என் மலர்
டென்னிஸ்
- வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
- ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார்.
வியன்னா:
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றுப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், சக நாட்டு வீரர் பிளேவியோ கோபாலி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக விளையாடிய சின்னர் 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் இத்தாலியின் மேட்டியோ அர்னால்டை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
- ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வியன்னா:
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றுப் போட்டியில் ரஷியாவின் மெத்வதேவ், பிரான்சின் கொரண்டின் மவுடெட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பிரான்ஸ் வீரர் 7-6 ( 7-3), 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் மெத்வதேவ் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
- கஜகஜஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா காலிறுதிக்கு முன்னேறினார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் 3வது சுற்றில் கஜகஸ்தான் எலினா ரிபாகினா,கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ரிபாகினா 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
- ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர் ஸ்வரேவ் வெற்றி பெற்றார்.
வியன்னா:
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் டேனியல் அல்டைமர்
உடன் மோதினார்.
இதில் சிறப்பாக விளையாடிய சின்னர் 6-0, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் மெத்வதேவ் 6-4, 6-7 (7-9), 6-2 என்ற செட் கணக்கில் போர்ர்சுகலின் நியூனோ போர்ஜசை வீழ்த்தி
அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
- செக் நாட்டு வீராங்கனை கரோலினா முசோவா காலிறுதிக்கு முன்னேறினார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் 3வது சுற்றில் செக் நாட்டின் கரோலினா முசோவா, ஆஸ்திரேலியாவின் மாயா ஜாயிண்ட் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய கரோலினா முசோவா 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
- இரண்டாவது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் வெற்றி பெற்றார்.
வியன்னா:
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இங்கிலாந்தின் ஜேக்கப் பேர்ன்லி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக விளையாடிய ஸ்வரேவ் 6-4, 1-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் செர்பியாவின் மெஜோடோவிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
- ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
- 2வது சுற்றில் கனடா வீராங்கனை வெற்றி பெற்றார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் 2வது சுற்றில் கனடா நாட்டின் லெய்லா பெர்னாண்டஸ், கிரீஸ் நாட்டின் மரியா சக்காரியுடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய லெய்லா பெர்னாண்டஸ் 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி தொடரில் இருந்து வெளியேறினார்.
- நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
- நேற்று நடந்த இறுதிப்போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை வெற்றி பெற்றார்.
பீஜிங்:
நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ரஷிய வீராங்கனை அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
இதில் அலெக்சாண்ட்ரோவா முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். 2-வது செட்டை ரிபாகினா 6-0 என கைப்பற்றினார்.
இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ரிபாகினா 6-2 என கைப்பற்றினார்.
இதையடுத்து 3-6, 6-0, 6-2 என்ற செட் கணக்கில் அலெக்சாண்ட்ரோவாவை வீழ்த்தி ரிபாகினா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
- கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.
- இறுதிப்போட்டியில் ரஷியாவின் மெத்வதேவ் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
அல்மாட்டி:
கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.
இதில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் கரன்டின் மவுடெட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
சுமார் 882 நாட்களுக்குப் பிறகு மெத்வதேவ் வெல்லும் சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- அரையிறுதியில் ரஷியாவின் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
அல்மாட்டி:
கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த அரையிறுதி போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-7 (8-10), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மெத்வதேவ், பிரான்சின் கரன்டின் மவுடெட் உடன் மோதுகிறார்.
- கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- காலிறுதியில் ரஷியாவின் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
அல்மாட்டி:
கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த காலிறுதி போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஹங்கேரியின் பேபியன் மாரோசான் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் அரையிறுதியில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் ஜேம்ச் டக்வொர்த் உடன் மோதுகிறார்.
- ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
- ஜப்பானின் நவோமி ஒசாகா காயம் காரணமாக காலிறுதியில் விலகினார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, ரொமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டின் உடன் மோத இருந்தார்.
ஆனால் இடது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் ரொமேனியா வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேறினார்.






