search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலெக்சாண்டர் ஸ்வேரேவ்"

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்த அலெக்சாண்டர் ஸ்வேரேவ் கோபத்தில் ராக்கெட்டை உடைத்தார். #AUSOpen
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த 4-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வேரேவ், கனடாவைச் சேர்ந்த 16-ம் நிலை வீரரான மிலோஸ் ரயோனிக்கை எதிர்கொண்டார்.



    இதில் ரயோனிக் ஸ்வேரேவிற்கு அதிர்ச்சி அளித்தார். கண்மூடி திறப்பதற்குள் முதல் இரண்டு செட்டுகளையும் ரயோனிக் 6-1, 6-1 எனக் கைப்பற்றினார். இதில் இருந்து ஸ்வேரேவால் மீள முடியவில்லை. இதனால் மிகவும் அப்செட் ஆனார். 3-வது செட்டில் கடுமையான போராடினார். இருந்தாலும் 6(5) - 7(7) தோல்வியடைந்து வெளியேறினார்.



    நேர்செட் கணக்கில் தோல்வியடைந்த அலெக்சாண்டர் ஸ்வேரேவ் தனது ராக்கெட்டை தரையில் அடித்து உடைத்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


    2-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வேரேவ் 4 மணி நேரம் போராடி ஐந்தாவது செட் முடிவில் போஸ்னியா வீரரை வீழ்த்தியுள்ளார். #FrenchOpen
    பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான 3-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. ஒரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் - 26-ம் நிலை வீரரான டமிர் டிஜும்ஹர்-ஐ எதிர்கொண்டார்.

    இந்த ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான அலெக்சாண்டருக்கு போஸ்னியா வீரர் டமிர் கடும் சவாலாக விளங்கினார். முதல் செட்டை அலெக்சாண்டர் 6-2 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 3-6 என இழந்தார். 3-வது செட்டையும் 4-6 என இழந்தார்.

    இதனால் 1-2 என அலெக்சாண்டர் பின்தங்கியிருந்தார். 4-வது செட்டில் தோற்றால் தொடரை விட்டு வெளியேறிய வேண்டியதுதான் என்பதால் சுதாரித்து விளையாடினார். இதற்கு போஸ்னியா வீரர் டமிர் கடும் எதிர்வினை ஆற்றினார்.



    இருவரும் சளைக்காமல் விளையாட செட் டைபிரேக்கர் வரை சென்றது. இறுதியில் கடும்பாடுபட்டு அலெக்சாண்டர் 7(7) - 6(3) எனக் கைப்பற்றினார். இதனால் ஆட்டம் கடைசி செட்டிற்கு சென்றது. கடைசி செட்டிலும் போஸ்னியா வீரர் நெருக்கடி கொடுத்தால் இறுதியில அலெக்சாண்டர் 7-5 என கைப்பற்றி வெற்றி பெற்றார்.

    இந்த வெற்றியை பெற அலெக்சாண்டர் ஸ்வேரேவிற்கு 3 மணி நேரம் 54 நிமிடங்கள் தேவைப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் அலெக்சாண்டர் காலிறுதிக்கு முந்தைய 4-வது சுற்றிற்கு முன்னேறியுள்ளார்.
    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஸ்வேரேவ்வை வீழ்த்தி நடால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். #ItalyOpen #RafaelNadal #AlexanderZverev

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகள் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று இறுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால் (ஸ்பெயின்), உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவை எதிர்த்து விளையாடினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-1 என நடால் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டை 6-1 என ஸ்வரேவ் கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது.



    சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதி செட்டை 6-3 என நடால் கைப்பற்றினார். இறுதியில் 6-1, 1-6, 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற ரபேல் நடால் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), ஷிமோனா ஹாலெப்பை 6-0, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். #ItalyOpen #RafaelNadal #AlexanderZverev
    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் நடால், ஸ்வேரேவ் ஆகியோர் பலப்பரீட்சை செய்கின்றனர். #ItalyOpen #RafaelNadal #AlexanderZverev

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகள் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. 

    நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால் (ஸ்பெயின்), முன்னாள் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்கொண்டார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரபெல் நடால் 7-6 (7-4), 6-3 என்ற நேர் செட்டில் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி போட்டியில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவ், பெல்ஜியத்தின் டேவிட் கோஃபினை எதிர்த்து விளையாடினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் கோபினை வீழ்த்திய ஸ்வேரேவ் இறுதி போட்டிக்குள் நுழைந்தார்.



    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-4, 6-3 என்ற நேர்செட்டில் அனெட் கோன்டாவீட்டை (எஸ்தோனியா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் மரியா ஷரபோவா (ரஷியா), ஷிமோனா ஹாலெப் ஆகியோர் பலப்பரீட்சை செய்தனர். இதில் 4-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஹாலெப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். 

    இன்று இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. #ItalyOpen #RafaelNadal #AlexanderZverev
    ×