என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அவருக்கு மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

    சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு சொந்த நாட்டுக்கு திரும்பினார்கள். தற்போது ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணியுடன் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கனே ரிச்சர்ட்சன்னுக்கு திடீரென்று தொண்டை வலி ஏற்பட்டது. மேலும் அவருக்கு உடல்நலமும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    கனே ரிச்சர்சன்

    இதைடுத்து அவரை தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. பரிசோதனை முடிவில் அவரது உடல்நலம் பாதிப்பு குறித்து தெரிய வரும்.

    இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறும் போது, கனே ரிச்சர்ட்சன்னுக்கு எங்களது மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் ஆஸ்திரேலிய அரசு வகுத்து கொடுத்த வழிமுறைகளின் படி அவரை அணியில் உள்ள மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தி வைத்து இருக்கிறோம்” என்று தெரிவித்து உள்ளது.
    ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தோல்வி அடைந்தார்.
    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார். 28 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா 11-21, 8-21 என்ற நேர் செட்டில் சரண் அடைந்தார். தரவரிசையில் 20-வது இடம் வகிக்கும் சாய்னாவுக்கு இந்த தோல்வியின் மூலம் அவரது ஒலிம்பிக் வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

    2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-19, 21-15 என்ற நேர் செட் கணக்கில் சங் ஜி ஹயனை (தென்கொரியா) சாய்த்து கால்இறுதியை எட்டினார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌ஷயா சென், தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்செல்சனை சந்தித்தார். 45 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தின் இறுதியில் லக்‌ஷயா சென் 17-21, 18-21 என்ற நேர் செட் கணக்கில் தோற்று வெளியேறினார். 
    கோவாவில் நாளை நடக்கவுள்ள இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து இறுதிப்போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என்று போட்டி அமைப்பு குழுவினர் நேற்று அறிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடரில் கோவாவில் நாளை (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தின் கதவுகள் மூடப்பட்ட நிலையில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என்று போட்டி அமைப்பு குழுவினர் நேற்று அறிவித்துள்ளனர்.

    இதேபோல் ஐ லீக் கால்பந்து போட்டி தொடரின் எஞ்சிய 28 ஆட்டங்களும் ரசிகர்கள் இன்றி நடத்தப்பட இருப்பதாகவும், இது குறித்து இன்று நடைபெறும் அகில இந்திய கால்பந்து சம்மேளன ஆலோசனை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா உள்பட 2 டிவிசன் போட்டிகள் 2 வாரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை நேரில் பார்த்த ரசிகருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
    மெல்போர்ன்:

    7-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடந்த இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியை 86,174 ரசிகர்கள் நேரில் கண்டு களித்தனர். இந்த போட்டியை ஸ்டேடியத்துக்கு சென்று பார்த்த ரசிகர் ஒருவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவலை மெல்போர்ன் கிரிக்கெட் மைதான நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரசிகர் போட்டியை அமர்ந்து பார்த்த கேலரி மற்றும் இருக்கை விவரத்தை ஆஸ்திரேலிய சுகாதாரம் மற்றும் மனித சேவை துறை வெளியிட்டு இருப்பதுடன் அந்த கேலரியில் அமர்ந்து போட்டியை பார்த்தவர்கள் யாரேனும் கொரோனா பாதிப்பு குறித்து உணர்ந்தால் மருத்துவ சோதனை செய்து உரிய சிகிச்சை முறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது.
    ஒலிம்பிக் போட்டியை ஓராண்டு தள்ளிவைக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் யோசனை கூறியுள்ளார்.
    வாஷிங்டன்:

    கொரோனா வைரஸ் ஒரு பக்கம் மிரட்டினாலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டபடி ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நடத்துவது என்று போட்டி அமைப்பாளர்கள் உறுதியாக உள்ளனர்.

    இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியை ஓராண்டு தள்ளிவைக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளனர்.

    ‘இப்படி சொல்வது தர்ம சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் இன்றி நடத்தப்படுவதை காட்டிலும் தள்ளிவைப்பதே சிறந்தது’ என்றும் குறிப்பிட்டார்.
    கொரோனா அச்சத்துக்கு மத்தியில் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டியின் தீபம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏற்றப்பட்டது.
    ஒலிம்பியா:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடக்கிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்த போட்டி நடக்குமா அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    பாரம்பரிய முறைப்படி ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிய காட்சி

    ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் நேற்று பாரம்பரிய முறைப்படி கிரீஸ் நடிகை ஸாந்தி ஜியார்ஜிவ் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். கொரோனா பீதி காரணமாக இந்த நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஒலிம்பிக் ஜோதி அடுத்த 7 நாட்கள் கிரீஸ் நாட்டில் தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்படும். முதல் நபராக கிரீஸ் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அன்ன கோராககி தீபத்தை ஏந்தி வந்தார். அது வருகிற 19-ந்தேதி டோக்கியோ போட்டி அமைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.
    கொரோனா வைரஸ் பீதியில் ஐபிஎல் தொடர் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் வீரர்கள் கலந்து கொள்வது அவர்களின் சொந்த முடியும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
    ஐபிஎல் 2020 சீசன் மார்ச் மாதம் 29-ந்தேதி தொடங்குகிறது. ஆனால் கொரோனா பீதியில் ஆட்டம் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் கட்டாயம் போட்டியை நடத்த வேண்டுமென்றால்  பார்வையாளர்கள் இல்லாமல் மூடிய மைதானத்திற்குள் நடத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதனால் போட்டி நடைபெற்றால் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும். இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்வது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்று அந்நாட்டு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
    இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிராக இங்கிலாந்து அணி பயிற்சி ஆட்டத்தில் முதல் நாளில் 3 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் குவித்தது.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்து இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிராக மோதும் நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. கிராலி, சிப்லி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கிராலி சிறப்பாக விளையாட சிப்லி 37 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த டென்லி 26 ரன்கள் சேர்த்தார்.

    3-வது விக்கெட்டுக்கு கிராலி உடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சதம் அடித்த கிராலி 105 ரன்னில் வெளியேறினார்.

    4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் ஒல்லி போப்  ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சதத்தை நோக்கி சென்றனர்.

    இங்கிலாந்து அணி இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் (90 ஓவர்) 3 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் குவித்துள்ளது. ஜோ ரூட் 90 ரன்களுடனும், ஒல்லி போப் 84 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
    ரஞ்சி டிராபி இறுதி போட்டி டிராவை நோக்கி செல்வதால் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற பெங்கால் அணி போராடி வருகிறது.
    ரஞ்சி டிராபி இறுதி போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சவுராஷ்டிரா - பெங்கால் அணிகள் விளையாடி வருகின்றன. கடந்த 9-ந்தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா 425 ரன்கள் குவித்தது. அந்த அணியின் வசவாதா சிறப்பாக விளையாடி 106 ரன்கள் விளாசினார். பெங்கால் அணி சார்பில் ஆகாஷ் தீப் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் சுமார் இரண்டரை நாட்கள் பேட்டிங் செய்தன. அதன்பின் பெங்கால் அணியில் சிறப்பாக விளையாடியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் பெங்கால் 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் அடித்திருந்தது. சட்டர்ஜீ 47 ரன்களுடனம், சகா 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்றது. இன்னும் ஒருநாள் மட்டுமே மீதமுள்ள நிலையில், ஆடுகளம் மிகப்பெரிய அளவில் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லாததால் முதல் இன்னிங்சில் எப்படியாக முன்னிலை பெற்று விடவேண்டும் என்ற நோக்கத்தில் பெங்கால் பேட்டிங் செய்தது.

    சட்டர்ஜீ, சகா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சட்டர்ஜீ அரைசதம் அடித்ததை தொடர்ந்து சகாவும் அரைசதம் அடித்தார். சட்டர்ஜீ  81 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.  இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து மஜும்தார் களம் இறங்கினார். சகா 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின வந்த ஷபாஸ் அகமது 16 ரன்னில் வெளியேறினார். இதனால் பெங்கால் அணி 263 ரன்கள் எடுப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்தது.

    7-வது விக்கெட்டுக்கு மஜும்தார் உடன் நந்தி ஜோடி சேர்ந்தார். மஜும்தார் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இந்த ஜோடி இன்றைய 4-வது நாள் ஆட்டம் முடியும் வரை தாக்குப்பிடித்து விளையாடியது. பெங்கால் அணி 4-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் எடுத்துள்ளது.

    மஜும்தார் 58 ரன்களுடனும், நந்தி 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை பெங்கால் அணி 71 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் நான்கு விக்கெட்டுக்கள் உள்ளன. மஜும்தார் - நந்தி ஜோடி 91 ரன்கள் சேர்த்துள்ளது.

    நாளை காலை ஆட்டம் தொடங்கியதும் ஒரு மணி நேரம் இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடினால் முன்னிலை வகிக்க வாய்ப்புள்ளது. போட்டி டிரா ஆனால் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதனால் எப்படியாவது 71 ரன்களை கடந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் நாளைய ஆட்டத்தை பெங்கால் அணி தொடங்கும்.
    இமாச்சல பிரதேசத்தில் இன்று நடைபெற இருந்த இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
    மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா அணி இந்தியா வந்துள்ளது. முதல் போட்டி இமாச்சல பிரதேசத்தில் இன்று நடைபெற இருந்தது. நேற்று கனமழை பெய்தது. இன்றும் மழை பெய்தது. இதனால் மைதானத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.

    மழை நீருடன் காணப்படும் தர்மசாலா மைதானம்

    மைதான ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணிகளை துரிதமாக செய்தனர். என்றாலும் ஆடுகளம் ஈரப்பதமாகவே காணப்பட்டது. மேலும் மழை அச்சுறுத்திக் கொண்டே இருந்ததால் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    கட்டாயமாக போட்டியை நடத்த வேண்டியிருந்தால் ரசிகர்கள் யாரும் இன்றி மூடிய மைதானத்திற்குள் போட்டியை நடத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
    கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் 70-க்கும் மேற்பட்டோரை இந்த வைரஸ் தாக்கியுள்ளது. இதனால் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது சுற்றுலா விசாக்களை ரத்து செய்துள்ளது.

    குறிப்பாக மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுதியுள்ளது. கிரிக்கெட் போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவதால் ஒருவேளை தொற்று ஏற்பட்டால் விபரீதம் ஆகிவிடும் என்பதால் ஐபிஎல் போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

    இந்நிலையில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கட்டாயம் போட்டியை நடத்த வேண்டுமென்றால் ரசிகர்கள் யாருமின்றி பூட்டிய மைதானத்திற்குள் நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

    இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் ‘‘எந்தவொரு போட்டியாக இருந்தாலும் பொதுமக்கள் கூடக்கூடாது என்ற சுகாதாரம் மற்றும் குடும்பம் நலத்துறை அமைச்சர் சார்பில் அளிக்கப்பட்ட ஆலோசனைகள் கடைபிடிக்க வேண்டும். ஒருவேளை போட்டியை ரத்து செய்ய முடியாது என்றால், பார்வையாளர்கள் உள்பட யாரையும் அனுமதிக்கக்கூடாது’’ என்று தெரிவித்துள்ளது.

    இதனால் ஐபிஎல் போட்டிகள் மற்றும் இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான போட்டிகள் நடத்தப்பட்டால் ரசிகர்கள் யாருமின்றி வெறிச்சோடிய மைதானத்தில் போட்டிகள் நடைபெறும்.
    டாக்காவில் நடைபெற இருந்த ஆசிய லெவன் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிகள் கொரோனா வைரஸ் பீதியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    வங்காளதேசம் நாட்டின் தந்தை என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் வங்காளதேசம் ஆசிய லெவன் - உலக லெவன் அணிகளுக்கு இடையில் டாக்கா மைதானத்தில் இரண்டு டி20 போட்டிகளை நடத்த திட்டமிட்டிருந்தது.

    இந்த போட்டிகள் மார்ச் 21 மற்றும் 22-ந்தேதிகளில் நடைபெற இருந்தது. இதற்கான ஆசிய லெவன் அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட் உள்பட ஆறு இந்திய வீரர்கள் இடம் பிடித்திருந்தனர்.

    தற்போது உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் போட்டிகள் தள்ளி வைக்கப்படுகிறது என்று வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
    ×