என் மலர்
விளையாட்டு
- டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
- ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பினர்.
மிர்புர்:
வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கும் இடையே மிர்புரில் இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து இந்திய அணி முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்கிறது.
நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பி உள்ள இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இதனால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா ஆவார்.
- அவர் 10 கோல்களை அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மெஸ்சி உள்ளார்.
தோகா:
கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படுபவர் டிகோ மரடோனா. அர்ஜென்டினாவுக்கு 1986-ம் ஆண்டு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அவர் உலக கோப்பையில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்துள்ளார்.
இந்நிலையில், மரடோனாவின் இந்த சாதனையை லியோனஸ் மெஸ்சி நேற்று முறியடித்தார்.
கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் உலகின் முன்னணி வீரரும், அர்ஜென்டினா கேப்டனுமான மெஸ்சி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் உலக கோப்பையில் 9 கோல்களை (22 ஆட்டம்) அவர் தொட்டார்.
உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா ஆவார். அவர் 10 கோல்களை அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மெஸ்சி உள்ளார்.
- கால்பந்து ஜாம்பவானான பீலே தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
- உலக கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்கு உரியவர்.
பிரேசிலியா:
தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (81).
1956ம் ஆண்டு தனது 15-வது வயதில் கால்பந்து விளையாட்டில் இறங்கி தொடர்ந்து 1974-ம் ஆண்டு வரை விளையாடிய பெருமை பெற்றவர். இதில், 6 பிரேசிலியன் லீக் பட்டங்களையும், 2 கோப்பா லிபர்டடோர்ஸ் பட்டங்களையும் வென்றுள்ளார். உலக கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்கு உரியவர். தனது அணிக்காக பீலே 643 கோல்களை அடித்து உள்ளார்.
பீலேவுக்கு கடந்த ஆண்டு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிறிய கட்டி அகற்றப்பட்டது. இதன்பின், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது.
இதற்கிடையே, கடந்த செவ்வாய்க்கிழமை சாவோ பாவ்லோ மாகாணத்தில் உள்ள போல்ஹா என்ற பகுதியில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவரது உடல்நலம் தேறாமல் தொடர்ந்து இருந்து வந்தது.
இந்நிலையில், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் பீலே அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- முதல் பாதியில் அர்ஜென்டினா அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
- ஆட்டநேர முடிவில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தோகா:
கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நடந்த நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
தொடக்கம் முதல் அர்ஜென்டினா அணி சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் மெஸ்சி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியின் 57-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வாரெஸ் ஒரு கோல் அடித்தார். 77-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் என்சோ பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
- முதல் பாதி ஆட்ட முடிவில் 2-0 கோல் கணக்கில் நெதர்லாந்து முன்னிலை.
- வெற்றி மூலம் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் இன்று நாக் அவுட் எனப்படும் 2வது சுற்று ஆட்டங்கள் தொடங்கி உள்ளன. இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி, அமெரிக்காவை எதிர்கொண்டது.
ஆட்டம் தொடங்கிய 10 வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் மெம்பிஸ் டிபே முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். தொடர்ந்து 46வது நிமிடத்தில் அதே அணியை சேர்ந்த டேலி பிளைன்ட் 2வது கோல் அடித்தார். இதையடுத்து முதல் பாதி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணி முன்னிலை பெற்றிருந்தது.
2வது பாதி ஆட்டத்தில் 76 வது நிமிடத்தில் அமெரிக்காவின் ஹாஜி ரைட் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் டென்சில் டம்ப்ரைஸ் தமது அணிக்காக 3வது கோலை அடித்தார். ஆட்டத்தின் முடிவில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.
- பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் 136 ரன்கள் குவித்தார்.
- இங்கிலாந்தை விட பாகிஸ்தான் 158 ரன்கள் பின் தங்கியுள்ளது
ராவல்பிண்டி:
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணி முதல் இன்னிங்சில், 657 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, விளையாடிய பாகிஸ்தான் அணி 2 நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் 3 வீரர்கள் சதம் அடித்தனர்.
தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக் 114 ரன்கள் அடித்து அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 121 எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் 136 ரன்கள் குவித்தார். ஜாக்ஸ் பந்து வீச்சில் அவர் விக்கெட்டை பறிகொடுத்தார். இன்றைய ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்தை விட பாகிஸ்தான் இன்னும் 158 ரன்கள் பின் தங்கியுள்ளது.
- டாக்கா மைதானம் இந்திய துணை கண்டத்தில் இருக்கும் மைதானங்களை போன்ற இயற்கையான பண்புகளைக் கொண்டது.
- குறிப்பாக 2வது இன்னிங்ஸில் இங்குள்ள பிட்ச் நன்கு சுழன்று ஸ்பின்னர்களுக்கு அதிகம் கை கொடுக்கும்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்திய அடுத்ததாக 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதற்கான பயணத்தை தொடங்கியுள்ளது. அந்த பயணத்தில் டி20 உலக கோப்பைக் கோப்பைக்கு பின் நியூசிலாந்தில் விளையாடிய இந்தியா டி20 தொடரை வென்றாலும் ஒருநாள் தொடரை இழந்தது. இருப்பினும் அத்தொடரில் இல்லாத கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய சீனியர் வீரர்கள் அடங்கிய முதன்மை இந்திய அணி அடுத்ததாக பக்கத்தில் இருக்கும் வங்கதேசத்துக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. என்ன தான் சமீப காலங்களில் தொடர் தோல்விகளை சந்தித்து தடுமாறினாலும் சொந்த மண்ணில் எப்போதுமே சவாலை கொடுக்கும் வங்கதேசம் இத்தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல போராட உள்ளது.
குறிப்பாக கடைசியாக கடந்த 2015இல் சொந்த மண்ணில் அபாரமாக செயல்பட்டு 2 -1 (3) என்ற கணக்கில் வென்ற வங்கதேசம் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக ஒரு கிரிக்கெட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது. அந்த மலரும் நினைவுகளுடன் இத்தொடரில் அந்த அணி விளையாடுகிறது. மறுபுறம் 2007 உலக கோப்பை தோல்வி உட்பட வரலாற்றில் சந்தித்த தோல்விகளை மனதில் வைத்து சிறப்பாக செயல்பட காத்திருக்கும் இந்தியா இம்முறை வங்கதேசத்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து 2023 உலகக்கோப்பைக்கு தேவையான பயிற்சிகளை எடுக்க உள்ளது.
இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ள இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 4ஆம் தேதியன்று இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தாக்கா நகரில் இருக்கும் ஷேர்-ஈ-பங்ளா மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த 2006இல் தோற்றுவிக்கப்பட்டு 25,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் வரலாற்றில் 13 ஒருநாள் போட்டிகளில் வங்கதேசத்தை எதிர்கொண்ட இந்தியா 9 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 3 போட்டிகளில் வங்கதேசம் வென்றது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (786) குவித்த இந்திய வீரராகவும் அதிக சதங்கள் (4) அடித்த இந்திய வீரராகவும் அதிகபட்ச ஸ்கோர் (183) பதிவு செய்த இந்திய வீரராகவும் விராட் கோலி திகழ்கிறார்.
இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த இந்திய பவுலராக ரவிச்சந்திரன் அஸ்வின் (17 விக்கெட்கள்) உள்ளார். இந்த மைதானத்தில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்துள்ள இந்திய பவுலர் : இர்பான் பதான் – 4/32. வெதர் ரிப்போர்ட்: சமீபத்திய உலக கோப்பை மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் மழையால் நிறைய போட்டிகள் ரத்தானதால் வீரர்களும் ரசிகர்களும் மிகவும் கடுப்பானார்கள். ஆனால் இப்போட்டி நடைபெறும் தாக்கா நகரில் போட்டி நாளன்று மழைக்கான வாய்ப்பு கொஞ்சமும் கிடையாது. குறிப்பாக மேகமூட்டம் கூட இல்லாமல் தெளிவான வானிலை நிலவும் என்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று உறுதியாக நம்பலாம்.
இப்போட்டி நடைபெறும் தாக்கா மைதானம் இந்திய துணை கண்டத்தில் இருக்கும் மைதானங்களை போன்ற இயற்கையான பண்புகளைக் கொண்டது. அதாவது இங்கு வேகப்பந்து வீச்சு பெரிய அளவில் எடுபடாது என்பதால் புதிய பந்தை ஸ்விங் செய்து விக்கெட்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டிய வேகப்பந்து வீச்சாளர்கள் பழைய பந்தில் நல்ல லைன், லென்த் போன்றவற்றை கடைபிடித்தால் மட்டுமே கட்டுக்கோப்பாக செயல்பட முடியும். சொல்லப்போனால் புதிய பதில் கூட இங்குள்ள பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிகம் கை கொடுக்காது.
அதே சமயம் போட்டி நடக்க நடக்க ஸ்பின்னர்கள் அதிக ஆதிகத்தை செலுத்துவார்கள். குறிப்பாக 2வது இன்னிங்ஸில் இங்குள்ள பிட்ச் நன்கு சுழன்று ஸ்பின்னர்களுக்கு அதிகம் கை கொடுக்கும். அதனால் புதிய பந்துகளையும் ஸ்பின்னர்களையும் எதிர்கொள்ள தெரிந்த பேட்ஸ்மேன்கள் இம்மைதானத்தில் பெரிய ரன்களை குவிப்பார்கள். அதை விட இம்மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 263 ஆகும். சராசரி 2வது இன்னிங்ஸ் ஸ்கோர் 185 ஆகும். அதாவது இம்மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்வதை விட சேசிங் செய்வது மிகவும் கடினமாகும். அதனாலேயே கடைசி 3 போட்டிகளில் இங்கு முதலில் பந்து வீசிய அணிகள் தோல்வியை சந்தித்தன. எனவே இப்போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து 250 – 300 ரன்களை எடுப்பது வெற்றிக்கு வித்திடலாம்.
- 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 182 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
- பிராத்வேட் - சந்தர்பால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது. சந்தர்பால் 45 ரன்னில் அவுட் ஆனார்.
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 30-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சில் 598 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து முதல் இன்னிங்சில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 283 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா அணி 315 ரன்கள் முன்னிலை பெற்றது. 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 182 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 498 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதனையடுத்து 2-வது இன்னிங்ஸ் விளையாடியது. பிராத்வேட் - சந்தர்பால் ஜோடி நிதானமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது. சந்தர்பால் 45 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ப்ரோக்ஸ் 11 ரன்னிலும் பிளாக்வுட் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் சிறப்பாக ஆடிய பிராத்வேட் சதம் அடித்து அசத்தினார்.
4-வது நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து உள்ளது. நாளைய கடைசி நாள் ஆட்டத்தில் 306 ரன்கள் எடுத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெரும்.
- வங்கதேசக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக முகமது சமி விலகி உள்ளார்.
- இந்திய அணி கடைசியாக 2015 ஆண்டு அந்த நாட்டில் ஆடிய போது 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது.
மிர்பூர்:
இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. இந்தியா -வங்காளதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
நியூசிலாந்து தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா , முன்னாள் கேப்டன் விராட் கோலி , லோகேஷ் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். இஷான் கிஷன், முகமது சிராஜ், ரஜத் படிதார், ராகுல் திரிபாதி , குல்தீப் சென் உள்ளிட்டோரும் இந்த தொடரில் ஆடுகிறார்கள்.
நியூசிலாந்து தொடரில் ஆடிய சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், சாஹல் உள்ளிட்டோர் வங்காளதேச தொடரில் இடம் பெறவில்லை. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் வங்காளதேச அணி அதன் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடக்கூடியது. இந்திய அணி கடைசியாக 2015 ஆண்டு அந்த நாட்டில் ஆடிய போது 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது. இதனால் இந்திய வீரர்கள் மிகவும் கவனத்துடனும் , திறமையுடனும் விளையாட வேண்டும்.
இந்நிலையில், வேகப்பந்து வீரர் முகமது சமி இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். இந்நிலையில், காயம் அடைந்த முகமது சமிக்கு பதிலாக இந்திய வேகப்பந்து வீச்சு புயல் உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- ரோகித் சர்மா இன்னும் நிறைய ஆண்டு கிரிக்கெட் விளையாடுவார்.
- அவர் எப்போதுமே ஆட்டத்தை தனி ஆளாக மாற்றக் கூடியவர்.
மும்பை:
டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு ரோகித் சர்மாவின் பொறுப்பற்ற ஆட்டம் தான் காரணம் என்று குற்றச்சாட்டு ரசிகர்களால் முன்வைக்கப்படுகிறது. டி20 ஒருநாள் என அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் அதிரடியாக விளையாடும் ரோகித் சர்மா, ஆஸ்திரேலியாவில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டார். இதனால் நாளை தொடங்கும் வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மா மீது அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிராக ரோகித் சர்மா சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார்.
இதுவரை 13 ஒரு நாள் போட்டிகளில் அந்த அணிக்கு எதிராக விளையாடி உள்ள ரோகித் சர்மா 660 ரன்கள் சேர்த்து இருக்கிறார். இதில் மூன்று சதங்களும், இரண்டு அரை சதங்களும் அடங்கும். ரோகித் சர்மாவுக்கு முன் கேப்டனாக இருந்த விராட் கோலி, தோனி ஆகியோர் எல்லாம் பெரிய தொடர்களில் தங்களுடைய பேட்டிங்கில் எந்த குறையும் வைக்க மாட்டார்கள். குறிப்பாக 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் தோனி தான் கடைசி வரை நின்று இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
இந்த நிலையில் ரோகித் சர்மா செய்த தவறை திருத்திக் கொண்டு சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தருவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் மணிந்தர் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மணிந்தர் சிங் கூறியதாவது:-
கேப்டனாக நீங்கள் அணியில் ரன் அடிக்கவில்லை என்றால் உங்களுக்கு அணியை வழிநடத்துவதில் சிரமம் ஏற்படும். கேப்டன் தனது சொந்த செயல்பாட்டை குறித்து யோசிக்க மாட்டார்கள். அணியை பற்றி தான் யோசிப்பார்கள் என்றெல்லாம் சொல்வார்கள்.
ஆனால் கேப்டன் சரியாக விளையாடவில்லை என்றால் அது நிச்சயம் மனதளவில் பாதிக்கப்படும்.
அணியை கையாளும் போது சிரமம் ஏற்படும். டி20 உலக கோப்பை தொடரிலும் ரோகித் சர்மாவுக்கு இந்த பிரச்சனை தான் ஏற்பட்டிருக்கும். டி20 உலக கோப்பைத் தொடர் முடிந்தவுடன் அவருக்கு கிடைத்த ஓய்வில் பேட்டிங்கை எப்படி முன்னேற்ற வேண்டும் என்பது குறித்து ரோகித் சர்மா நிச்சயம் யோசித்து இருப்பார். பேட்டிங்கில் நாம் என்ன தவறு செய்கிறோம். எதனை மேம்படுத்த வேண்டும் என அவர் நிச்சயம் பயிற்சி செய்திருப்பார்.
ரோகித் சர்மா இன்னும் நிறைய ஆண்டு கிரிக்கெட் விளையாடுவார். அவர் எப்போதுமே ஆட்டத்தை தனி ஆளாக மாற்றக் கூடியவர். வங்கதேச தொடரில் ரோகித் சர்மா நிச்சயம் பலமான வீரராக திரும்பி வருவார். இன்னும் உலக கோப்பைக்கு ஒரு ஆண்டுதான் இருக்கிறது.
அதில் ரோகித் சர்மா உடைய பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். நிச்சயம் அவர் உலகக் கோப்பையில் வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே அந்த நாட்களை காண நான் ஆவலோடு எதிர்நோக்கி இருக்கிறேன் என்று மணிந்தர் சிங் கூறியுள்ளார். மணிந்தர் சிங் இந்தியாவுக்காக 35 டெஸ்ட் போட்டிகள் 59 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 154 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரொனால்டோவை தென்கொரிய வீரர் திட்டியதாக போர்ச்சுக்கல் அணி பயிற்சியாளர் புகார் அளித்துள்ளார்.
- இந்த போட்டியில் 2-1 என்ற கணக்கில் போர்ச்சுக்கலை வீழ்த்தி தென்கொரியா வென்றது.
கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி லீக் ஆட்டங்கள் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் நிலையில் ரவுண்ட் ஆன் 16 எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே போர்ச்சுக்கல் அணி ரவுண்ட் ஆன் 16-க்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் நேற்று தென் கொரிய அணியுடன் மோதியது.
இந்த போட்டியில் 2-1 என்ற கணக்கில் போர்ச்சுக்கலை வீழ்த்தி தென்கொரியா வென்றது. எனினும் தரவரிசையில் போர்ச்சுக்கல் முதலிடத்தையும், தென்கொரிய அடுத்த இடத்தையும் பிடித்துள்ளது.
இந்த போட்டியின்போது 45 நிமிடங்களுக்கு பிறகு அளிக்கப்பட்ட ஓய்வு சமயத்தில் போர்ச்சுக்கல் வீரர் ரொனால்டோவை தென்கொரிய வீரர் திட்டியதாக போர்ச்சுக்கல் அணி பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டஸ் புகார் அளித்துள்ளார். ரொனால்டோவை பார்த்து அந்த வீரர் 'சீக்கிரம் போ' என கத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரொனால்டோ "நான் அவரை அமைதியாக இருக்க சொன்னேன். எனக்கு கட்டளையிட அவருக்கு எந்த உரிமையும் இல்லை' என கூறியுள்ளார்.
- கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், தோனி போன்றவர்கள் கூட பார்மை இழந்து தவித்த காலம் எல்லாம் உண்டு.
- எந்த ஒரு வீரரும் தங்களது பார்மை இழப்பது என்பது நடக்கக் கூடிய ஒன்றுதான்.
பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின் முதலாவது ஒருநாள் போட்டியானது நாளை டிசம்பர் நான்காம் தேதி (டிசம்பர் 4) டாக்கா நகரில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல், முகமது ஷமி ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்புவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
அதே வேளையில் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது நெருங்கி வரும் வேளையில் அதற்கு தயாராகும் வகையில் இந்த சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டி20 உலக கோப்பையின் போது ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி இந்த தொடரிலும் அவரது சிறப்பான பார்மை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல டி20 உலக கோப்பை தொடரில் சொதப்பிய ரோகித் சர்மா இழந்த தனது பார்மை மீட்டெடுப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது தற்போதைய பார்ம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி அளித்த பதிலில் கூறியதாவது:-
எந்த ஒரு வீரரும் தங்களது பார்மை இழப்பது என்பது நடக்கக் கூடிய ஒன்றுதான். பார்மை இழக்காத வீரர் என்று கிரிக்கெட்டில் யாருமே கிடையாது. அனைவருக்குமே இது நடந்துள்ளது. கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், தோனி போன்றவர்கள் கூட பார்மை இழந்து தவித்த காலம் எல்லாம் உண்டு. ஒரு வீரரால் எப்பொழுதுமே அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய இயலாது, அது மனித இயல்பு தான்.
அவர்களும் ஒரு கட்டத்தில் பார்மில் சறுக்களை சந்தித்து இருந்தார்கள். அதேபோலத்தான் விராட் கோலி மற்றும் ரோஹித்துக்கு பார்மில் சறுக்கல் ஏற்பட்டது. ஆனாலும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற பெரிய வீரர்களுக்கு இழந்த பார்மை மீட்டெடுக்க ஒரு சிறிய இடைவெளியும், ஒரு முழுவதுமான தொடருமே போதுமானது.
என்று ரவி சாஸ்திரி கூறினார்.






