என் மலர்
விளையாட்டு

மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான (டெஸ்ட், ஒருநாள் ஆட்டம் மற்றும் 20 ஓவர்) போட்டிக்கும் கேப்டனாக விராட் கோலி உள்ளார். 3 வடிவிலும் அவர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார்.
விராட் கோலி கிரிக்கெட் மட்டுமல்லாமல் விளம்பரங்கள் மூலமும் கோடி கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். இந்திய பிரபலங்களில் அவர் மதிப்பு மிக்கவராக இருக்கிறார்.
இதனால் விளம்பர நிறுவனங்கள் அவரை போட்டி போட்டுக்கொண்டு ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். 30-க்கும் மேற்பட்ட விளம்பர நிறுவனங்கள் அவர் கைவசம் இருக்கிறது.
இந்த நிலையில் 2020-ம் ஆண்டுக்கான இந்திய பிரபலங்களில் மதிப்புமிக்கவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி விளம்பர வருமானம் மூலம் விராட் கோலி ரூ.1737 கோடி சம்பாதித்து முதல் இடத்தில் உள்ளார்.
பாலிவுட் பிரபலங்கள் எல்லோரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு அவர் தொடர்ந்து 4-வது ஆண்டாக முதல் இடத்தில் உள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட இந்திய அணி முன்னாள் கேப்டன் டோனி 2 இடங்கள் பின்தங்கி உள்ளார். அவர் விளம்பரங்கள் மூலம் ரூ.262 கோடி சம்பாதித்துள்ளார்.
அமீர்கான், ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ரா ஆகியோரை விட டோனி முன்னிலையில் உள்ளார்.
அக்ஷய் குமார் விளம்பரங்கள் மூலம் ரூ.860 கோடி சம்பாதித்து 2-வது இடத்தில் உள்ளார். ரன்வீர் சிங் ரூ.740 கோடியுடனும், ஷாருக்கான் ரூ.371 கோடியுடனும், தீபிகா படுகோனே ரூ.364 கோடியுடனும் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் 400 விக்கெட் சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு இன்னும் 23 விக்கெட் தேவை. 4 டெஸ்ட் என்பதால் அவரால் இந்த தொடரிலேயே இந்த சாதனையை புரிய முடியும்.
400 விக்கெட்டை கைப்பற்றும் 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். உலக அளவில் 16-வது வீரர் என்ற சாதனையை படைப்பார். 400 விக்கெட்டை அதிவேகத்தில் வீழ்த்திய இந்திய வீரர் என்ற புதிய சாதனையையும் நிகழ்த்தலாம்.
அஸ்வின் 74 டெஸ்டில் தான் விளையாடி இருக்கிறார். கும்ப்ளே 85 டெஸ்டிலும், ஹர்பஜன்சிங் 96 டெஸ்டிலும், கபில்தேவ் 115 டெஸ்டிலும் 400 விக்கெட்டை தொட்டு இருந்தனர்.

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 82-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கோவா அணியில் அலெக்சாண்டர் ரோமாரியோ ஜேசுராஜ் 21-வது நிமிடத்திலும், அமர்ஜித் சிங் 80-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கவுகாத்தி அணி தரப்பில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பெடரிகோ காலேகோ 41-வது மற்றும் 83-வது நிமிடங்களில் பதில் கோல் திருப்பினார். 15-வது ஆட்டத்தில் ஆடிய இரு அணிகளுக்கும் இது 7-வது டிராவாகும்.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-சென்னையின் எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.






