என் மலர்
விளையாட்டு
- இலங்கை வீரர்கள் 3 பேர் டக் அவுட்டானார்கள்.
- பானுகா ராஜபக்சே 38 ரன்கள் அடித்தார்.
துபாய்:
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரக நாட்டில் இன்று தொடங்கியது. துபாயில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணி முதலில் களம் இறங்கி விளையாடியது.
ஆப்கானிஸ்தான் வீரர்களின் அபார பந்து வீச்சால் இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக பானுகா ராஜபக்சே 38 ரன்கள் அடித்தார். சமிகா கருணாரத்னா 31 ரன்கள் எடுத்தார். இலங்கை வீரர்கள் சரித் அசலங்கா, தசுன் ஷனகா, மகிஷ் தீட்சனா ஆகியோர் டக் அவுட்டாகினர்.
இலங்கை அணி 19.4 ஓவர் முடிவில் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபசல்ஹக் ஃபரூக்கி 3 விக்கெட்களை சாய்த்தார். முஜிபூர் ரஹ்மான், முகமது நபி தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். நவீன் உல்கக் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதையடுத்து 106 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் விளையாடி வருகிறது.
- துபாயில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
- உலக கோப்பை போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என எதிர்பார்ப்பு.
துபாய்:
15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சு நாட்டில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. இரண்டு பிரிவுகளாக அந்த அணிகள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் 'ஏ' பிரிவில் 7 முறை சாம்பியனான இந்தியா, 2 முறை ஆசிய கோப்பையை வென்ற பாகிஸ்தான், ஆங்காங் ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் 5 முறை சாம்பியனான இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெறும். 'சூப்பர் 4' சுற்றில் 4 அணிகள் விளையாடும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெறும் 2-வது 'லீக்' போட்டியில் 'ஏ' பிரிவில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துபாயில் தொடங்குகிறது.
இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் மோதின. இதில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நாளைய போட்டி இரு நாட்டு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், உலக கோப்பை போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இந்திய வீரர்கள் உள்ளனர்
விராட் கோலி தனது பழைய ஆட்டத்திறனை மீண்டும் பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணி சமபலத்துடன் திகழ்கிறது. இதனிடையே, இந்த போட்டியின் முடிவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும் என தெரிகிறது. இதனால் நாளைய போட்டியில் இந்திய வீரர்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் மிகப்பெரிய பலமாக இருப்பார். அதே நேரத்தில் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஷாஹீன் அப்ரிடி, முகமது வாசிம் ஆகியோர் இந்த தொடரில் இருந்து விலகியது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப் படுகிறது. 20 ஓவர் போட்டிகளில் இரு அணிகளும் நாளை 10வது முறையாக மோத உள்ளன. இதுவரை நடந்த 9 ஆட்டத்தில் இந்தியா 7-ல், பாகிஸ்தான் 2-ல் வெற்றி பெற்றுள்ளது.
இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல் (துணை கேப்டன்), வீராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, தினேஷ் கார்த்திக், யுசுவேந்திர சாஹல், அஸ்வின், புவனேஷ்வர் குமார், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்
பாகிஸ்தான்: பாபர் ஆசம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), பகர் ஜமான், ஆசிப் அலி, ஹைதர் அலி, இப்திகர் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது ஹஸ்னைன், ஹரிஸ் ரவூப், முகமது ரிஸ்வான், நசிம் ஷா, ஷாநவாஸ் தானி, உஸ்மான் காதிர்.
- விராட் கோலிநிச்சயம் தனது விளையாட்டில் கவனம் செலுத்தி மிகச் சிறப்பான ஆட்டத்திற்கு திரும்புவார்.
- பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்ததை நினைத்து இன்னும் எனக்கு வருத்தமாக உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடரானது இன்று முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியாக இன்று இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அதனை தொடர்ந்து நாளை இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்வது குறித்து இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல் ராகுல் கூறியதாவது:-
பாகிஸ்தான் அணிக்கு எதிரான நாளைய போட்டியில் விளையாட நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இது போன்ற பொதுவான தொடர்களில் மட்டுமே பாகிஸ்தான் அணியை நாங்கள் எதிர்கொள்கிறோம். எனவே பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருப்பது உற்சாகமாக இருக்கிறது. அதோடு இந்த தொடரில் அவர்களுக்கு எதிராக நமக்கு நாமே சவால் விடவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
கடந்த முறை டி20 உலகக்கோப்பை தொடரின் போது முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று தொடரினை சிறப்பாக ஆரம்பிக்க நினைத்தோம். ஆனால் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்ததை நினைத்து இன்னும் எனக்கு வருத்தமாக உள்ளது. நிச்சயம் நாளைய போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுப்போம்.
விராட் கோலிக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்துள்ளது. நிச்சயம் அவர் தனது விளையாட்டில் கவனம் செலுத்தி மிகச் சிறப்பான ஆட்டத்திற்கு திரும்புவார்.
இவ்வாறு கே.எல் ராகுல் கூறினார்.
- பொதுமருத்துவ அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது.
- முதலில் ஆடிய பொதுமருத்துவ அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழந்து 167 ரன் எடுத்தார்.
சென்னை:
ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் பொதுமருத்துவ அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் முடநீக்கியல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
முதலில் ஆடிய அந்த அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழந்து 167 ரன் எடுத்தது. ராம்குமார் 66 ரன் குவித்தார். பின்னர் விளையாடிய முடநீக்கியல் அணி 12.4 ஓவரில் 42 ரன்னில் சுருண்டது.
- மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் 63 கிலோ எடைப்பிரிவில் 77.5 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கம் வென்று மாசிலாமணி சாதனை படைத்தார்.
- அவருடைய 17 வயது மகள் தாரணி 47 கிலோ பிரிவில் 72.5 கிலோ எடை தூக்கி வெண்கலம் வென்றார்.
கோவை:
கோவை குனியமுத்தூர் ராமானுஜம் நகரை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது40). கணவர் ரமேஷ் தொழிலாளி. சாதாரண குடும்பத்தை சேர்ந்த இவர் கோவைப்புதூர் பகுதியில் 2 வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறார். குறைந்த வருமானம் ஈட்டிவரும் இவருக்கு பளுதூக்கும் போட்டியில் கலந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.
இதற்காக வேலை முடிந்து, அந்த பகுதியில் பயிற்சி மையம் நடத்தி வரும் சிவக்குமாரிடம் பளுதூக்கும் பயிற்சி பெற்றார். இந்த நிலையில் கடந்த மாதம் திருச்சியில் நடந்த தமிழ்நாடு பளுதூக்கும் மாநில அளவிலான போட்டியில் 63 கிலோ எடைப்பிரிவில் 77.5 கிலோ எடை தூக்கி தங்கப் பதக்கம் வென்று மாசிலாமணி சாதனை படைத்தார். மேலும் அவருடைய 17 வயது மகள் தாரணி 47 கிலோ பிரிவில் 72.5 கிலோ எடை தூக்கி வெண்கலம் வென்றார். தாரணி அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை சென்னையில் தமிழ்நாடு பளுதூக்கும் சங்கம் நடத்தும் நடத்தும் தென்னிந்தியப் போட்டியில் தாயும், மகளும் தங்களது கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.
பளுதூக்கும் சாதனை குறித்து வீராங்கனை மாசிலாமணி கூறியதாவது:-
"ஆரம்பத்தில், எனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் எனது நண்பர்கள் மற்றும் எங்கள் பகுதியை சேர்ந்த சிலர் என்னைப் பார்த்து சிரித்தனர். இப்போது அவர்கள் என்னை பாராட்டுகிறார்கள். நான் முன்பு உடல் பருமனாக இருந்தேன். பயிற்சியாளர் சிவகுமார் எனக்கு பளுதூக்கும் பயிற்சி அளித்தார். இதி்ல் ஆர்வம் கொண்ட எனது மகள் தாரணியையும் என்னுடன் பயிற்சி பெற வைத்தேன்.
போட்டியில் வென்ற போதும், எனது குடும்ப சூழ்நிலை காரணமாக இப்போதும் வீட்டு வேலைக்குத்தான் சென்று வருகிறேன். இதனால் சத்தான உணவு வகைகள் இல்லாமல், சாதாரண உணவையே சாப்பிட்டு வருகிறேன். ஏழ்மை நிலை இருந்தாலும், எளிய வாழ்க்கை வாழ்ந்தாலும், மகளும், நானும் தென் இந்திய போட்டியில் பதக்கம் வெல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பயிற்சியாளர் சிவக்குமார் கூறும்போது, "ஒவ்வொரு பளுதூக்கும் வீராங்கனைக்கும் புரத உணவுக்கு குறைந்தபட்சம் மாதம் 2,500 ரூபாய் தேவைப்படும். நான் இலவசமாகபயிற்சி அளித்து வருகிறேன்.அடுத்ததாக சென்னையில் நடைபெற உள்ள போட்டியில் சிறப்பாகச் பளுதூக்கி சாதனை படைப்பதன் மூலம் இவர்களுடைய வாழ்க்கை மேலும் ஒளிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்தார்.
வீட்டு வேலை செய்துகொண்டே பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற மாசிலாமணியும், வெண்கலம் வென்ற அவருடைய மகள் தாரணியும் கோவைக்கு பெருமையை தேடி வருவது பாராட்டுக்குரியது.
- இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் முன்னாள் வீரர்களுக்கு வழங்கப்பட்ட வாக்களிக்கும் உரிமையும் திரும்ப பெறப்பட்டது.
- பெண்கள் ஜூனியர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் திட்டமிட்டபடி நடத்துவதில் உருவான சிக்கல் நீங்கியது.
சூரிச்:
இந்திய கால்பந்து சம்மேளனத்தில் 3-ம் தரப்பினரின் தேவையற்ற தலையீடு இருப்பதாக கூறி இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) கடந்த 15-ந்தேதி அதிரடியாக தடை விதித்தது. இதனால் அக்டோபர் மாதம் இந்தியாவில் பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியை (19 வயதுக்குட்பட்டோர்) நடத்துவதில் முட்டுக்கட்டை விழுந்தது.
இந்த நிலையில் பிபாவின் வேண்டுகோளின்படி , 3 பேர் கொண்ட நிர்வாக கமிட்டி கலைக்கப்பட்டதுடன், இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் முன்னாள் வீரர்களுக்கு வழங்கப்பட்ட வாக்களிக்கும் உரிமையும் திரும்ப பெறப்பட்டது. இதையடுத்து வழக்கமான நடைமுறைப்படி நிர்வாகிகள் தேர்தல் வருகிற 2-ந்தேதி நடக்கிறது.
இத்தகைய நடவடிக்கையால் திருப்தி அடைந்த சர்வதேச கால்பந்து சங்கம், இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு விதித்த தடையை நேற்று நீக்கியது. இதன் மூலம் பெண்கள் ஜூனியர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் திட்டமிட்டபடி நடத்துவதில் உருவான சிக்கல் நீங்கியது.
- ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா தான் அதிகமாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
- ஆசிய கோப்பையை இந்தியவுக்கு அடுத்தபடியாக இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன.
துபாய்:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த போட்டி அரசியல் பிரச்சினை, பாதுகாப்பு உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் சில முறை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக 2020-ம் ஆண்டு போட்டி நடத்தப்படவில்லை. கடைசியாக 2018-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி, வங்காளதேசத்தை கடைசி பந்தில் வீழ்த்தி வாகை சூடியது.
ஆரம்பத்தில் ஆசிய கோப்பை தொடர் 50 ஓவர் வடிவில் நடத்தப்பட்டது. அதன் பிறகு 20 ஓவர் வடிவம் புகுத்தப்பட்டது. அதாவது அந்த சமயத்தில் எந்த உலக கோப்பை போட்டி நெருங்கி வருகிறதோ அதற்கு சிறந்த முறையில் தயாராகும் பொருட்டு அந்த வடிவில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பரில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பதால் ஆசிய கோப்பையும் 20 ஓவர் வடிவில் அரங்கேறுகிறது. அடுத்த ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை வருவதால் அடுத்த ஆசிய கோப்பை போட்டி 50 ஓவர் வடிவில் நடத்தப்படும்.
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) முதலில் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை தங்களால் இந்த போட்டியை நடத்த இயலாது என்று கூறி விட்டது. இதையடுத்து அங்கு நடைபெற இருந்த 15-வது ஆசிய கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இதன்படி இந்த போட்டி அங்குள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி செப்டம்பர் 11-ந்தேதி வரை நடக்கிறது.
இதில் பங்கேற்கும் 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.
சூப்பர் 4 சுற்றுக்கு வரும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா தான் அதிகமாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 7 முறை கோப்பையை வென்று இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன.
இந்த முறை சரிசம பலத்துடன் களம் காணும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளில் ஒன்றே கோப்பையை கைப்பற்றும் என்பது பெரும்பாலான கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்பாகும். அத்துடன் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நாளை மோதும் ஆட்டம் தான் இந்த தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. விராட் கோலி- பாபர் அசாம் ஆகியோரில் யாருடைய கை ஓங்கும் என்பது தொடர்பான முன்னாள் வீரர்களின் புள்ளி விவர விவாதங்கள், ஆரூடங்கள் இப்போதே ஆர்வத்தை தூண்டியுள்ளன.
விரைவில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பதால் அந்த போட்டிக்கு தங்கள் அணியை இறுதி செய்ய ஒவ்வொரு அணி நிர்வாகமும் தீவிரம் காட்டுவதால் அந்த வகையிலும் இந்த ஆசிய கோப்பை போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
துபாயில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. வெற்றியுடன் கணக்கை தொடங்க இரு அணிகளும் வரிந்து கட்டும் என்பதால் பரபரப்புக்கு குறைவிருக்காது. இலங்கை அணியில் குசல் மென்டிஸ், அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, ஹசங்கா உள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளனர். அதே சமயம் ஆப்கானிஸ்தான் ரஷித்கான், முகமது நபி, ஹஸ்ரத்துல்லா ஷசாய், ஜட்ரன் ஆகியோரைத் தான் மலை போல் நம்பி இருக்கிறது. இவர்கள் ஜொலித்தால் தான் இலங்கைக்கு சவால் அளிக்க முடியும்.
அமீரக ஆடுகளங்கள் பொதுவாக சுழலுக்கு ஓரளவு கைகொடுக்கும். இங்கு பகலில் வெயில் வாட்டி வதைக்கும். இரவில் புழுக்கத்தில் வியர்த்து கொட்டும். இத்தகைய சூழலை திறம்பட சமாளிக்கும் அணிக்கே வெற்றி வாய்ப்பு கனியும்.
20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதற்கு முன்பு ஒரே ஒரு முறை சந்தித்துள்ளன. 2016-ம் ஆண்டு நடந்த அந்த ஆட்டத்தில் இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இலங்கை: ஷனகா (கேப்டன்), குணதிலகா, பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சே, அஷென் பண்டாரா, தனஞ்ஜெயா டி சில்வா, ஹசரங்கா, தீக்ஷனா, ஜெப்ரி வண்டர்சே, பிரவீன் ஜெயவிக்ரமா, சமிகா கருணாரத்னே, தில்ஷன் மதுஷனகா, மதீஷா பதிராணா, நுவானிது பெர்னாண்டோ, தினேஷ் சன்டிமால்.
ஆப்கானிஸ்தான்: முகமது நபி (கேப்டன்), நஜிபுல்லா ஜட்ரன், அப்சர் ஷசாய், அஸ்மத்துல்லா ஒமர்ஷாய், பரித் அகமது மாலிக், பாசல் ஹக் பரூக்கி, ஹஷ்மத்துல்லா ஷகிடி, ஹஸ்ரத்துல்லா ஷசாய், இப்ராகிம் ஜட்ரன், கரிம் ஜனத், முஜீப் ரகுமான், நவீன் உல் ஹக், நூர் அகமது, ரமனுல்லா குர்பாஸ், ரஷித்கான், சமியுல்லா ஷின்வாரி, உஸ்மான் கானி.
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 151 ரன்னில் சுருண்டது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 415 ரன்கள் குவித்தது.
மான்செஸ்டர்:
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 151 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் ரபாடா அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், பிராட் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. பேர்ஸ்டோவ் 38 ரன்னும், ஜாக் கிராலே 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ஜாக் கிராலே 38 ரன்னில் அவுட்டானார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் பேர்ஸ்டோவ் 49 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய பென் ஸ்டோக்ஸ், போக்ஸ் ஜோடி பொறுப்புடன ஆடியது. இருவரும் சதமடித்து அசத்தினர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 173 ரன்கள் சேர்த்தது. பென் ஸ்டோக்ஸ் 103 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இங்கிலாந்து அணி 106.4 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 415 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. பென் போக்ஸ் 113 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் நூர்ஜே 3 விக்கெட்டும், மகாராஜ், ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- காயம் காரணமாக காமன்வெல்த் தொடரில் நீரஜ் சோப்ரா பங்கேற்கவில்லை.
- சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் சர்வதேச தடகளப் போட்டிகள் நடைபெற்றன.
லாசேன்:
சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் டயமண்ட் லீக் மீட் சர்வதேச தடகளப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.
அவர் 89.08 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் டயமண்ட் லீக் மீட் தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
மேலும், செப்டம்பர் 7ம் தேதி சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெறும் டயமண்ட் லீக் பைனலுக்கும் தகுதி பெற்றுள்ளார்.
- ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அப்ரிடி காயம் காரணமாக விலகினார்.
- பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் 7 டி20 போட்டிகளில் இங்கிலாந்துடன் விளையாடுகிறது.
துபாய்:
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 6 நாடுகள் கலந்துகொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று துபாயில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் மோதுகின்றன.
முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன. இரண்டாவது போட்டியில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
இதற்கிடையே, ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியில் இருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷாஹீன் அப்ரிடி காயம் காரணமாக விலகினார்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியில் மேலும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து விலகி உள்ளார். வேகப்பந்து வீச்சாளரான முகமது வாசிம் முதுகுவலி காரணமாக துபாயில் பயிற்சியிலிருந்து வெளியேறினார். முகமது வாசிமுக்கு பதிலாக ஹசன் அலி சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆசியக் கோப்பையைத் தொடர்ந்து பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் 7 டி20 போட்டிகளில் இங்கிலாந்துடன் விளையாடுகிறது.
- இந்திய கால்பந்து கூட்டமைப்பு மீதான தடையை பிபா நீக்கியது.
- 2 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி அக்டோபரில் இந்தியாவில் நடைபெற உள்ளது.
புதுடெல்லி:
17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. 2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி முதல் முறையாக இந்தியாவிலும் நடைபெற உள்ளது.
இதற்கிடையே, இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்து செய்தது. கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பிபா அமைப்பு இன்று நீக்கியது.
இதையடுத்து, வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் ஜூனியர் மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என பிபா தெரிவித்துள்ளது.
- பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவது எங்களுக்கு உற்சாகமானது.
- பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வி இன்னும் வருத்தமளிக்கிறது.
துபாய்:
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை தொடங்குகிறது. செப்டம்பர் 11 வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் காண்கிறது. நாளை மறுநாள் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்த போட்டி குறித்து இந்திய வீரர் கே.எல்.ராகுல் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நாங்கள் எப்போதும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். பெரிய தொடர்களில் மட்டும் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறோம். எனவே, பாகிஸ்தான் போன்ற அணிக்கு எதிராக விளையாடுவது எங்களுக்கு ஒரு உற்சாகமானது. நமக்கும் நாமே சவால் விடும் சிறந்த வாய்ப்பு.
கடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தோல்வி அடைந்தது இன்னும் வருத்தமளிக்கிறது. பெரிய போட்டிகளில் விளையாடும்போது ஒவ்வொரு அணியும் பெரிதாக சாதிக்க விரும்புகிறது, துரதிர்ஷ்டவசமாக, அது எங்களுக்கு நடக்கவில்லை. வலுவான பாகிஸ்தானிடம் நாங்கள் ஆட்டமிழந்தோம். எனவே இப்போது அவர்களுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிற கருத்துக்களுக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அது உண்மையில் ஒரு வீரரைப் பாதிக்காது, குறிப்பாக விராட் கோலி போன்ற உலகத் தரம் வாய்ந்த வீரர் வெளியில் இருந்து வரும் கருத்தால் பாதிக்கப் படமாட்டார்.
அவருக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தது. அவர் தனது விளையாட்டில் கவனம் செலுத்துகிறார். நான் காயமடைந்து 2 மாதங்கள் வீட்டில் இருந்தபோது, அவரை (விராட் கோலியை ) டிவியில் பார்த்துக் கொண்டிருந்தேன், அவர் பார்மில் இல்லை என்று நான் உணரவில்லை. இவ்வாறு கே.எல்.ராகுல் கூறினார்.






