என் மலர்
விளையாட்டு
மும்பை:
2007-ம் ஆண்டு முதல் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடத்தப்பட்டது. இதில் டோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது.
இதற்கு முன்பாக நடந்த 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறியது. இதனால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
அதன்பின் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளித்துவிட்டு இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது. கேப்டனாக டோனி முதல் முறையாக நியமிக்கப்பட்டார். அதன்பின் டோனி வெற்றிகரமாக கேப்டனாக அசத்தினார்.
இந்த நிலையில் 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு நான் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என எதிர்பார்த்தேன் என்று யுவராஜ் சிங் தெரிவித்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
2007-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையில் இருந்து இந்தியா வெளியேறியதால் கடும் கொந்தளிப்புகள் இருந்தது. பின்னர் இரண்டு மாத இங்கிலாந்து சுற்றுப்பயணமும், தென்ஆப்பிரிக்காவுக்கும், அயர்லாந்துக்கும் ஒரு மாத சுற்றுப்பயணமும் இருந்தது.
அதன்பின்னர் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடந்தது. வெளிநாட்டில் 4 மாதம் சுற்றுப்பயணம் இருந்தது. எனவே மூத்த வீரர்கள் தங்களுக்கு இடைவெளி தேவை என்று நினைத்தார்கள். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் 20 ஓவர் உலக கோப்பையை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு நான் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என்று எதிர்பார்த்தேன். பின்னர் டோனி கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது. யார் கேப்டன் ஆனாலும், அது ராகுல் டிராவிட்டாக இருந்தாலும், கங்குலியாக இருந்தாலும் எதிர்காலத்தில் யாராக இருந்தாலும் நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். நான் அதை செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை இந்தியா வெல்ல யுவராஜ்சிங் முக்கிய காரணமாக இருந்தார். இந்த போட்டி தொடரில் தான் யுவராஜ் சிங் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 6 சிக்சர் அடித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில், பேட்ஸ்மேன்களில் இந்திய கேப்டன் விராட் கோலி 5- வது இடத்திலும், ரிஷப் பண்ட் மற்றும் ரோகித் சர்மா கூட்டாக இணைந்து 6-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

347 பந்துகளில் 200 ரன்கள் எடுத்த நியூசிலாந்தின் டெஸ்ட் அறிமுக வீரர் டேவன் கான்வே டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 447 புள்ளிகளுடன் 77-வது இடத்தில் நுழைந்துள்ளார். நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சன் 895 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் நடந்து வருகின்றன. தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
நேற்றிரவு நடந்த மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் செக் குடியரசை சேர்ந்த பார்போரா கிரெஜ்சிகோவா, கிரீஸ் நாட்டின் மரியா சக்காரி ஆகியோர் மோதினர்.
போட்டியின் ஆரம்பம் முதலே இருவரும் சிறப்பாக ஆடினர். முதல் செட்டில் 5-5 என்ற கணக்கில் போட்டி ‘டை’ ஆகி இருந்தது. அதன்பின், முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் கிரெஜ்சிகோவா கைப்பற்றினார்.
இதனால் சுதாரித்துக் கொண்ட சக்காரி இரண்டாவது செட்டை அதிரடியாக ஆடி 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் இரு வீராங்கனைகளும் முழு திறமையை வெளிப்படுத்தினர்
ஒரு கட்டத்தில் 7-7 என்ற கணக்கில் போட்டி ‘டை’ ஆகி விறுவிறுப்பு ஏற்படுத்தியது. ஆனாலும், கிரெஜ்சிகோவா கடும் போராட்டத்துக்கு பிறகு 3வது செட்டை தன்வசப்படுத்தினார்.
இறுதியில், கிரெஜ்சிகோவா 7-5, 4-6, 9-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் அனஸ்தசியா பாவ்லியூசெங்கோவா மற்றும் செக் குடியரசின் கிரெஜ்சிகோவா ஆகியோர் மோதுகின்றனர்.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இந்நிலையில், பெர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டனில் இரண்டாவது டெஸ்ட் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி ஆகியோர் களமிறங்கினர். இருவ்ரும் நிதானமாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 72 ரன்கள் சேர்த்தது. சிப்லி 35 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கிராலே டக் அவுட்டானார். கேப்டன் ஜோ ரூட் 4 ரன்னிலும், ஒல்லி போப் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் ரோரி பர்ன்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 81 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. லாரன்ஸ் 67 ரன்னுடனும், மார்க் வுட் 16 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
நியூசிலாந்து சார்பில் போல்ட், ஹென்றி, படேல் தலா 2 விக்கெட்டும், நீல் வாக்னர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.


ரோம்:
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு அடுத்த மிகவும் பிரசித்தி பெற்றது ஐரோப்பிய கோப்பை போட்டியாகும்.
உலக கோப்பையை போலவே ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.
“யூரோ” கோப்பை என்று அழைக்கப்படும் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி 1960-ம் ஆண்டு பிரான்சில் முதல் முறையாக நடந்தது. இதில் சோவியத் யூனியன் 2-1 என்ற கோல் கணக்கில் யூகோசுலாவியாவை வீழ்த்தி முதல் ஐரோப்பிய சாம்பியன் ஷிப் பட்டத்தை கைப்பற்றியது.
இதுவரை 15 யூரோ கோப்பை போட்டி நடந்துள்ளது. இதில் ஜெர்மனி (1972, 1980, 1996), ஸ்பெயின் (1964, 2008, 2012) ஆகிய அணிகள் அதிகபட்சமாக தலா 3 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.
பிரான்ஸ் 2 தடவை (1984, 2000) கோப்பையை வென்றுள்ளது. சோவியத் யூனியன் (1960), இத்தாலி (1968), செக்குடியரசு (1976), நெதர்லாந்து (1988), டென்மார்க் (1992), கிரீஸ் (2004), போர்ச்சுக்கல் (2016) ஆகிய நாடுகள் தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.
கடைசியாக யூரோ கால்பந்து போட்டி 2016-ம் ஆண்டு பிரான்சில் நடந்தது. இதில் போர்ச்சுக்கல் கோப்பையை கைப்பற்றியது. 16-வது ஐரோப்பிய கால்பந்து போட்டி கடந்த ஆண்டு நடைபெற வேண்டியது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் 16-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நாளை (11-ந்தேதி) தொடங்குகிறது. ஜூலை 11-ந்தேதி வரை ஒரு மாத காலம் இந்த போட்டி நடக்கிறது.
யூரோ கோப்பை போட்டியில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் வருமாறு:-
குரூப் ஏ:- துருக்கி, இத்தாலி, வேல்ஸ், சுவிட் சர்லாந்து.
குரூப் பி:- டென்மார்க், பின்லாந்து, பெல்ஜியம், ரஷியா.
குரூப் சி:- நெதர்லாந்து, உக்ரைன், ஆஸ்திரியா, வடக்கு மாசி டோனியா.
குரூப் டி:- இங்கிலாந்து, குரோஷியா, ஸ்காட்லாந்து, செக்குடியரசு.
குரூப் இ:- ஸ்பெயின், சுவீடன், போலந்து, சுலோ வாக்கியா.
குரூப் எப்:- அங்கேரி, போர்ச்சுக்கல், பிரான்ஸ், ஜெர்மனி.
இத்தாலி தலைநகர் ரோமில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள துருக்கி- இத்தாலி அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். 6 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறும். ஒவ்வொரு பிரிவிலும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகளில் சிறந்த 4 அணிகளும் 2-வது சுற்றுக்கு முன்னேறும்.
வருகிற 23-ந்தேதி வரை லீக் ஆட்டங்கள் நடக்கிறது. 2-வது சுற்று ஆட்டங்கள் 26 முதல் 29-ந்தேதி வரையிலும், கால் இறுதி ஆட்டங்கள் ஜூலை 2 மற் றும் 3-ந்தேதிகளிலும், அரை இறுதி 6 மற்றும் 7-ந்தேதி களிலும் நடக்கிறது. இறுதி போட்டி ஜூலை 11-ந்தேதி லண்டனில் நடக்கிறது.
யூரோ கோப்பை போட்டிகள் லண்டன் (இங்கிலாந்து), ரோம் (இத்தாலி), பகு (அசர்பெய்ஜான்), முனிச் (ஜெர்மனி), செயின்ட் பீட்டர்ஸ் பர்க் (ரஷியா), ஆம்ஸ்டர்டாம் (நெதர் லாந்து), புகாரெஸ்ட் (ருமேனியா), புடாபெஸ்ட் (அங்கேரி), கோபன்ஹேகன் (டென்மார்க்), கிளாஸ்கோ (ஸ்காட்லாந்து), செவில்லி (ஸ்பெயின்) ஆகிய 11 நகரங்களில் போட்டி நடக்கிறது.
லண்டன் வெம்பர்லி மைதானத்தில் இறுதிப்போட்டி, 2 அரை இறுதி, 2-வது சுற்று ஆட்டம் மற்றும் லீக் ஆட்டங்கள் நடக்கிறது.
ஏற்கனவே வென்ற நாடு கோப்பையை வெல்லுமா? புதிய அணி சாம்பியன் பட்டம் பெறுமா? என்ற ஆவலுடன் ரசிகர்களால் எதிர்ர்க்கப்படுகிறது. இதில் விளையாடும் அனைத்து நாடுகளும் திறமையானது. இதனால் இந்த போட்டி தொடர் விறுவிறுப்பாக இருக்கும்.
ஐரோப்பிய கால்பந்து போட்டி சோனி டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.



ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் டிங்கோசிங் கடந்த 2017-ம் ஆண்டு முதல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் 42 வயதான டிங்கோசிங் இன்று உயிரிழந்தார். மணிப்பூரை சேர்ந்த அவர் 1998-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றார். அதேஆண்டு அர்ஜூனா விருதையும், 2013-ல் பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருந்தார்.






