என் மலர்tooltip icon

    விளையாட்டு

    லா லிகா கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
    மாட்ரிட்:

    20 கிளப் அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் 33 முறை சாம்பியனான ரியல் மாட்ரிட் கிளப், ரியல் சோசிடாட் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல் அடிக்க தீவிரம் காட்டினாலும் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.

    50-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி அந்த அணியின் கேப்டன் செர்ஜியோ ரேமோஸ் அபாரமாக கோல் அடித்தார். இந்த சீசனில் அவர் அடித்த 9-வது கோல் இதுவாகும். இதன் மூலம் லா லிகா போட்டி வரலாற்றில் அதிக கோல்கள் (68 கோல்கள்) அடித்த பின்கள வீரர் என்ற பெருமையை செர்ஜியோ ரேமோஸ் தனதாக்கினார். இதற்கு முன்பு பார்சிலோனா கிளப் அணியை சேர்ந்த ரொனால்ட் கீமான் பின்கள வீரராக விளையாடி 67 கோல்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

    70-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி 2-வது கோலை அடித்தது. அந்த அணியின் கரிம் பென்ஜிமா இந்த கோலை அடித்தார். ஆனால் பந்து அவரது கையில்பட்டு போனதாகவும், அது கோல் இல்லை என்று எதிரணியினர் நடுவரிடம் முறையிட்டனர். இதனை அடுத்து வீடியோவை ஆய்வு செய்த நடுவர் கோல் தான் என்று அறிவித்தார். பென்ஜிமா இந்த சீசனில் அடித்த 17-வது கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனை அடுத்து 83-வது நிமிடத்தில் ரியல் சோசிடாட் அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் மிகெல் மெரினோ இந்த கோலை அடித்தார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் சோசிடாட் அணியை வீழ்த்தியது. கொரோனா பாதிப்பால் தடைப்பட்டு போட்டி தொடங்கிய பிறகு ரியல் மாட்ரிட் அணி தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். இந்த போட்டியில் ரியல் சோசிடாட் அணிக்கு பாதகமாக ‘ஆப்சைடு’ உள்பட சில முடிவுகளை நடுவர்கள் அளித்ததாக அந்த அணியினர் குற்றம் சாட்டினார்கள்.

    30-வது ஆட்டத்தில் ஆடிய ரியல் மாட்ரிட் அணி 19 வெற்றி, 8 டிரா, 3 தோல்வியுடன் 65 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியனான பார்சிலோனா அணி 30 ஆட்டத்தில் ஆடி 20 வெற்றி, 5 டிரா, 5 தோல்வியுடன் 65 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு சரிந்துள்ளது. இரு அணிகளும் சமபுள்ளிகள் பெற்றாலும் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் ரியல் மாட்ரிட் அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

    வெற்றிக்கு பிறகு ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் ஜிடேன் அளித்த பேட்டியில், ‘நாங்கள் களத்தில் எதுவும் செய்யாதது போல் நடுவர்கள் முடிவு குறித்து மட்டுமே பேசுவது வருத்தம் அளிக்கிறது. மக்கள் சொல்வதை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது. களத்தில் சிறப்பாக செயல்பட்டு தான் நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம். இது தகுதியான வெற்றியாகும். எங்களுக்கு கொடுத்த பெனால்டி வாய்ப்பு முடிவு நியாயமானது. அதுபோல் பென்ஜிமா அடித்த கோலும் சரியானது. முடிவுகள் அளிப்பது நடுவர்களின் பணியாகும். நான் போட்டி குறித்து மட்டுமே பேச விரும்புகிறேன். மற்ற விஷயங்களுக்குள் செல்ல விரும்பவில்லை. நாங்கள் எப்பொழுதும் வெற்றி பெறவே விரும்புகிறோம்’ என்று தெரிவித்தார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஹைதர் அலி, ஹரிஸ் ரஃப், ஷதிப் கான் ஆகிய மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    லாகூர்: 

    கொரோனா வைரசின் கோரதாண்டவம் உலகையே உலுக்கி வருகிறது. எல்லா தரப்பு மக்களையும் அச்சுறுத்தி வரும் இந்த கொடிய ஆட்கொல்லியின் தாக்கம் விளையாட்டு வீரர்களையும் விட்டு வைக்கவில்லை.

    இதற்கிடையில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் விளையாட உள்ளது. 

    இந்நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக அந்நாட்டு செல்வதற்கு முன்னர் பாகிஸ்தான் வீரர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொண்டர். 

    ராவுல்பெண்டியில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், பாகிஸ்தான் அணியின் வீரர்கள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    அந்த அணியின் ஹைதர் அலி (பேட்ஸ்மேன்), ஹரிஸ் ரஃப் (பந்து வீச்சாளர்), ஷதிப் கான் (பந்து வீச்சாளர்) ஆகிய மூன்று வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

    வைரஸ் உறுதி செய்யப்பட்ட வீரர்கள் மூன்று பேருக்கும் வைரஸ் தொடர்பான எந்த அறிகுறிகளும் இல்லை எனவும், அறிகுறிகள் இல்லாமலேயே வீரர்களுக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து, கொரோனா உறுதி செய்யப்பட்ட வீரர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகீத் அப்ரிடிக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    முன்னணி டென்னிஸ் வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு வீரரான போர்னா கோரிக்கும் பாதிக்கப்பட்டுள்ளார்.
    பல்கேரியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் நட்சத்திரமான கிரிகோர் டெமிட்ரோவ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச்சுடன் காட்சி டென்னிஸ் போட்டியில் கிரிகோர் டெமிட்ரோவ் கலந்து கொண்டு விளையாடினார் என்பது கவனிக்கத்தக்கது.

    இந்நிலையில் குரோசியாவைச் சேர்ந்த போர்னா கோரிக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    சர்வதேச டென்னிஸ் தொடர்கள் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் தொண்டு நிறுவனத்திற்கு நிதி சேர்க்கும் வகையில் அட்ரியா டூர் தொடரை ஏற்பாடு செய்திருந்தார். இதில் போர்னா கோரிக் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

    குரோசிய வீரர் போர்னா கோரிக் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை ஒவ்வொருவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் டெஸ்ட் எடுத்துக் கொள்ளுவதை உறுதி செய்ய விரும்புகிறேன்.

    இது யாருக்கும் வலியை ஏற்படுத்தியிருந்தால் அதனால் வருந்துகிறேன். நான் சிறப்பாக இருப்பதாக உணர்கிறேன். எனக்கு எந்தவித அறிகுறியும் இல்லை. பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.
    இந்தியாவின் உள்ளூர் முதல்-தர கிரிக்கெட்டான ரஞ்சி டிராபியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ரஜிந்தர் கோயல் காலமானார்.
    ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ரஜிந்தர் கோயல். 77 வயதாக இவர் நேற்று காலமானார். நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் நேற்று உயிர் பிரிந்தது. இவருக்கு மனைவியும், நிதின் கோயல் என்ற மகனும் உள்ளனர். நிதின் கோயலும் உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    இடது கை சுழற்பந்து வீச்சாளரான ரஜிந்தர் கோயலுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காவிட்டாலும், ரஞ்சி டிராபியில் 637 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

    1974-75-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் இடம்பிடித்திருந்தார். ஆனால் இந்திய அணியில் ஏற்கனவே முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்ததால் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.

    பாட்டியாலா, தெற்கு பஞ்சாப், டெல்லி, ஹரியானா அணிகளுக்காக 44 வயது வரை விளையாடி 750-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
    2011 உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்சிங் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து பிசிசிஐ, ஐசிசி-யும் விசாரணை நடத்த வேண்டும் என அரவிந்த் டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.
    2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை தோல்வியடைந்தது. இந்த போட்டியில் மேட்ச் பிக்சிங் நடைபெற்றதாக இலங்கையின் முன்னாள் மந்திரி மஹிந்தநந்தா அலுத்காமகே குற்றம் சாட்டியுள்ளார்.

    இதற்கு சங்ககரா, ஜெயவர்தனே கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இலங்கையின் தலைசிறந்த வீரராக திகழ்ந்த அரவிந்த டி சில்வா உண்மையை உலகிற்கு வெளிப்படுத்த ஐசிசி, பிசிசிஐ பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேபண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அரவிந்த் டி சில்வா கூறுகையில் ‘‘இதுபோன்ற குற்றச்சாட்டை கூறும்போது, ஏராளமான ரசிகர்கள் மற்றும் வீரர்களை பாதிக்கும். இது நமக்கு மட்டுமல்ல தேர்வாளர்கள், வீரர்கள் மற்றும் அணி நிர்வாகம் எல்லோருக்கும் பிரச்சினைதான். ஆனால் இந்திய வீரர்கள் தகுதியுடன்தான் உலக கோப்பையை வென்றார்கள். நாம் விரும்பும் கிரிக்கெட்டின் நன்மைக்கான மேட்சி பிக்சிங் நடைபெறவில்லை என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

    நாம் மக்களை பொய்யோடு இருக்கும்படி அனுமதிக்கக் கூடாது. ஐசிசி, பிசிசிஐ. இலங்கை கிரிக்கெட் போர்டு என ஒவ்வொருவரும் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    நாம் உலக கோப்பையை வென்று கொண்டாடியதுபோல், சச்சின் போன்ற வீரர்கள் உலக கோப்பையை வென்று சந்தோசத்தை வெளிப்படுத்திய தருணத்தை வாழ்நாள் முழுவதும் மனதில் வைத்திருப்பார்கள். சச்சின் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள், உண்மையான திறமையுடன் உலகக் கோப்பையை வென்றிருக்கிறார்களா? என்பதைப் பார்க்க ஒரு பாரபட்சமில்லாத விசாரணையைத் தொடங்குவது இந்திய அரசு மற்றும் பிசிசிஐ-யின் கடமையாகும் என விரும்புவார்கள் என்று நினைக்கிறேன்.

    இவை அனைத்தும் மோசமான குற்றச்சாட்டுகள், அவருக்கு ஏதேனும் சந்தேகம் இருந்திருந்தால் ஐ.சி.சி.-யின் ஊழல் தடுப்பு பிரிவிற்கு சென்றிருக்க வேண்டும்’’ என்றார்.
    பல்கேரியாவைச் சேர்ந்தவரும் 19-வது நிலை டென்னிஸ் வீரருமான கிரிகோர் டெமிட்ரோவ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
    பல்கேரியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் நட்சத்திரமான கிரிகோர் டெமிட்ரோவ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச்சுடன் காட்சி டென்னிஸ் போட்டியில் கிரிகோர் டெமிட்ரோவ் கலந்து கொண்டு விளையாடினார் என்பது கவனிக்கத்தக்கது.

    தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் டெமிட்ரோவ்  பதிவிட்டுள்ளார். தனது பதிவில், ‘‘மொனோகாவில் இருந்து திரும்பிய பிறகு எனக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்துள்ளது. என்னுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடனும் கொரோனா பரிசோதனைகள் செய்து கொள்ளுங்கள். 

    நான் ஏதேனும் தீங்கு ஏற்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். நான் இப்போது வீடு திரும்பி மீண்டு வருகிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி. பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
    டி20 உலக கோப்பை ரத்து செய்யப்பட்டு ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டால் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்கள் என்று வார்னர் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை திட்டமிட்டபடி நடத்த வாய்ப்பில்லை என்றால் அந்த காலக்கட்டத்தில் (அக்டோபர், நவம்பர்) அதற்கு பதிலாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டால் நிச்சயம் எங்களால் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியும்.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை தள்ளிவைப்பது குறித்து பல்வேறு விதங்களில் பேச்சுகள் நடக்கிறது. உலக கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு அணியையும் (மொத்தம் 16 அணிகள்) ஆஸ்திரேலியாவுக்கு ஒருசேர அழைத்து வந்து பிறகு அவர்களை 14 நாட்களை தனிமைப்படுத்துவது என்பதெல்லாம் மிகவும் சவாலான விஷயம்.

    அது மட்டுமின்றி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆஸ்திரேலியாவில் தற்போது பயணக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்த விதிமுறைகளை நாம் பின்பற்றியாக வேண்டும். எனவே உலக கோப்பை குறித்து ஐ.சி.சி. எடுக்கும் முடிவுக்காக காத்திருக்கிறோம்.

    ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் ஐ.பி.எல். போட்டியில் விளையாட ஆர்வமுடன் உள்ளனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதித்தால் போதும். எல்லா வீரர்களும் ஐ.பி.எல். போட்டிக்கு கிளம்பி விடுவார்கள்.

    இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி எங்கள் நாட்டிற்கு வந்து 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின்போது நாங்கள் இந்திய கேப்டன் விராட் கோலியை வேண்டுமென்றே கோபமூட்டும் செயலில் ஈடுபடமாட்டோம். தேவையில்லாமல் அவரை சீண்டினால் அது இன்னும் அவரை சிறப்பாக செயல்பட தூண்டும் என்பதை அறிவோம்.

    ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் இந்திய அணியை எதிர்த்து விளையாடினால் அது புதுமையான அனுபவமாக இருக்கும். ஆஸ்திரேலிய அணியில் தேர்வு செய்யப்பட்டு இந்த தொடரில் களம் காண வேண்டும் என்று விரும்புகிறேன்.

    கடந்த முறை நாங்கள் அப்படி ஒன்றும் மோசமாக விளையாடிவிடவில்லை. சிறந்த அணியால் (இந்திய அணி) தோற்கடிக்கப்பட்டோம். அவர்களது பந்து வீச்சு அபாரமாக இருந்தது. தற்போது இந்திய அணி சிறப்பான பேட்டிங் வரிசையை கொண்டிருக்கிறது. அதே சமயம் எங்களது பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தாக்குதல் தொடுக்க தீவிரம் காட்டுவார்கள். இதை காண இந்திய ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள்.

    இவ்வாறு வார்னர் கூறினார்.
    ரோகித் சர்மாவின் ஆக்ரோஷமான ஆட்டம் என்னை வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளது. அவர் எனது ரோல் மாடல் என்று பாகிஸ்தான் இளம் வீரர் தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பேட்டிங் நட்சத்திரமாக கருதப்படுபவர் ஹைதர் அலி. 19 வயதான இவர் இங்கிலாந்து செல்லும் 29 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளார்.

    இந்த நிலையில் இந்திய வீரர் ரோகித் சர்மா எனது ரோல்  மாடல் ஆவார். அவரைப் போன்று அதிரடியாக விளையாட நான் விரும்புகிறேன் என்று ஹைதர் அலி கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மாவின் ஆக்ரோஷமான ஆட்டம் என்னை வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளது. அவர் எனது ரோல் மாடல் ஆவார்.  ஏனென்றால் அவர் இந்திய அணிக்காக மிகவும் அற்புதமாக விளையாடுகிறார்.

    டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் என அனைத்து வகையான போட்டிகளிலும் அவர் பவுலர்களை விளாசி தள்ளுகிறார்.  அவரைப் போன்று நானும் பாகிஸ்தான் அணிக்காக சிறந்த தொடக்கத்தை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

    அவர் 50 ரன்னை தாண்டி விட்டால் 100 மற்றும் 150 என்று அதிவேகத்தில் சென்று விடுகிறார்.

    இவ்வாறு ஹைதர் அலி கூறியுள்ளார்.

    ஹைதர் அலி முதல் முறையாக சர்வதேச போட்டியில் ஆட இருக்கிறார். 19 வயதுக்குட்பட்ட  அணியில்  சிறப்பாக ஆடியதால் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் அவருக்கு இடம் கிடைத்தது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தேர்வாகியுள்ள அவர்  மீது எதிர்பார்ப்பு இருக்கிறது. 
    பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட்  மற்றும் 3 இருபது ஓவர்  போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்கிறது
    2009-ம் ஆண்டு நடுவர் பணியில் இருந்து ஒதுங்கிய ஸ்டீவ் பக்னர், இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு இரண்டு முறை தவறான தீர்ப்பு அளித்ததை தற்போது ஒப்புக் கொண்டுள்ளார்.
    புதுடெல்லி:

    சர்வதேச கிரிக்கெட்டில் தலைச்சிறந்த நடுவர்களில் ஒருவராக திகழ்ந்த ஸ்டீவ் பக்னர் (வெஸ்ட் இண்டீஸ்) கடைசி கட்டத்தில் சில தவறான தீர்ப்புகளை வழங்கி சர்ச்சையில் சிக்கினார். 128 டெஸ்ட் மற்றும் 181 ஒரு நாள் போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றி இருக்கிறார். இதில் 5 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் நடுவராக செயல்பட்டதும் அடங்கும். 2009-ம் ஆண்டு நடுவர் பணியில் இருந்து ஒதுங்கிய அவர் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு இரண்டு முறை தவறான தீர்ப்பு அளித்ததை தற்போது ஒப்புக் கொண்டுள்ளார். 74 வயதான ஸ்டீவ் பக்னர் கூறியதாவது:-

    தெண்டுல்கருக்கு இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் நான் தவறுதலாக அவுட் கொடுத்திருக்கிறேன். எந்த நடுவரும் வேண்டுமென்றே தவறு செய்வது கிடையாது. 2003-ம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் கில்லெஸ்பியின் பந்து வீச்சில் தெண்டுல்கருக்கு எல்.பி.டபிள்யூ. கொடுத்தேன். பிறகு பந்து ஸ்டம்புக்கு மேலாக செல்வதும், நான் தவறிழைத்ததும் உணர்ந்தேன். இதே போல் 2005-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அப்துல் ரசாக் வீசிய பந்தில் தெண்டுல்கர் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனதாக விரலை உயர்த்தினேன். ரீப்ளேயில் பந்து பேட்டில் உரசவில்லை என்பது தெளிவாக தெரிய வந்தது. ஈடன்கார்டனில் அதுவும் இந்தியா பேட்டிங் செய்யும் போது ரசிகர்களின் கரவொலியில் எதுவும் சரியாக கேட்காது.

    இத்தகைய தவறுகளால் நான் வேதனைக்கு உள்ளானேன். நானும் மனிதன் தானே. தவறு செய்வது மனிதனின் இயல்பு. தவறுகள் செய்வதும், தவறுகளை ஏற்றுக்கொள்வதும் மனிதன் வாழ்வின் ஒரு பகுதி தான். இப்போதுள்ள டி.ஆர்.எஸ். உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் நடுவரின் நம்பிக்கையை பாதிக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் துல்லியமான தீர்ப்புகளை வழங்குவதில் அது உதவிகரமாக இருப்பதை அறிவேன். நான் ஒரு பேட்ஸ்மேனுக்கு அவுட் வழங்கி அது தவறான தீர்ப்பு என்று உணர்ந்தால் அன்றைய இரவில் சரியாக தூக்கம் வராது. அந்த நினைப்பால் தூங்குவதற்கு நீண்ட நேரம் ஆகும். ஆனால் தற்போது அந்த தொந்தரவுகள் இருக்காது.

    இவ்வாறு பக்னர் கூறினார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியதால் 5 மாதங்களுக்குப் பிறகு சானியா மிர்சா, குழந்தையை சந்திக்க சோயிப் மாலிக் இந்தியா வருகிறார்
    இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவர் சானியா மிர்சா. ஐதராபாத்தை சேர்ந்த இவர்  2010-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார். இவர்களுக்கு இஷான் என்ற மகன் உள்ளார்.

    கொரோனா ஊரடங்கு இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டபோது சோயிப் மாலிக் பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டில் இருந்தார். அவரது மனைவி சானியாவும், குழந்தையும் ஐதராபாத்தில் உள்ளனர். விசா அனுமதியின்மை, விமானப் போக்குவரத்து இல்லாததால் கடந்த 5 மாதங்களாக மனைவியையும் குழந்தையையும் பார்க்க முடியாமல் சோயிப் மாலிக் தவித்தார்.

    இந்த நிலையில் 5 மாதங்களுக்குப் பிறகு குடும்பத்தினரை சந்திப்பதற்காக சோயிப் மாலிக் இந்தியா வருகிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இதற்கான அனுமதியை அவர் பெற்றுள்ளார்.

    29 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வருகிற 28- ம் தேதி இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது. சோயிப் மாலிக் மட்டும் இந்தியா வந்து விட்டு இங்கிருந்து ஜூலை 24-ந்தேதி இங்கிலாந்து சென்று அணியுடன் இணைந்து கொள்வார்.

    குடும்பத்தினரை சந்திப்பதற்காக தனக்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதற்கு அனுமதித்தது.

    இதேபோல சோயிப் மாலிக் தாமதமாக இங்கிலாந்து வருவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும ஒப்புக்கொண்டுள்ளது. ஆல்-ரவுண்டரான அவர் 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    விராட் கோலி அற்புதமான நபர். நாங்கள் இருவரும் எங்களின் அணிகளுக்காக களத்தில் கடுமையாக ஆடுபவர்கள் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
    விராட் கோலி,  ஸ்டீவ் ஸ்மித் இருவருமே சம காலத்தின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களாக அறியப்படுபவர்கள். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் 12 மாதங்கள் தடைக்கு பிறகு  மீண்டும் ஆட வந்த  ஸ்மித்துக்கு ஆதரவு தெரிவித்த வீரர்களில் முக்கியமானவர் கோலி ஆவார்.

    ஸ்மித்தும் பல சூழலில் விராட் கோலியை பாராட்டிப் பேசியுள்ளார். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது;-

    விராட் கோலியுடம் களத்துக்கு வெளியே ஒரு சில சமயம் பேசியிருக்கிறேன். சமீபத்தில் இந்தியாவில் நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து செய்தி அனுப்பியிருந்தேன். அவர் ஒரு அற்புதமான நபர். நாங்கள் இருவரும் எங்களின் அணிகளுக்காக களத்தில் கடுமையாக ஆடுபவர்கள். அது ஆட்டத்தின் ஒரு பகுதியே.

    உலக கோப்பை ஆட்டத்தின்போது என்னையும், டேவிட் வார்னரையும் கிண்டல் செய்த இந்திய ரசிகர்களை அமைதி காக்கும்படி விராட் சொன்னதற்கு நான் அன்றே அவரிடம் நன்றி பாராட்டிப் பேசினேன்.

    அவரது பேட்டிங் திறமையும் அசாத்தியமானது. 3 வடிவிலான ஆட்டங்களிலும் அவர் மிகத் திறமையானவர். வரும் காலங்களில் அவர் பல சாதனைகளை முறியடிக்கப்போவதை நாம் பார்ப்போம்.

    ஒரு கேப்டனாக இந்தியாவை டெஸ்ட் உலகில் முதலிடம் பிடிக்கச் செய்தார். இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வருவது விசேஷமானதாக இருக்கும். அதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    15 நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கள் அனுமதிக்கப்பட்டால், ரசிகர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி  வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறுமா? என்பது  சந்தேகமே. இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அடுத்த மாதம் முடிவு செய்கிறது.

    இதற்கிடையே உலககோப்பை போட்டியை நடத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருந்தது. இதேபோல இந்த ஆண்டு உலகக்கோப்பை நடைபெற வாய்ப்பு இல்லை என்று ஐ.சி.சி. அமைப்பில் இருப்பவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருமான ஈசான் மானி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் உலக கோப்பை நடைபெற்றால் ரசிகருக்கு அனுமதி வழங்கப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்ளே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலக கோப்பையில் விளையாட 15 நாட்டு வீரர்களை ஆஸ்திரேலியாவுக்கு நுழைய அனுமதிக்கப்பட்டால் ரசிகர்களையும் தடுத்து நிறுத்த மாட்டோம். போட்டியை பார்க்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ரசிகர்கள் இல்லாமல் உலக கோப்பை இல்லை.

    கொரோனா தொற்று உலகளவில் இருப்பதால் 15 அணிகளையும் வரவழைப்பது என்பது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ×