என் மலர்
விளையாட்டு
- ஜோகோவிச் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் ஸ்பெயின் வீரர் அல்காரஸை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
- தனது மகளை கட்டியணைத்து ஜோகோவிச் அழுத காட்சிகள் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் விளையாட்டு என்பதையும் கடந்து வீரர்களின் ஆத்மார்த்தமான உணர்வுகளை வெளிக்கொண்டு வருவதாக உள்ளது. வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும் அது அழுகையாக வெளிப்படுகிறது. இது ரசிகர்கள் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுவதில்லை.
அந்த வகையில் செர்பிய நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் இடையே நடந்த போட்டியானது அத்தகையதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடந்த இந்த டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜோகோவிச் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் ஸ்பெயின் வீரர் அல்காரஸை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். கார்லோஸ் அல்காரஸ் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
சில மாதங்களுக்கு முன் நடந்த விம்பிள்டன் இறுதிப்போட்டியில் அல்காரஸிடம் ஜோகோவிச் தோற்ற நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டி அமைந்தது. இது இரு வீரர்களையும் உணர்ச்சி வசப்பட வைப்பதாக அமைந்தது.
பார்வையாளர்கள் இடத்தில் இருந்த தனது மகளை கட்டியணைத்து ஜோகோவிச் அழுத காட்சிகள் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில் தோல்வியால் கார்லோஸ் அல்காரஸ் கண்கலங்கும் காட்சிகளும் ரசிகர்களைக் கலங்க வைத்துள்ளது.
- விசா விண்ணப்பிக்கும் சேவையை வழங்கும் நிறுவனமான Atlys நிறுவனத்தின் CEO மோஹக் நாஹ்டா அறிவித்துள்ளார்.
- நானே தனிப்பட்ட முறையில் அனைவருக்கும் விசாக்களை அனுப்பி வைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது. இதுவரையில் நடைபெற்ற போட்டிகளில் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியா பதக்கப்பட்டியலில் 53ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஈட்டியெறிதல் பிரிவுக்கான போட்டிகள் நாளை [ஆகஸ்ட் 6] தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ராவும் கிஷோர் ஜெனாவும் விளையாடுகின்றனர்.
இதில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால் இந்தியர்கள் அனைவருக்கும் இலவச விசா வழங்கப்படும் என்று ஆன்லைனில் விசா விண்ணப்பிக்கும் சேவையை வழங்கும் நிறுவனமான Atlys நிறுவனத்தின் CEO மோஹக் நாஹ்டா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது LinkedIn பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியில் நீரஜ் தங்கம் வென்றால் Atlys இந்தியப் பயனர்களுக்கு உலகின் எந்த நாட்டுக்கும் செல்ல இலவச விசா வழங்கப்படும். இதன்மூலம் பயன்பெற விரும்புவார்கள் உங்களின் இமெயில் முகவரியை கமெண்ட் செக்ஷனில் பதிவிடுங்கள்.

நானே தனிப்பட்ட முறையில் அனைவருக்கும் விசாக்களை அனுப்பி வைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்ஸ் ஈட்டியெறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
- திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
- அஸ்வின் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. முதிலில் களமிறங்கிய கோவை அணி பேட்டர்கள் துவக்கம் முதலே விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை மட்டுமே எடுத்தது.
கோவை அணி சார்பில் ராம் அரவிந்த் 27, அத்தீக் உர் ரஹ்மான் 25 மற்றும் சுஜய் 22 ரன்களை எடுத்தனர். திண்டுக்கல் அணி சார்பில் விக்னேஷ் புத்துர், சந்தீப் வாரியர் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
எளிய இலக்கை துரத்திய திண்டுக்கல் அணிக்கு வழக்கம்போல ரவிசந்திரன் அஸ்வின் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார். இவருடன் ஆடிய மற்ற வீரர்களும் ரன் குவிப்பில் ஈடுபட திண்டுக்கல் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 131 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
திண்டுக்கல் அணி சார்பில் ரவிசந்திரன் அஸ்வின் 52, பாபா இந்திரஜித் 32 மற்றும் சரத் குமார் 27 ரன்களை எடுத்தனர். கோவை அணி சார்பில் சித்தார்த், வல்லியப்பன் யுதீஸ்வரன் மற்றும் கௌதம் தாமரை கண்ணன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டிஎன்பிஎல் தொடரில் முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியது.
- முதலில் ஆடிய இலங்கை 240 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 208 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டி டையில் முடிந்தது.
இந்நிலையில், இலங்கை-இந்திய் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை எடுத்தது. அவிஷ்கா பெர்னாண்டோ 40 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 30 ரன்னிலும் அவுட்டாகினர். வெலாலகே 39 ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் 40 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஜோடி ரோகித் சர்மா, சுப்மன் கில் அதிரடியாக ஆடியது.
முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா அரை சதமடித்து 64 ரன்னில் அவுட்டானார், சுப்மன் கில் 35 ரன்னில் வெளியேறினார். அக்சர் படேல் ஓரளவு தாக்குப் பிடித்து 44 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் இந்திய அணி 208 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கையின் வாண்டர்சே 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
- டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய கோவை அணி 129 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை:
டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சும் மோதுகின்றன.
மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி கோவை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுஜய் அதிரடியாக ஆடி 12 பந்தில் 22 ரன்கள் எடுத்தார்.
அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. ராம் அர்விந்த் 27 ரன்னும், அதிக் உர் ரகுமான் 25 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.
திண்டுக்கல் சார்பில் சந்தீப் வாரியர், விக்னேஷ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்குகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதியில் செர்பியா வீரர் ஜோகோவிச் வென்றார்.
- ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.
இதில் ஜோகோவிச் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் வென்று தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
- டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சை தேர்வு செய்தது.
சென்னை:
டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சும் மோதுகின்றன.
மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி கோவை அணி முதலில் களமிறங்குகிறது.
- இந்திய வீரர் லக்ஷயா சென் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
- லக்ஷயா சென் மிகவும் அபார திறமை வாய்ந்தவர் என்றார் அக்சல்சென்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இன்று நடந்த பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் விக்டர் அக்சல்சென்னுடன் மோதினார்.
இதில் லக்ஷயா சென் 20-22, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் டென்மார்க் வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், வெற்றிக்கு பிறகு டென்மார்க் வீரர் விக்டர் அக்சல்சென் கூறுகையில், லக்ஷயா சென் மிகவும் அபார திறமை வாய்ந்தவர். இன்றைய போட்டி எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவருக்கு மிக சிறந்த எதிர்காலம் உள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டியில் லக்ஷயா சென் நிச்சயம் தங்கம் வெல்வார். அவர் வெற்றிபெற வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.
- டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய இலங்கை 240 ரன்களை எடுத்தது.
கொழும்பு:
இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டி டையில் முடிந்தது.
இந்நிலையில், இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. முதல் பந்தில் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ், அவிஷ்கா பெர்னாண்டோவுடன் இணைந்து நிதானமாக ஆடினார். 2வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த நிலையில் அவிஷ்கா 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து குசால் மெண்டிஸ் 30 ரன்னில் அவுட்டானார்.
சமரவிக்ரமா 14 ரன்னும், சரித் அசலங்கா 25 ரன்னும், ஜனித் லியாங்கே 12 ரன்னும் எடுத்தனர்.
7வது விக்கெட்டுக்கு வெலாலகேவுடன் இணைந்த கமிந்து மெண்டிஸ் பொறுப்புடன் ஆடினார். 72 ரன்கள் சேர்த்த நிலையில் வெலாலகே 39 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் கமிந்து மெண்டிஸ் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை எடுத்தது.
இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.
- இந்திய வீரர் லக்ஷயா சென் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
- குத்துச்சண்டையில் லவ்லினா போர்ஹோகெய்ன் தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இந்நிலையில், பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார்.
இதில் லக்ஷயா சென் 20-22, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் டென்மார்க் வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்திய ஜோடி சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது.
- ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் காலிறுதி சுற்று இன்று நடந்தது.
- இதில் இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், பெண்கள் குத்துச்சண்டை 75 கிலோ பிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன், சீன வீராங்கனை லீ குயான் உடன் மோதினார்.
இந்தப் போட்டியில் லவ்லினா 1-4 என்ற புள்ளிக்கணக்கில் சீன வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். இதன்மூலம் லவ்லினா ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறினார்.
ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
- காலிறுதியில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் கிரேட் பிரிட்டனை எதிர்கொண்டது.
- இந்தப் போட்டியில் இரு அணிகளும் 1-1 என கோல் அடித்து சமனில் முடிந்தது.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன.
காலிறுதியில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் கிரேட் பிரிட்டன் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை பெற்றது. ஹர்மன்பிரித் ஒரு கோல் அடித்தார்.
இரண்டாவது பாதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் வென்றுஅரையிறுதிக்கு முன்னேறியது.
அமித் ரோஹிதாசுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதால், இந்திய அணி மொத்தம் 10 வீரர்களைக் கொண்டு விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.






