search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வின்
    X
    அஸ்வின்

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: அஸ்வின் 400 விக்கெட் சாதனையை படைக்க வாய்ப்பு

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 400 விக்கெட் சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் 400 விக்கெட் சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு இன்னும் 23 விக்கெட் தேவை. 4 டெஸ்ட் என்பதால் அவரால் இந்த தொடரிலேயே இந்த சாதனையை புரிய முடியும்.

    400 விக்கெட்டை கைப்பற்றும் 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். உலக அளவில் 16-வது வீரர் என்ற சாதனையை படைப்பார். 400 விக்கெட்டை அதிவேகத்தில் வீழ்த்திய இந்திய வீரர் என்ற புதிய சாதனையையும் நிகழ்த்தலாம்.

    அஸ்வின் 74 டெஸ்டில் தான் விளையாடி இருக்கிறார். கும்ப்ளே 85 டெஸ்டிலும், ஹர்பஜன்சிங் 96 டெஸ்டிலும், கபில்தேவ் 115 டெஸ்டிலும் 400 விக்கெட்டை தொட்டு இருந்தனர்.

    Next Story
    ×