search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்கா அணி
    X
    தென்ஆப்பிரிக்கா அணி

    ராவல்பிண்டி டெஸ்ட்: பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 272 ரன்களில் ஆல்அவுட்

    பாபர் அசாம், ஃபவாத் அலாம், பஹீம் அஷ்ரப் ஆகியோர் சிறப்பாக விளையாட பாகிஸ்தான் ராவல்பிண்டி டெஸ்டில் முதல் இன்னிங்சில் 272 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகியுள்ளது.
    பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ராவல்பிண்டியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் 22 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு கேப்டன் பாபர் அசாம் உடன் ஃபவாத் அலாம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.

    பாபர் அசாம் அரைசதம் அடித்தார். அலாம் அரைசதத்தை நெருங்கினார். மதிய தேனீர் இடைவேளையின்போது பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. தேனீர் இடைவேளை முடிந்த ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் மழை பெய்ததால், முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடிவு பெற்றது. பாபர் அசாம் 77 ரன்களுடனும், ஃபவாத் அலாம் 42 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பாபர் அசாம் நேற்றைய 77 ரன்களிலேயே ஆட்டமிழந்தர். ஃபவாத் அலாம் 45 ரன்னில் ரன்அவுட் ஆனார்.

    ஆனால் பஹீம் அஷ்ரப் சிறப்பாக விளையாரை அரைசதம் அடித்தார். ஹசன் அலி, யாசிர் ஷா, நௌமான் அலி  ஆகியோர் தலா 8 ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான்  முதல் இன்னிங்சில் 272 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பஹீம் அஷ்ரப் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் அன்ரிச் நோர்ஜே 5 விக்கெட்டும், கேஷவ் மகாராஜ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    Next Story
    ×