என் மலர்
விளையாட்டு
- ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்தில் குரோஷியா வீரர் கோல் அடித்தார்.
- 2வது பாதி ஆட்டத்தின் முடிவில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரை இறுதி ஆட்டங்களில் தோல்வி அடைந்த குரோஷியா-மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஜோஸ்கோ குவார்டியோல் தமது அணிக்கான முதல் கோல் அடித்தார்.
பதிலுக்கு 9வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் அக்ரஃப் தாரி ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் சமநிலையில் இருந்தது. இதையடுத்து 42வது நிமிடத்தில் குரோஷியா வீரர் மிஸ்லாவ் ஒர்சிக் தமது அணிக்கான 2வது கோலை அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்ட முடிவில் குரோஷியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் எதுவும் அடிக்கவில்லை. கூடுதல் நேர ஆட்ட முடிவிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற குரோஷியா இந்த உலக கோப்பை தொடரில் 3வது இடத்தை பிடித்தது.
- வங்காளதேசம் முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் குவித்தது.
- இந்திய தரப்பில் அக்ஷர் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
thaசட்டோகிராம்:
இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடை பெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 404 ரன் குவித்தது. வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், உமேஷ்யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 254 ரன்கள் முன்னிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை ஆடியது. அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதனால் வங்காள தேசத்துக்கு 513 ரன் இலக்காக இருந்தது. தொடக்க வீரர் சுப்மன் கில்லும் (110 ரன்), புஜாரா வும் (102 ரன்) சதம் அடித்தனர். 513 ரன் எடுத்தால் வெற்றி கடினமான இலக்குடன் ஆடிய வங்காள தேசம் நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன் எடுத்து இருந்தது. 4-வது நாள் ஆட்டம் இன்று நடந்தது.
வங்காள தேசம் அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் நஜிமுல் உசேன், ஜாகிர் உசேன் நிதானமாக ஆடினார்கள். இருவரும் அரை சதம் அடித்து இந்திய பந்து வீச்சை திணறடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் குவித்தது.
இந்த ஜோடியை உமேஷ் யாதவ் பிரித்தார். அடுத்து வந்த யாசீர் அலி 5 ரன்னிலும் தாஸ் 19 ரன்னிலும் ரஹிம் 23 ரன்னிலும் யாசர் 3 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் அணி 6 விக்கெட்டை இழந்து 272 ரன்கள் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் அக்ஷர் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நாளை கடைசி நாள் இந்திய வெற்றி பெற 4 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.
- அரைஇறுதியில் 0-2 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் பணிந்தது.
- குரோஷியா அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் மொராக்கோவுடன் கோலின்றி டிரா கண்டது.
தோகா:
கத்தாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நாளை இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினாவை சந்திக்கிறது. முன்னதாக இன்று (சனிக்கிழமை) கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரைஇறுதியில் தோல்வி கண்ட குரோஷியா-மொராக்கோ அணிகள் சந்திக்கின்றன.
அரைஇறுதிக்கு முன்னேறிய ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த முதல் அணி என்ற பெருமையை பெற்ற மொராக்கோ அணி தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ளது. முதலாவது லீக் ஆட்டத்தில் குரோஷியாவுடன் கோலின்றி டிரா செய்த மொராக்கோ அணி பெல்ஜியம், கனடா அணிகளை தோற்கடித்து தனது பிரிவில் (எப்) முதலிடத்தை பிடித்து நாக்-அவுட் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.
2-வது சுற்றில் ஸ்பெயினுடன் கூடுதல் நேரம் முடிவில் கோலின்றி டிரா செய்த மொராக்கோ அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதுடன், கால்இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை சாய்த்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. அரைஇறுதியில் 0-2 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் பணிந்தது. குரோஷியா அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் மொராக்கோவுடன் கோலின்றி டிரா கண்டது.
அடுத்த ஆட்டத்தில் கனடாவை வென்றது. அதற்கு அடுத்த ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் கோலின்றி டிரா செய்து தனது பிரிவில் 2-வது இடத்துடன் நாக்-அவுட் சுற்றுக்குள் கால்பதித்தது. 2-வது சுற்றில் ஜப்பானுடன் கூடுதல் நேரத்தில் டிரா (1-1) செய்த குரோஷியா அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-1 என்ற கோல் கணக்கில் சாய்த்தது. கால்இறுதியில் பிரேசிலுடன் கூடுதல் நேரம் முடிவில் டிரா (1-1) செய்து பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தது. அரைஇறுதியில் 0-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் சரண் அடைந்தது.
வலுவான அணிகளை முந்தைய சுற்று ஆட்டங்களில் வீழ்த்தி இருக்கும் இவ்விரு அணிகளும் அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி குறித்து மொராக்கோ அணியின் பயிற்சியாளர் வாலிட் ரெக்ரஜி கூறுகையில், 'இந்த ஆட்டத்தில் மனரீதியாக வலுவாக செயல்படுவது கடினமானதாக இருக்கும். இதுவரை களம் இறங்காத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். 3-வது இடத்தை பிடிக்க கடுமையாக முயற்சிப்போம். இதில் வென்று வெண்கலப்பதக்கத்துடன் தாயகம் திரும்ப விரும்புகிறோம்' என்றார்.
- உலக கோப்பை இறுதி போட்டி தனது கடைசி சர்வதேச ஆட்டம் என்று குரோஷியாவை வீழ்த்திய பிறகு மெஸ்சி தெரிவித்தார்.
- மரடோனா வழியில் மெஸ்சி நாட்டுக்காக உலக கோப்பையை பெற்று கொடுப்பாரா? என்ற ஆர்வத்தில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.
உலகின் தலை சிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி கிளப் போட்டிகளில் பல கோப்பைகளை வென்று இருக்கிறார். அர்ஜென்டினா அணிக்காக உலக கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை என்ற ஏக்கம் 32 வயதான அவருக்கு நீண்ட காலமாக இருக்கிறது.
2014-ல் இறுதிப்போட்டி வரை வந்து ஜெர்மனியிடம் தோற்று உலக கோப்பையை இழந்தார்.
கடந்த ஆண்டு பிரேசிலை வீழ்த்தி கோபா அமெரிக்கா கோப்பையை வென்று அர்ஜென்டினாவுக்கு பெருமை சேர்த்தார். 28 ஆண்டு கனவை நனவாக்கினார். அதே போன்று மரடோனா வழியில் மெஸ்சி நாட்டுக்காக உலக கோப்பையை பெற்று கொடுப்பாரா? என்ற ஆர்வத்தில் அவரது ரசிகர்கள் உள்ளனர். 36 ஆண்டுகால அர்ஜென்டினாவின் கனவை அவர் நிறைவேற்றுவாரா என்ற எதிர் பார்ப்பும் இருக்கிறது.
உலக கோப்பை இறுதி போட்டி தனது கடைசி சர்வதேச ஆட்டம் என்று குரோஷியாவை வீழ்த்திய பிறகு மெஸ்சி தெரிவித்தார். இதனால் உலக கோப்பையுடன் அவர் வெளியேறுவாரா ? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உலக கோப்பையில் மெஸ்சியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருக்கிறது. தனது முழு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். 5 கோல்கள் அடித்துள்ளார். 3 கோல்கள் அடிக்க உதவி புரிந்துள்ளார். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் பந்தை கடத்தி செல்லும் விதம் பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்கிறது.
வீரர்களை ஏமாற்றி பந்தை கொண்டு செல்வதில் அவருக்கு நிகரான வீரர் யாரும் இல்லை என்பதை இந்த தொடரில் அவர் பல ஆட்டத்தில் நிரூபித்து காட்டியுள்ளார். குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 3-வது கோல் அடிக்க மெஸ்சி பந்தை கொண்டு சென்ற விதம் மிகவும் அபாரமாக இருந்தது.
தேவைக்கு ஏற்ப வேகமாக ஓடுவது, பந்தை எதிர் அணி வீரர்களின் காலுக்கு இடையில் அடித்து கொண்டு செல்வது என்பது உள்பட பல்வேறு மேஜிக்கை வெளிப்படுத்தி வருகிறார்.
உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் என்ற சாதனையை மெஸ்சி படைத்தார். அவர் 11 கோல்கள் அடித்துள்ளார். குரோஷியாவுக்கு எதிரான அரை இறுதியில் கோல் அடித்ததன் மூலம் அவர் பாடிஸ்டுடாவை (10 கோல்) முந்தினார்.
உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற மெஸ்சியின் கனவு நனவாகுமா? என்று அர்ஜென்டினா ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கிறார்கள்.
- ரஞ்சி கோப்பையில் ஜார்கண்ட் அணிக்காக இஷான் கிஷன் விளையாடி வருகிறார்.
- இஷான் கிஷன் தன்னுடைய முதல் சர்வதேச சததத்தையே இரட்டை சதமாக மாற்றினார்.
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இஷான் கிஷான் இரட்டை சதம் அடித்து அசத்தினார். 130 பந்துகளில் 210 ரன்கள் அடித்து உள்ளார். அதில் 24 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சர்கள் அடங்கும். அவர் 126 பந்துகளில் 200 ரன்கள் சேர்த்தார்.
இதுவரை அடிக்கப்பட்ட இரட்டை சதங்களிலேயே இதுதான் அதிவேக சதம். அதுமட்டுமில்லாமல் இஷான் கிஷன் தன்னுடைய முதல் சர்வதேச சததத்தையே இரட்டை சதமாக மாற்றினார்.
இந்நிலையில் இப்போது ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வரும் அவர் ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடும் போது சதமடித்து அசத்தியுள்ளார். 195 பந்துகளை சந்தித்த இஷான் 8 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 132 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
- புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்த புனே அணி முதல் முறை யாக சாம்பியன் பட்டம் பெறும் வேட்கையில் உள்ளது.
- புனேயை வீழ்த்தி 2-வது முறையாக பட்டம் வெல்லும் ஆர்வத்தில் ஜெய்ப்பூர் அணி இருக்கிறது.
மும்பை:
9-வது புரோ கபடி லீக் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
இதில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-புனேரி பல்தான் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் மிகவும் வலுவான அணியான ஜெய்ப்பூர் 'லீக்' ஆட்டத்தில் முதல் இடத்தை பிடித்தது. அரை இறுதியில் பெங்களூருவை எளிதில் வீழ்த்தியது.
புனேயை வீழ்த்தி 2-வது முறையாக பட்டம் வெல்லும் ஆர்வத்தில் ஜெய்ப்பூர் அணி இருக்கிறது. அந்த அணி அறிமுக கபடி போட்டியில் (2014) சாம்பி யன் பட்டம் பெற்றது. 4-வது சீசனில் இறுதி ஆட்டத்தில் (2016) பாட்னா விடம் தோற்றது.
புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்த புனே அணி முதல் முறை யாக சாம்பியன் பட்டம் பெறும் வேட்கையில் உள்ளது. புனே அணி முதல் முறையாக இறுதி போட்டி யில் ஆடுகிறது.
அரை இறுதியில் தமிழ் தலைவாசை கடும் போராட்ட த்திற்கு பின்னரே வென்றது. இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய 2 முறையும் புனே அணிதான் வெற்றி பெற்று இருந்தது.
- பிரான்ஸ் அணி 4-வது முறையாக இறுதி போட்டியில் ஆடுகிறது. 2006-ல் இத்தாலியிடம் தோற்று கோப்பையை பறி கொடுத்தது.
- அர்ஜென்டினா 36 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது.
லுசைல்:
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி கத்தாரில் தொடங்கி யது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன.
கடந்த 2-ந்தேதி லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் நெதர்லாந்து, செனகல் ( குரூப் ஏ ), இங்கி லாந்து , அமெரிக்கா (பி), அர்ஜென்டினா போலந்து (சி), பிரான்ஸ் ஆஸ்திரேலியா ( டி ) , ஜப்பான் , ஸ்பெயின், (இ), மொராக்கோ, குரோஷியா (எப்), பிரேசில், சுவிட்சர்லாந்து (ஜி), போர்ச்சுக்கல், தென் கொரியா ( எச் ) ஆகிய 16 நாடுகள் நாக்அவுட்டான 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.
ஈக்வடார், கத்தார், ஈரான், வேல்ஸ், மெக்சிகோ, சவுதி அரேபியா, துனிசியா, டென்மார்க், ஜெர்மனி, கோஸ்டாரிகா , பெல்ஜியம், கனடா , கேமரூன், செர்பியா, உருகுவே , கானா ஆகிய நாடுகள் முதல் சுற்றி லேயே வெளியேற்றப் பட்டன.
2-வது சுற்று ஆட்டங்கள் கடந்த 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடந்தது. இதன் முடிவில் நெதர் லாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோஷியா, பிரேசில், மொராக்கோ, போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, போலந்து, செனகல், ஜப்பான், தென் கொரியா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகியவை 2-வது சுற்றில் வெளி யேறின.
கால்இறுதி போட்டிகள் கடந்த 9 மற்றும் 10-ந்தேதி நடைபெற்றது. இதன் முடிவில் குரோஷியா, அர்ஜென்டினா, மொராக்கோ , பிரான்ஸ் ஆகிய நாடுகள் அரை இறுதிக்கு முன்னேறின. பிரேசில் , நெதர்லாந்து , போர்ச்சுக்கல் , இங்கிலாந்து ஆகியவை கால்இறுதியில் வெளியேற்றப்பட்டன.
13-ந்தேதி நடந்த முதல் அரை இறுதியில் அர்ஜென்டினா 3-0 என்ற கணக்கில் குரோஷியாவை யும், 14-ந்தேதி நடந்த 2-வது அரை இறுதியில் பிரான்ஸ் 2-0 என்ற கணக்கில் குரோஷியாவை யும் வீழ்த்தின.
2 நாள் ஓய்வுக்கு பிறகு 3-வது இடத்துக்கான ஆட்டம் இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. இதில் மொராக்கோ- குரோஷியா அணிகள் மோதுகின்றன.
உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை ) இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. லுசைல் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா-நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன.
உலக கோப்பையை 3-வது முறையாக வெல்லப் போவது யார் ? என்று உலகம் முழுவதும் ஆவலு டன் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அர்ஜென்டி னாவும், பிரான்சும் இரண்டு தடவை சாம்பியன் பட்டம் பெற்று இருந்தன.
அர்ஜென்டினா 1978, 1986 ஆகிய ஆண்டுகளிலும், பிரான்ஸ் 1998, 2018 ஆகிய ஆண்டுகளிலும் உலக கோப்பையை வென்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். சாம்பியன் பட்டம் பெற இரு அணிகளும் கடுமையாக போராடும்.
அர்ஜென்டினா 36 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. கடைசியாக மரடோனா தலைமையில் 1986-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றது.
அர்ஜென்டினா அணி 6-வது முறையாக இறுதி போட்டியில் ஆடுகிறது. இதில் 3 முறை தோல்வியை தழுவியது. 1930, 1990, 2014 ஆண்டுகளில் அந்த அணி இறுதி போட்டியில் தோற்று கோப்பையை பறி கொடுத்தது. கடைசியாக 2014-ல் மெஸ்சி தலைமை யிலான அணி ஜெர்மனி யிடம் தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்தது.
அர்ஜென்டினாவின் பலமே மெஸ்சிதான். இந்த போட்டி தொடரில் அவரது ஆட்டம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இன்னும் ஒரே ஒரு ஆட்டத் தில் தனது திறமையை வெளிப்படுத்தினால் உலக கோப்பை கிடைத்துவிடும்.
35 வயதான மெஸ்சி இந்த உலக கோப்பையில் 5 கோல்கள் அடித்து எம்பாப் வேயுடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார். மேலும் அணியின் மற்ற வீரர்கள் கோல் அடிக்க உதவி புரிந்துள்ளார். இதுவரை 3 கோல்கள் அடிக்க உதவி புரிந்துள்ளார்.
வீரர்களை ஒருங்கிணைத்து செல்வதிலும் மெஸ்சி முக்கிய பங்கு வகித்து வருகிறார். இதே போல அல்வாரெஸ் (4 கோல்கள்), என்சோ பெர்னாண்டஸ், அலெக்சிஸ் மேக் அலிஸ்டர், மொலினா போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.
இது தவிர கோன்சாலோ மான்டியல், அகுனா, டிபால், ஒட்டமன்டி போன்ற சிறந்த வீரர்களும் இருக்கிறார்கள். பிரான்சின் மின்னல் வேக ஆட்டத்தை எதிர் கொள்வது அர்ஜென்டினாவுக்கு சவாலானது. அந்த அணி பின்களத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
பிரான்ஸ் அணி பின்களம், நடுகளம், முன் களம் என அனைத்து துறையிலும் அபாரமாக இருக்கிறது. மின்னல் வேகத்தில் ஆடுவது அந்த அணியின் கூடுதல் பலமாகும். ஒவ்வொரு பகுதியில் இருக்கும் வீரர்களும் தலை சிறந்தவர்கள்.
5 கோல்கள் அடித்துள்ள எம்பாப்வே, 4 கோல் எடுத்த ஆலிவர் ஜிரவுட், கிரீன்ஸ்மேன், டெம்ப்ளே, ரேபியாட், கோண்டே, பெர்னாண்டஸ் போன்ற அபாரமாக ஆடும் வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.
பிரான்ஸ் அணி தொடர்ந்து 2-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணி இத்தாலி, பிரேசில் அணிகளுடன் இணையும் வேட்கையில் உள்ளது.
இத்தாலி 1934, 1938 ஆகிய ஆண்டுகளிலும், பிரேசில் 1958, 1962 ஆகிய ஆண்டுகளிலும் உலக கோப்பையை தொடர்ச்சியாக கைப்பற்றியது.
பிரான்ஸ் அணி 4-வது முறையாக இறுதி போட்டியில் ஆடுகிறது. 2006-ல் இத்தாலியிடம் தோற்று கோப்பையை பறி கொடுத்தது.
தென் அமெரிக்க கண்டத்தின் வலுவான அணிகளில் ஒன்றான அர்ஜென்டினா தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கிறது. ஐரோப்பா கண்டத்தின் சிறந்த அணியில் ஒன்றான பிரான்ஸ் 4-வது வரிசையில் உள்ளது. இதனால் இறுதிப் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும்.
- இருவரும் அரை சதம் அடித்து இந்திய பந்து வீச்சை திணறடித்தனர்.
- நஜிமுல் உசேன் 63 ரன்னும், ஜாகிர் உசேன் 50 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.
சட்டோகிராம்:
இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடை பெற்று வருகிறது.
இந்தியா முதல் இன்னிங்சில் 404 ரன் குவித்தது. வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், உமேஷ்யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
254 ரன்கள் முன்னிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை ஆடியது. அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் வங்காள தேசத்துக்கு 513 ரன் இலக்காக இருந்தது. தொடக்க வீரர் சுப்மன் கில்லும் (110 ரன்), புஜாரா வும் (102 ரன்) சதம் அடித்தனர்.
513 ரன் எடுத்தால் வெற்றி கடினமான இலக்குடன் ஆடிய வங்காள தேசம் நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன் எடுத்து இருந்தது.
4-வது நாள் ஆட்டம் இன்று நடந்தது. வங்காள தேசம் அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் நஜிமுல் உசேன், ஜாகிர் உசேன் நிதானமாக ஆடினார்கள்.
இருவரும் அரை சதம் அடித்து இந்திய பந்து வீச்சை திணறடித்தனர். 40 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது வங்காளதேசம் அணி விக்கெட் இழப்பின்றி 113 ரன் எடுத்து இருந்தது. நஜிமுல் உசேன் 63 ரன்னும், ஜாகிர் உசேன் 50 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.
- சிட்னி தண்டர்ஸ் அணி வெறும் 5.5 ஓவர்கள் மட்டும் விளையாடியது.
- முடிவில் வெறும் 15 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமாக தோற்றது.
சிட்னி:
ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான டி20 கிரிக்கெட் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான ஆண்கள் பிக்பாஷ் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்பேன் ஹீட், ஹோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ், சிட்னி தண்டர்ஸ், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி தண்டர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற அடிலெய்டு அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய அடிலெய்டு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கிறிஸ் லின் 36 ரன்களும் , காலின் டி கிராண்ட்கோம் 33 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிட்னி அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்தது.
தொடக்க வீரர்கள் மட்டுமின்றி பின்னர் வந்த அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தனர். சிட்னி அணியில் 5 பேட்ஸ்மேன்கள் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், சிட்னி தண்டர்ஸ் அணி 5.5 ஓவர்கள் முடிவில் வெறும் 15 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான தோல்வியை கண்டது. இதன்மூலம் அடிலெய்டு அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அடிலெய்டு அணியில் ஹென்றி தோர்ன்டன் 5 விக்கெட்டும், வெஸ் அகர் 4 விக்கெட்டும் எடுத்தனர்.
இதன்மூலம் பிக்பாஷ் லீக் தொடரில் வெறும் 15 ரன்னில் சுருண்டு சிட்னி அணி மோசமான சாதனையைப் படைத்துள்ளது.
- 2-வது சுற்றில் ஜப்பானையும், கால் இறுதியில் பிரேசிலையும் குரோஷியா வீழ்த்தியது.
- மொராக்கோ 2-வது சுற்றில் ஸ்பெயினையும், கால் இறுதியில் போர்ச்சுக்கல்லையும் தோற்கடித்தன.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து கத்தார் நாட்டில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள உலக கோப்பையின் இறுதி போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது.
இதில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முன்னதாக 3-வது இடத்துக்கான போட்டி நாளை நடக்கிறது.
இதில் அரை இறுதியில் தோல்வி அடைந்த குரோஷியா-மொராக்கோ அணிகள் மோதுகின்றன. இப்போட்டி தோகாவில் உள்ள கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கிறது.
அரை இறுதியில் குரோஷியா, அர்ஜென்டினாவிடமும், மொராக்கோ பிரான்சிடமும் தோல்வி அடைந்தன. லீக் போட்டியின் போது குரோஷியாவும், மொராக்கோவும் 'எப்' பிரிவில் இடம் பெற்று இருந்தன. இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிரா ஆனது.
அந்த பிரிவில் பெல்ஜியம், கனடா அணிகளை வீழ்த்திய மொராக்கோ 7 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. கனடாவை தோற்கடித்த குரோஷியா அணி பெல்ஜியத்துடன் டிரா செய்தது. குரோஷியா 5 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தது.
2-வது சுற்றில் ஜப்பானையும், கால் இறுதியில் பிரேசிலையும் குரோஷியா வீழ்த்தியது. அதே போல் மொராக்கோ 2-வது சுற்றில் ஸ்பெயினையும், கால் இறுதியில் போர்ச்சுக்கல்லையும் தோற்கடித்தன.
இரு அணிகளும் தங்களது முந்தைய ஆட்டங்களில் பலம் வாய்ந்த அணிகளை தோற்கடித்துள்ளதால் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இப்போட்டி நாளை இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.
- வங்காளதேச அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா.
- புஜாரா, கில் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர்.
சாட்டிங்காம்:
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
வங்கதேசம் சார்பில் மெஹதி மற்றும் இஸ்லாம் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. அந்த அணி, 55.5 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கில் மற்றும் புஜாரா சதமடித்து அசத்தினர். இது டெஸ்ட் போட்டியில் அவரது முதல் சதம் ஆகும். இதனால் முன்னிலை ரன்களுடன் வங்காளதேச அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3-வது நாள் ஆட்ட இறுதியில் களமிறங்கிய வங்காள தேச அணி 12 ஓவர் சந்தித்து விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் சேர்த்து.
- பாகிஸ்தான்- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்
- ராவல்பிண்டி, முல்தான் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி
பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ராவல்பிண்டி, முல்தானில் நடைபெற்ற போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நாளை கராச்சியில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்று பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஒயிட்-வாஷ் செய்ய இங்கிலாந்து ஆர்வமாக உள்ளது.
நாளை தொடங்கும் கராச்சி டெஸ்டில் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ரேகன் அகமது களம் இறங்குவார் என இங்கிலாந்து அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. 18 வயது ஆகும் இவருக்கு கராச்சி டெஸ்ட் அறிமுக போட்டியாகும். இதன்மூலம் மிக இளம் வயதில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதற்கு முன் 1949-ல் டி.பி. க்ளோஸ் 18 வயது 149 நாட்கள் நிறைவடைந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகியுள்ளார்.
ரேகன் அகமதுவுக்கு 18 வயது 126 நாட்கள் ஆகிறது.






