என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?- ஐசிசி அறிவிப்பு
Byமாலை மலர்14 Jun 2021 2:39 PM GMT (Updated: 14 Jun 2021 2:39 PM GMT)
சவுத்தாம்ப்டனில் 18-ந்தேதி தொடங்கும் இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டத்திற்காக இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற புதிய தொடரை ஐசிசி நடைமுறைப்படுத்தியது. 2019 முதல் 2021 வரை நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டியில் பலப்பரீட்சை நடத்த வேண்டும்.
இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும். அடுத்த இரண்டு வருடத்திற்கு வெற்றி பெறும் அணிதான் தலைசிறந்த டெஸ்ட் கிரிக்கெட் அணியாக கருதப்படும்.
இதையும் படியுங்கள்... ஆடுகளம் பெரிய விசயமே அல்ல: இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல வேண்டும்- வெங்கடேஷ் பிரசாத்
புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்தியாவும், 2-வது இடம் பிடித்த நியூசிலாந்தும் வருகிற 18-ந்தேதி தொடங்கும் போட்டியில் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தியா 17 டெஸ்டில் 12 போட்டிகளில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து 7 போட்டிகளில் வெற்றி பெற்றது. இந்தியாவின் வெற்றி சதவீதம் 72.2. நியூசிலாந்தின் வெற்றி சதவீதம் 70.
இந்த போட்டிக்கான பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய பண மதிப்பில் 11 கோடியே 71 லட்சத்து 66 ஆயிரத்து 960 ரூபாய்) வழங்கப்படும்.
இதையும் படியுங்கள்... இந்தியா முற்றிலும் மாறுபட்ட அணி: நியூசிலாந்து பேட்ஸ்மேன் சொல்கிறார்
தோல்வியடையும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய பண மதிப்பில் ரூ. 5,85,83,480) வழங்கப்படும். போட்டி டிராவில் முடிந்தால் மொத்த பரிசுத்தொகை பகிர்ந்து அளிக்கப்படும்.
இத்தகவலை ஐசிசி சிஇஓ ஜெஃப் அலார்டைஸ் தெரிவித்துள்ளார்.
Next Story
×