என் மலர்
விளையாட்டு
10 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரேசில்-வெனிசுலா அணிகள் மோதுகின்றன.
பிரேசில்லா:
தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு பிரேசிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி வரை நடக்கிறது. முதலில் இந்த போட்டியை கொலம்பியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் இணைந்து நடத்த இருந்தன. அதிபருக்கு எதிராக உள்நாட்டில் போராட்டம் நடந்ததை அடுத்து கொலம்பியா இந்த போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டது. கொரோனா பரவல் அதிகரிப்பு எதிெராலியாக அர்ஜென்டினாவும் கடைசி நேரத்தில் பின்வாங்கியது. இதையடுத்து இந்த போட்டி பிரேசிலின் 4 நகரங்களில் உள்ள 5 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் அர்ஜென்டினா, பொலிவியா, உருகுவே, சிலி, பராகுவே, ‘பி’ பிரிவில் பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, ஈகுவடார், பெரு ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
நடப்பு சாம்பியனான பிரேசில் அணி கடந்த முறை (2019) எந்தவொரு ஆட்டத்திலும் தோல்வியை சந்திக்காமல் கோப்பையை உச்சி முகர்ந்தது. அதேபோல் நெய்மார் தலைமையிலான பிரேசில் அணி மீண்டும் கோப்பையை வசப்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு இருக்கிறது. 14 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி சமீப காலங்களில் ஜொலிக்காவிட்டாலும் அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. கேப்டன் லயோனஸ் மெஸ்சி, செர்ஜியோ அகுரோ, ஏஞ்சல் டி மரியா ஆகிய சிறந்த தாக்குதல் ஆட்டக்காரர்கள் போட்டியின் போக்கை அதிரடியாக மாற்றக்கூடியவர்கள். இதேபோல் அதிக முறை (15) சாம்பியனான உருகுவே அணியையும் புறந்தள்ளி விட முடியாது. அந்த அணியில் லூயிஸ் சுவாரஸ், எடிசன் கவானி போன்ற நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
தொடக்க நாளான இன்று மாலை பிரேசிலியா நகரில் நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் பிரேசில்-வெனிசுலா அணிகள் மோதுகின்றன. இதனை அடுத்து இரவு குயீபாவில் நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் கொலம்பியா-ஈகுவடார் அணிகள் சந்திக்கின்றன. இந்திய நேரப்படி மறுநாள் அதாவது நாளை அதிகாலை 2.30 மற்றும் 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிகளை சோனி சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.142 கோடியாகும். வாகை சூடும் அணிக்கு ரூ.47 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.25 கோடியும் பரிசாக கிடைக்கும்.

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து வீரர் ஹென்றி முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் தலா 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
பர்மிங்காம்:
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் பெர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 101 ஓவரில் 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 81 ரன் எடுத்து அவுட்டானார். மார்க் வுட் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய டேனியல் லாரன்ஸ் 81 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூசிலாந்து சார்பில் போல்ட் 4 விக்கெட்டும், ஹென்றி 3 விக்கெட்டும், படேல் 2 விக்கெட்டும், நீல் வாக்னர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடியது. டேவன் கான்வே 80 ரன்னும், வில் யங் 82 ரன்னும் எடுத்தனர்.
இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 76.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. ராஸ் டெய்லர் 46 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. பொறுப்புடன் ஆடிய ராஸ் டெய்லர் அரை சதமடித்தார். அவர் 80 ரன்னில் வெளியேறினார். இறுதியில், நியூசிலாந்து முதல் இன்னின்சில் 119.1 ஓவரில் 388 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராடு 4 விக்கெட்டும், மார்க் வுட், ஒல்லி ஸ்டோன் தலா 2 விக்கெட்டும், ஆண்டர்சன், டேனியல் லாரன்ஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 85 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது.

நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் துல்லிய பந்து வீச்சில் இங்கிலாந்து நிலைகுலைந்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இங்கிலாந்து 37 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
நியூசிலாந்து சார்பில் ஹென்றி, நீல் வாக்னர் தலா 3 விக்கெட்டும், அஜாஸ் படேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
டெஸ்ட் முடிய இன்னும் இரு நாட்கள் உள்ள நிலையில் நியூசிலாந்து அணி இன்னும் ஒரு விக்கெட்டை கைப்பற்றினால் போதும், எளிதில் போட்டியை வென்று தொடரையும் 1-0 என கைப்பற்றவே அதிக வாய்ப்புள்ளது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் டி காக் பொறுப்புடன் ஆடி 141 ரன்கள் குவித்தார்.
செயின்ட் லூசியா:
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 97 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சிறப்பாக பந்துவீசிய தென் ஆப்பிரிக்க அணியின் லுங்கி நிகிடி 5 விக்கெட்டுகளையும், அன்ரிச் நோர்ஜே 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 322 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய டி காக் 170 பந்துகளில் 141 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மார்கிராம் 60 ரன்னும், வான் டர் டுசன் 46 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 4 விக்கெட்டும், ஜேடன் சீலஸ் 3 விக்கெட்டும், ரோச் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 225 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.
முதல் இன்னிங்ஸ் போலவே 2-வது இன்னிங்சிலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுக்கு 82 ரன்கள் எடுத்திருந்தது. ரோஸ்டன் 21 ரன்னிலும், பிளாக் வுட் 12 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. ரோஸ்டன் சேஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். அவர் 62 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 162 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 63 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், அன்ரிச் நோர்ஜே 3 விக்கெட்டும், கேசவ் ம்காராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் விருது டி காக்கிற்கு வழங்கப்பட்டது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஜூன் 18-ம் தேதி தொடங்குகிறது.

கிறிஸ்டியன் எரிக்சன் உடல்நலம் சீரடைய வேண்டி சக வீரர்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்தனர்.
கோபன்ஹேகன்:
ஐரோப்பிய கோப்பை (யூரோ கோப்பை) கால்பந்து போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த நாடுகளின் அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. அவ்வகையில் கோபன்ஹேகனில் இன்று நடந்த ஆட்டத்தில் டென்மார்க்-பின்லாந்து அணிகள் விளையாடின.
முதல் பாதி ஆட்டம் நிறைவடைய சில நிமிடங்கள் இருந்தபோது டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்தில் நிலைகுலைந்து விழுந்து மூர்ச்சையானார். அவர் அசைவற்று கிடந்ததால் உடனடியாக போட்டி நிறுத்தப்பட்டது.

மருத்துவக் குழுவினர் மைதானத்திற்குள் வந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். எனினும் அவருக்கு நினைவு திரும்பவில்லை. இதனையடுத்து அவர் ஸ்டிரெச்சரில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வீரர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். கிறிஸ்டியன் எரிக்சன் உடல்நலம் சீரடைய வேண்டி சக வீரர்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்தனர்.
ஷாகிப் அல் அசன் கோபத்தில் அத்துமீறி நடந்துகொண்டது தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகின.
டாக்கா:
வங்காளதேசத்தில் டாக்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் முகமதியன் விளையாட்டுக் கழகம் மற்றும் அபஹானி லிமிடெட் அணிகள் மோதின. இதில், முகமதியன் விளையாட்டுக் கழக அணி கேப்டனும், ஆல்ரவுண்டருமான ஷாகிப் அல் அசன் பந்து வீசியபோது நடுவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்காரணமாக மூன்று ஸ்டம்புகளையும் பிடுங்கி வீசினார். இதேபோல் அவர் கேட்ட அப்பீலுக்கு நடுவர் அவுட் கொடுக்காததால் கோபத்தில் ஸ்டம்பை எட்டி உதைத்து விட்டுச் சென்றார்.
அவர் கோபத்தில் அத்துமீறி நடந்துகொண்டது தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகின. ஷாகிப்பின் இந்த செயலை பலரும் கண்டித்தனர். பின்னர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார் ஷாகிப்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய கிரிக்கெட் நிர்வாகம், டாக்கா பிரீமியர் லீக்கில் 3 ஆட்டங்களில் விளையாட ஷாகிப் அல் அசனுக்கு தடை விதித்தது. அத்துடன் 5 லட்சம் வங்காளதேச டாக்கா அபராதமும் விதித்தது.
உலக தரவரிசையில் 33வது இடத்தில் உள்ள பார்போரா டென்னிஸ் போட்டிகளில் இதுவரை இரண்டு சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.
பாரிஸ்:
பாரிசில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், செக் குடியரசின் பார்போரா கிரெஜிகோவா, ரஷியாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 6-1, 2-6, 6-4 என்ற செட்கணக்கில் பார்போரா வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் 40 ஆண்டுகளுக்கு பிறகு பிரெஞ்சு ஓபனை வென்ற முதல் செக் குடியரசு வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு 1981ல் ஹனா மாண்ட்லிகோவா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

உலக தரவரிசையில் 33வது இடத்தில் உள்ள பார்போரா (வயது 25), டென்னிஸ் போட்டிகளில் இதுவரை இரண்டு சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்கள், ஜூன் 14 ஆம் தேதி முதல் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள உள்ளனர்.
டெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு சென்று 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாசா மைதானத்தில் நடை திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதனிடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக விராட் கோலி தலைமையிலான 24 பேர் கொண்ட இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணியில் ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், லோகேஷ் ராகுல், ரஹானே, புஜாரா, மயங்க் அகர்வால், சுப்மான் கில், பும்ரா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது சிராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த சூழலில், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்தது. இதன்படி இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும், துணை கேப்டனாக புவனேஷ்வர் குமாரும் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியினர் மும்பையில் இருக்கும் ஹோட்டலில் 14 நாள்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள இருக்கின்றனர். இந்திய அணியினர் தனிமைப்படுத்திக்கொள்ள இருக்கும் காலங்களில் அவர்களுக்கு மூன்று முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
பின்பு ஜூன் 28ம் தேதி மும்பையில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் இந்திய அணியினர், அங்கு 7 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன் பின்பு பயிற்சிகளை தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச கிரிக்கெட்டின் நட்சத்திர வீரராக அறியப்படும் ஷாகிப், தொடர்ந்து வங்கதேச கிரிக்கெட் வாரிய இயக்குநர் கலீத் மகமூத் உடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.
டாக்கா ப்ரீமியர் லீக் போட்டியில் கோபத்தில் மோசமாக நடந்து கொண்டதற்காக முன்னாள் வங்கதேச கிரிக்கெட் அணி தலைவர் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் பந்து வீசிய ஷாகிப், நடுவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மூன்று ஸ்டம்புகளையும் வேரோடு பிடுங்கி வீசினார். பின்னர் மீண்டும் அவர் கேட்ட அப்பீலுக்கு நடுவர் அவுட் கொடுக்காததால் கோபத்தில் ஸ்டம்பை எட்டி உதைத்து விட்டுச் சென்றார்.
இந்த இரண்டு சம்பவங்களும் காணொலியாக இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டன. பலரும் ஷாகிப்பின் இந்த செயலை கண்டித்துள்ளனர். வங்கதேச கிரிக்கெட்டின் நட்சத்திர வீரராக அறியப்படும் ஷாகிப், தொடர்ந்து வங்கதேச கிரிக்கெட் வாரிய இயக்குநர் கலீத் மகமூத் உடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.
அதன்பின்னர், தான் கோபப்பட்டது குறித்து ஷாகிப் மன்னிப்புக் கோரியுள்ளார். “அன்பார்ந்த ரசிகர்களே, எனது பொறுமையை இழந்து கோபப்பட்டு, ஆட்டத்தைப் பார்த்துவந்த அனைவரது அனுபவத்தையும் கெடுத்ததற்கு, முக்கியமாக வீட்டிலிருந்து ஆட்டத்தைப் பார்த்து இதனால் வருத்தமடைந்தவர்களிடன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு அனுபவம் வாய்ந்த வீரனாக நான் அது போல நடந்திருக்கக் கூடாது. ஆனால் சில சமயங்களில் துரதிர்ஷ்டவசமாக எல்லாவற்றையும் மீறி இப்படி நடந்துவிடும். அணிகளிடமும், அதன் நிர்வாகத்திடமும், தொடரின் ஒருங்கிணைப்பாளர்கள், அதிகாரிகளிடமும் எனது தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலத்தில் இது போல மீண்டும் நடந்து கொள்ளமாட்டேன் என்று நம்புகிறேன். நன்றி” என்று ஷாகிப் அல் ஹசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த வருடம், ஐசிசியின் ஊழலுக்கு எதிரான விதிமீறலுக்காக ஷாகிப் 12 போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
யூரோ கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கி ஜூலை 11-ம் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெறுகிறது.
ரோம்:
ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. யூரோ கோப்பை போட்டியில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இத்தாலியின் ரோம் நகரில் நேற்று தொடங்கிய முதல் லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள துருக்கி, இத்தாலி அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடின. இதனால் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இரண்டாவது பாதியில் துருக்கி வீரர் 53-வது நிமிடத்தில் ஓன் கோல் அடித்தார். இதையடுத்து இத்தாலி அணி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இம்மொபைல் 66-வது நிமிடத்திலும், இன்சிக்னே 79-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.
துருக்கி அணியால் பதிலுக்கு ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில், இத்தாலி அணி 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை எதிர்கொள்கிறார் ஜோகோவிச்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) – மூன்றாம் நிலை வீரரான ரபேல் நடால் (ஸ்பெயின்) மோதினர். முன்னணி வீரர்கள் மோதியதால் இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
முதல் சுற்றில் 6-3 என்ற செட் கணக்கில் நடால் முன்னிலை வகித்தார். அதன்பிறகு சுதாரித்து ஆடிய ஜோகோவிச் இரண்டாவது சுற்றை 6-3 என்ற கணக்கிலும், மூன்றாவது சுற்றை 7-6 என்ற கணக்கிலும் வென்றார்.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தில் 6-2 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றினார். இதன்மூலம் ரபேல் நடாலை வீழ்த்தி ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இந்தப் போட்டி சுமார் 4 மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்றது. ஜோகோவிச் பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இது 6-வது முறை ஆகும்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 303 ரன்னில் ஆல் அவுட்டானது.
பர்மிங்காம்:
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இதற்கிடையே, பெர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டனில் இரண்டாவது டெஸ்ட் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 101 ஓவரில் 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 81 ரன் எடுத்து அவுட்டானார். மார்க் வுட் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய டேனியல் லாரன்ஸ் 81 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூசிலாந்து சார்பில் போல்ட் 4 விக்கெட்டும், ஹென்றி 3 விக்கெட்டும், படேல் 2 விக்கெட்டும், நீல் வாக்னர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம், டேவன் கான்வே களமிறங்கினர்.

டாம் லாதம் 6 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய வில் யங் கான்வேயுடன் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தனர். அணியின் எண்ணிக்கை 137 ஆக இருந்தபோது டேவன் கான்வே 80 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவரை தொடர்ந்து வில் யங் 82 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 76.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. ராஸ் டெய்லர் 46 ரன்னுடன் களத்தில் உள்ளார்.
இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராடு 2 விக்கெட்டும், டேனியல் லாரன்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பாரிசில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது.
பாரிஸ்:
பிரெஞ்சு-ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கிரீசை சேர்ந்த ஸ்டெபனோஸ்-சிட்சிபாஸ், 6-ம் நிலை வீரரான ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவை சந்தித்தார்.
முதல் இரு செட்களை சிட்சிபாஸ் 6-3, 6-3 என கைப்பற்றினார். இதையடுத்து, அதிரடியாக ஆடிய ஸ்வெரேவ் அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஐந்தாவது செட்டில் சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் 6-3 என கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், ஸ்டெபனோஸ்-சிட்சிபாஸ் 6-3, 6-3, 4-6, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி 3 மணி நேரம் 37 நிமிடங்கள் நீடித்தது.
22 வயதாகும் ஸ்டெபனோஸ்-சிட்சிபாஸ் பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை நடைபெறும் இறுதியில் சிட்சிபாஸ் நடால் அல்லது ஜோகோவிச்சுடன் மோதுகிறார்.