search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    வீரேந்திர சேவாக் தொடர்பான கேள்வியால் எரிச்சலடைந்த ரிஷப் பண்ட்- வீடியோ
    X

    வீரேந்திர சேவாக் தொடர்பான கேள்வியால் எரிச்சலடைந்த ரிஷப் பண்ட்- வீடியோ

    • ஒப்பிட்டு பேசுவது எனக்கு பிடிக்காது. எனக்கு இப்போது 24-25 வயதுதான் ஆகிறது.
    • ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் நான் அப்படி ஒன்றும் சொதப்பவில்லை.

    நியூசிலாந்தில் விளையாடி வரும் இளம் இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைப்பெற்று வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடர் இளம் வீரர்களுக்கான வாய்ப்பாக கருதப்படும் நிலையில் காலம் காலமாக வாய்ப்புக்காக காத்துக் கிடக்கும் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது அனைவரையும் கொந்தளிக்க வைத்தது.

    அதிகப்படியான வாய்ப்பை பெற்றும் சுமாராக செயல்படாத ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டிகளில் கடந்த ஜூலையில் இங்கிலாந்து மண்ணில் அடித்த சதத்தை தவிர்த்து பெரும்பாலும் சிறப்பாக செயல்பட்டதில்லை. இருப்பினும் அவரை அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பராகவும் கேப்டனாகவும் உருவாக்க நினைக்கும் பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு சொதப்பலாகவே செயல்பட்டாலும் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருவது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது.

    இந்நிலையில் தற்போது, நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி துவங்குவதற்கு முன், ரிஷப் பந்திடம் கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே சில கேள்விகளை கேட்டார்.


    ஹர்ஷா போக்லே கேள்வி: வீரேந்தர் சேவாக் டெஸ்டில் அதிரடி காட்டி டி20, ஒருநாள் போட்டிகளில் சொதப்பியபோது, அவர் விமர்சனங்களை எதிர்கொண்டார். உங்களிடமும் இதே கேள்வியை கேட்க விரும்புகிறேன்.

    ரிஷப் பந்த் பதில்: சார், ரெக்கார்ட் என்பது வெறும் எண்கள்தான். ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் நான் அப்படி ஒன்றும் சொதப்பவில்லை.

    ஹர்ஷா போக்லே கேள்வி: நான் உங்களது ஒருநாள், டி20 ரெக்கார்ட் சரியில்லை எனக் கூறவில்லை. உங்களது டெஸ்ட் ரெக்கார்ட்டைவிட, ஒருநாள், டி20 ரெக்கார்ட் குறைவாக இருக்கிறது எனக் கூறுகிறேன்.

    ரிஷப் பந்த்: ஒப்பிட்டு பேசுவது எனக்கு பிடிக்காது. எனக்கு இப்போது 24-25 வயதுதான் ஆகிறது. இப்போதே சேவாக் உடனும், எனது டெஸ்ட், ஒருநாள் ரெக்கார்ட்டை எப்படி ஒப்படுருகிறீர்கள். இப்போதே ஒப்பிடுவது சரியான கேள்வி தானா? 30-32 வயதாகட்டும். அதன்பிறகு ஒப்பிட்டு பாருங்கள்.

    இப்படி இருவருக்கும் இடையிலான உரையாடல் அனல் பறந்தது.

    Next Story
    ×