search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SAFF Championship"

    • ஏ பிரிவில் இன்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, குவைத் அணிகள் மோதின.
    • ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்க, போட்டி டிரா ஆனது.

    பெங்களூரு:

    14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஏ பிரிவில் இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, குவைத் அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே இந்திய அணி சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதியிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. இதனால் ஆட்டத்தின் 90-வது நிமிடம் முடிந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் 2-வது நிமிடத்தில் தடுப்பாட்டத்தில் இந்திய அணியின் அன்வர் அலி செய்த தவறால் பந்து கோல் வளைக்குள் செல்ல குவைத் அணிக்கு கோல் வழங்கப்பட்டது. ஆட்ட நேர முடிவில் 1-1 என போட்டி டிராவில் முடிந்தது.

    ஏற்கனவே இந்தியா மற்றும் குவைத் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஜூனியர் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. #SAFFChampionship #IndianFootball #SAFFU15Championship
    புதுடெல்லி:

    தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (எஸ்ஏஎப்எப்) சார்பில் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 15 வயதிற்குட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் பூட்டான் அணியை எதிர்கொண்டது.

    துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள், பூட்டான் வீரர்களை முன்னேற விடாமல் தடுத்ததுடன், வாய்ப்புகளை வீணடிக்காமல் கோல் அடித்தனர். 4-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் ஷுபோ கோல் அடித்து கணக்கை தொடங்கினார்.

    அதன்பின்னர் 66-வது நிமிடத்தில் சுபாவும், 83-வது நிமிடத்தில் ஷுபோவும், 89-வது நிமிடத்தில் அமானும் கோல் அடித்து அசத்தினர். பூட்டான் வீரர்களின் கோல் முயற்சி வீணானது. இறுதியில் 4-0 என இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. #SAFFChampionship #IndianFootball #SAFFU15Championship
    ×