என் மலர்tooltip icon

    கால்பந்து

    • எம்பாப்பே 55-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார்
    • 69-வது நிமிடத்தில் கிரீஸ் வீரர் ரெட் கார்டு பெற்று வெளியேறினார்

    ஐரோப்பிய யூனியனில் உள்ள கால்பந்து நாடுகளுக்கு இடையில் தகுதிச்சுற்று நடைபெற்று யூரோ கோப்பைக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டும். 2023-24-ம் ஆண்டு யூரோ கோப்பைக்கான தகுதிக்சுற்று தற்போது நடைபெற்றது வருகிறது.

    இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ்- கிரீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டம் தொடங்கிய வினாடியில் இருந்து இரு அணி வீரர்களும் எதிரணி வீரர்களை கோல் அடிக்கவிடக் கூடாது என்ற நோக்கத்தில் விளையாட முதல் பாதி நேர ஆட்டத்தில் இரண்டு அணியும் கோல் அடிக்கவில்லை.

    2-வது பாதி நேர ஆட்டத்திலும் இரு அணி வீரர்கள் கோல் அடிக்க திணறினர். இறுதியில் 55-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கிலியான் எம்பாப்வே கோல் அடித்தார். ஆகவே, பிரான்ஸ் 55-வது நிமிடம் முடிவில் 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    69-வது நிமிடத்தில் கிரீஸ் வீரர் மவ்ரோபனாஸ் ரெட் கார்டு பெற்று வெளியேறினார். இதனால் கிரீஸ் 10 வீரர்களுடன் விளையாடியது. என்றாலும் பிரான்ஸ் அணியை மேலும் கோல் அடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டது. கிரீஸ் அணியாலும் ஆட்டம் முடியும்வரை கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிரான்ஸ் 1-0 என வெற்றி பெற்றது.

    'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள பிரான்ஸ் நான்கு போட்டிகளில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்றுள்ளது. கிரீஸ் 3-ல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    • இன்டர்கான்டினென்டல் கோப்பை போட்டியை நடத்துவது பெருமைக்குரிய விஷயம் என நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
    • ஒடிசா அரசுக்கு, அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே நன்றி தெரிவித்தார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு மைதானத்தில் ஹீரோ இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது. நேற்று இரவு நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி லெபனானை வீழ்த்தியது. ஆட்டத்தின் சிறப்பான அம்சமாக கேப்டன் சுனில் சேத்ரியின் 87வது சர்வதேச கோல் மூலமாகவும், லாலியன்சுவாலா சாங்டேவின் ஸ்டிரைக் மூலமாகவும் லெபனானை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இன்டர்கான்டினென்டல் கோப்பையை வென்றது.

    இந்நிலையில், ஹீரோ இன்டர்கான்டினென்டல் கோப்பையை வென்ற, இந்திய ஆண்கள் கால்பந்து அணிக்கு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    "இந்த மதிப்புமிக்க இன்டர்கான்டினென்டல் கோப்பை போட்டியை நமது மாநிலம் நடத்துவது பெருமைக்குரிய விஷயம். கடுமையான போட்டியை எதிர்கொண்டு இந்தியா வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். ஒடிசாவில் இன்னும் பல கால்பந்து நிகழ்வுகளை ஒடிசா மற்றும் இந்தியாவில் நடத்தி இந்த விளையாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்." என்று நிறைவு விழாவின் போது பட்நாயக் கூறினார்.

    போட்டியை வெற்றிகரமாக நடத்திய ஒடிசா அரசுக்கு, அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே நன்றி தெரிவித்தார்.

    "இதை விட ஒரு சிறப்பான ஹீரோ இன்டர்கான்டினென்டல் கோப்பையை நாங்கள் சிறப்பாக நடத்தியிருக்க முடியாது. பங்கேற்கும் அணிகளுக்கு அனைத்து ஆதரவையும் விருந்தோம்பலையும் வழங்கியதற்காகவும், ஒரு அற்புதமான போட்டியை நடத்தியதற்காகவும் ஒடிசா அரசுக்கு நன்றி," என்று அவர் கூறினார்.

    • ஆட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் ஜிராடு கோல் அடித்தார்
    • பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி எம்பாப்பே கோலாக்கினார்

    ஐரோப்பா சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் முன்னணி அணியான பிரான்ஸ் ஜிப்ரால்டரை எதிர்கொண்டது. இதில் பிரான்ஸ் 3-0 என வெற்றி பெற்றது.

    ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் கிங்ஸ்லி வழங்கிய பந்தை சிறப்பான முறையில் கோலாக்கினார் ஜிராடு. பிரான்ஸ் அணிக்காக அவர் அடித்த 54-வது கோல் இதுவாகும்.

    அதன்பிறகு முதல் பாதிநேரம் ஆட்டம் முடியும் தருவாயில் இருக்கும்போது பெனால்டி வாய்ப்பு மூலம் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் பிரான்ஸ் அணிக்காக எம்பாப்வே அடித்த கோல்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

    2-வது பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் மேலும் ஒரு கோல் அடிக்க 3-0 என வெற்றி பெற்றது.

    நேற்று நடைபெற்ற மற்ற ஆடடங்களில் பின்லாந்து, இங்கிலாந்து, துருக்கி, உக்ரைன், கிரீஸ், அர்மேனியா, டென்மார்க், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், கஜகஸ்தான் அணிகள் வெற்றி பெற்றன.

    'பி' பிரிவில இடம்பிடித்துள்ள பிரான்ஸ் 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றிபெற்று முதல் இடம் வகிக்கிறது.

    • அர்ஜென்டினா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி நேற்று நடந்தது.
    • மெஸ்சியின் 103-வது சர்வதேச கோலாக இது பதிவானது.

    பீஜிங்:

    உலக சாம்பியன் அர்ஜென்டினா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று நடந்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

    அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி ஆட்டம் தொடங்கிய 79-வது வினாடிக்குள் சூப்பராக கோல் அடித்து அசத்தினார். அவரது கால்பந்து வாழ்க்கையில் அடிக்கப்பட்ட அதிவேக கோல் இதுதான்.


    இதற்கு முன்பு கிளப் போட்டியில் 127-வது வினாடியில் பந்தை வலைக்குள் அனுப்பியதே அவரது மின்னல்வேக கோலாக இருந்தது. மொத்தத்தில் மெஸ்சியின் 103-வது சர்வதேச கோலாக இது பதிவானது.

    • மான்செஸ்டர் சிட்டி 1-0 என்ற கோல் கணக்கில் மிலனை தோற்கடித்து கோப்பையை தனதாக்கியது.
    • 3-வது முறையாக கோப்பையை வென்ற மான்செஸ்டர் சிட்டி வீரர்களை 2 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் வழிநெடுக திரண்டு வரவேற்றனர்.

    இஸ்தான்புல்:

    கிளப் அணிக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து கிளப்), இன்டர் மிலன் (இத்தாலி) அணிகள் துருக்கியின் இஸ்லான்புல் நகரில் மோதின. முதல் பாதியில் கோல் ஏதும் விழாத நிலையில் 68-வது நிமிடத்தில் மான்செஸ்டர் வீரர் ரோட்ரி கோல் போட்டார். அதுவே வெற்றிக்கும் வித்திட்டது.

    முடிவில் மான்செஸ்டர் சிட்டி 1-0 என்ற கோல் கணக்கில் மிலனை தோற்கடித்து கோப்பையை தனதாக்கியது. ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை மான்செஸ்டர் சிட்டி வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்த சீசனில் பிரிமீயர் லீக், எப்.ஏ. கோப்பையை சுவைத்த மான்செஸ்டர் சிட்டிக்கு இது 3-வது மகுடமாக அமைந்தது.

    இந்நிலையில் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் 3-வது முறையாக கோப்பையை வென்ற மான்செஸ்டர் சிட்டி வீரர்களை 2 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் வழிநெடுக திரண்டு வரவேற்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பீஜிங்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ளது
    • அர்ஜென்டினா பாஸ்போர்ட் இல்லாததால் தடுத்து நிறுத்தம் எனத் தகவல்

    கால்பந்து உலகின் தலைசிறந்த வீரரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான மெஸ்சி மற்றும் அவரது அணி வீரர்கள் ஆஸ்திரேலியா அணிக்கெதிராக நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடுவதற்காக சீனா சென்றனர்.

    சீனாவின் பீஜிங் விமானத்தில் மெஸ்சி வந்து இறங்கியதும் போலீசார் அவரை சுற்றி வளைத்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    மெஸ்சி அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவர். ஆனால் அர்ஜென்டினா பாஸ்போர்ட் வைப்பதற்குப் பதிலாக ஸ்பெயின் பாஸ்போர்ட் வைத்திருந்தார். அதில் சரியான சீனா விசா இல்லை எனத் தெரிகிறது. இதனால் தடுத்து நிறுத்தப்பட்டதாக என அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்குள் அதிகாரிகள் தடங்களை சரி செய்து அவரை அனுப்பி வைத்தனர்.

    அர்ஜென்டினா வருகிற 15-ந்தேதி பீஜிங்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், 19-ந்தேதி ஜகார்த்தாவில் இந்தோனேசியாவுக்கு எதிராகவும் விளையாட இருக்கிறது.

    • இரு அணிகளும் முதல் பாதி ஆட்டத்தில் கோல்கள் அடிக்கவில்லை.
    • 68வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி வீரர் ரோட்ரி அபாரமான கோல் அடித்தார்.

    இஸ்தான்புல்:

    ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎஃப்ஏ) சார்பில் ஆண்டுதோறும் கிளப் அணிகளுக்கிடையிலான சாம்பியன்ஸ் லீக் போட்டி நடத்தப்படுகிறது. ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மற்றும் ஃபிஃபா உலகக் கோப்பையைத் தொடர்ந்து இந்த சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக ஆதரவு உள்ளது.

    அவ்வகையில், இந்த ஆண்டின் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இஸ்தான்புல் நகரில் உள்ள அட்டாடர்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில், மான்செஸ்டர் சிட்டி, இன்டர் மிலன் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடின. இரு அணிகளுமே எதிரணியின் தடுப்பாட்டத்தை முறியடித்து கோல் அடிக்க முயன்றன. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் கோல்கள் அடிக்கப்படவில்லை. 

    இந்நிலையில், இரண்டாவது பாதி ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி முன்னேறியது. 68வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி வீரர் ரோட்ரி, எதிரணியின் தடுப்பாட்டத்தை முறியடித்து அபாரமான கோல் அடித்தார். இதன்மூலம் மான்செஸ்டர் சிட்டி 1-0 என முன்னிலை பெற்றது. அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. அதன்பின்னர் இன்டர் சிட்டி அணி பதிலடி கொடுக்க முயன்றும் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் மான்செஸ்டர் சிட்டி 1-0 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அத்துடன் கிளப் தொடங்கிய 143 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ளது.

    • பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • கடந்த 2019ம் ஆண்டு பிரான்ஸில் நடந்த உலகக்கோப்பை போட்டியின் டிக்கெட் விற்பனையை விட அதிகம்.

    9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்டு 20ம் தேதி வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறுகிறது. 32 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

    பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கிய நிலையில், இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.

    இது, கடந்த 2019ம் ஆண்டு பிரான்ஸில் நடந்த உலகக்கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியின் மொத்த டிக்கெட் விற்பனையைவிட இது அதிகமாகும்.

    • தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த ரசிகர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • ரசிகர் இறந்ததையடுத்து கால்பந்து கிளப் சார்பில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

    அர்ஜென்டினாவில் நேற்று ரிவர் பிளேட், டெப்சேனா ஒய் ஜஸ்டிகா அணிகளுக்கிடையிலான கால்பந்து போட்டி பியூனஸ் அயர்சில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

    அப்போது மைதானத்தின் கேலரியில் அமர்ந்திருந்த 53 வயது மதிக்கத்தக்க ரசிகர் ஒருவர், கீழே விழுந்துவிட்டார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு மருத்துவக் குழுவினர் விரைந்தனர். ஆனால் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த ரசிகர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் காரணமாக, முதலில் மருத்துவ எமர்ஜென்சி என கூறி போட்டி 14 நிமிடங்களுக்கு போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர் போட்டி தொடங்கியது. அதன்பின்னர் ரசிகர் இறந்தது தொடர்பாக நடுவர் அறிவித்ததும், போட்டி மேலும் 27 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.

    மேலும் ஒருநாள் முழுவதும்  துக்கம் அனுசரிக்கப்பட்டதுடன், மைதானம் 24 மணி நேரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

    • மான்செஸ்டர் சிட்டியின் லிகாய் 2 கோல் அடித்தார்
    • பெனால்டி வாய்ப்பு கோலைத் தவிர மேலும் கோல் அடிக்க முடியாமல் யுனைடெட் ஏமாற்றம்

    இங்கிலாந்தில் உள்ள கிளப் அணிகளுக்கு இடையில் நடத்தப்படும் எஃப்.ஏ. கோப்பைக்கான கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு விம்ப்ளே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மான்செஸ்டர் யுனைடெட்- மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பந்தை கடத்திய முதல் நிமிடத்திலேயே மான்செஸ்டர் சிட்டி வீரர் லிகாய் குன்டோகான் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் மான்செஸ்ட்ர் சிட்டி 1-0 என் முன்னிலைப் பெற்றது.

    பின்னர் 31-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி புருனோ பெர்னாண்டஸ் கோல் அடித்தார். இதன் காரணமாக முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல்களுடன் சமநிலையில் இருந்தன.

    2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் மான்செஸ்டர் சிட்டி கைதான் ஓங்கியிருந்தது. 51-வது நிமிடத்தில் மீண்டும் குன்டோகான் கோல் அடிக்க மான்செஸ்டர் சிட்டி 2-1 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் மான்செஸ்டர் யுனைடெட் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

    இறுதியில் மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் 7-வது முறையாக மான்செஸ்டர் சிட்டி எஃப்.ஏ. கோப்பையை வென்றுள்ளது.

    • பி.எஸ்.ஜி. அணிக்காக 57 போட்டிகளில் 22 கோல்கள் அடித்துள்ளார்
    • இரண்டு சீசனோடு பிஎஸ்ஜி-யில் இருந்து வெளியேறுகிறார்

    கால்பந்து, அர்ஜென்டினா என்றாலே நினைவுக்கு வரும் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் மெஸ்சி. பார்சிலோனா அணிக்காக நீண்ட காலம் விளையாடிய அவர், திடீரென பி.எஸ்.ஜி. (paris saint-germain fc) அணிக்கு மாறினார். 2021-ல் இருந்து பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார்.

    இதுவரை 57 போட்டிகளில் விளையாடி 22 கோல்கள் அடித்துள்ளார். பிஎஸ்ஜி அணியில் இருந்து மெஸ்சி வெளியேற வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன.

    இந்த நிலையில் பிஎஸ்ஜி அணி நாளை மறுதினம் சனிக்கிழமை கிளெர்மோன்ட் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இதுதான் மெஸ்சி பிஎஸ்ஜி அணிக்காக விளையாடும் கடைசி போட்டி என அந்த அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டோபர் கால்டியர் தெரிவித்துள்ளார்.

    பார்சிலோனா அணிக்காக மெஸ்சி 474 போட்டிகளில் விளையாடி 520 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பார்சிலோனா அணி நிர்வாகத்திடம், மீண்டும் பார்சிலோனாவில் விளையாட தங்களுக்கு விருப்பம் இருந்தால் 10 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என மெஸ்சி தெரிவித்ததாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

    மெஸ்சி மீண்டும் அணிக்கு திரும்புவதை பார்சிலோனா மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கும் நிலையில், அவர்களின் நிதி அமைப்பு சிக்கலாக இருக்கும் எனத் தெரிகிறது.

    • முதல் சுற்றில் 'ஜி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய பெண்கள் அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் மீண்டும் கிர்கிஸ்தானை எதிர்கொண்டது.
    • இந்தியா முந்தைய ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் கிர்கிஸ்தானை வென்று இருந்தது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீஸ்சில் அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு ஆசிய கண்டத்தில் இருந்து தகுதி பெறும் 2 பெண்கள் கால்பந்து அணிகள் எவை? என்பதை நிர்ணயிப்பதற்கான ஆசிய பெண்கள் கால்பந்து போட்டி கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடந்து வருகிறது.

    இதன் முதல் சுற்றில் 'ஜி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய பெண்கள் அணி நேற்று முன்தினம் இரவு நடந்த தனது 2-வது லீக் ஆட்டத்தில் மீண்டும் கிர்கிஸ்தானை எதிர்கொண்டது.

    இதில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் கிர்கிஸ்தானை தோற்கடித்தது. இந்திய அணியில் சந்தியா 2 கோலும் (18-வது, 56-வது நிமிடம்), அனுஜ் தமாங் (24-வது நிமிடம்), ரேணு (85-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர்.

    இந்தியா முந்தைய ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் கிர்கிஸ்தானை வென்று இருந்தது. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற இந்திய அணி 2வது சுற்றுக்கு முன்னேறியது.

    ×