என் மலர்
விளையாட்டு
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட், பெர்குசன், ஹென்றி ஆகியோர் சேர்க்கப்படவில்லை.
நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் முடிந்த உடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.
இதற்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர்களான டிரென்ட் போல்ட், பெர்குசன், ஹென்றி ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை.
இந்தியா ‘ஏ’ அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய கைல் ஜேமிசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஹமிஷ் பென்னெட், ஸ்காட் குகெலின் ஆகியோர் 2017-க்குப் பிறகு அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன டாம் லாதமும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. கேன் வில்லியம்சன், 2. ஹமிஷ் பென்னெட், 3. டாம் பிளன்டெல், 4. கொலின் டி கிராண்ட்ஹோம், 5. மார்ட்டின் கப்தில், 6. கைல் ஜேமிசன், 7. ஸ்காட் குகலின், 8. டாம் லாதம், 9. ஜிம்மி நீசம், 10. ஹென்றி நிக்கோல்ஸ், 11. மிட்செல் சான்ட்னெர், 12. இஷ் சோதி, 13. டிம் சவுத்தி, 14. ராஸ் டெய்லர்.

U19 உலக கோப்பை 2-வது காலிறுதியில் கடைநிலை வீரர்கள் சிறப்பாக விளையாட வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.
16 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பினோனியில் நேற்று நடந்த 2-வது கால் இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 47.5 ஓவர்களில் 238 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக கிர்க் மெக்கன்சி 99 ரன்கள் (104 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். நியூசிலாந்து அணி தரப்பில் கிறிஸ்டியன் கிளார்க் 4 விக்கெட்டும், ஜோய் பீல்டு, ஜெஸ்சி தாஷ்கோப் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது.
தோல்வி கண்ட வெஸ்ட்இண்டீஸ் அணி அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. 9-வது விக்கெட்டுக்கு ஜோய் பீல்டு (38 ரன்கள்), கிறிஸ்டியன் கிளார்க் (46 ரன்கள்) ஜோடி ஆட்டம் இழக்காமல் 86 ரன்கள் திரட்டி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. நியூசிலாந்து வீரர் கிறிஸ்டியன் கிளார்க் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

சூப்பர் ஓவரில் நான் அடித்த 2 சிக்சரை விட முகமது ஷமியின் கடைசி ஓவரால் தான் வெற்றி கிடைத்தது என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
ஹேமில்டன்:
நியூசிலாந்து மண்ணில் 20 ஓவர் தொடரை இந்திய அணி முதன்முறையாக கைப்பற்றி முத்திரை பதித்தது.
ஹேமில்டனில் நடந்த 3-வது 20 ஓவர் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்தது. ரோகித்சர்மா 40 பந்தில் 65 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் வீராட் கோலி 27 பந்தில் 38 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.
பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணியும், 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்னே எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டம் டையில் முடிந்தது. முகமது ஷமி கடைசி ஓவரை சிறப்பாக வீசியதால் ஆட்டம் டை ஆனது. வில்லியம்சன் 48 பந்தில் 95 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்டரியும் 6 சிக்சரும் அடங்கும்.
வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்ய சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து 17 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 20 ரன் எடுத்து சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றது. கடைசி 2 பந்தில் ரோகித் சர்மா 2 சிக்சர்களை விளாசி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
இந்த வெற்றி மூலம் இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக 20 ஓவர் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. 5 போட்டி கொண்ட தொடரில் ஏற்கனவே முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. 2009-ம் ஆண்டு நியூசிலாந்து பயணத்தின் போது 0-2 என்ற கணக்கிலும், கடந்த ஆண்டு 1-2 என்ற கணக்கிலும் 20 ஓவர் தொடரை இழந்து இருந்தது. 3-வது முறையாக அந்நாட்டில் விளையாடிய போது தொடரை கைப்பற்றி சாதித்துள்ளது.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். வெற்றி குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சூப்பர் ஓவரில் இதற்கு முன்பு நான் பேட்டிங் செய்தது இல்லை. இதுஎனது முதல் சூப்பர் ஓவர் ஆகும். எதை எதிர்பார்ப்பது என்று தெரியவில்லை. முதலில் 1 ரன் எடுத்து விட்டு கடைசி 3 பந்தில் அடிக்க வேண்டுமா? அல்லது முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆட வேண்டுமா? என்பன எல்லாம் புதிராக இருந்தன.

சூப்பர் ஓவரில் தொடர்ந்து ஆடி பந்து வீச்சாளரின் ஒரு தவறுக்காக காத்திருந்தேன். சரியான நேரத்தில் பந்து அடிப்பதற்கு ஏற்ற வகையில் கிடைத்தது. இந்த போட்டியில் நான் நன்றாக விளையாடினாலும் ஆட்டம் இழந்த விதம் ஏமாற்றத்தை அளித்தது. இன்னும் கொஞ்சநேரம் விளையாட எண்ணி இருந்தேன். முதல் 2 போட்டியில் நான் சரியாக ஆடவில்லை. இதனால் 3-வது போட்டியில் சிறப்பாக ஆட நினைத்தேன். அதன்படி முக்கியமான இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்டேன்.
சூப்பர் ஓவரில் நான் அடித்த 2 சிக்சரை விட முகமது ஷமியின் கடைசி ஓவரால் தான் வெற்றி கிடைத்தது. அவர் கடைசி ஓவரை மிகவும் சிறப்பாக வீசினார். பனித்துளி அதிகமாக இருந்ததால் பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருந்தது. பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்த இந்த ஆடுகளத்தில் முகமது ஷமி நேர்த்தியுடன் பந்து வீசினார்.
தற்போது இந்திய அணி 20 ஓவர் போட்டியில் சிறப்பாக ஆடி வருகிறது. முன்னணி வீரர்கள் அனைவருமே ரன்களை குவிப்பது ஆரோக்கியமானது. ஒவ்வொருவரும் சிறப்பாக ஆடுவதால் 11 பேர் கொண்ட அணியில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை சொல்ல இயலாது. கேப்டனும், அணி நிர்வாகமும் தான் இதுகுறித்து முடிவு செய்வார்கள்.
நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த 2 போட்டியிலும் வெற்றிபெற்று எங்களது ஆதிக்கத்தை நீட்டித்துக் கொள்ள விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புவனேஸ்வரத்தில் நடந்த ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஒடிசாவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி மீண்டும் முதலிடத்தை பிடித்தது கோவா அணி.
புவனேஸ்வர்:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் எப்சி கோவா மற்றும் ஒடிசா எப்சி அணிகள் மோதின.
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே கோவா அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். அந்த அணியின் ஜாக்கிசந்த் சிங் அபாரமாக ஆடி 2 கோல்கள் அடித்து அசத்தினார். மேலும் அந்த அணியின் வினித் ராய், பெரோனஸ் கம்மினஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஒடிசா அணி சார்பில் 2 கோல் அடித்தனர்.
இறுதியில், கோவா அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தியது. இதன்மூலம் கோவா அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் கோவா அணி தான் ஆடிய 15 போட்டிகளில் 9ல் வெற்றி பெற்று 30 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. ஒடிசா 21 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது
நியூசிலாந்துக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் 5-0 என தொடரை கைப்பற்ற முயற்சி செய்வோம் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஹாமில்டனில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் இந்தியா சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து மண்ணில் முதல்முறையாக இந்தியா டி20 தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டி குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘ஒரு கட்டத்தில் நாங்கள் தோல்வியடைந்து விடுவோம் என்று நினைத்தேன். கேன் வில்லியம்சன் (95) பேட்டிங் செய்ததை பார்த்த வகையில், அவருக்காக வருத்தம் அடைகிறேன். கடைசி பந்தை ஸ்டம்ப் நோக்கி வீச வேண்டும் என்பது குறித்து விவாதித்தோம். இல்லை என்றால் ஒரு ரன் எடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
ரோகித் சர்மாவின் பேட்டிங் மிகவும் அற்புதம். இரண்டு இன்னிங்சிலும், கடைசி இரண்டு பந்திலும் சிறப்பு. அவர் ஒரு பந்தை தூக்கினால் பந்து வீச்சாளர் நெருக்கடிக்கு உள்ளாவார் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் தொடரை 5-0 எனக் கைப்பற்ற விரும்புகிறோம். ஆனால், இந்த நேரத்தில் சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். சைனி, வாஷிங்டன் சுந்தர் இந்த சீதோஷ்ண நிலையில் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க விரும்புகிறோம்’’ என்றார்.

ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 406 ரன்கள் குவித்த நிலையில், இலங்கையை முதல் இன்னிங்சில் 293 ரன்னில் சுருட்டியது.
ஜிம்பாப்வே - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் ஹராரேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே கேப்டன் சீன் வில்லியம்சின் (107), சிகந்தர் ரசா (72), டெய்லர் (62) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 406 ரன்கள் குவித்தது.
பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஜிம்பாப்வேயின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் இலங்கை அணியால் எளிதாக ரன்கள் குவிக்க இயலவில்லை. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 2 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இலங்கை 293 ரன்னில் ஆல்அவுட் ஆனது. மேத்யூஸ் அதிகபட்சமாக 64 ரன்கள் சேர்த்தார். ஜிம்பாப்வே அணி சார்பில் சிகந்தர் ரசா 7 விக்கெட் வீழ்த்தினார்.
முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 113 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்த முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்து இலக்கு நிர்ணயிக்கப்பட்டால் இலங்கையை வீழ்த்தி தொடரை டிரா செய்ய வாய்ப்புள்ளது.

மெல்போர்னில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ரபேல் நடாலை கடும் போராட்டத்திற்குப்பின் டொமினிக் தீம் வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால் ஐந்தாம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம்-ஐ எதிர்கொண்டார்.
முன்னணி வீரர்கள் இடையிலான ஆட்டம் என்பதால் தொடக்கம் முதலே ஆட்டம் பரபரப்பாக சென்றது. முதல் செட்டில் இருவரும் மாறிமாறி கேம்களை கைப்பற்றினர். இதனால் 6-6 என முதல் செட் சமனிலை பெற்றதால் டை-பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. டை-பிரேக்கரில் டொமினிக் தீம் 7 (7) - 6(3) எனக் கைப்பற்றினார். முதல் செட் ஒரு மணி நேரம் 7 நிமிடங்கள் வரை நீடித்தது.
2-வது செட்டும் டை-பிரேக்கர் வரை சென்றது. இதில் டொமினிக் தீம் 7(7)-6(4) எனக்கைப்பற்றினார். இந்த செட் ஒரு மணி நேரம் 9 நிமிடங்கள் வரை நீடித்தது.

ஆனால் 4-வது செட்டில் டொமினிக் தீம் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நடாலும் ஈடுகொடுத்து விளையாடியதால் ஆட்டம் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் டொமினிக் தீம் 7(8)-6(6) எனக்கைப்பற்றினார். இந்த செட் ஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் வரை நடைபெற்றது.
இதன் மூலம் நான்கு மணி நேரம் 10 நமிடங்கள் போராடி ரபேல் நடாலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் டொமினிக் தீம்.

தொடர்ந்து இரண்டு செட்டுகளை இழந்த நிலையில் அடுத்த செட்டையும் இழந்தால் தோல்வியடையும் நிலை ஏற்படும் என்பதால் ரபெல் நடால் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 3-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார். இந்த செட் 42 நிமிடங்கள் நீடித்தது.

ஆனால் 4-வது செட்டில் டொமினிக் தீம் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நடாலும் ஈடுகொடுத்து விளையாடியதால் ஆட்டம் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் டொமினிக் தீம் 7(8)-6(6) எனக்கைப்பற்றினார். இந்த செட் ஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் வரை நடைபெற்றது.
இதன் மூலம் நான்கு மணி நேரம் 10 நமிடங்கள் போராடி ரபேல் நடாலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் டொமினிக் தீம்.
50 ஓவர் உலக கோப்பை சூப்பர் ஓவரில் வெற்றி பெற முடியாத நிலையில், தற்போது இந்தியாவுக்கு எதிராகவும் தோல்வியடைந்ததால் கேன் வில்லியம்சன் விரக்தி அடைந்துள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. ஆட்டம் ‘டை’யில் முடிந்ததால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ரோகித் சர்மா கடைசி இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு தூக்க நியூசிலாந்து தோல்வியை தழுவியது.
இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து எதிராக நியூசிலாந்து விளையாடிய ஆட்டம் சமனில் முடிந்தது. அப்போது சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதுவும் சமனில் முடிந்தது. இதனால் பவுண்டரி அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
ஓவர் கைக்கொடுக்காததால் உலக கோப்பையை இழந்த நியூசிலாந்து, தற்போது இந்தியாவுக்கு எதிராக முதன்முறையாக சொந்த மண்ணில் டி20 தொடரை இழந்துள்ளது.
இந்நிலையில் சூப்பர் ஓவர்கள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை என்று கேன் வில்லியம்சன் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்றைய போட்டியில் தோல்வியடைந்தது குறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘சூப்பர் ஓவர்கள் எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. இதனால் வழக்கமான நேரத்தில் போட்டியை முடிக்க முயற்சி செய்வது அவசியம். அனைத்துத் துறையிலும் சிறப்பாக செயல்பட்டோம்.
இந்திய அணி அபாரமான தொடக்கத்தை பெற்றபின், சிறப்பாக பந்து வீசி அவர்களை கட்டுப்படுத்தினோம். இவ்வளவு முயற்சி செய்து விளிம்பில் வந்து தோல்வியை சந்தித்தது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் இந்த போட்டியில் சிறு இடைவெளியில்தான் தோல்வியை சந்தித்தோம். கடைசி மூன்று பந்துகளில், இந்தியாவின் அனுபவத்தை நாங்கள் பார்த்தோம். அவர்களிடம் இருந்து கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும். ஆடுகளத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடி, வீரர்களுடன் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்தது அருமை’’ என்றார்.

இதற்கு முன் ஒருபோதும் சூப்பர் ஓவரை சந்தித்தது கிடையாது, முதல் பந்தில் இருந்தே அதிரடியை தொடங்க வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து தெரிந்திருக்கவில்லை என்றார் ரோகித் சர்மா.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 179 ரன்கள் அடித்தது. பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது.
கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரை முகமது ஷமி வீசினார். முதல் பந்தில் ராஸ் டெய்லர் சிக்சர் அடித்ததால் நியூசிலாந்து வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஷமி கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லரை அவுட்டாக்கியதால் நியூசிலாந்து கடைசி நான்கு பந்துகளில் ஒரு ரன்னே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணியும் 179 ரன்களே எடுத்ததால் போட்டி ‘டை’யில் முடிந்தது.
இதனால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இந்தியாவின் வெற்றிக்கு 18 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. முதல் பந்தை ரோகித் சர்மா எதிர்கொண்டார். முதல் பந்தில் இரண்டு ரன்களும், 2-வது பந்தில் ஒரு ரன்களும் மட்டுமே அடித்தார். ஆனால் கடைசி இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கி அணியை வெற்றி பெற வைத்தார்.
சூப்பர் ஓவர் குறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘இதற்கு முன் சூப்பர் ஓவரில் விளையாடியதே கிடையாது. ஆகையால் முதல் பந்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமா? அல்லது ஒரு ரன் எடுத்து விட்டு என்னால் முடியும் என்று பார்த்துக் கொள்ளலாமா? என்பது குறித்து எனக்கு தெரிந்திருக்கவில்லை.
இது சிறந்த ஆட்டம். நான் அவுட்டான விதம் ஏமாற்றம் அளித்தது. இன்னிங்சை கடைசி வரை கொண்டு செல்ல விரும்பினேன். இந்த போட்டியில் வெற்றி பெற்றால், தொடரை கைப்பற்றுவோம் என்பது எங்களுக்குத் தெரியும். அணியில் உள்ள முக்கியமான வீரர்கள் அணியை முன்னோக்கி எடுத்துச் சென்றது முக்கியமானது’’ என்றார்.

ரோகித் சர்மா அடுத்தடுத்து இமாலய சிக்சர்கள் விளாச இந்தியா சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா ரோகித் சர்மா (65), விராட் கோலி (38), கேஎல் ராகுல் (27) ஆகியோரின் ஆட்டத்தால் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது.
பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. மார்ட்டின் கப்தில் 31 ரன்னிலும், கொலின் முன்றோ 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இருவரும் ஆட்டமிழந்த பின்னர் போட்டி இந்தியா பக்கம் திரும்பியது.
ஆனால் கேன் வில்லியம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் வெற்றி இந்தியாவின் கையை விட்டு நழுவிக் கொண்டே இருந்தது. கேன் வில்லியம்சன் 28 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி இரண்டு ஓவர்களில் 20 ரன்கள் தேவைப்பட்டது.
19-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் நியூசிலாந்து 11 ரன்கள் அடித்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. முகமது ஷமி வீசிய இந்த ஓவரின் முதல் பந்தை ராஸ் டெய்லர் சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார்.
கடைசி நான்கு பந்தில் இரண்டு ரன்களே தேவைப்பட்டது. இதனால் நியூசிலாந்து எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3-வது பந்தில் கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்தார். அவர் 48 பந்தில் 95 ரன்கள் விளாசினார்.
அடுத்து செய்ஃபெர்ட் களம் இறங்கினார். ஷமி பவுன்சராக வீசிய பந்தை செய்ஃபெர்ட்டால் சந்திக்க முடியவில்லை. இதனால் 4-வது பந்தில் அவர் ரன் அடிக்கவில்லை. ஐந்தாவது பந்திலும் ரன் அடிக்கவில்லை. ஆனால் விக்கெட் கீப்பர் கைக்கு பந்து சென்றபோது ‘பை’ மூலம் ஒரு ரன்னுக்கு ஓடினார். கடைசி பந்தில் ராஸ் டெய்லர் ஒரு ரன் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் முகமது ஷமி அவரை க்ளீன் போல்டாக்கினார்.
இதனால் நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்ததால் போட்டி ‘டை’யில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.
நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. பும்ரா பந்து வீசினார். முதல் இரண்டு பந்துகளில் பும்ரா இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆனால் 3-வது பந்தை சிக்சருக்கும், 4-வது பந்தை பவுண்டரிக்கும் விரட்டினார் கேன் வில்லியம்சன். மார்ட்டின் கப்தில் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்ட நியூசிலாந்து 17 ரன்கள் எடுத்தது.
இதனால் இந்தியா ஒரு ஓவரில் 18 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டிம் சவுத்தி பந்து வீசினார்.

இதனால் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ரோகித் சர்மா 5-வது பந்தை எதிர்கொண்டார். ஐந்தாவது பந்தை லாங்-ஆன் திசையில் இமாலய சிக்சருக்கு அனுப்பினார். இதனால் கடைசி பந்தில் நான்கு ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தை ரோகித் சர்மா லாங்-ஆஃப் திசையில் சிக்சருக்கு தூக்க இந்தியா சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 3-0 எனக் கைப்பற்றியுள்ளது.

முதல் பந்தில் ரோகித் சர்மா 2 ரன்களும், அடுத்த பந்தில் ஒரு ரன்களும் எடுத்தார். 3-வது பந்தை கேஎல் ராகுல் பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் 4-வது பந்தில் ஒரு ரன்னே எடுத்தார்.

இதனால் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ரோகித் சர்மா 5-வது பந்தை எதிர்கொண்டார். ஐந்தாவது பந்தை லாங்-ஆன் திசையில் இமாலய சிக்சருக்கு அனுப்பினார். இதனால் கடைசி பந்தில் நான்கு ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தை ரோகித் சர்மா லாங்-ஆஃப் திசையில் சிக்சருக்கு தூக்க இந்தியா சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 3-0 எனக் கைப்பற்றியுள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இளையோர் உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள தொடக்க வீரர் குரங்கு கீறியதால் சொந்த நாடு திரும்பியுள்ளார்.
தென்ஆப்பிரிக்காவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆட்டம் கிம்பெர்லியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. அதன்பின் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விலங்குகள் சரணாலயம் சென்று பொழுதை கழித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக குரங்கு ஒன்று ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வந்த ஃபிராசர்-மெக்கர்க்கின் முகத்தில் கீறியது.
இருந்தாலும் அவர் போட்டிகளில் விளையாடி வந்தார். நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாடினார். இந்த போட்டியில் ரன்ஏதும் எடுக்காமல் ரன்அவுட் ஆனார்.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை காரணமாக ஆஸ்திரேலியா புறப்பட்டு வருமாறு கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டதால் உடனடியாக ஆஸ்திரேலியா புறப்படுகிறார்.

ஆக்லாந்தில் நடைபெற்ற பெண்கள் ஹாக்கியில் நியூசிலாந்திடம் 0-1 என இந்திய அணி தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.
இந்தியா - நியூசிலாந்து பெண்கள் ஹாக்கி அணிகளுக்கு இடையிலான போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வந்தது. முதல் போட்டியில் இந்தியா 4-0 என வெற்றி பெற்றிருந்தது. 2-வது போட்டியில் 1-2 என தோல்வியடைந்திருந்தது.
இந்நிலையில் 3-வது போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா 0-1 என தோல்வியடைந்தது. தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் நியூசிலாந்து வீராங்கனைகளை கோல் அடிக்க விடாமல் இந்தியா வீராங்கனைகள் சிறப்பாக தடுத்தனர்.
அதேபோல் 2-வது கால்நேர ஆட்டத்தில் இந்தியாவுக்கு அதிகமான பெனால்டி கார்னர் கிடைத்தது. இந்த முறை நியூசிலாந்து வீராங்கனைகள் சிறப்பாக தடுத்தனர். 3-வது கால்பகுதியில் நியூசிலாந்துக்கு ஒரு கோல் கிடைத்தது. 37-வது நிமிடத்தில் நியூசிலாந்து அணியின் ஹோப் ரால்ப் கோல் அடித்தார். இதனால் நியூசிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.
அதன்பின் ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்காததால் இந்தியா 0-1 என தோல்வியடைந்தது.