என் மலர்
விளையாட்டு

ராஜ்கோட்:
குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா அணியை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் அவி பரோட். 29 வயதான அவர் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு அவர் கேப்டனாக இருந்துள்ளார். அவரது தலைமையில் 2019-2020 சீசனில் சவுராஷ்டிரா அணி ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவி காலம் 20 ஓவர் உலக கோப்பையுடன் முடிகிறது.
20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்து உள்ளார்.
ஐ.பி.எல். இறுதிப்போட்டி துபாயில் நேற்று நடந்தது. இந்த போட்டிக்கு பிறகு கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் ராகுல் டிராவிட்டை சந்தித்தனர். அப்போது அவர் பயிற்சியாளராக இருக்க ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, ராகுல் டிராவிட் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராவது உறுதியாகி விட்டது. அவர் விரைவில் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என்றார்.
ராகுல் டிராவிட் 2023 வரை இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருப்பார். பந்துவீச்சு பயிற்சியாளராக பிராஸ் மாம்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.
டிராவிட் ஏற்கனவே இந்திய ஜூனியர், இந்திய ஏ அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.
துபாய்:
ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.
இந்த வெற்றிக்கு பிறகு சி.எஸ்.கே. கேப்டன் டோனி நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் ஏற்கனவே உங்களிடம் தெரிவித்து விட் டேன். அடுத்த ஆண்டு சீசனுக்கு இரு அணிகள் புதியதாக வருகின்றன. எனவே சி.எஸ்.கே. அணிக்கு எது சிறந்ததாக முடிகிறதோ அந்த முடிவை எடுப்போம். எந்த காரணத்தினாலும், நிர்வாகம் பாதிக்கப்படக் கூடாது.
தக்க வைக்கப்படும் வீரர்களில் நான் இருப்பேனா என்று தெரியாது. வலிமையான வீரர்களை கொண்ட அணி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு சிறப்பாக பங்களிப்பு செய்யக்கூடிய வலிமையான அணியை உருவாக்க வேண்டும்.
அடுத்த ஆண்டு ஐ.பி.எல். சீசனில் நான் விளையாடுவது என்பது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவில் இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எது சிறந்ததோ அந்த முடிவை எடுப்போம். அணி நிர்வாகம் பாதிக்கப்படக்கூடாது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாடினார்கள். அதே நேரத்தில் கோப்பையை வெல்ல நாங்கள் தகுதியானவர்கள். நாங்கள் வீரர்களை மாற்றி அமைத்தோம். சில போட்டிகளின் வெற்றிக்கு பின் மேட்ச் வின்னர்கள் கிடைத்தார்கள்.
ஒவ்வொரு இறுதிப்போட்டியும் சிறப்பானது. புள்ளி விவரங்களை பார்த்தால் நாங்கள் இறுதிப் போட்டியில் பலமுறை கோட்டையை விட்டுள்ளோம். அதற்காக நாங்கள் அதிகம் கவனம் செலுத்தவில்லை. பயிற்சியின்போது என்ன பேசுகிறோமோ அதுவே எங்களின் மீட்டிங்காக இருந்தது.
எங்களின் பயிற்சிகள் சிறப்பாகவே இருந்துள்ளன. நாங்கள் எங்கு விளையாடினாலும் ரசிகர்கள் ஆதரவாக இருந்தார்கள். அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தென் ஆப்பிரிக்காவில் விளையாடியபோதும் சி.எஸ்.கே. ரசிகர்கள் திரண்டுவந்து ஆதரவு தெரிவித்தார்கள். அனைவருக்கும் நன்றி.
நாங்கள் துபாயில் விளையாடினாலும், சென்னையில் விளையாடியதுபோல் உணர்கிறோம். சென்னை ரசிகர்களுக்காக விரைவில் சென்னை வருவோம் என்று நம்புகிறேன்.
இவ்வாறு டோனி கூறினார்.








