என் மலர்
செய்திகள்

ஜோ ரூட்
சேப்பாக்கம் டெஸ்ட்: 100-வது போட்டியில் சதம் விளாசிய ஜோ ரூட்: டெஸ்டில் ஹாட்ரிக் சதம்
சேப்பாக்கம் மைதானத்தில் 100-வது டெஸ்டில் களம் இறங்கிய ஜோ ரூட், சதம் அடித்து அசத்தியுள்ளார். இது அவரின் ஹாட்ரிக் சதமாகும்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த அணியின் தொடக்க வீரர் ரோரி பேர்ன்ஸ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டான் லாரன்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு டாம் சிப்லியுடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர்.
ஜோ ரூட் அரைசதத்தை சதமாக மாற்றினார். அவர் 164 பந்தில் 12 பவுண்டரியுடன் சதம் அடித்தார். அவருக்கு இது 100-வது டெஸ்ட் போட்டியாகும். இதன்மூலம் 100-வது டெஸ்டில் சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார். அத்துடன் தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசியுள்ளார். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதமும், 2-வது டெஸ்டில் சதமும் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






