாகா, அமெரிக்காவின் எம்மா நவாரோ உடன் மோதினார்.

    இதில் நவாமி ஒசாகா 4-6, 1-6 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, நெதர்லாந்தின் ராபின் ஹாசி-சாண்டர் அரெண்ட்ஸ்

    ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் போபண்ணா ஜோடி 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நார்வே வீரர் ரூட் தோற்றார்.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், இத்தாலி நாட்டைச் சேர்ந்த பேபியோ போஜினி உடன் மோதினார்.

    இதில் காஸ்பர் ரூட் 4-6, 5-7, 7-6 (7-1), 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • மழை காரணமாக 3 ஆவது ஒருநாள் போட்டி 42 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது.
    • 5 விக்கெட் வீழ்த்திய லாரன் பெல் ஆட்டத்தின் சிறந்த வீராங்கனைக்கான விருதை பெற்றார்.

    இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.

    அதில், முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் 3 ஆவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

    மழை காரணமாக 3 ஆவது ஒருநாள் போட்டி 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து.

    பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 38.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 - 0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

    இப்போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட லாரன் பெல் ஆட்டத்தின் சிறந்த வீராங்கனைக்கான விருதை பெற்றார்.

    ×