search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மான்செஸ்டர் டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ், போக்ஸ் சதம் - இங்கிலாந்து வலுவான முன்னிலை
    X

    சதமடித்த பென் ஸ்டோக்ஸ்

    மான்செஸ்டர் டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ், போக்ஸ் சதம் - இங்கிலாந்து வலுவான முன்னிலை

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 151 ரன்னில் சுருண்டது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 415 ரன்கள் குவித்தது.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 151 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் ரபாடா அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், பிராட் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. பேர்ஸ்டோவ் 38 ரன்னும், ஜாக் கிராலே 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ஜாக் கிராலே 38 ரன்னில் அவுட்டானார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் பேர்ஸ்டோவ் 49 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய பென் ஸ்டோக்ஸ், போக்ஸ் ஜோடி பொறுப்புடன ஆடியது. இருவரும் சதமடித்து அசத்தினர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 173 ரன்கள் சேர்த்தது. பென் ஸ்டோக்ஸ் 103 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 106.4 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 415 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. பென் போக்ஸ் 113 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் நூர்ஜே 3 விக்கெட்டும், மகாராஜ், ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    Next Story
    ×