என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • கடந்த 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
    • போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் பஞ்ச்கூர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்று விட்டு சிலர் வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் அந்த வாகனம் சிக்கியது.

    இதில் வாகனம் வெடித்து சிதறி சுக்குநூறானது. இந்த தாக்குதலில் 7 பேர் பலியானார்கள். இதில் யூனியன் கவுன்சில் தலைவர் இஷ்தியாக் யாகூப்பும் அடங்குவார்.

    சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக பஞ்ச்கூர் துணை கமிஷனர் அம்ஜத் சோம்ரோவ் கூறும் போது, பல்கத்தார் யூனியன் தலைவர் இஷ்தியாக் யாகூப் மற்றும் சிலர் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய போது அவர்கள் சென்ற வாகனத்தை குறி வைத்து வெடிகுண்டுகளை மர்ம நபர்கள் வைத்துள்ளனர்.

    பால்கதர் பகுதியில் வாகனம் சென்ற போது வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர் என்றார். தாக்குதல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பலூச் விடுமுறை முன்னணி பொறுப்பேற்றது.

    தற்போது நடந்துள்ள தாக்குதலிலும் அந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    • இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது.
    • பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவிற்கு அனுப்ப அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இஸ்லாமாபாத்:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 14-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட்டில் கலந்து கொள்வதை பாகிஸ்தான் உறுதி செய்யாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவிற்கு அனுப்ப அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுதொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    விளையாட்டை அரசியலுடன் கலக்கக் கூடாது என்று பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே, வரவிருக்கும் ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2023-ல் பங்கேற்க தனது கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

    இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளின் நிலை சர்வதேச விளையாட்டு தொடர்பான கடமைகளை நிறைவேற்றுவதில் தடையாக இருக்கக் கூடாது என்று பாகிஸ்தான் நம்புகிறது.

    ஆசியக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்திய அணி மறுத்ததால், பாகிஸ்தானின் இந்த முடிவை எடுத்தது. இருப்பினும், பாகிஸ்தான் தனது கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு குறித்து முழு கவனம் கொண்டுள்ளது. இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்து வருகிறோம்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இந்திய பயணத்தின்போது முழு பாதுகாப்பு குறித்து இந்தியா உறுதி செய்யும் என்று நம்புகிறோம் என தெரிவித்துள்ளது.

    • ரெயில் தடம் புரண்டதில் எட்டு பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு இறங்கி விபத்துக்குள்ளனது.
    • விபத்தில் சிக்கி உயிரிழந்தர்களின் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    பாகிஸ்தான், தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா நகரில் சஹாரா ரெயில் நிலையம் அருகே ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

    கராச்சியில் இருந்து அபோதாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரெயில் தடம் புரண்டதில் எட்டு பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு இறங்கி விபத்துக்குள்ளனது.

    இதில், ரெயிலில் பயணித்த 22 பேர் உயிரிழந்தனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு குழுக்கள் விரைந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும், சம்பவ இடத்திற்கு நிவாரண ரெயில் அனுப்பப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரி மொஹ்சின் சைல் கூறியுள்ளார். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தர்களின் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • பரிசு பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்பனை செய்து மோசடி செய்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
    • யாரும் வீட்டில் அமைதியாக இருக்காமல், வெளியில் வந்து போராட வேண்டும் என இம்ரான் கான் கேட்டுக்கொண்டுள்ளார்.

    பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 5 ஆண்டுகள் தகுதி நீக்கம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    பிரதமராக இருந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அவருக்கு வழங்கிய விலை உயர்ந்த பரிசு பொருட்கள் மற்றும் நினைவு பரிசுகளை கருவூலத்தில் சேர்க்காமல் விற்பனை செய்து அந்த பணத்தை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்துடன் அவரை உடனடியாக கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து இம்ரான் கான் லாகூரில் கைது செய்யப்பட்டார்.

    இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தலாம் என்பவதால் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) சார்பில் நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி தொண்டர்கள் சட்டம் மற்றும் அரசியலமைப்பின் வரம்பிற்குள் அமைதியான வழியில் போராட்டங்களில் ஈடுபடும்படி கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

    கைது செய்யப்படுவதற்கு முன்னதாக இம்ரான் கான் பதிவு செய்த வீடியோ வெளியாகி உள்ளது. அதில், தான் கைது செய்யப்பட்டால் ஆதரவாளர்கள் யாரும் வீட்டில் அமைதியாக இருக்காமல், வெளியில் வந்து போராட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

    • 5 ஆண்டுகள் தகுதி நீக்கம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு.
    • இம்ரான் கான் கைது செய்யப்படுவதற்கு முன்பு ஆதரவாளர்களுக்காக வீடியோ பதிவு.

    தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    மேலும் 5 ஆண்டுகள் தகுதி நீக்கம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசு பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இம்ரான் கான் ஒரு நேர்மையற்ற மனிதர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால் இஸ்லாமாபாத் ஐஜி இம்ரான் கானை உடனடியாக கைது செய்யவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இதையடுத்து இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், இம்ரான் கான் கைது செய்யப்படுவதற்கு முன்பு ஆதரவாளர்களுக்காக வீடியோ பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ, கைது செய்யப்பட்டதற்கு பிறகு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது.

    அந்த வீடியோவில், " எனது கைது எதிர்பார்க்கப்பட்டதுதான். நான் கைது செய்யப்படுவதற்கு முன்பு இந்த செய்தியை பதிவு செய்தேன். எனது கட்சியினர் அமைதியாகவும், உறுதியுடனும், வலிமையுடனும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    • இஸ்லாமாபாத் ஐஜி இம்ரான் கானை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

    தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகள் தகுதி நீக்கம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசு பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இம்ரான் கான் ஒரு நேர்மையற்ற மனிதர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால் இஸ்லாமாபாத் ஐஜி இம்ரான் கானை உடனடியாக கைது செய்யவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

    • சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை நேற்று வரை 54 ஆக இருந்த நிலையில் இன்று உயர்வு.
    • உயிரிழந்தவர்களில் 13 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சி கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுமார் 400 பேர் கலந்துக் கொண்டினர்.

    ஜே.யு.ஐ.எப். அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அங்கே எதிர்பாராதவிதமாக திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது.

    இந்த பயங்கர குண்டுவெடிப்பில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாகவும், 150 பேர் படுகாயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியானது.

    மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை நேற்று வரை 54 ஆக இருந்த நிலையில் இன்று 63ஆக உயர்ந்துள்ளது.

    மேலும், இந்தச் சம்பவத்தில் 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாவும், பெஷாவர் மற்றும் டைமர்கெராவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 13 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கைபர் பக்துன்வா குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சில நாடுகளுக்கு இந்தியா தன் கதவுகளை திறந்து வைத்துள்ளது
    • ஒரு நாடு வளர்ச்சி அடைவதற்கு அதன் அண்டை நாடுகள்தான் முக்கியம்

    இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை துணை மந்திரி ஹினா ரப்பானி கர்.

    இவர் நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 'பாகிஸ்தான் ஆட்சி மன்றம் 2023' எனும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

    அப்போது இந்தியாவுடனான உறவுகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து ஹினா கூறியதாவது:-

    இந்தியா மேற்கத்திய நாடுகளின் டார்லிங். ஒரு சில நாடுகளுக்கு மட்டும் இந்தியா தங்கள் கதவுகளை முழுவதும் திறந்து வைத்துள்ளது. ஆனால் அதனை சுற்றியுள்ள அண்டை நாடுகள் சிலவற்றுக்கும், அங்கேயே வாழும் ஒரு சிலருக்கும் இறுக்கமான மன நிலையை காட்டி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம், ஏசியன் போன்ற பன்னாட்டு கூட்டமைப்புகளை காணும்போது, ஒரு நாடு வளர்ச்சி அடைவதற்கு அதன் அண்டை நாடுகள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது தெளிவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பல்வேறு காரணங்களால் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இந்தியாவிற்கு உள்ள உறவுகளில் தற்போது ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவுகிறது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் இந்தியாவிற்கு நட்பு வளர்ந்து வருகிறது.

    இந்த ஈடுபாட்டை மறைமுகமாக கேலி செய்யும் விதமாக ஹினாவின் கருத்துக்கள் அமைந்திருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • கடந்த 75 ஆண்டுகளில் பாகிஸ்தான் மூன்று போர்களை நடத்தியுள்ளது.
    • நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கனிமவள உச்சி மாநாட்டில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்த்து போராடும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் போர் ஒரு விருப்பமல்ல. இந்தியாவுடன் போரை நடத்த விரும்பவில்லை.

    அனைத்து தீவிரமான மற்றும் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். அர்த்தமுள்ள விவாதங்கள் மூலம் நமது தீவிரமான பிரச்சினைகள் புரிந்த கொள்ளப்படா விட்டால் அண்டை நாடுடன் நட்பாக இருக்க முடியாது என்பதை அண்டை நாடுகளும் புரிந்து கொள்வது முக்கியம்

    பாகிஸ்தானின் அணு சக்தி, தற்காப்பு நோக்கத்திற்காகவே உள்ளது. அது ஆக்கிரமிப்புக்காக அல்ல. ஏனென்றால் அணு ஆயுதத்தை பயன்படுத்தினால் என்ன நடந்தது என்பதை சொல்ல யார் வாழ்வார்கள்? எனவே போர் ஒரு விருப்ப மல்ல.

    கடந்த 75 ஆண்டுகளில் பாகிஸ்தான் மூன்று போர்களை நடத்தியுள்ளது. இதன் காரணமாக பொருளாதார இழப்பு மற்றும் வளங்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.

    நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். பரஸ்பர மரியாதை, நம்பிக்கையின் அடிப்படையில் அமெரிக்காவுடன் சிறந்த உறவுகளை வைத்திருக்க விரும்புகிறோம். நாங்கள் ஒருவரையொருவர் ஏமாற்ற முயற்சிக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் முழுவதுமாக கை விடும்வரை பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பயங்கரவாத தாக்குதல்களால் போலியோ சொட்டு மருந்து இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது.
    • போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் மேற்கத்திய நாடுகளின் சதி என்று குற்றச்சாட்டு.

    கராச்சி:

    பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் குழுவினர் மீது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

    குவெட்டாவின் நவா கில்லி பகுதியில் நிகழ்ந்த இந்த துப்பாக்கி சூட்டில், சொட்டு மருந்து குழுவினருக்கு பாதுகாப்பிற்காக சென்ற 2 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். போலியோ மருந்து குழுவினர் காயமின்றி தப்பினர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் போலியோ சொட்டு மருந்து இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இதேபோல் கடந்த காலங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக பலுசிஸ்தான் மற்றும் கைபர் பாக்துன்க்வா மாகாணங்களில் இத்தகைய பயங்கரவாத தாக்குதல்களால் போலியோ சொட்டு மருந்து இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது.

    போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் மேற்கத்திய நாடுகளின் சதி என்றும், பாகிஸ்தான் குழந்தைகளுக்கு கருத்தடை செய்யும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் பல்வேறு மத தலைவர்களும், பயங்கரவாத குழுக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

    • பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • இதில் 23 சிறுவர்கள் உள்பட 54 பேர் உயிரிழந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

    கராச்சி:

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சி கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஜே.யு.ஐ.எப். அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அங்கே எதிர்பாராதவிதமாக திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது.

    இந்த பயங்கர குண்டுவெடிப்பில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாகவும், 150 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில் இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாவும், பெஷாவர் மற்றும் டைமர்கெராவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியானது.

    இந்த குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், கைபர் பக்துன்வா குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.

    • பாகிஸ்தானில் ஒரு ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது
    • இந்த வருடம் அங்கு பொது தேர்தல் நடக்கவிருக்கிறது.

    கடந்த 2022ம் வருடம் பாகிஸ்தானின் இம்ரான் கான் அரசாங்கம் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தது.

    இதனையடுத்து அங்கு எதிர்கட்சி தலைவராக இருந்த ஷெபாஸ் ஷெரீஃப் தலைமையில் புது அரசாங்கம் பொறுப்பேற்று கொண்டது. இந்த வருடம் அங்கு பொது தேர்தல் நடக்கவிருக்கிறது.

    இதற்கிடையே கடந்த மே 9 அன்று, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவர் இம்ரான் கான், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் அல் காதர் அறக்கட்டளை வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, பாகிஸ்தானில் போராட்டங்கள் வெடித்து, அரசு சொத்துக்கள் மற்றும் ராணுவ நிலைகள் தாக்கப்பட்டன. அங்கு ஒரு ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்நிலையில், இதனை குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃப் கூறியிருப்பதாவது:-

    தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் தலைவர் இம்ரான் கான், நாட்டின் தலைமையை கவிழ்க்கும் நோக்கில் செயல்பட்டார். அவர் கட்சியினர் நடத்திய வன்முறையால் மே 9, பாகிஸ்தான் வரலாற்றின் 'கருப்பு தினம்' என ஆகி விட்டது.

    கூட்டணி கட்சிகளின் ஆலோசனையுடன் ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு முன்னர் பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்படும். அடுத்த தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசித்து காபந்து பிரதமர் குறித்த முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    ×