என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஹங்கேரி அணிக்கு எதிராக போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ 2 கோல்கள் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார்.
    யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் குரூப் எப் பிரிவில் போர்ச்சுக்கல், ஹங்கேரி அணிகள் மோதின.

    முதல் பாதியில் இரு அணி வீரர்களும் எந்த கோலும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனிலையில் இருந்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் இறுதியில் போர்ச்சுக்கல் அணி அதிரடியாக ஆடியது.  

    ஆட்டத்தின் 84-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணி ஒரு கோல் அடித்தது. மேலும் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானா ரொனால்டோ 87-வது நிமிடம் மற்றும் 92-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், போர்ச்சுக்கல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    மற்றொரு போட்டி குரூப் எப் பிரிவில் பிரான்ஸ், ஜெர்மனிக்கும் இடையில் நடைபெற்றது.

    கோல் அடித்த மகிழ்ச்சியில் பிரான்ஸ் அணியினர்

    விறுவிறுப்பாக நடந்த முதல் பாதி ஆட்டத்தில் 20-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஹம்மெல்ஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது.
    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான நியூசிலாந்து அணியில் முழங்கை காயத்தில் சிக்கி தேறிவரும் வில்லியம்சன் இடம் பெற்றுள்ளார்.
    சவுத்தம்டன்:

    இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    இதற்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 20 பேர் கொண்ட நியூசிலாந்து அணி வீரர்கள் ஏற்கனவே இங்கிலாந்து சென்று 2 டெஸ்டில் விளையாடினர். அவர்களில் இருந்து 15 பேர் கொண்ட அதிகாரபூர்வ அணி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. சுழற்பந்து வீ்ச்சாளர் இடத்திற்கு மிட்செல் சான்ட்னெரை பின்னுக்கு தள்ளிவிட்டு இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் இடம் பிடித்துள்ளார். டக் பிரேஸ்வெல், ஜேக்கப் டப்பி, டேரில் மிட்செல், ரச்சின் ரவிந்தரா ஆகியோர் கழற்றி விடப்பட்டனர்.

    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முழங்கை காயத்தாலும், விக்கெட் கீப்பர் வாட்லிங் முதுகுவலியாலும் விளையாடவில்லை. அவர்கள் இருவரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அணியில் நீடிக்கிறார்கள்.

    இது குறித்து நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் கூறுகையில், ‘வில்லியம்சன், வாட்லிங் இருவருக்கும் கிடைத்த இந்த ஒரு வார ஓய்வு மற்றும் காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகள் நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்கும். இறுதிப்போட்டிக்குள் அவர்கள் உடல்தகுதியை எட்டி களம் இறங்க தயாராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடுவது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். இதில் பங்கேற்பதை அவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதை அறிவேன். இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேலின் பந்து வீச்சு (20 ரன் மற்றும் 4 விக்கெட் எடுத்தார்) சிறப்பாக இருந்தது. அதனால் தான் அணிக்கு தேர்வாகியுள்ளார். சவுத்தம்டனிலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று நம்புகிறோம்.’ என்றார்.

    நியூசிலாந்து அணி வருமாறு:-

    கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிவான் கான்வே, டாம் லாதம், ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், வில் யங், வாட்லிங், டாம் பிளன்டெல், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, நீல் வாக்னெர், காலின் டி கிரான்ட்ஹோம், மேட் ஹென்றி, கைல் ஜாமிசன், அஜாஸ் பட்டேல்.
    டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வாய்ப்பு உள்ளதாக தெண்டுல்கர் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    என்னை பொறுத்தவரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் 2 சுழற்பந்து வீச்சாளர்களாலும் (அஸ்வின், ரவீந்திர ஜடேஜா) பேட்டிங்கும் செய்ய முடியும். ஆடுகளம் 4-வது மற்றும் 5-வது நாளில் சுழலுக்கு ஒத்துழைக்காவிட்டால் என்ன செய்வது என்று கேட்கிறீர்கள்.

    பந்து அதிகமாக சுழன்று திரும்பாத ஆடுகளங்களிலும் ஷேன் வார்னே, முரளிதரன் போன்றோர் நிறைய விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார்கள். சுழல் இன்றி நேராக செல்லக்கூடிய வகையில் வீசப்படும் பந்து வீச்சிலும் வித்தியாசங்களை காண்பிக்க முடியும். ஸ்டம்பை குறி வைத்து நேராக வீசும் பந்துகள் சுழன்று திரும்புமா அல்லது அப்படியே வருமா என்ற குழப்பத்தில் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழக்க வாய்ப்பு உண்டு. ஒரு ஆப்-ஸ்பின்னர் நேராக பந்தை வீசும்போது பேட்டின் முனையில் பட்டு ஸ்லிப்பிலோ அல்லது விக்கெட் கீப்பரிடமோ கேட்ச் ஆகலாம்.

    இங்கிலாந்து மண்ணில் காற்றின் போக்குக்கு ஏற்ப சுழற்பந்து வீச்சாளர்கள் நிறைய சாதிக்க முடியும். காற்றுடன் கூடிய சீதோஷ்ண நிலையில் பந்து வீசும் போது பந்து நேராக செல்வது போல் தோன்றும். ஆனால் காற்றில் நகர்ந்து பிட்ச் ஆனதும் திரும்பி விடும். பந்தை தொடர்ந்து பளபளப்புடன் வைத்திருந்தால் காற்றின் தாக்கத்தில் இரண்டு பக்கமும் பந்தை திரும்ப வைக்கலாம். இந்த சூழலை அஸ்வின், ஜடேஜா சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு தெண்டுல்கர் கூறினார்.
    ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு விக்கெட் கீப்பர்கள் உள்பட 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்த போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக 20-க்கும் மேற்பட்ட வீரர்களை கொண்ட இந்திய அணி சென்றுள்ளது. கொரோனா காலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிக வீரர்கள் சென்றுள்ளனர்.

    போட்டி தொடங்குவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 6 பேட்ஸ்மேன்கள், இரண்டு விக்கெட் கீப்பர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    15 பேர் கொண்ட இந்திய அணி விவரம்:-

    1. விராட் கோலி (கேப்டன்), 2. ரகானே (துணைக் கேப்டன்), 3. ரோகித் சர்மா, 4. ஷுப்மான் கில், 5. புஜாரா, 6. ஹனுமா விஹாரி, 7. ரிஷப் பண்ட், 8. சகா, 9. அஷ்வின், 10. ஜடேஜா, 11. பும்ரா, 12. இஷாந்த் சர்மா, 13. முகமது ஷமி, 14. உமேஷ் யாதவ், 15. முகமது சிராஜ்.
    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் இங்கிலாந்து தொடருக்காக இந்திய அணியுடன் சென்றுள்ளதால், இலங்கை தொடரில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்படுவார்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது.

    முக்கியமான தொடர் என்பதால் இந்திய அணியுடன் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சென்றுள்ளார். இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணி ஜூலை 13-ந்தேதி முதல் ஜூலை 25-ந்தேதி வரை இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது.

    இலங்கை தொடருக்கான இந்திய அணியில் முக்கியமான வீரர்கள் இடம்பெறவில்லை. இதனால் தவான் தலைமையிலான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரவி சாஸ்திரி இல்லாததால் பயிற்சியாளர் ஒருவர் அணியுடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்படுவார் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிசிசிஐ தலைவர் கங்குலியும் ராகுல் டிராவிட்டுதான் பயிற்சியாளர் எனத் தெரிவித்திருந்தார்.

    ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அகாடமியின் தலைமை ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஸ்காட்லாந்துக்கு எதிராக செக் குடியரசு வீரர் பாட்ரிக் ஷிக் 2 கோல்கள் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார்.
    யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் செக் குடியரசு, ஸ்காட்லாந்து அணிகள் மோதின.

    முதல் பாதியில் செக் குடியரசு அணியின் பாட்ரிக் 32 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 52 வது நிமிடத்தில் பாட்ரிக் மற்றொரு கோல் அடித்தார். இறுதியில், செக் குடியரசு 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    மற்றொரு போட்டி நேற்று ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்தது. இதில் இ பிரிவு லீக் ஆட்டத்தில் போலந்து - சுலோவாகியா அணிகள் மோதின.

    விறுவிறுப்பான நடந்த ஆட்டத்தில் 18-வது நிமிடத்தில் சுலோவாகியா அணிக்கு முதல் கோல் கிடைத்தது. சுலோவாகியா வீரர் ராபர்ட் மேக் கோலை நோக்கி அடித்த பந்து போலந்து அணியின் கோல் கீப்பர் செஸ்னியின் மேல் பட்டு கோல் வலைக்குள் புகுந்து சுய கோலானது. 46-வது நிமிடத்தில் போலந்து அணி வீரர் கரோல் லினிட்டி பதில் கோல் திருப்பினார்.

    வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் சுலோவாகியா வீரர்

    62-வது நிமிடத்தில் போலந்து அணி வீரர் கிரிஜோவியாக் எதிரணி வீரரை பவுல் செய்ததால் நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டியதானது.

    69-வது நிமிடத்தில் சுலோவாகியா வீரர் மிலன் கிரினியர் ஒரு கோல் அடித்தார். அதன்பிறகு இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் சுலோவாகியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று போலந்துக்கு அதிர்ச்சி அளித்தது.

    மற்றொரு ஆட்டத்தில் ஸ்வீடன், ஸ்பெயின் அணிகள் மோதின. இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடியும் எந்த அணியாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.
    ஐசிசி வெளியிட்ட ஒருநாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து அணி முதலிடத்தில் நீடிக்கிறது.
    துபாய்:

    இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் டிரா செய்த நியூசிலாந்து அணி, பர்மிங்காமில் நடந்த 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இதன்மூலம் நியூசிலாந்து அணி (123 புள்ளி) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது.

    இந்திய அணி (121 புள்ளி) முதலிடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு இறங்கி இருக்கிறது. ஆஸ்திரேலியா 108 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 107 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி 94 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன.

    வெஸ்ட் இண்டீஸ் (84 புள்ளி), தென் ஆப்பிரிக்கா (80 புள்ளி), இலங்கை (78 புள்ளி), வங்காளதேசம் (46 புள்ளி), ஜிம்பாப்வே (35 புள்ளி) முறையே 6 முதல் 10 இடங்களை வகிக்கின்றன.
    ஜோகோவிச் பிரெஞ்ச் ஓபனை 2-வது முறையாக வென்றதன் மூலம் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் குறைந்த பட்சம் 2 முறை பட்டத்தை கைப்பற்றிய 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சரிவில் இருந்து மீண்டு வந்து 6-7 (6-8), 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் 5-ம் நிலை வீரரான சிட்சிபாசை (கிரீஸ்) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஒட்டுமொத்தத்தில் ஜோகோவிச் வென்ற 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்கள் வரிசையில் தலா 20 பட்டங்களுடன் முதலிடத்தில் உள்ள ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆகியோரின் சாதனையை சமன் செய்ய ஜோகோவிச்சுக்கு இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டமே தேவையாகும். அத்துடன் ஜோகோவிச் பிரெஞ்ச் ஓபனை 2-வது முறையாக வென்றதன் மூலம் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் குறைந்த பட்சம் 2 முறை பட்டத்தை கைப்பற்றிய 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    ஜோகோவிச்

    தனது போட்டி முடிந்ததும் ரசிகர்கள் கேலரியில் அமர்ந்து ஆட்டத்தை பார்த்த இளம் ரசிகருக்கு தன்னுடைய டென்னிஸ் பேட்டை (ராக்கெட்) ஜோகோவிச் பரிசாக வழங்கினார். எதிர்பாராத இந்த பரிசினால் திகைத்து போன அந்த ரசிகர் எல்லையில்லா மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார். டென்னிஸ் பேட்டை பரிசாக வழங்கியது ஏன்? என்பது குறித்து ஜோகோவிச் கூறுகையில், ‘இறுதிப்போட்டி முழுவதும் அந்த ரசிகரின் உற்சாக குரல் எனது காதில் ஒலித்து கொண்டே இருந்தது.

    குறிப்பாக நான் முதல் 2 செட்களை இழந்து பின்தங்கி இருக்கையில் அவர் என்னை ஊக்கப்படுத்தினார். உண்மையாகவே பயிற்சியாளர் போன்று ஆட்டத்தின் தன்மைக்கு தகுந்தபடி எப்படி செயல்பட வேண்டும் என்று ஆலோசனை சொன்னார். எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்த அந்த நபருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எனது பேட்டை வழங்கினேன்’ என்றார். 
    வெனிசுலா அணியில் 8 வீரர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டதால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை களம் இறக்க போட்டி அமைப்பு குழு அனுமதி அளித்து இருந்தது.
    பிரேசில்லா:

    தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. அங்குள்ள 4 நகரங்களில் ரசிகர்கள் அனுமதியின்றி போட்டி நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ‘டாப்-4’ இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

    பிரேசில்லாவில் நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரேசில் அணி, வெனிசுலாவை (பி பிரிவு) சந்தித்தது. வெனிசுலா அணியில் 8 வீரர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டதால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை களம் இறக்க போட்டி அமைப்பு குழு அனுமதி அளித்து இருந்தது. இதன்படி அந்த அணி அதிக மாற்று வீரர்களுடன் ஆடியது.

    பிரேசில் அணி


    வலுவான பிரேசில் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் அசத்தலான ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் வெனிசுலா அணி திணறியது. ஒருதலைபட்சமாக அமைந்த இந்த ஆட்டத்தில் 23-வது நிமிடத்தில் பிரேசில் அணி முதல் கோல் அடித்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் கார்னர் வாய்ப்பில் கோலை நோக்கி அடித்த பந்தை சக வீரர் மார்குயினோஸ் லாவகமாக செயல்பட்டு கோலாக மாற்றினார்.

    64-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி நெய்மார் கோல் அடித்தார். அவர் அடித்த 67-வது சர்வதேச கோல் இதுவாகும். பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்தவர்களில் நெய்மார் 2-வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ஜாம்பவான் பீலே 77 கோல்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். 89-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் மாற்று ஆட்டக்காரர் கேப்ரியல் பார்போசா கோல் போட்டார். நெய்மார் கோலை நோக்கி அடித்த பந்தை கேப்ரியல் பார்போசா நெஞ்சால் முட்டி கோல் வலைக்குள் திருப்பினார்.

    முடிவில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெனிசுலாவை தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.

    இதேபிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொலம்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வீழ்த்தியது. 42-வது நிமிடத்தில் பிரிகிக் வாய்ப்பில் கொலம்பியா வீரர் எட்வின் கார்டோனா வெற்றிக்கான கோலை அடித்தார். இந்த போட்டி தொடரில் ஈகுவடாருக்கு எதிராக கொலம்பியா அணி தொடர்ச்சியாக பெற்ற 8-வது வெற்றி இதுவாகும்.
    பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றிய செக்குடியரசு வீராங்கனை பார்போரா கிரெஜ்சிகோவா (3,733 புள்ளி) 18 இடங்கள் ஏற்றம் கண்டு 15-வது இடத்தை எட்டியுள்ளார்.
    பாரீஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி முடிவை தொடர்ந்து உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் (12,113 புள்ளி) முதலிடத்திலும், ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் (10,143 புள்ளி) 2-வது இடத்திலும், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (8,630) 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர். பிரெஞ்ச் ஓபனில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் (7,980 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்ட ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் (7,425 புள்ளி) ஒரு இடம் சரிந்து 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி (8,245 புள்ளி), ஜப்பானின் நவோமி ஒசாகா (7,401 புள்ளி), ருமேனியாவின் சிமோனா ஹாலெப் (6,330 புள்ளி), பெலாரஸ்சின் சபலென்கா (6,195 புள்ளி), அமெரிக்காவின் சோபியா கெனின் (5,865 புள்ளி) ஆகியோர் முறையே முதல் 5 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர். பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றிய செக்குடியரசு வீராங்கனை பார்போரா கிரெஜ்சிகோவா (3,733 புள்ளி) 18 இடங்கள் ஏற்றம் கண்டு 15-வது இடத்தை எட்டியுள்ளார். 2-வது இடம் பெற்ற ரஷிய வீராங்கனை அனஸ்டசியா பாவ்லிசென்கோவா (3,300 புள்ளி) 13 இடங்கள் உயர்ந்து 19-வது இடத்தை பிடித்துள்ளார்.
    சவுத்தாம்ப்டனில் 18-ந்தேதி தொடங்கும் இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டத்திற்காக இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற புதிய தொடரை ஐசிசி நடைமுறைப்படுத்தியது. 2019 முதல் 2021 வரை நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டியில் பலப்பரீட்சை நடத்த வேண்டும்.

    இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும். அடுத்த இரண்டு வருடத்திற்கு வெற்றி பெறும் அணிதான் தலைசிறந்த டெஸ்ட் கிரிக்கெட் அணியாக கருதப்படும்.


    புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்தியாவும், 2-வது இடம் பிடித்த நியூசிலாந்தும் வருகிற 18-ந்தேதி தொடங்கும் போட்டியில் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தியா 17 டெஸ்டில் 12 போட்டிகளில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து 7 போட்டிகளில் வெற்றி பெற்றது. இந்தியாவின் வெற்றி சதவீதம் 72.2. நியூசிலாந்தின் வெற்றி சதவீதம் 70.

    ஐசிசி

    இந்த போட்டிக்கான பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய பண மதிப்பில் 11 கோடியே 71 லட்சத்து 66 ஆயிரத்து 960 ரூபாய்) வழங்கப்படும். 


    தோல்வியடையும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய பண மதிப்பில் ரூ. 5,85,83,480) வழங்கப்படும். போட்டி டிராவில் முடிந்தால் மொத்த பரிசுத்தொகை பகிர்ந்து அளிக்கப்படும்.

    இத்தகவலை ஐசிசி சிஇஓ ஜெஃப் அலார்டைஸ் தெரிவித்துள்ளார்.
    கவாஸ்கர் கால்தில் கபில் தேவ், இம்ரான் கான், இயன் போத்தம், ரிச்சர்ட் ஹேட்லி போன்ற தலைசிறந்த ஆல்-ரவுண்டர்கள் விளையாடினர்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் சுனில் கவாஸ்கர். டெஸ்ட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர். வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என அதிவேக ஆடுகளத்திலும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்.

    இவர், தான் பார்த்ததிலேயே சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் கார்பீல்டு சோபர்ஸ் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘நான் பார்த்ததிலேயே சிறந்த ஆல்-ரவுண்டர் சர் கார்பீல்டு சோபர்ஸ்தான். ஏனென்றால் மிகவும் எளிமையாக பேட்டிங் மற்றும் பந்து வீச்சால் போட்டியின் தன்மையை மாற்றக் கூடியவர்.

    நம்பமுடியாத வகையிலான கேட்ச்களை பிடித்தும் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர். ஏராளான போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சால் போட்டியின் தன்மையை மாற்றியுள்ளார். அதனால் நான் பார்த்ததில் சிறந்த ஆல்-ரவுண்டர் இவர்தான்.

    சர் கேரிபீல்டு சோபர்ஸ்

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக சென்னையில் 1978-ம் ஆண்டு நான் விளையாடிய டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம்தான் மிகவும் கடினமானது. நான் விளையாடியதில் வேகப்பந்து வீச்சுக்கு மிகவும் சாதகமான ஆடுகளம். சபினா பார்க், பெர்த் போன்ற ஆடுகளத்தில் கூட விளையாடியுள்ளேன். சபினா பார்க்கில் பந்து பறக்கும். பெர்த்தில் பந்து பவுன்ஸ், கேரி இருந்தாலும் நான் விளையாடியிருக்கிறேன்.

    சிட்னியில் மழை பெய்த பிறகு ஜெப் தாம்சனை எதிர்கொண்டுள்ளேன். ஆனால், சென்னையில் சில்வர்ஸ்டர் கிளார்க் பந்தை எதிர்கொள்ளும்போது, பந்துகள் என்னை சுற்றி பறந்தன. நான் விளையாடியதில் இதுதான் கடினமான ஆடுகளம் என நினைக்கிறேன்’’ என்றார்.
    ×