search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்சைனை பாராட்டும் சக வீரர்
    X
    இன்சைனை பாராட்டும் சக வீரர்

    யூரோ கோப்பை - துருக்கியை 3-0 என வீழ்த்தியது இத்தாலி

    யூரோ கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கி ஜூலை 11-ம் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெறுகிறது.
    ரோம்:

    ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. யூரோ கோப்பை போட்டியில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    இத்தாலியின் ரோம் நகரில் நேற்று தொடங்கிய முதல் லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள துருக்கி, இத்தாலி அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடின. இதனால் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இரண்டாவது பாதியில் துருக்கி வீரர் 53-வது நிமிடத்தில் ஓன் கோல் அடித்தார். இதையடுத்து இத்தாலி அணி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இம்மொபைல் 66-வது நிமிடத்திலும், இன்சிக்னே 79-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

    துருக்கி அணியால் பதிலுக்கு ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில், இத்தாலி அணி 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
    Next Story
    ×