என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தானில் பயங்கர விபத்து: பயணிகள் பேருந்து டீசல் லாரி மீது மோதியதில் 16 பேர் உயிரிழப்பு
    X

    பாகிஸ்தானில் பயங்கர விபத்து: பயணிகள் பேருந்து டீசல் லாரி மீது மோதியதில் 16 பேர் உயிரிழப்பு

    • படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • 4 பேரின் உடல்நிலை மோசமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு.

    பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் டீசல் ஏற்றி வந்த லாரியும், பயணிகள் பேருந்தும் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு இன்று அதிகாலை 4 மணியளவில் 40 பயணிகளுடன் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, பேருந்து எதிரில் வந்த டீசல் லாரி மீது பயங்கரமாக மோதியதில் தீ பிடித்தது. லாரியில் இருந்த டீசல் டிரம்கள் வெடித்து சிதறின. இதில், பேருந்துக்குள் இருந்த பயணிகள் படுகாயமடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், பேருந்தில் சிக்கியிருந்தவர்கள் மீட்டனர். இதில், 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 15 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும், இதில் 4 பேரின் உடல்நிலை மோசமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உயிரிழந்தவர்களின் அடையாளங்களை காணும் பணி நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×