என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வலியுடன் பங்கேற்று தான் பதக்கம் வென்றேன் என்று இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா கூறினார்.
    புதுடெல்லி:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த ஜூன் மாதத்தில் ஏற்பட்ட இந்த காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இதனால் அவர் நார்வேயில் வருகிற அக்டோபர் 2-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட முடியாது.

    இது குறித்து பஜ்ரங் பூனியா கூறுகையில், ‘முழங்காலில் ஏற்பட்ட தசைநார் கிழிவை சரிப்படுத்துவதற்காக உடற்பயிற்சியை 6 வாரம் மேற்கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். எனவே உலக சாம்பியன்ஷிப் போட்டியில் என்னால் பங்கேற்க முடியாது.

    இந்த ஆண்டில் உலக சாம்பியன்ஷிப் தவிர வேறு முக்கியமான போட்டியில்லை. இந்த சீசனில் மற்ற போட்டிகளில் பங்கேற்கும் எண்ணம் எனக்கு கிடையாது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வலியுடன் பங்கேற்று தான் பதக்கம் வென்றேன்’ என்றார்.

    வெஸ்ட் இண்டீசுடனான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தானின் ஷஹீன் அப்ரிடி 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    ஜமைக்கா:

    வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
    பவாத் ஆலம் 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் பாபர் அசாம் அரை சதமடித்து 75 ரன்னில் அவுட்டானார்.
    பஹீம் அஷ்ரப் 26 ரன்னிலும், ரிஸ்வான் 31 ரன்னிலும் அவுட்டாகினர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 3 விக்கெட், சீலஸ் 3 விக்கெட்டும், ஹோல்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.  

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க வீரர்கள் விரைவில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். 3-ம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. பானர் 18 ரன்னுடனும், அல்ஜாரி ஜோசப் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், நான்காம் ஆட்டம் நடைபெற்றது. தொடக்கம் முதலே பாகிஸ்தான் அணியினர் சிறப்பாக பந்து வீசினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திணறினர்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் அதிகபட்சமாக பானர் 37 ரன்னும், பிளாக்வுட் 33 ரன்னும், ஹோல்டர் 26 ரன்னும் எடுத்தனர்.

    ஆட்டமிழந்த கிரண் பாவெல்

    பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 6 விக்கெட்டும், மொகமது அப்பாஸ் 3 விக்கெட்டும், பஹீம் அஷ்ரப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 152 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. ஆரம்பம் முதல் பாகிஸ்தான் வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் ரன் வேகம் அதிகரித்தது.

    அணியின் எண்ணிக்கை 70 ஆக இருக்கும்போது தொடக்க ஆட்டக்காரர் அபித் அலி 27 ரன்னில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து இம்ரான் பட் 37 ரன்னில் வெளியேறினார்.  அசார் அலி 22 ரன்னும், ஹசன் அலி 17 ரன்னும், பஹீம் அஷ்ரப் 9 ரன்னும், பாபர் அசாம் 33 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. 

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஹோல்டர் தலா 2 விக்கெட்டும், பிராத்வெயிட், கைல் மேயர்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    இதைத்தொடர்ந்து, 329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் பிராத்வெயிட், கிரண் பாவெல் களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் எண்ணிக்கை 39 ஆக இருக்கும்போது பாவெல் 23 ரன்னில் அவுட்டானார்.

    நான்காம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. பிராத்வெயிட் 17 ரன்னும், அல்ஜாரி ஜோசப் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இறுதி நாளில் 280 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.
    போலந்து விமான நிலையத்தில் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு தூதரக நிர்வாக அதிகாரி பங்கஜ் கர்க் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    கன்னியாகுமரி:

    காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் போலந்து நாட்டுக்கு சென்றுள்ளனர். அவர்கள் வருகையின் போது அவர்களை வரவேற்று உதவிகள் செய்யுமாறு கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், போலந்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார். 

    அந்த கோரிக்கையை ஏற்று தூதரக அதிகாரிகள், நேற்று இந்திய வீரர்கள் அங்கு சென்று அடைந்தவுடன் விமான நிலையத்தில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தனர். தூதரக நிர்வாக அதிகாரி பங்கஜ் கர்க்  தலைமையில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    காயம் காரணமாக இங்கிலாந்து பந்து வீச்சாளர் மார்க் வுட் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
    லண்டன்:

    இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளிடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.  இதில்  முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனது.  லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

    இதையடுத்து, நாளை மறுநாள் (25-ம்தேதி)  மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. 2-வது டெஸ்டில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, அடுத்த மூன்று டெஸ்டுகளிலும் வென்று 4-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றும் உத்வேகத்துடன் இருக்கிறது.

    எப்படியாவது 3-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. இந்த நிலையில்  வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஏற்கனவே காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், மார்க் வுட் தற்போது விலகியுள்ளது இங்கிலாந்து அணிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வருண் சக்கரவர்த்தியிடம் ஏதோ ஒரு சிறப்பம்சம் உள்ளது. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு அவர் தேவை என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
    ஐக்கிய அரபு அமீரகத்தில்  டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 17-ந்தேதி முதல் நவம்பர் 14-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

    இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும். இந்திய அணியில் யாருக்கெல்லாம் இடம் கிடைக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனுமான தினேஷ் கார்த்திக் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டேரன் சமியுடன்  உலகக்கோப்பை தொடரில் பங்குபெறும் இந்திய அணி குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

    வருண் சக்கரவர்த்தி

    அப்போது தினேஷ் கார்த்திக் கூறுகையில்,  ‘நடக்க இருக்கிற டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கண்டிப்பாக வருண் சக்கரவர்த்தியை சேர்க்க வேண்டும். வருண் சக்கரவர்த்தியின் பந்து வீச்சில் ஒரு தனித்துவம் இருக்கிறது.  அவருடைய திறமையில் ஒரு வெற்றி ஒளி தெரிகிறது. அவர் நிச்சயமாக இந்திய அணிக்கு மிகச் சிறந்தவராக இருப்பார். வருண் சக்கரவர்த்தி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்.  இந்திய அணி தொடரில் முன்னோக்கிச் செல்ல முக்கிய பங்காற்றுபவராக இருப்பார். அவரது பெயரை ஞாபகம் வைத்துக் கொள்ளவும்’’ என்றார்.

    மேலும், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப் போட்டியில் மோதுவதை விரும்புகிறேன்’’ என்றார்.
    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை தொடங்க உள்ள பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது.
    டோக்கியோ:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும். கடந்த 1948 ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவு மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். அதற்கு அடுத்து 1960-ல் 23 நாடுகளில் இருந்து 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதன் தொடர்ச்சியாக 2012 லண்டன் பாராலிம்பிக்கில் 100 நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் உடல் பாதிப்புக்கு ஏற்ப அவர்களுக்கான விளையாட்டுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்தன. அதைத் தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் நாளை (24-ந் தேதி) தொடங்குகிறது. செப்டம்பர் 5-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

    இதில் 163 நாடுகளில் இருந்து 4,537 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், சைக்ளிங், குதிரையேற்றம், 5 பேர் கால்பந்து, துப்பாக்கி சுடுதல், சிட்டிங் கைப்பந்து, நீச்சல், டேபிள் டென்னிஸ், வீல்சேர் கூடைப்பந்து உள்ளிட்ட 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடைபெற உள்ளது.

    பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இவ்வளவு அதிகமானோர் இதற்கு முன்பு கலந்து கொண்டது கிடையாது.

    மாரியப்பன்

    கடந்த 2016ல் ரியோ பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதலில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்றார். ஈட்டி எறிதலில் ஜகாரியாவும் தங்கம் வென்றார்.

    இவர்கள் மீது இந்த முறையும் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. மேலும் உலக சாதனையாளர்கள் சந்தீப் சவுத்ரி, சுமித் ஆகியோரும் தடகள அணியில் உள்ளனர்.

    வில்வித்தை, பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, வலு தூக்குதல் உள்பட 9 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது.

    சமீபத்தில் முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி போல பாராலிம்பிக்கிலும் கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் நாடுகளுக்கு அதிகமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு நாடுகளின் சார்பிலும் 6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்தியா சார்பில் 5 வீரர்கள், 6 அதிகாரிகள் என 11 பேர் மட்டுமே தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

    தமிழக வீரர் மாரியப்பன் தொடக்க விழா அணிவகுப்பின் போது தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். அவரை தவிர வினோத்குமார் (வட்டு எறிதல்) தேக்சந்த் (ஈட்டி எறிதல்), ஜெய்தீப், சகினா (வலு தூக்குதல்) ஆகியோரும் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
    மூன்று துறைகளிலும் ஜொலிக்க வேண்டுமென்றால், ஹர்திக் பாண்ட்யா தனது உடலை சற்று பருமனாக்க வேண்டும் என சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிகெட்டின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என எதுவாக இருந்தாலும் களத்தில் இறங்கி அசத்தி வந்தார்.

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20  தொடரின்போது முதுகில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பிறகு காயத்தை கருத்தில் கொண்டு பேட்டிங் மட்டும் செய்து வந்தார்.

    பந்து வீச்சில் முன்னதாக செயல்பட்டதுபோல் அவரால் செயல்பட முடியவில்லை. பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் மீண்டும் ஜொலிக்க ஹர்திக் பாண்ட்யா  என்ன செய்ய வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் இடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    ஹர்திக் பாண்ட்யாவின் முக்கிய பிரச்சினை அவர் ஒல்லியாக இருப்பதுதான். அறுவை சிகிச்சைக்குப்பின் பந்து வீச்சால் கூடுதல் சுமையை அவரது உடலால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் ஹர்திக் பாண்ட்யா உடலை சற்று பருமனாக்க வேண்டும்.

    இந்தியா அவர் மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்தது. ஆனால், அவர் நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்ததால். பேட்டிங்கில் அவர் சிறப்பாக தெரிகிறார். அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு முன் பந்து வீச்சில் போதுமான வேகத்துடன் செயல்திறன் கொண்டவராக இருந்தார். கூடுதலாக முயற்சி மேற்கொள்வதற்கு அவர் ஒல்லியாக இருப்பது தடையாக உள்ளது.

    இவ்வாறு சல்மான் பட் தெரிவித்தார்.
    ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் பல்வேறு நாடுகள் தங்களின் தூதர்கள், குடிமக்களை வெளியேற்றி வருகின்றன.
    காபூல்:

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் பணியில் இருந்த அமெரிக்க ராணுவ வீரரின் படத்தை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    அந்தப் படத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் முக சாயலுடன் ஒத்துப்போவதைக் கண்டனர். இதையடுத்து, அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களிலும் பலர் தங்களுக்கு பிடித்த கமெண்டகளை பதிவிட்டு வருகின்றனர்.

    ஸ்டீவ் ஸ்மித்

    அமெரிக்க ராணுவ வீரர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை போலவே இருக்கிறார் என ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு பயனர், "... இதோ உங்கள் ஆடு. அவர் தனது நேரத்தை வீணாக்கமல் உயிர்களை காப்பாற்றுகிறார்" என்றார்.

    மற்றொருவர், "ஸ்டீவ் ஸ்மித் என்ன செய்கிறார்? உண்மையில் இது பெரிய வேலை என பதிவிட்டுள்ளார்.

    அமெரிக்க ராணுவத்தில் ஸ்டீவ் ஸ்மித் என்ன செய்கிறார்? என மற்றொரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதற்கிடையே, டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் விளையாடும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
    சின்சினாட்டி ஓபன் டென்னிசில் பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டம் வென்றார்.
    அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதன் ஆண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் சுவரேவும், ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லேவும் மோதினர்.

    போட்டியின் ஆரம்பம் முதலே சுவரேவ் அதிரடியாக ஆடினார். இதனால் முதல் செட்டை 6-2 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் சுவரேவ் சிறப்பாக ஆடி 6-3 என்ற கணக்கில் வென்றார்.

    இறுதியில், சுவரேவ் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
    வெஸ்ட் இண்டீசுடனான இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தானின் பவாத் ஆலம் பொறுப்புடன் ஆடி சதமடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார்.
    ஜமைக்கா:

    வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் 3 பேர் விரைவில் பெவிலியன் திரும்பினர். இதனால் 2 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் திணறியது.

    அடுத்து இறங்கிய கேப்டன் பாபர் அசாம், பவாத் ஆலம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாபர் அசாம் அரை சதமடித்து 75 ரன்னில் அவுட்டானார். பவாத் ஆலம் 76 ரன்னில் காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார்.

    முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 74 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது. ரிஸ்வான் 22 ரன்னும், பஹீம் அஷ்ரப் 23 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.

    3 விக்கெட் எடுத்த சீலஸ்

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. பஹீம் அஷ்ரப் 26 ரன்னிலும், ரிஸ்வான் 31 ரன்னிலும் அவுட்டாகினர்.

    நவ்மான் அலி டக் அவுட்டானார். ஹசன் அலி 9 ரன்னிலும்,  ஷஹீன் அப்ரிடி 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். காயத்தில் இருந்த பவாத் ஆலம் மீண்டும் இறங்கி பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 3 விக்கெட், சீலஸ் 3 விக்கெட்டும், ஹோல்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.  

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க வீரர்கள் விரைவில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

    மூன்றாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. பானர் 18 ரன்னுடனும், அல்ஜாரி ஜோசப் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.
    சின்சினாட்டி ஓபன் டென்னிசில் ஆடவர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவும் ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லேவும் மோதுகின்றனர்.
    அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதன் பெண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஷ்லே பார்டியும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜில்டீச்மேனும் மோதினர்.

    இதில் தொடக்கம் முதலே ஆஷ்லே பார்டி சிறப்பாக விளையாடினார். இதனால் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் ஆஷ்லே பார்டி அதிரடி காட்டினார். இதனால் 6-1 என்ற கணக்கில் வென்றார்.

    இறுதியில், ஆஷ்லே பார்டி 6-3, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி அசத்தினார்.
    நீளம் தாண்டும் போட்டியில் இந்திய வீராங்கனை ஷைலி சிங்கின் தங்கப்பதக்க வாய்ப்பு 0.01 மீட்டர் வித்தியாசத்தில் நழுவியது.
    நைரோபி:

    கென்ய தலைநகர் நைரோபியில் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஷைலி சிங் (வயது 17) வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். 

    இந்த ஆண்டின் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பெறும் மூன்றாவது பதக்கம் இதுவாகும். 

    ஷைலி சிங் நீளம் தாண்டிய காட்சி

    ஷைலி சிங்கின் தங்கப்பதக்க வாய்ப்பு 0.01 மீட்டர் வித்தியாசத்தில் நழுவியது. ஷைலி சிங் 6.59 மீட்டர் நீளம் தாண்டி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அவரைவிட 0.01 மீட்டர் கூடுதலாக, அதாவது 6.60 மீட்டர் நீளம் தாண்டிய ஸ்வீடன் வீராங்கனை மஜா அஸ்காக் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். உக்ரைன் வீராங்கனை மரியா ஹோரிலோவா வெண்கலம் வென்றார்.
    ×