என் மலர்
விளையாட்டு
சூப்பர் 12 குரூப் போட்டிக்கு முன்னேறுவதற்கான தொடக்க சுற்றில் அயர்லாந்து, இலங்கை அணிகள் வெற்றி பெற்றன.
டி20 உலகக்கோப்பையின் தொடக்க சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின. இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் அயர்லாந்து- நெதர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 20 ஓவரில் 106 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.
பின்னர் 107 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களம் இறங்கியது. பால் ஸ்டிர்லிங் (30), காரேத் டெலானி (44) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தில் 15.1 ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் நமீபியா- இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 96 ரன்னில் சுருண்டது. பின்னர் 97 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்தது. 26 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது.

அதன்பின் வந்த பனுகா ராஜபக்சே 27 பந்தில் 42 ரன்கள், அவிஷ்கா பெர்னாண்டோ 28 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க இலங்கை 13.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
எம்.எஸ். டோனி இல்லாமல் சி.எஸ்.கே. இல்லை, சி.எஸ்.கே. இல்லாமல் எம்.எஸ். டோனி இல்லை என அணி உரிமையாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடந்த 2020 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. ஆனால் இந்த முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியதுடன், புள்ளிகள் பட்டியலில் 2-வது இடம் பிடித்தது.
தகுதிச்சுற்று 1-ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியையும், இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை அணியின் வெற்றி சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றி விழாவாக கொண்டாடப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்ரீனிவாசன் கூறுகையில் ‘‘டோனி இல்லாமல் சி.எஸ்.கே. கிடையாது. சி.எஸ்.கே. இல்லாமல் டோனி கிடையாது. பி.சி.சி.ஐ. விதிமுறைகளின்படி வீரர்களை தக்கவைப்போம்.

சி.எஸ்.கே. வெற்றியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றி விழாவாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம். வெற்றி விழாவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குவார். அவரது கையில் வெற்றிக்கோப்பையை கொடுத்து டோனி வாழ்த்து பெறுவார்’’ என்றார்.
31-வது தேசிய ஜூனியர் எறிப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கான தமிழக அணிகளை தமிழ்நாடு எறிப்பந்து சங்க தலைவர் அறிவித்துள்ளார்.
31-வது தேசிய ஜூனியர் எறிப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூரில் நடக்கிறது. இந்தப்போட்டிக்கான தமிழக அணிகளை தமிழ்நாடு எறிப்பந்து சங்க தலைவர் டி.பாலவிநாயகம் அறிவித்து உள்ளார். அணி விவரம்:
ஆண்கள்:- சிவபிரசாத் (கேப்டன்), ஜோதீஸ்வரன், பிரவின், ஹேம்நாத் (சென்னை), வீரராகவன், ஹர்மான்(திருவள்ளூர்), யோகேஷ்வரன், விக்னேஷ், மனோ (திண்டுக்கல்), அருண்குமார், ஜிஸ்னு, கிஷோர் (நீலகிரி), ரமணிதரன் (கரூர்), லோகேஸ்வரன் (திருவண்ணாமலை).
பெண்கள்:- பியூலா ஜாய்ஸ் (கேப்டன்), மாலினி, வர்ஷா (செங்கல்பட்டு), இளவேனில், பத்மினி, தீக்ஷிதா (சென்னை), ஜெசிந்த் கிப்டி, ஹர்சிதா, பிரியதர்ஷினி (திருவள்ளூர்), இவாஞ்சல் அலின், சஹானா (திண்டுக்கல்), பூஜா (கரூர்), மணிஸ்ரீ (மதுரை), மோனிஷா (திருவண்ணாமலை).

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி வக்கீல் ஒருவர் அரியானா போலீசில் புகார் அளித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். இவர் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் வீடியோவில் யுஸ்வேந்திர சாகலுடன் பேசிய போது சாதி ரீதியிலான சில வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி வக்கீல் ஒருவர் அரியானா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படியுங்கள்... டெல்லி, உத்தரகாண்ட் மாநிலங்களில் கனமழை- பத்ரிநாத் யாத்திரை நிறுத்தம்
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான 2-வது சுற்றில் நேரடியாக விளையாடும் இந்திய அணி குரூப் 2 பிரிவில் உள்ளது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 24-ந்தேதி எதிர்கொள்கிறது.
துபாய்:
இந்திய அணிக்கு 2 உலக கோப்பையை வென்று பெருமை சேர்த்தவர் மகேந்திரசிங் டோனி.
அவரது தலைமையிலான இந்திய அணி 2007-ல் 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ல் ஒருநாள் போட்டி உலக கோப்பையையும் கைப்பற்றியது. அதோடு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியையும் பெற்றுக்கொடுத்தார்.
சர்வதேச போட்டியில் இருந்து கடந்த ஆண்டு ஓய்வுபெறுவதாக அறிவித்த டோனி தற்போது ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். சமீபத்தில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4-வது ஐ.பி.எல். கோப்பையை வென்று கொடுத்தார்.
இதற்கிடையே ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக 40 வயதான டோனி நியமிக்கப்பட்டு உள்ளார்.
டோனியின் அறிவுரை, தந்திரமான முடிவு இந்திய அணிக்கு தேவைப்படுவதால் அவரை கிரிக்கெட் வாரியம் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து உள்ளது. அதன்படி அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் டோனி இந்திய அணியோடு இணைந்து கொண்டார். ஐ.பி.எல். போட்டியை முடித்த பிறகு அவர் நாடு திரும்பாமல் அங்கேயே தங்கி இருந்தார். 20 ஓவர் உலக கோப்பை போட்டி அங்கு நடைபெறுவதால் அவர் இந்திய அணியோடு சேர்ந்து கொண்டார். பயிற்சியின் போது டோனியின் ஆலோசனை இந்திய வீரர்களுக்கு பயன் உள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2-வது சுற்றில் நேரடியாக விளையாடும் இந்திய அணி குரூப் 2 பிரிவில் உள்ளது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 24-ந்தேதி எதிர்கொள்கிறது. நியூசிலாந்துடன் 31-ந் தேதியும், ஆப்கானிஸ்தானுடன் நவம்பர் 3-ந் தேதியும், தகுதி சுற்று அணிகளுடன் 5 மற்றும் 8-ந் தேதிகளிலும் விளையாடுகிறது.
20 ஓவர் உலககோப்பை போட்டிக்கு முன் இந்திய அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்திய அணி இங்கிலாந்துடன் மோதும் முதல் பயிற்சி ஆட்டம் துபாயில் இன்று நடக்கிறது.

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஸ்காட்லாந்து அணியின் கிறிஸ் கிரீவ்ஸ் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
அல் அமீரத்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின. இந்த சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன.
இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கிறிஸ் கிரீவ்ஸ் 45 ரன்கள் அடித்தார்.
வங்கதேசம் சார்பில் மஹதி ஹசன் 3 விக்கெட்டும், ஷாகிப் அல் ஹசன், முஸ்தாபிகுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கியது. முஷ்பிகுர் ரஹிம் ஓரளவு தாக்குப் பிடித்து 38 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் தாக்குப் பிடிக்கவில்லை.
இறுதியில், வங்கதேசம் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஸ்காட்லாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஸ்காட்லாந்து சார்பில் பிராட்லி வீல் 3 விக்கெட்டும், கிறிஸ் கிரீவ்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஸ்காட்லாந்தின் கிறிஸ் கிரீவ்ஸ்க்கு அளிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்...சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சாதனை படைத்த ஷாகிப் அல் ஹசன்
20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 100க்கும் அதிகமான விக்கெட் மற்றும் 1000-க்கும் அதிகமான ரன்கள் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை ஷாகிப் அல் ஹசன் பெற்றுள்ளார்.
அல் அமீரத்:
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கிய நிலையில், முதல் சுற்று லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. வங்கதேசம் அணியின் ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன், 2 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம், சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இலங்கை வீரர் மலிங்காவின் சாதனையை முறியடித்தார்.
மொத்தம் 80 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள ஷாகிப் அல் அசன், மொத்தம் 108 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். மலிங்கா 107 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 100க்கும் அதிகமான விக்கெட் மற்றும் 1000-க்கும் அதிகமான ரன்கள் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை ஷாகிப் அல் ஹசன் பெற்றுள்ளார். உலக சாதனை படைத்த ஷாகிப் அல் ஹசனுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதேபோல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். இவர் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு140 ரன்கள் எடுத்துள்ளது.
அல் அமீரத்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின. இந்த சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன.
முதல் நாளான இன்று மஸ்கட்டில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் ஆட்டத்தில், 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள ஓமன் அணி பப்புவா நியூ கினியா அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இரண்டாவது ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு140 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக கிறிஸ் கிரீவ்ஸ் 45 ரன்கள் அடித்தார். ஜார்ஜ் முன்சி 29 ரன்களும், மார்க் வாட் 22 ரன்களும் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் மஹதி ஹசன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஷாகிப் அல் ஹசன், முஸ்தாபிகுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கியது.
டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்திருந்தது.
அல் அமீரத்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின. இந்த சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. முதல் நாளான இன்று மஸ்கட்டில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் ஆட்டத்தில், 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள ஓமன், பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.
டாஸ் வென்ற ஓமன் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பப்புவா நியூ கினியா அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் டோனி உரா, லீகா சியாகா இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள், அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். குறிப்பாக ஓமன் பந்துவீச்சை சிதறடித்த கேப்டன் ஆசாத் வாலா, 56 ரன்கள் குவித்தார். சார்லஸ் அமினி 37 ரன்கள் சேர்த்தார். சேஸ் பாவ் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின்னர் விக்கெட்டுகள் மளமளவெனச் சரிந்தன. இதனால் 20 ஓவர் முடிவில் பப்புவா நியூ கினியா அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் சேர்த்தது. ஓமன் தரப்பில் சீஷன் மக்சூத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி களமிறங்கியது. துவக்க வீரர்கள் அகிப் இல்யாஸ், ஜதிந்தர் சிங் ஆகியோர் அதிரடியாக ஆடி பப்புவா நியூ கினியா பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
பந்துவீச்சாளர்கள் மாறி மாறி புதிய யுக்திகளை கையாண்டும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. துவக்க வீரர்கள் இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல், 38 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியை உறுதி செய்தனர்.
ஜதிந்தர் சிங், 42 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 73 ரன்கள் விளாசினார். அகிப் இல்யாஸ், 43 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்கருடன் 50 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை ஓமன் பதிவு செய்துள்ளது.
பப்புவா நியூ கினியா அணியின் துவக்க வீரர்கள் டோனி உரா, லீகா சியாகா இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
அல் அமீரத்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கியது. தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் கால்பதித்துள்ளன. எஞ்சிய 4 அணிகளை தேர்வு செய்வதற்கான முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின.
இந்த சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. முதல் நாளான இன்று மஸ்கட்டில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில், முதல் ஆட்டத்தில், 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள ஓமன் அணி, தனது சொந்த மைதானத்தில் பப்புவா நியூ கினியா அணியை எதிர்கொள்கிறது.
டாஸ் வென்ற ஓமன் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பப்புவா நியூ கினியா அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் டோனி உரா, லீகா சியாகா இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள், அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். குறிப்பாக ஓமன் பந்துவீச்சை சிதறடித்த கேப்டன் ஆசாத் வாலா, 56 ரன்கள் குவித்தார். சார்லஸ் அமினி 37 ரன்கள் சேர்த்தார். சேஸ் பாவ் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின்னர் விக்கெட்டுகள் மளமளவெனச் சரிந்தன. இதனால் 20 ஓவர் முடிவில் பப்புவா நியூ கினியா அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் சேர்த்தது. ஓமன் தரப்பில் சீஷன் மக்சூத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி களமிறங்கியது.
முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதிய பிறகு, இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
அல் அமீரத்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கியது. தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் கால்பதித்துள்ளன. எஞ்சிய 4 அணிகளை தேர்வு செய்வதற்கான முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்குகின்றன.
இந்த சுற்றில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. தலா 4 அணிகள் வீதம் இரு பிரிவுகளில் விளையாடுகின்றன. ‘ஏ’ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா, ‘பி’ பிரிவில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதிய பிறகு, இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
முதல் நாளான இன்று மஸ்கட்டில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள ஓமன் அணி, தனது சொந்த மைதானத்தில் முதல் போட்டியில் பப்புவா நியூ கினியா அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பப்புவா நியூ கினியா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் வீரராக டோனி தக்க வைக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் பங்கேற்கின்றன. இதனால் மிகப்பெரிய அளவில் ஏலம் நடைபெறும். இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் வீரராக டோனி தக்க வைக்கப்பட்டுள்ளார். இதை சி.எஸ்.கே. அணி நிர்வாகம் இன்று தெரிவித்தது.
ஒவ்வொரு அணியும் 3 வீரர்கள் வரை தக்க வைத்துக்கொள்ளலாம். சி.எஸ்.கே.வில் தக்கவைக்கப்பட்டதன் மூலம் டோனி அடுத்த ஆண்டும் அந்த அணியில் விளையாடுவார். அவர் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4-வது ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.