search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரெஞ்ச் ஓபன்- 4 மணி நேரம் போராடி வெற்றி பெற்றார் அலெக்சாண்டர் ஸ்வேரேவ்
    X

    பிரெஞ்ச் ஓபன்- 4 மணி நேரம் போராடி வெற்றி பெற்றார் அலெக்சாண்டர் ஸ்வேரேவ்

    2-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வேரேவ் 4 மணி நேரம் போராடி ஐந்தாவது செட் முடிவில் போஸ்னியா வீரரை வீழ்த்தியுள்ளார். #FrenchOpen
    பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான 3-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. ஒரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் - 26-ம் நிலை வீரரான டமிர் டிஜும்ஹர்-ஐ எதிர்கொண்டார்.

    இந்த ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான அலெக்சாண்டருக்கு போஸ்னியா வீரர் டமிர் கடும் சவாலாக விளங்கினார். முதல் செட்டை அலெக்சாண்டர் 6-2 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 3-6 என இழந்தார். 3-வது செட்டையும் 4-6 என இழந்தார்.

    இதனால் 1-2 என அலெக்சாண்டர் பின்தங்கியிருந்தார். 4-வது செட்டில் தோற்றால் தொடரை விட்டு வெளியேறிய வேண்டியதுதான் என்பதால் சுதாரித்து விளையாடினார். இதற்கு போஸ்னியா வீரர் டமிர் கடும் எதிர்வினை ஆற்றினார்.



    இருவரும் சளைக்காமல் விளையாட செட் டைபிரேக்கர் வரை சென்றது. இறுதியில் கடும்பாடுபட்டு அலெக்சாண்டர் 7(7) - 6(3) எனக் கைப்பற்றினார். இதனால் ஆட்டம் கடைசி செட்டிற்கு சென்றது. கடைசி செட்டிலும் போஸ்னியா வீரர் நெருக்கடி கொடுத்தால் இறுதியில அலெக்சாண்டர் 7-5 என கைப்பற்றி வெற்றி பெற்றார்.

    இந்த வெற்றியை பெற அலெக்சாண்டர் ஸ்வேரேவிற்கு 3 மணி நேரம் 54 நிமிடங்கள் தேவைப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் அலெக்சாண்டர் காலிறுதிக்கு முந்தைய 4-வது சுற்றிற்கு முன்னேறியுள்ளார்.
    Next Story
    ×