என் மலர்
விளையாட்டு
- பல்கலைக்கழக அளவில் நடந்த போட்டியில் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று வெற்றியையும் தேடித்தந்தார்.
- தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அசோசியேசன் அணியில் கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் குமரேசன்.விவசாய குடும்பத்தை சேர்ந்த இவரது மகன் கோபிநாத்(32). 7 வயதில் இவருக்கு ஏற்பட்ட விபத்தில் இடதுகை பலவீனமானது. இருந்தபோதும் கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்டதால் பள்ளி நாள் முதல் தொடர்ந்து அதில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்தார்.
பி.இ பட்டதாரியான கோபிநாத் சிவகங்கையில் படித்தபோது அனைத்து வீரர்களும் பங்கேற்கும் கிரிக்கெட்டில் வேகப்பந்து மற்றும் ஆல்ரவுண்டர்பிரிவில் பங்கேற்று அசத்தினார். மேலும் பல்கலைக்கழக அளவில் நடந்த போட்டியில் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று வெற்றியையும் தேடித்தந்தார். தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அசோசியேசன் அணியில் கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.
கடந்த ஆண்டு தென்னிந்திய அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்கள் பங்கேற்ற போட்டி ஆந்திராவில் நடைபெற்றது. இறுதி போட்டியில் புதுச்சேரி அணியுடன் மோதிய தமிழக அணி வெற்றிபெற்றது.
இதில் சிறந்த பந்துவீச்சாளராக கோபிநாத் தேர்வு செய்யப்பட்டார். கடந்த மாதம் மும்பையில் நடந்த தேசிய அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் 9 அணிகள் பங்கேற்றன. இறுதிச்சுற்றில் தமிழகம் மற்றும் புதுச்சேரி அணிகள் மோதின. அந்த போட்டியிலும் தமிழ்நாடு அணி வெற்றிபெற்றது. மேலும் கோபிநாத் அந்த தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார். மணிக்கு 120 முதல் 130 கி.மீ வேகத்தில் பந்து வீசி எதிரணி வீரர்களை திணறடித்து விக்கெட்டுகளை கைப்பற்றுவதில் சிறந்து விளங்குகிறார்.
இதனையடுத்து இவரது சாதனைகளை ஊக்குவிக்கும் விதமாக வருகிற 3-ந்தேதி திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற உள்ள இந்திய-வங்கதேச அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் பிரீடம் டிராபி போட்டியில் இந்திய அணி சார்பில் கோபிநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கோபிநாத் தெரிவிக்கையில், கடுமையான பயிற்சியும், முயற்சியும் இருந்தால் எந்த இலக்கையும் எட்டலாம். உலக கோப்பையில் பங்கேற்று விளையாடுவதே எனது லட்சியமாக உள்ளது. எனது இந்த வளர்ச்சிக்கு எனது குடும்பத்தினர், அணியின் கேப்டன் மற்றும் சகவீரர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். அவர்களுக்கு எனது நன்றி என தெரிவித்தார்.
- இரண்டாவது பாதியில் 2 கோல்கள் அடித்தது மெக்சிகோ.
- ஒரு கோல் அடித்த சவுதி அரேபியா தோல்வி அடைந்தது.
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் சி பிரிவில் நள்ளிரவு நடைபெற்ற 2வது ஆட்டத்தில் சவுதி அரேபியா, மெக்சிகோ அணிகள் மோதின. முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்காததால் சமநிலை நீடித்தது. 2வது பாதியின் 47வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ஹென்றி மார்ட்டின் முதல் கோலை அடித்தார்.
தொடர்ந்து 52 வது நிமிடத்தில் பிரி கிக் முறையில் மற்றொரு வீரர் லூயிஸ் சாவேஸ் கோல் அடித்து மெக்சிகோவை முன்னிலை பெறச் செய்தார். ஆட்டத்தின் முடிவில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் 95வது நிமிடத்தில் சவுதி வீரர் அல் தவ்சாரி கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டம் நிறைவு பெற்ற நிலையில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. எனினும் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை மெக்சிகோ இழந்தது. அதேபோல் சவுதி அரேபியாவும் போட்டியில் இருந்து வெளியேறியது.
- முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
- 46வது நிமிடத்தில் அலெக்சிஸ் அடித்த கோல் மூலம் அர்ஜென்டினா முன்னிலை
உலக கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சி பிரிவில் நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணி போலந்தை எதிர்கொண்டது. முதல் பாதிவரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி தொடங்கியவுடன் 46வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார்.
பின்னர் 67வது நிமிடத்தில் ஜூலியன் அல்வரெஸ் ஒருகோல் அடித்து அர்ஜென்டினா வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் நேரம் வழங்கப்பட்ட நிலையில் போலந்து அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்ததுடன், அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதனால் அர்ஜென்டினா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- 60-வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ லெக்கி கோல் அடித்தார்.
- பிரான்ஸ் அணி நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியது.
கத்தார்:
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப்-டி பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-டென்மார்க் அணிகள் விளையாடின. இப்போட்டியின் முதல் பாதியில் கோல்கள் பதிவாகவில்லை. இதனால் இரண்டாவது பாதி ஆட்டம் மேலும் விறுவிறுப்படைந்தது.
ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ லெக்கி கோல் அடித்தார். அதன்பின்னர் இறுதி வரை கோல்கள் அடிக்கப்படவில்லை. எனவே, ஆஸ்திரேலிய அணி 1-0 என வெற்றி பெற்றதுடன், நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் 6 புள்ளிகளை பெற்றுள்ளது.
குரூப் டி பிரிவில் உள்ள பிரான்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
- பிரான்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியது.
- 3 போட்டிகளில் விளையாடிய துனிசிய அணி ஒரு வெற்றி, ஒரு டிரா என மொத்தம் 4 புள்ளிகளை பெற்றது.
கத்தார்:
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப்-டி பிரிவில் உள்ள துனிசியா-பிரான்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் துனிசியா அணியின் காஸ்ரி 58வது நிமிடத்தில் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது.
அதன்பின்னர் ஆட்டநேர இறுதி வரை இரு தரப்பிலும் கோல்கள் அடிக்கப்படவில்லை. கூடுதல் நேரத்திலும் கோல் முயற்சி கைகூடவில்லை. எனவே, துனிசியா அணி 1-0 என வெற்றி பெற்றது. அத்துடன், பிரான்சை வீழ்த்திய ஆறுதலுடன் போட்டியில் இருந்து வெளியேறியது.
3 போட்டிகளில் விளையாடிய துனிசிய அணி ஒரு வெற்றி, ஒரு டிரா என மொத்தம் 4 புள்ளிகளை பெற்றது. பிரான்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியது.
- வங்கதேச தொடரில் மூத்த வீரர்கள் அணியில் இணைய உள்ளனர்.
- வங்கதேச தொடரில் சிறப்பாக செயல்பட்டால், அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு உதவும்.
இந்தியா- நியூசிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்தது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்ற நிலையில், அடுத்த போட்டி மழை காரணமாக ரத்தானது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி, 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்களை எடுத்தது. ஆடம் மில்னே, டேரில் மிட்செல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
220 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திக் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஓபனர் பின் ஆலன் 54 பந்துகளில் 57 ரன்களை சேர்த்து உம்ரான் மாலிக் வேகத்தில் வீழ்ந்தார். அடுத்து டிவோன் கான்வே 38 (51), கேன் வில்லியம்சன் 0 (3) இருவரும் விளையாடி வரும் நிலையில், மழை குறுக்கிட்டு போட்டி தடைப்பட்டது. இதனால் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இப்போட்டி முடிந்தப் பிறகு இந்திய அணிக் கேப்டன் ஷிகர் தவன் பேட்டி அளித்தார். அதில் கூறியதாவது:-
மழையால் ஆட்டங்கள் தடைபட்டது வருத்தமாகத்தான் இருக்கிறது. வங்கதேச தொடரிலும் இது தொடரக் கூடாது என வேண்டிக்கொள்கிறேன். வங்கதேச தொடரில் மூத்த வீரர்கள் அணியில் இணைய உள்ளனர். அத்தொடரில் சிறப்பாக செயல்படுவது மிக முக்கியம்.
இந்திய காலநிலைதான் அங்கும் இருக்கும். இதனால், அங்கு சிறப்பாக செயல்பட்டால், அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
- தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.
புதுடெல்லி:
சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், வாழ்நாள் சாதனையாளருக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது.
இதில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இதே போல் தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார். இதில் மொத்தம் 25 பேருக்கு அர்ஜுனா விருது, 4 பேருக்கு துரோணாச்சார்யா விருது, 4 பேருக்கு தியான்சந்த் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஒப்பிட்டு பேசுவது எனக்கு பிடிக்காது. எனக்கு இப்போது 24-25 வயதுதான் ஆகிறது.
- ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் நான் அப்படி ஒன்றும் சொதப்பவில்லை.
நியூசிலாந்தில் விளையாடி வரும் இளம் இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைப்பெற்று வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடர் இளம் வீரர்களுக்கான வாய்ப்பாக கருதப்படும் நிலையில் காலம் காலமாக வாய்ப்புக்காக காத்துக் கிடக்கும் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது அனைவரையும் கொந்தளிக்க வைத்தது.
அதிகப்படியான வாய்ப்பை பெற்றும் சுமாராக செயல்படாத ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டிகளில் கடந்த ஜூலையில் இங்கிலாந்து மண்ணில் அடித்த சதத்தை தவிர்த்து பெரும்பாலும் சிறப்பாக செயல்பட்டதில்லை. இருப்பினும் அவரை அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பராகவும் கேப்டனாகவும் உருவாக்க நினைக்கும் பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு சொதப்பலாகவே செயல்பட்டாலும் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருவது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது, நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி துவங்குவதற்கு முன், ரிஷப் பந்திடம் கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே சில கேள்விகளை கேட்டார்.
Rishabh Pant interview with Harsha Bhogle before 3rd ODI against NZ talking about rain, batting position, stats and scrutiny over T20i performance & WK drills. #NZvINDonPrime pic.twitter.com/TjOUdnPTCz
— S H I V A M 🇧🇷 (@shivammalik_) November 30, 2022
ஹர்ஷா போக்லே கேள்வி: வீரேந்தர் சேவாக் டெஸ்டில் அதிரடி காட்டி டி20, ஒருநாள் போட்டிகளில் சொதப்பியபோது, அவர் விமர்சனங்களை எதிர்கொண்டார். உங்களிடமும் இதே கேள்வியை கேட்க விரும்புகிறேன்.
ரிஷப் பந்த் பதில்: சார், ரெக்கார்ட் என்பது வெறும் எண்கள்தான். ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் நான் அப்படி ஒன்றும் சொதப்பவில்லை.
ஹர்ஷா போக்லே கேள்வி: நான் உங்களது ஒருநாள், டி20 ரெக்கார்ட் சரியில்லை எனக் கூறவில்லை. உங்களது டெஸ்ட் ரெக்கார்ட்டைவிட, ஒருநாள், டி20 ரெக்கார்ட் குறைவாக இருக்கிறது எனக் கூறுகிறேன்.
ரிஷப் பந்த்: ஒப்பிட்டு பேசுவது எனக்கு பிடிக்காது. எனக்கு இப்போது 24-25 வயதுதான் ஆகிறது. இப்போதே சேவாக் உடனும், எனது டெஸ்ட், ஒருநாள் ரெக்கார்ட்டை எப்படி ஒப்படுருகிறீர்கள். இப்போதே ஒப்பிடுவது சரியான கேள்வி தானா? 30-32 வயதாகட்டும். அதன்பிறகு ஒப்பிட்டு பாருங்கள்.
இப்படி இருவருக்கும் இடையிலான உரையாடல் அனல் பறந்தது.
- வாஷிங்டன் சுந்தர் கடைசி வீரராக 51 ரன்னில் அவுட் ஆனார்.
- தொடர் நாயகன் விருதை டாம் லாதம் தட்டிச் சென்றார்.
கிறிஸ்ட்சர்ச்:
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது.
ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மட்டுமே நியூசிலாந்து பந்து வீச்சை தாக்கு பிடித்து ஆடினார்கள். ஸ்ரேயாஸ் அய்யர் 8 பவுண்டரியுடன் 49 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.
வாஷிங்டன் சுந்தர் 62 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 50 ரன்னை தொட்டார்.
இந்திய அணி 47.3 ஓவர்களில் 219 ரன்னில் ஆல் அவுட் ஆனது. வாஷிங்டன் சுந்தர் கடைசி வீரராக 51 ரன்னில் வெளியேறினார். நியூசிலாந்து தரப்பில் மில்னே, மிச்செல் தலா 3 விக்கெட்டும், சவுத்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆடியது.
பின் ஆலன்-கான்வே ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். தீபக் சாஹர் வீசிய ஆட்டத்தின் 10-வது ஓவரில் கான்வே 4 பவுண்டரி அடித்தார். 17-வது ஓவரில் தான் தொடக்க ஜோடி பிரிந்தது. ஆலன் 54 பந்தில் 57 ரன் (8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து உம்ரான் மாலிக் பந்தில் ஆட்டம் இழந்தார்.
அப்போது ஸ்கோர் 97 ஆக இருந்தது. அடுத்து வில்லியம்சன் களம் வந்தார். 18 ஓவர் முடிவடைந்த நிலையில் நியூசிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்து 104 ரன்கள் இருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. தொடர் நாயகன் விருதை டாம் லாதம் தட்டிச் சென்றார்.
- வெற்றி பெற்றால் தான் 2-வது சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
- இதே பிரிவில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் சவுதி அரேபியா-மெக்சிகோ மோதுகின்றன.
தோகா:
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் சவுதி அரேபியா விடம் 1-2 ( 'சி' பிரிவு ) என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது.
2-வது போட்டியில் மெக்சிகோவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி 3- வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் போலந்தை இன்று எதிர்கொள்கிறது . இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அர்ஜென்டினாவுக்கு உள்ளது. வெற்றி பெற்றால் தான் 2-வது சுற்றுக்கு தகுதி பெற முடியும். தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் அர்ஜென்டினா வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டும். அந்த அணி ஒரு வெற்றியுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.
4 புள்ளிகளுடன் இருக்கும் போலந்து டிரா செய்தாலே தகுதி பெற்றுவிடும். இரு அணிகளும் உலக கோப்பையில் 2 ஆட்டத்தில் மோதியுள்ளன. தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
இதே பிரிவில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் சவுதி அரேபியா-மெக்சிகோ மோதுகின்றன.
இதில் வெற்றி பெற்றால் சவுதி அரேபியா 2-வது சுற்றுக்கு நுழையும். அந்த அணி அர்ஜென்டினாவை வென்றது. போலந்திடம் தோற்றது.
மெக்சிகோ அணி போலந்திடம் டிரா செய்தது. அர்ஜென்டினாவிடம் தோற்றது. 2-வது சுற்று வாய்ப்பை பெற கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். டிரா செய்தாலோ, தோற்றாலோ வெளியேறிவிடும்.
குரூப் 'டி' பிரிவில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் பிரான்ஸ்- துனிசியா ஆஸ்திரேலியா- டென்மார்க் ( இரவு 8.30 ) அணிகள் மோதுகின்றன.
பிரான்ஸ் 2 வெற்றியுடன் ஏற்கனவே 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. அந்த அணி ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் உள்ளது. 1 டிரா, 1 தோல்வியுடன் இருக்கும் துனிசியா வெற்றி நெருக்கடியில் இருக்கிறது. அந்த அணி பிரான்சை வெல்வது சவாலானது.
ஆஸ்திரேலியா-டென்மார்க் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி முன்னேற்றம் அடையும். இதனால் இந்த ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும்.
- அமெரிக்க அணியை நெதர்லாந்து சந்திக்கிறது.
- இங்கிலாந்து 2-வது சுற்றில் ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த செனகல்லை எதிர் கொள்கிறது.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இதுவரை 7 நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. பிரான்ஸ் ('டி' பிரிவு), பிரேசில் (ஜி), போர்ச்சுக்கல் (எச்), நெதர்லாந்து, செனகல் (ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (பி) ஆகியவை முன்னேறி உள்ளன.
'ஏ' பிரிவில் முதல் இடத்தை பிடித்த நெதர்லாந்து அணி 2-வது சுற்றில் 'பி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்த அமெரிக்காவுடன் மோதுகிறது. வருகிற 3-ந்தேதி இரவு 8.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.
'பி' பிரிவில் முதல் இடத்தை பிடித்த இங்கிலாந்து 2-வது சுற்றில் 'ஏ' பிரிவில் 2-வது இடத்தை பிடித்த செனகல்லை எதிர் கொள்கிறது. 4-ந்தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.
- பண்ட் ஒரு திறமையான வீரர், பார்ம் இல்லாத ஒரு நல்ல வீரர்.
- பண்ட் தனது கடைசி 11 இன்னிங்ஸ்களில் 10-ல் சரியாக ஆடவில்லை.
கிறிஸ்ட்சர்ச்:
இந்திய கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவடைகிறது. 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 2-வது ஆட்டத்தில் மழையால் பாதியில் ரத்தானது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் இன்று நடைபெறுகிறது.
இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கி ஆடி வருகிறது. இந்த தொடரில் சஞ்சு சாம்சனுக்கு முதல் ஒருநாள் போட்டியில் மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 2வது போட்டியில் அவருக்கு பதிலாக தீபக் ஹூடா அணியில் இடம் பிடித்தார். இந்நிலையில் அணியில் இடம் பிடித்துள்ள விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட சரியாக ஆடாமல், ரன்களை குவிக்காமல் இருக்கிறார்.
இதையடுத்து ரசிகர்கள் அணியில் இருந்து ரிஷப் பண்ட்க்கு ஓய்வு அளித்து விட்டு சாம்சனை அணியில் ஆட வைக்க வேண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் 3-வது போட்டியிலும் சாம்சனுக்கு அணியில் இடம் இல்லை.
இந்நிலையில் ஒயிட் பால் கிரிக்கெட்டில் இருந்து ரிஷப் பண்ட் ஓய்வு எடுக்க வேண்டும் என சசி தரூர் பரிந்துரைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
பண்ட் 4-வது வரிசையில் சிறப்பாக செயல்பட்டார். எனவே அவரை ஆதரிப்பது அவசியம் என வி.வி.எஸ். லட்சுமணன் கூறுகிறார். பண்ட் ஒரு திறமையான வீரர், பார்ம் இல்லாத ஒரு நல்ல வீரர். அவர் தனது கடைசி 11 இன்னிங்ஸ்களில் 10-ல் சரியாக ஆடவில்லை.
சாம்சனின் ஒருநாள் போட்டிகளில் சராசரி 66. அவர் தனது கடைசி 5 போட்டிகளிலும் ரன்களை அடித்துள்ளார் ஆனாலும் அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.






