என் மலர்
விளையாட்டு


புதுடெல்லி:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது.
20 ஓவர் உலக கோப்பை முடிந்த பிறகே நியூசிலாந்து அணி இந்தியா வந்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது.
20 ஓவர் போட்டிகள் நவம்பர் 17, 19 மற்றும் 21-ந் தேதிகளில் ஜெய்ப்பூர், ராஞ்சி, கொல்கத்தா ஆகிய இடங்களில் நடக்கிறது. இதைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் நவம்பர் 25-29 வரை கான்பூரிலும், 2-வது டெஸ்ட் டிசம்பர் 3-7 மும்பையிலும் நடக்கிறது.
இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தொடர்ந்து பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால் கேப்டன் விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷல் படேல், வெங்கடேஷ் அய்யர் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவி காலம் 20 ஓவர் உலக கோப்பையுடன் முடிகிறது. இதனால் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் ஏற்கனவே இந்திய ஜூனியர், இந்திய ஏ அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமிக்கு தலைவராகவும் உள்ளார். இலங்கை சென்ற இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் சமீபத்தில் பயிற்சியாளர் பொறுப்பை வகித்தார்.நியூசிலாந்து தொடருக்கு பிறகு அவர் முழுநேர பயிற்சியாளராக நியமிக்கப்படலாம்.
கிறிஸ் கெய்ல் சமீப காலமாக சரியாக ஆடவில்லை. அதனால் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் ஆடும் லெவனில் அவரை சேர்ப்பதில் முன்னுரிமை அளிக்கக்கூடாது என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கார்ட்லி அம்புரோஸ் சமீபத்தில் கூறியிருந்தார்.
இதனால் கோபமடைந்துள்ள அதிரடி வீரர் 42 வயதான கிறிஸ் கெய்ல், ‘ மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அம்புரோஸ் இவ்வாறு விமர்சிக்கிறாரா? என்பது தெரியவில்லை.
அவர் மீது எனக்கு எந்த மரியாதையும் கிடையாது. எப்போது அவரை பார்த்தாலும் எதிர்மறையாக பேசுவதை நிறுத்திவிட்டு அணிக்கு ஆதரவு கொடுங்கள் என்று கூறுவேன். மற்ற முன்னாள் வீரர்கள் தங்களது அணிக்கு ஆதரவு அளிக்கிறார்கள். இதே போல் 20 ஓவர் உலக கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் எங்களுக்கு ஏன் முன்னாள் வீரர்கள் ஆதரவு அளிக்கக்கூடாது?’ என்றார்.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மகுடத்துக்கான இறுதிப்போட்டி துபாயில் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு அரங்கேறுகிறது. இதில் முன்னாள் சாம்பியனான டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அல்லது டெல்லி கேப்பிட் டல்சை எதிர்கொள்கிறது.புள்ளி பட்டியலில் 18 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்த சென்னை அணி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை தோற்கடித்து 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது. அந்த ஆட்டத்தில் கேப்டன் டோனி கடைசி ஓவரில் 3 பவுண்டரி விளாசியது, ரசிகர்களை பரவசப்படுத்தியது. அதே போன்று இறுதிப்போட்டியிலும் கலக்குவாரா? என்ற எதிர்பார்ப்பு இப்போதே தொற்றிக் கொண்டு விட்டது.
சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் (603 ரன்), பாப் டு பிளிஸ்சிஸ் (547 ரன்) பேட்டிங்கில் முதுகெலும்பாக திகழ்கிறார்கள். ருதுராஜ் இன்றைய ஆட்டத்தில் 24 ரன்கள் எடுத்தால் அதிக ரன் குவிப்புக்கான ஆரஞ்சு நிற தொப்பியை லோகேஷ் ராகுலிடம் (626 ரன்) இருந்து தட்டிப்பறித்து விடுவார். பவுலிங்கில் தீபக் சாஹரின் பந்து வீச்சு கொஞ்சம் பலவீனமாக தென்படுகிறது. கடந்த 5 ஆட்டங்களில் 2 விக்கெட் மட்டுமே எடுத்துள்ள அவர் தொடக்க கட்ட பவுலிங்கில் ஜொலிக்க வேண்டியது அவசியமாகும்.
சென்னை அணி இந்த சீசனில் 2-வது பேட்டிங் செய்த ஆட்டங்களில் தோற்றதில்லை. 6 முறை வெற்றிகரமாக சேசிங் செய்திருக்கிறது. அதனால் டாஸ் ஜெயித்தால் 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். நெருக்கடியை சாதுர்யமாக கையாளும் டோனியின் கேப்டன்ஷிப்பில் சென்னை அணி 4-வது முறையாக (ஏற்கனவே 2010, 2011, 2018-ம் ஆண்டுகளில் பட்டம் வென்றுள்ளது) பட்டத்தை உச்சிமுகருமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
போட்டிக்கான பரிசுத்தொகை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் கடந்த ஆண்டு போன்றே கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.10 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.6¼ கோடியும் வழங்கப்படும் என்று தெரிகிறது.
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.






