என் மலர்
விளையாட்டு
ஓவல்:
இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் ஒரே ஒரு பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கரரா ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியாவின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 31 ரன்னில் அவுட் ஆனார். இந்திய அணி 44.1 ஓவரில் 132 ரன் எடுத்திருந்த போது மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது. அப்போது மந்தனா 80 ரன்னுடனும் பூனம் ரவுத் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா டெஸ்டில் தனது முதல் சதத்தை அடித்தார். ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய வீரங்கனை என்ற சாதனையையும் அவர் பெற்றார். அவர் 170 பந்தில் 100 ரன்னை தொட்டார். இதில் 18 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். அதன்பின் மந்தனா 127 ரன்னிலும், புனம் ரவுத் 36 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இந்திய அணி 81 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 224 ரன் எடுத்திருந்தது.
துபாய்:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் தொடங்கும் 45-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
கொல்கத்தா 11 ஆட்டத்தில் 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும், பஞ்சாப், 11 ஆட்டத்தில் 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 6-வது இடத்திலும் உள்ளது.
பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க எஞ்சியுள்ள அனைத்து போட்டியிலும் இரு அணிகளும் வெற்றிபெற வேண்டும்.
இதனால் அந்த அணிகள் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மோத உள்ளன. இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்ஜா:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு சார்ஜாவில் நடந்த 44-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்கடித்தது.
முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 134 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சகா 44 ரன் எடுத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் 45 ரன்னும், டுபெலிசிஸ் 41 ரன்னும் எடுத்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 139 ரன் எடுத்து வென்றது. அந்த அணி பெற்ற 9-வது வெற்றி (11 ஆட்டம்) இதுவாகும். இதன் மூலம் முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி கூறியதாவது:-
கடந்த போட்டி முடிந்த பிறகு பரிசு அளிப்பு விழாவில் நான் பேசும்போது, நாங்கள் வலுவாக திரும்பி வர வேண்டும் என்று கூறினேன். அதிலிருந்து நீங்கள் கற்று கொண்டிருக்க வேண்டும். முதல் கட்ட ஐ.பி.எல். போட்டியில் கூட அதை நாங்கள் செய்தோம்.
ஒவ்வொரு பாராட்டும் வீரர்கள் மற்றும் அணி ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த ஆடுகளம், பந்து திரும்பும் வகையில் இல்லை. ஆனால் நல்ல பவுன்ஸ் இருந்தது. பந்து வீச்சாளர்கள், வேகத்தையும், சரியான அளவிலும் வீசினர்.இதை தான் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு கூறினேன்.
அந்த திட்டத்தை சரியாக செயல்படுத்தினர். ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் நன்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். நாங்கள் ரசிகர்களை பற்றி பெருமைப்படுகிறோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக நான் பெருமையுடன் சொல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.



துபாய்:
ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூர் அணி 7-வது வெற்றியை பெற்றது.
துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்தது. இதனால் பெங்களூர் அணிக்கு 150 ரன் இலக்காக இருந்தது.
இவின் லீவிஸ் 37 பந்தில் 58 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), ஜெய்ஷ்வால் 22 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டும், யசுவேந்திர சாகல், சபாஷ் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 17.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேக்ஸ்வெல் 30 பந்தில் 50 ரன்னும் (6 பவுண்டரி 1 சிக்சர்), ஸ்ரீகர் பரத் 35 பந்தில் 44 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.
பெங்களூர் அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 7-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 8 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.
இந்த ஆட்டத்தில் 3 விக்கெட் கைப்பற்றியதன் மூலம் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீரர் ஹர்ஷல் பட்டேல் 26 விக்கெட்டை எடுத்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். 11 ஆட்டத்தில் அவர் 26 விக்கெட் எடுத்துள்ளார். இதன்மூலம் ஹர்ஷல் பட்டேல் ஐ.பி.எல். போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச போட்டியில் விளையாடாத ஒருவர் ஐ.பி.எல்.லில் அதிக விக்கெட் சாய்த்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் இதே பெங்களூர் அணியை சேர்ந்த யசுவேந்திர சாகல் 23 விக்கெட் கைப்பற்றி இருந்தார். அதை ஹர்ஷல் பட்டேல் முறியடித்தார்.
ஒரு சீசனில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய வீரராக பிராவோ உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான அவர் 2013 ஐ.பி.எல்.லில் 32 விக்கெட் கைப்பற்றினார். அவரது சாதனையை நோக்கி ஹர்ஷல் பட்டேல் செல்கிறார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், பயிற்சியின்போது வலது கால்முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார்.
இந்த நிலையில் கால்முட்டி காயத்தை சரிசெய்ய அவருக்கு நேற்று ஆபரேஷன் செய்யப்பட்டது. ‘ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது. காயத்தில் இருந்து மீள்வதற்கான மருத்துவம் மற்றும் பயிற்சி நடைமுறைகள் தொடங்கியுள்ளன.
இந்த சமயத்தில் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. முழுமையாக குணமடைந்து மிக விரைவில் களம் திரும்ப விரும்புகிறேன்’ என்று குல்தீப் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.






