என் மலர்
விளையாட்டு
- சேப்பாக்கம் மைதானத்தின் பெவிலியன் பகுதி புது பொலிவுடன் தயாராகி வருகிறது.
- அடுத்த மார்ச் மாதம் இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி நடைபெற வாய்ப்பு.
இந்தியாவில் பழமை வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்றான சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பெவிலியன் உள்ளிட்ட சில பகுதிகள் இடிக்கப்பட்டு மீண்டும் புது பொலிவுடன் தயாராகி வருகிறது. விரைவில் ஸ்டேடியம் தயார் நிலைக்கு வர இருக்கிறது. இந்த மைதானத்தில் கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
இந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் இந்த மைதானத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே போல அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஒருநாள் போட்டி இங்கு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
அதற்கு முன்னதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் உள்ளூர் போட்டியான துலீப் டிராபி போட்டியை செப்டம்பர் 2-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடக்கிறது. இது தவிர ரஞ்சி டிராபி போட்டியின் சில ஆட்டங்கள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
- காமன்வெல்த் பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்தது.
- பதக்கம் வென்றவர்களை பிரதமர் மோடி தனது இல்லத்திற்கு வரவழைத்து பாராட்டினார்.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் அண்மையில் நடைபெற்று முடிந்த 22-வதுகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் உள்பட மொத்தம் 61 பதக்கம் கிடைத்தது. தனிநபரில் அதிகபட்சமாக தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் 4 பதக்கம் வென்றார். பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்தது.
காமன்வெல்த் போட்டி யில் பங்கேற்ற மற்றும் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரபூர்வ இல்லத்திற்கு வரவழைத்து பாராட்டினார். அவர்களுடன் கலந்துரையாடி னார்.
இதைத்தொடர்ந்து இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.20 லட்சமும், வெள்ளி பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.10 லட்சமும், வெண்கல பதக்கத்தை கைப்பற்றியவர்களுக்கு ரூ.7½ லட்சமும் ஊக்கத் தொகையாக இந்திய ஒலிம்பிக் சங்கம் வழங்கியது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய ஒலிம்பிக் சங்க தற்காலிக தலைவர் அனில் கண்ணா பேசியதாவது:-
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களை பாராட்டுகிறேன். 2026-ம் ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம் ஆகிய போட்டிகள் இடம்பெறுவது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திடம் இந்தியா முறையிடும். 2026-ம் ஆண்டுக்கான விளையாட்டு குழுவுக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வரும் 22-ம் தேதி டோக்கியோவில் நடக்கிறது.
- கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் பி.வி.சிந்து போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
புதுடெல்லி:
27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வரும் 22-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர், வீராங்கனைகளின் மோதல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து கடினமான பிரிவில் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில், பி.ஏ.ஐ. எனப்படும் இந்திய பேட்மிண்டன் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பி.வி.சிந்துவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் அவர் போட்டியிலிருந்து விலகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பந்தய தூரம் 48 கிலோ மீட்டர் ஆகும்.
- இந்த தூரத்தை கடக்க எடுத்துக் கொள்ளும் நேரத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் வெற்றி புள்ளிகள் வழங்கப்படும்.
சென்னை:
இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாடு சைக்கிளிங் 'லீக்' பந்தயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அண்ணாநகர் சைக்கிள்ஸ் கிளப் சார்பில் தமிழ்நாடு சைக்கிளிங் 'லீக்' (டி.சி.எல்) பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த போட்டி சென்னையை அடுத்த இருங்காட்டுர் கோட்டையில் உள்ள ஓடு தளத்தில் வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் நடக்கிறது.
இந்தியாவிலேயே முதல் முறையாக நடைபெறும் இந்த சைக்கிளிங் 'லீக்' போட்டியில் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
இந்த போட்டியில் நம்ம சென்னை ரைடர்ஸ், மெட்ராஸ் புரோ ரேசர்ஸ், ராணிப்பேட்டை ரேன் சையர்ஸ், திருச்சி ராக்போர்ட் ரைடர்ஸ், சேலம் சூப்பர் ரைடர்ஸ், கோவை பெடல்ஸ், மதுரை மாஸ் ரைடர்ஸ், குமரி ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியிலும் 8 வீரர்கள் இருப்பார்கள். பந்தய தூரம் 48 கிலோ மீட்டர் ஆகும். இந்த தூரத்தை கடக்க எடுத்துக் கொள்ளும் நேரத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் வெற்றி புள்ளிகள் வழங்கப்படும். 150 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்கிறார்கள்.
ஆண்கள் ஓபன், பெண்கள் ஓபன், 18 வயதுக்குட்பட்டோர், 14 வயதுக்குட்பட்டோர் என 5 பிரிவுகளில் பந்தயம் நடக்கிறது.
2-வது மற்றும் கடைசி சுற்று கோவையில் நடத்தப்பட இருக்கிறது. முதல் இடத்தை பிடிக்கும் அணிக்கு கோப்பையுடன் ரூ.3 லட்சம் வழங்கப்படும். 2-வது இடத்துக்கு ரூ.2 லட்சமும், 3-வது இடத்துக்கு ரூ.1 லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்படும்.
- சர்வதேச அரங்கில் மிகச் சிறப்பாக இந்திய வீரர்கள் செயல்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
- விளையாட்டுக்களில் வெற்றிக்கான புதிய வழிமுறையை இந்தியா கண்டறிந்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்ற இந்திய அணியினர், பிரதமர் மோடியை இன்று சந்தித்தனர். அவரை வரவேற்ற பிரதமர், காமன்வெல்த் விளையாட்டில் இந்திய வீரர், வீராங்கணைகளின் சாதனைகள் மிகுந்த பெருமிதம் அளிப்பதாக தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நீங்கள் அனைவரும் பர்மிங்ஹம் போட்டியில் பங்கேற்றிருந்தபோது, இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கானோர் நள்ளிரவிலும் கண் விழித்திருந்து, உங்களது ஒவ்வொரு செயல்பாட்டையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்திய அணியினரை வழியனுப்பியபோது தாம் வாக்குறுதி அளித்தபடி, இன்றைய தினம் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi interacted with the Indian contingent that participated in #CWG22, today. Union Sports Minister Anurag Thakur and MoS Sports Nisith Pramanik were also present at the occasion. #CommonwealthGames2022
— ANI (@ANI) August 13, 2022
(Source: PMO) pic.twitter.com/IpP9N9NaHJ
பல போட்டிகளில் நூல்இழையில் பதக்க வாய்ப்பை நழுவ விட்டோம். பதக்க எண்ணிக்கை என்பது செயல் திறனை முழுமையாக பிரதிபலிக்காது. முந்தைய போட்டியுடன் ஒப்பிடுகையில், 4 புதிய விளையாட்டுகளில், வெற்றிக்கான புதிய வழிமுறையை இந்தியா கண்டறிந்துள்ளது.
லான் பவுல் முதல் தடகளம் வரை, நமது வீரர்கள் அற்புதமாக விளையாடியுள்ளனர். இந்த செயல்பாடு மூலம், இதுபோன்ற புதிய விளையாட்டுக்களில் ஈடுபாடு காட்டும் சூழல், இந்தியாவில் பெருமளவு அதிகரிக்கும்.
குத்துச்சண்டை, ஜுடோ, மல்யுத்தப் போட்டிகளில் முதன்முறையாக களமிறங்கிய வீரர்கள் 31 பதக்கங்களை வென்றிருப்பது, இளைஞர்களிடையே நம்பிக்கை அதிகரித்து வருவதைப் பிரதிபலிக்கிறது.
ஒன்றுபட்ட பாரதம் உன்னத பாரதம் என்பதற்கு நமது விளையாட்டு வீரர்கள் வலிமையூட்டியுள்ளனர். விளையாட்டு மட்டுமின்றி பிற துறைகளிலும் சாதனை படைக்க வேண்டுமென்ற உணர்வை, இந்திய இளைஞர்களிடையே விளையாட்டு வீரர்கள் ஏற்படுத்தி இருக்கின்றனர்.
கேலோ இந்தியா விளையாட்டு மூலம் தங்களது திறமையை வெளிப்படுத்திய வீரர்கள், தற்போது சர்வதேச அரங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
புதிய திறமைசாலிகளை அடையாளங்கண்டு, அவர்கள் பதக்கம் வெல்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
உலகிலேயே மிகச்சிறந்த, அனைத்தையும் உள்ளடக்கிய, பன்முகத்தன்மை மற்றும் ஆற்றல்மிக்க விளையாட்டுச் சூழலை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. திறமையுள்ள யாரையும் விட்டுவிடக் கூடாது.
அடுத்து வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் ஒலிம்பிக் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வீரர்கள் ஆயத்தமாக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- காமன்வெலத் விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியை இன்று சந்தித்தனர்.
- தனது வீட்டுக்கு வரழைத்து காமன்வெலத் வீரர், வீராங்கனைகளை அவர் பாராட்டினார்.
புதுடெல்லி:
22-வது காமன்வெலத் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் சமீபத்தில் நடந்து முடிந்தது.
இதில் 208 இந்திய வீரர், வீராங்கனைகள் 16 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றனர். பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்தது. இந்தியாவுக்கு 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் ஆக மொத்தம் 61 பதக்கம் கிடைத்தது.
மல்யுத்தத்தில் தான் அதிகபட்சமாக 6 தங்கம் உள்பட 12 பதக்கமும், பளு தூக்குதலில் 3 தங்கம் உள்பட 10 பதக்கமும் கிடைத்தது. தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் 3 தங்கம் உள்பட 4 பதக்கம் பெற்று முத்திரை பதித்தார். அவர் ஒற்றையர், கலப்பு இரட்டையர், அணிகள் பிரிவில் தங்கமும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கமும் பெற்றார்.
இந்த நிலையில் காமன்வெலத் விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் பிரதமர் நரேந்திரமோடியை இன்று சந்தித்தனர். தனது வீட்டுக்கு வரழைத்து காமன்வெலத் வீரர், வீராங்கனைகளை அவர் பாராட்டினார்.
பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அவர்களுடன் மோடி கலந்துரையாடினார். வீரர், வீராங்கனைகள் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
- இதுவரை 5 ஒருநாள் போட்டியில் மட்டுமே புஜாரா விளையாடியுள்ளார்.
- ஒரே ஒவரில் 22 ரன்கள் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் விளையாடி வருபவர் புஜாரா. 34 வயதானது இவர் ராகுல் டிராவிட்டுக்கு பிறகு பொறுமையாக விளையாடக்கூடிய வீரர். இவர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் போட்டிகளில் சசெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஒருநாள் போட்டியில் விளையாடிய இவர் அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தியுள்ளார். 79 பந்தில் 107 ரன்கள் குவித்துள்ளார். அந்த போட்டியின் 45-வது ஓவரில் 22 ரன்களை குவித்துள்ளார். 50 ரன்களை எடுத்த பிறகு 100 ரன்களை 22 பந்தில் அடித்துள்ளார். ஒரே ஒவரில் 22 ரன்கள் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Cheteshwar Pujara smashed 22 runs in an over - 4,2,4,2,6,4.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 12, 2022
pic.twitter.com/HhgGlw7c0z
டெஸ்டில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த புஜாரா வெள்ளை பந்து போட்டிகளில் விளையாடுவதில்லை. இவர் கடைசியாக 2014-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். இதுவரை 5 ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா-ஜிம்பாப்வே மோதும் ஒரு நாள் போட்டிகள் வருகிற 18, 20, 22-ந்தேதிகளில் ஹராரேயில் நடக்கிறது.
- ஆசிய கோப்பை போட்டிக்காக ராகுல் டிராவிட் வருகிற 23-ந்தேதி அணியினருடன் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளார்.
புதுடெல்லி:
லோகேஷ் ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-ஜிம்பாப்வே மோதும் ஒரு நாள் போட்டிகள் வருகிற 18, 20, 22-ந்தேதிகளில் ஹராரேயில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரரும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான வி.வி.எஸ்.லட்சுமண் செயல்படுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், 'ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை லட்சுமண் கவனிப்பார். இதனால் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஓய்வு எடுத்துக் கொண்டதாக அர்த்தம் கிடையாது. அவர் ஆசிய கோப்பை போட்டிக்காக வருகிற 23-ந்தேதி அணியினருடன் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளார்.
இரண்டு தொடருக்கு இடையே குறைந்த கால இடைவெளி மட்டுமே இருப்பதால் ஜிம்பாப்வே தொடருக்கு பயிற்சியாளராக லட்சுமணை நியமித்துள்ளோம். லோகேஷ் ராகுல், தீபக் ஹூடா இருவரும் ஜிம்பாப்வே தொடர் முடிந்ததும் ஹராரேயில் இருந்து விமானம் மூலம் துபாய் வந்து ஆசிய கோப்பை அணியினருடன் இணைந்து கொள்வார்கள்' என்றார்.
- வெளிநாட்டு டி20 லீக்குகளில் பங்கேற்கவோ அல்லது வழிகாட்டவோ கூடாது என்ற அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
- ஜோகனஸ்பர்க்கை அடிப்படையாக கொண்டு உதயமாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கியுள்ளது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பி.சி.சி.ஐ.) கொண்டு வரப்பட்ட இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
இதனால் இந்த போட்டிக்கு வர்த்தக ரீதியில் மிகப் பெரிய வெற்றி கிடைத்தது.
இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் 'லீக்' போட்டியை போல வெளிநாடுகளில் 20 ஓவர் போட்டி தொடர் நடத்தப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள 20 ஓவர் 'லீக்' போட்டிகளில் பங்கேற்கும் அணிகளை ஐ.பி.எல் உரிமையாளர்களில் பலர் வாங்கி உள்ளனர். அவர்கள் வெளிநாடுகளில் நடத்தப்படும் 20 ஓவர் போட்டி அணிகளில் முதலீடு செய்து உள்ளனர்.
ஐ.பி.எல்.லில் தங்கள் அணியில் ஆடும் வீரர்களை இந்த தொடரில் விளையாட வைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் வெளிநாட்டு 20 ஓவர் தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்க கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
அனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் வரை உள்நாட்டு வீரர்கள் உள்பட எந்த ஒரு இந்திய வீரரும் வேறு எந்த 'லீக்' போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என்பது தெளிவாக இருக்கிறது.
இதனால் எந்த ஒரு இந்திய வீரர்களும் வெளிநாடு 20 ஓவர் தொடர்களில் பங்கேற்க முடியாது.
அப்படி விளையாட விரும்பும் வீரர்கள் கிரிக்கெட் வாரியத்துடனான அனைத்து ஒப்பந்தங்களையும், உறவுகளையும் முறித்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதே போல வெளிநாட்டில் நடைபெறும் 20 ஓவர் லீக்கில் அணிகளின் ஆலோசகராகவும் செயல்படவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி தனது இன்ஸ்டாகிராம் முகப்பு படத்தை மாற்றியுள்ளார்.
- டோனி சமுக வலைதளத்தில் அதிகம் ஆக்டிவாக இருக்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாடும் வகையில் 'சுதந்திர தின அமிர்த பெருவிழா' என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக 'இல்லம் தோறும் தேசிய கொடி' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.
இதன்படி இன்று முதல் சுதந்திர தினமான 15-ந்தேதி வரையிலான 3 நாட்கள் தங்கள் வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் தங்களுடைய சமூக ஊடக கணக்குகளில் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்து இருந்தார்.
மேலும் தனது டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களின் முகப்பு படத்தில் தேசிய கொடியை உடனே அவர் பதிவேற்றம் செய்தார்.இதையடுத்து மத்திய மந்திரிகள், பா.ஜ.க. உள்பட பல்வேறு தரப்பினரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் தேசிய கொடியை முகப்பு படமாக பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகப்பு படத்தை மாற்றியுள்ளார் .அதன்படி தேசியக்கொடியை முகப்பு படமாக அவர் மாற்றியுள்ளார்.டோனி சமுக வலைதளத்தில் அதிகம் ஆக்டிவாக இருக்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன் குவித்தது.
- 3 போட்டி கொண்ட தொடரை நியூசிலாந்து 2-0 என கைப்பற்றியது.
ஜமைக்கா:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.
இரு அணிகள் மோதிய 2வது டி20 ஓவர் போட்டி கிங்ஸ்டனில் நடந்தது.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. கிளென் பிலிப்ஸ் அதிரடியாக ஆடினார். அவர் 41 பந்தில் 76 ரன்னும், டேரில் மிட்செல் 20 பந்தில் 48 ரன்னும் குவித்தனர். கான்வே 34 பந்தில் 42 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஒபெட் மெக்காய் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் அந்த அணி 90 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 2-0 என கைப்பற்றியுள்ளது. 3-வது 20 ஓவர் போட்டி நாளை நடக்கிறது.
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 189 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய அயர்லாந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பெல்பாஸ்ட்:
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல், 2வது டி20 போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 பெல்பாஸ்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சி தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக கர்பாஸ் அரை சதமடித்து 53 ரன்கள் எடுத்தார். நஜிபுல்லா 42 ரன் எடுத்தார்.
190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. டாக்ரெல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 58 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பியான் ஹாண்ட் 36 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், அயர்லாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. டாக்ரெல் 58 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 22 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 தொடரில் அயர்லாந்து 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.






