search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Islamabad High Court"

    • டோஷகானா வழக்கில் அவருக்கு தேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்
    • உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் முன்பாக மேல்முறையீட்டு விசாரணை நடைபெற்றது

    இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (70). இவர் 2018-ல் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.

    பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு பிறகு கடந்த 2022 ஏப்ரலில் பதவி இழந்த இவர் மீது, பதவியில் இருந்த போது அவருக்கு பரிசாக வந்த சுமார் ரூ.5 கோடியே 25 லட்சம் ($635000) மதிப்பிலான பரிசுப் பொருட்களை டோஷகானா எனப்படும் அரசாங்க கருவூலத்திற்கு கணக்கில் காட்டாமல் விற்று விட்டதாக 2022-ம் ஆண்டு அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    டோஷகானா வழக்கு என வழங்கப்படும் இந்த வழக்கில் அவரை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்து, அவர் மீது விசாரணை நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கும் தாக்கல் செய்தது.

    விசாரணை நீதிமன்றம், நீண்ட விசாரணைக்கு பிறகு இம்மாத தொடக்கத்தில், இம்ரான் கான் குற்றவாளி என உறுதி செய்து தீர்ப்பளித்தது. மேலும் இம்ரான் கான் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு தேர்தலில் போட்டியிட தடையும் விதித்து, அவருக்கு அபராதத்துடன் கூடிய மூன்று ஆண்டுகால சிறை தண்டனையும் அளித்தது.

    இதனையடுத்து அவர் அட்டாக் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கும், தண்டனைக்கும் எதிராக இம்ரான் கான், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதி ஆமிர் ஃபாருக் மற்றும் தாரிக் மெகமூத் ஜகான்கிரி ஆகியோர் தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணை நடைபெற்று வந்தது.

    இன்று இந்த டிவிஷன் பெஞ்ச், இம்ரான் கானுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும், தண்டனையையும் நிறுத்தி வைத்துள்ளது. இத்தகவலை அவரது வழக்கறிஞர் நயீம் பஞ்சுதா சமூக வலைதளமான எக்ஸில் (டுவிட்டர்) தெரிவித்தார்.

    இம்ரான் கான் மீது மேலும் பல வழக்குகள் உள்ளதாலும், அரசியல் காரணங்களுக்காகவும் அவர் உடனடியாக சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவாரா என்பது தெரியவில்லை. அதே போல் வரவிருக்கும் தேர்தல்களில் அவர் போட்டியிட முடியுமா இல்லை அவரது தகுதி நீக்கம் தொடருமா என்பதும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அவரது ஆதரவாளர்களும், குடும்பத்தினரும் இன்றைய தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

    லண்டனில் சொகுசு பங்களா வாங்கியதாக தொடரப்பட்ட ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், மகள், மருமகனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. #NawazSharifreleased
    இஸ்லாமாபாத்:

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் நோக்கத்தில் லண்டன் அவன்பீல்ட் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரின் சார்பிலும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவின் மீது விசாரணை நடந்துவந்த நிலையில் லண்டனில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த நவாஸ் ஷரிப்பின் மனைவி குல்சூம் நவாஸ் சமீபத்தில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள நவாஸ் ஷரிப், அவரது மகள், மருமகன் ஆகியோர் சிறையில் இருந்து 3 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டனர். பின்னர், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்ற நீதிபதி முஹம்மது பஷீர் கடந்த ஜூலை மாதம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இஸ்லாமாபாத் ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்தது.

    பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்தும், நவாஸ் ஷரிப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தர் ஆகியோரை சிறையில் இருந்து விடுதலை செய்தும் நீதிபதி அதார் மின்னாலா உத்தரவிட்டுள்ளார்.
    #Sharifjailsentencessuspended #NawazSharifreleased
    சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், மகள், மருமகன் சார்பில் இன்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் 7 முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
    இஸ்லாமாபாத்:

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், அவரது மகள் மரியம் ஷரிப் சார்பில் நாளை மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படுகிறது.

    லண்டன் அவன்பீல்ட் குடியிருப்பு தொடர்பான ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரின் சார்பிலும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்ய  நவாஸ் ஷரிப்பின் வழக்கறிஞர்கள் தீர்மானித்தனர்.

    முன்னதாக, நேற்று முன்தினம் அடிடாலா சிறைக்கு சென்ற காவாஜா ஹாரிஸ் தலைமையிலான வழக்கறிஞர்கள் முறையீட்டு மனுக்களில் தங்களது கட்சிக்காரர்களின் கையொப்பங்களை பெற்றனர்.

    தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும். நவாஸ் ஷரிப் மீதுள்ள மேலும் இரு ஊழல் வழக்குகளின் விசாரணையை அடிடாலா சிறை வளாகத்தில் நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

    நிலுவையில் இருக்கும் மேலும் இரு ஊழல் வழக்குகளை தற்போதைய பொறுப்புடைமை நீதிமன்ற நீதிபதி முஜம்மது பஷீர் விசாரிக்க கூடாது. ஏற்கனவே, இந்த வழக்குகளின் சாதக-பாதகங்கள் பற்றி அவர் வெளிப்படையாக பொதுவெளியில் விமர்சித்துள்ளதால் முஹம்மது பஷீருக்கு வேறு நீதிபதியிடம் இந்த விசாரணையை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் நவாஸ் ஷரிப், மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவர் சப்தர் சார்பில் இன்று 7 முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெறும் தேதியை இஸ்லாமாபாத் ஐகோர்ட் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Sharifconvictionappeal #graftcase #Avenfieldverdictappeal
    ×