என் மலர்
விளையாட்டு
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இளையோர் உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள தொடக்க வீரர் குரங்கு கீறியதால் சொந்த நாடு திரும்பியுள்ளார்.
தென்ஆப்பிரிக்காவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆட்டம் கிம்பெர்லியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. அதன்பின் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விலங்குகள் சரணாலயம் சென்று பொழுதை கழித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக குரங்கு ஒன்று ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வந்த ஃபிராசர்-மெக்கர்க்கின் முகத்தில் கீறியது.
இருந்தாலும் அவர் போட்டிகளில் விளையாடி வந்தார். நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாடினார். இந்த போட்டியில் ரன்ஏதும் எடுக்காமல் ரன்அவுட் ஆனார்.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை காரணமாக ஆஸ்திரேலியா புறப்பட்டு வருமாறு கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டதால் உடனடியாக ஆஸ்திரேலியா புறப்படுகிறார்.

ஆக்லாந்தில் நடைபெற்ற பெண்கள் ஹாக்கியில் நியூசிலாந்திடம் 0-1 என இந்திய அணி தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.
இந்தியா - நியூசிலாந்து பெண்கள் ஹாக்கி அணிகளுக்கு இடையிலான போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வந்தது. முதல் போட்டியில் இந்தியா 4-0 என வெற்றி பெற்றிருந்தது. 2-வது போட்டியில் 1-2 என தோல்வியடைந்திருந்தது.
இந்நிலையில் 3-வது போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா 0-1 என தோல்வியடைந்தது. தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் நியூசிலாந்து வீராங்கனைகளை கோல் அடிக்க விடாமல் இந்தியா வீராங்கனைகள் சிறப்பாக தடுத்தனர்.
அதேபோல் 2-வது கால்நேர ஆட்டத்தில் இந்தியாவுக்கு அதிகமான பெனால்டி கார்னர் கிடைத்தது. இந்த முறை நியூசிலாந்து வீராங்கனைகள் சிறப்பாக தடுத்தனர். 3-வது கால்பகுதியில் நியூசிலாந்துக்கு ஒரு கோல் கிடைத்தது. 37-வது நிமிடத்தில் நியூசிலாந்து அணியின் ஹோப் ரால்ப் கோல் அடித்தார். இதனால் நியூசிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.
அதன்பின் ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்காததால் இந்தியா 0-1 என தோல்வியடைந்தது.

ரோகித் சர்மா அரைசதம் அடிக்க, மிடில் ஓவர்களில் இந்தியா சொதப்ப நியூசிலாந்துக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. ஆக்லாந்தில் நடந்த முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி ஹாமில்டனில் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி இந்தியாவின் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஐந்து ஓவரில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்திருந்தது. 6-வது ஓவரை பென்னெட் வீசினார். இந்த ஓவரில் ரோகித் சர்மா மூன்று சிக்ஸ், இரண்டு பவுண்டரிகள் விரட்டினார். இதனால் இந்தியா பவர்பிளே-யான முதல் 6 ஓவரில் 69 ரன்கள் குவித்தது. அத்துடன் ரோகித் சர்மா 23 பந்தில் அரைசதம் அடித்தார்.
இந்தியா 9 ஓவரில் 89 ரன்கள் எடுத்திருக்கும்போது கேஎல் ராகுல் 19 பந்தில் 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக ஷிவம் டுபே களம் இறக்கப்பட்டார். பென்னெட் வீசிய 11-வது ஓவரில் இந்தியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

ஷ்ரேயாஸ் அய்யர் 16 பந்தில் 17 ரன்கள் எடுத்த நிலையில் 17-வது ஓவரிலும் (இந்தியாவின் ஸ்கோர் 142), விராட் கோலி 27 பந்தில் 38 ரன்கள் எடுத்த நிலையில் 19-வது ஓவரிலும் (இந்தியாவின் ஸ்கோர் 160) ஆட்டமிழந்தனர்.
கடைசி ஓவரில் மணிஷ் பாண்டே ஒரு சிக்சரும், ஜடேஜா ஒரு சிக்சரும் அடிக்க இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் இந்தியாவுக்கு 18 ரன்கள் கிடைத்தது. மணிஷ் பாண்டே 6 பந்தில் 14 ரன்களும், ஜடேஜா 5 பந்தில் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

4-வது பந்தில் ரோகித் சர்மா 40 பந்தில் 65 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 6-வது பந்தில் டுபே 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்தியா திட்டம் தோல்வியில் முடிந்ததால், இந்தியாவின் ஸ்கோர் அப்படியே சரிய ஆரம்பித்தது. 15 ஓவரில் 127 ரன்களே எடுக்க முடிந்தது. 36 பந்தில் 38 ரன்களே கிடைத்தது.

ஷ்ரேயாஸ் அய்யர் 16 பந்தில் 17 ரன்கள் எடுத்த நிலையில் 17-வது ஓவரிலும் (இந்தியாவின் ஸ்கோர் 142), விராட் கோலி 27 பந்தில் 38 ரன்கள் எடுத்த நிலையில் 19-வது ஓவரிலும் (இந்தியாவின் ஸ்கோர் 160) ஆட்டமிழந்தனர்.
கடைசி ஓவரில் மணிஷ் பாண்டே ஒரு சிக்சரும், ஜடேஜா ஒரு சிக்சரும் அடிக்க இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் இந்தியாவுக்கு 18 ரன்கள் கிடைத்தது. மணிஷ் பாண்டே 6 பந்தில் 14 ரன்களும், ஜடேஜா 5 பந்தில் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் 87.86 தூரத்திற்கு ஈட்டி எறிந்ததன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா.
இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. இவர் தென்ஆப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூமில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றார். அப்போது 87.86 மீட்டர் தூரம் அளவிற்கு ஈட்டி எறிந்தார். இதன் மூலம் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வேண்டுமென்றால் 85 மீட்டருக்கு குறையாமல் ஈட்டி எறிதல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபனில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்த ஆண்டுக்கான முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வேரேவ் சுவிட்சர்லாந்தை சேர்ந்த வாவ்ரிங்காவை எதிர்கொண்டார்.
முதல் செட்டை வாவ்ரிங்கா 6-1 என எளிதில் கைப்பற்றினார். அதன்பின் 7-ம் நிலை வீராங்கனையான அலெக்சாண்டர் ஸ்வேரேவ் 6-3, 6-4, 6-2 என மூன்று செட்களையும் எளிதில் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஸ்வேரேவ் அரையிறுதியில் நடால் அல்லது தியெம்-ஐ எதிர்கொள்ள இருக்கிறர்ர். மற்றொரு அரையிறுதியில் ரோஜர் பெடரர் - ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

இந்திய அணிக்கெதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
ஹாமில்டன்:
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.
ஆக்லாந்தில் நடந்த முதல் 2 ஆட்டங்களிலும் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெறுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
3-வது 20 ஓவர் போட்டியின் 11 வீரர்கள் கொண்ட இந்திய அணி விபரம்:-
ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.
நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), காலின் டி கிரான்ட்ஹோம், ராஸ் டெய்லர், டிம் செய்பெர்ட், மிட்செல் சான்ட்னெர், சோதி, டிம் சவுதி, குஜ்ஜெலின், ஹாமிஷ் பென்னட்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலககோப்பை போட்டிக்கான முக்கிய வீரர்களை கண்டறிந்து உள்ளதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியுள்ளார்.
ஹேமில்டன்:
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் தொடரில் இந்திய அணி முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 3-வது ஆட்டம் ஹேமில்டனில் இன்று நடக்கிறது.
இந்த போட்டி தொடர்பாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்ரேயாஸ் அய்யர் நிலையாக ரன்களை எடுக்கிறார். நெருக்கடிக்கு தகுந்தவாறு எப்படி ஆடுவது என்பதை அறிந்து பொறுப்புடன் செயல்படுகிறார். இது மாதிரியான வீரர்களுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கி உள்ளோம். தங்களது திறமையை வெளிப்படுத்துகிறார்கள்.
ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் மேட்ச் வின்னர் ஆவார். அவர் அணிக்கு உதவியாக இருந்து தனது நம்பிக்கையை அதிகரித்துள்ளார். லோகேஷ் ராகுலும் இதே நிலையில் தான் மேட்ச் வின்னராக திகழ்கிறார். இருவரும் சிறந்த வீரர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
3 வடிவிலான போட்டிகளிலும் வீரர்கள் அதிகமான ஆட்டங்களில் விளையாடுவதால் புதிதாக கற்றுக்கொடுப்பதற்கு எதுவும் இல்லை.

வீரர்களுக்கு காயம் அல்லது பெரிய தோல்வி ஏற்பட்டால் தவிர அணியில் மாற்றம் இருக்காது. உலக கோப்பைக்காக கடந்த செப்டம்பர் மாதம் முதலே அணி நிர்வாகம் சோதனை முறையில் வீரர்களை களம் இறக்கி வருகிறது.
ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர் ஷிவம் துபே உள்பட பலருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலககோப்பை போட்டிக்கான முக்கிய வீரர்களை கண்டறிந்து உள்ளோம். ஒவ்வொரு ஆட்டத்திலும் கடைசி நேரம் வரை மாறுதல்கள் இருக்கும். அணி நிர்வாகம் மற்றும் என்னை பொறுத்தவரை முக்கிய வீரர்களை கண்டறிந்து விட்டோம்.

வீரர்களுக்கு காயம் அல்லது பெரிய தோல்வி ஏற்பட்டால் தவிர அணியில் மாற்றம் இருக்காது. உலக கோப்பைக்காக கடந்த செப்டம்பர் மாதம் முதலே அணி நிர்வாகம் சோதனை முறையில் வீரர்களை களம் இறக்கி வருகிறது.
ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர் ஷிவம் துபே உள்பட பலருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஹாலெப் மற்றும் முகுருஜா ஆகியோர் அரை இறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடந்த ஒரு கால்இறுதி ஆட்டத்தில் 4-வது வரிசையில் உள்ள சிமோனா ஹாலெப் (ருமேனியா)- அனெட் கோண்டா விட் (எஸ்டோனியா) மோதினார்கள்.
இதில் ஹாலெப் 6-1,6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 53 நிமிட நேரமே தேவைப்பட்டது. 28 வயதான ஹாலெப் கடந்த ஆண்டு விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றினார். 2018-ம் ஆண்டு அவர் ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிப் போட்டிக்கு தகுபெற்று இருந்தார்.
ஷிமோனா ஹாலெப் அரை இறுதியில் ஸபெயின் வீராங்கனை கார்பின் முகுருஜாவுடன் மோதுகிறார்.
32-வது வரிசையில் உள்ள அவர் கால் இறுதியில் 30-வது இடத்தில் உள்ள அனஸ்டரசியாவை (ரஷியா), 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.
26 வயதான முகுருஜா முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். இரண்டு கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற (பிரெஞ்சு ஓபன் 2016, விம்பிள்டன்- 2017) அவர் இதற்கு முன்பு ஆஸ்திரேலிய ஓபனில் கால் இறுதிவரை (2017)நுழைந்து இருந்தார்.
இன்னொரு அரை இறுதியில் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்டி (ஆஸ்திரேலியா)- சோபியா கெனின் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று பிற்பகல் நடைபெறும் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்), ஐந்தாவது வரிசையில் இருக்கும் டொமினிக் தீம் (ஆஸ்திரேலியா) மோதுகிறார்கள்.

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டும் இந்திய அணி இன்று 3-வது ஆட்டத்தில் களம் இறங்குகிறது.
ஹாமில்டன்:
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. ஆக்லாந்தில் நடந்த முதல் 2 ஆட்டங்களிலும் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி ஹாமில்டனில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
தொடக்க ஆட்டத்தில் பேட்டிங்கில் அட்டகாசப்படுத்திய இந்திய அணி, நியூசிலாந்து நிர்ணயித்த 204 ரன்கள் இலக்கை ஒரு ஓவர் மிச்சம் வைத்து எட்டிப்பிடித்தது. அடுத்த ஆட்டத்தில் பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா, நியூசிலாந்தை 132 ரன்னில் சுருட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. இன்றைய ஆட்டத்திலும் இந்தியா மகுடம் சூடினால், நியூசிலாந்து மண்ணில் 20 ஓவர் தொடரை முதல்முறையாக சொந்தமாக்கி வரலாறு படைக்கும். அந்த சாதனை படைக்கும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் காத்திருக்கிறார்கள்.
முதல் 2 ஆட்டத்திலும் லோகேஷ் ராகுல் அரைசதம் விளாசினார். கேப்டன் விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரும் சூப்பர் பார்மில் உள்ளனர். ஆனால் துணை கேப்டன் ரோகித் சர்மா தான் இரண்டு ஆட்டத்திலும் (7, 8 ரன்) சோபிக்கவில்லை. அவரும் நிலைத்து நின்று ஆடினால் இந்திய அணி மேலும் வலுவடையும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, ஜடேஜா, முகமது ஷமி ஆகியோர் முந்தைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாக பந்து வீசினர். ஆனால் ரன்களை வாரி வழங்கும் ஷர்துல் தாகூரின் பந்து வீச்சு தான் கவலைக்குரிய அம்சமாக இருக்கிறது. அவரை மாற்றுவது குறித்து அணி நிர்வாகம் யோசித்து வருகிறது.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை இந்த ஆட்டம் அவர்களுக்கு வாழ்வா-சாவா? மோதலாகும். இதிலும் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்த முறை கூடுதல் எச்சரிக்கையுடன் விளையாடுவார்கள்.
நியூசிலாந்து பவுலர் டிம் சவுதி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்திய அணியில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் இரு ஆட்டத்திலும் நன்றாக ஆடினர். முதல் ஆட்டத்தில் கடைசி நேரத்தில் தோல்வி கண்டோம். ஆனால் 2-வது ஆட்டத்தில் முற்றிலும் நிலைகுலைய செய்து விட்டனர். இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது எப்போதும் கடினம் என்பதை அறிவோம். ஏனெனில் இப்போது வெளிநாட்டிலும் அவர்கள் வெகுவாக முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். எனவே இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்றால் எங்களது முழு திறமையை வெளிப்படுத்தியாக வேண்டும். இது வேறு மைதானம் என்பதால் எங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரில் நீடிப்பதை எதிர்நோக்கி உள்ளோம்’ என்றார்.
ஹாமில்டனில் உள்ள செட்டன்பார்க் மைதானமும் பேட்டிங்குக்கு உகந்தது தான். இங்கு 8 முறை 190 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி 9 ஆட்டங்களில் ஆடி 7-ல் வெற்றி கண்டுள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு இங்கு நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 212 ரன்கள் குவித்ததும், இந்திய அணி நெருங்கி வந்து 4 ரன் வித்தியாசத்தில் தோற்றதும் நினைவு கூரத்தக்கது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர் அல்லது நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.
நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), காலின் டி கிரான்ட்ஹோம், ராஸ் டெய்லர், டிம் செய்பெர்ட், மிட்செல் சான்ட்னெர் அல்லது டேரில் மிட்செல், சோதி, டிம் சவுதி, பிளேர் டிக்னெர் அல்லது குஜ்ஜெலின், ஹாமிஷ் பென்னட்.
இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற சூப்பர் லீக் காலிறுதி 1-ல் இந்தியா - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் ஜெய்ஸ்வால், சக்சேனா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சக்சேனா 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா 2 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அதிக அளவில் நம்பிய கேப்டன் பிரியம் கார்க் 5 ரன்னில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால் இந்தியா 54 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.
அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ஜுரெல் 15 ரன்னில் வெளியேறினார். ஒருபக்கம் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 62 ரன்னில் வெளியேறினார். அதன்பின் வந்த வீர் 25 ரன்களும், பிஷ்னோய் 30 ரன்களும் சேர்த்தனர். அங்கோலேகர் ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் சேர்க்க, இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் சவாலாக பந்து வீசி திணறடித்தனர். இதனால் முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஆஸ்திரேலியா.
அதேசமயம் துவக்க வீரர் சாம் ஃபன்னிங், பதற்றமின்றி நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார். அவருடன் ரோவ், ஸ்காட் இருவரும் சிறிதுநேரம் தாக்குப்பிடித்து விளையாடினர்.
சாம் அரை சதம் கடந்து நம்பிக்கை அளிக்க, ரோவ் 21 ரன்களிலும், ரோவ் 35 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். தொடர்ந்து ஆடிய சாம் 75 ரன்களில் ஆட்டமிழந்தார். மொத்தம் 127 பந்துகளை சந்தித்த அவர், 7 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் இந்த ரன்னை அவர் எட்டினார்.
அவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் நடையைக் கட்டினர். குறிப்பாக 42-வது ஓவரில் 3 வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணி 43.3 ஓவர்களில் 159 ரன்களில் சுருண்டது. இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்தியா தரப்பில் காத்திக் தியாகி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆகாஷ் சிங் 3 விக்கெட் எடுத்தார். கார்த்திக் தியாகி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தென்ஆப்பிரிக்காவை 3-1 என வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஒன்பது முன்னணி அணிகள் 27 தொடர்களில் 71 போட்டிகளில் விளையாடுகின்றன. இந்த 27 தொடர்களின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 3-1 என கைப்பற்றிய இங்கிலாந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து இரண்டு தொடர்களில் 9 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. மூன்றில் தோல்வியடைந்துள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. இதன்மூலம் 146 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
இந்தியா 360 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 296 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

ஜோகன்னஸ்பர்க்கில் டு பிளிஸ்சிஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இந்த போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவின் டு பிளிஸ்சிஸ் ஆட்டமிழந்து செல்லும்போது அவருடன் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் 15 சதவீத அபராதத்துடன், சஸ்பெண்டுக்கான ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது. இந்தத் தொடரில் பிலாண்டர், ரோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ரபடா ஆகியோர் மீது ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.