search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பிக்பாஷ் லீக் தொடர் - வெறும் 15 ரன்னில் சுருண்டு சிட்னி அணி மோசமான சாதனை
    X

    வெற்றி பெற்ற அடிலெய்டு அணி

    பிக்பாஷ் லீக் தொடர் - வெறும் 15 ரன்னில் சுருண்டு சிட்னி அணி மோசமான சாதனை

    • சிட்னி தண்டர்ஸ் அணி வெறும் 5.5 ஓவர்கள் மட்டும் விளையாடியது.
    • முடிவில் வெறும் 15 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமாக தோற்றது.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான டி20 கிரிக்கெட் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான ஆண்கள் பிக்பாஷ் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

    மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்பேன் ஹீட், ஹோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ், சிட்னி தண்டர்ஸ், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

    இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி தண்டர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற அடிலெய்டு அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய அடிலெய்டு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கிறிஸ் லின் 36 ரன்களும் , காலின் டி கிராண்ட்கோம் 33 ரன்களும் எடுத்தனர்.

    இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிட்னி அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்தது.

    தொடக்க வீரர்கள் மட்டுமின்றி பின்னர் வந்த அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தனர். சிட்னி அணியில் 5 பேட்ஸ்மேன்கள் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், சிட்னி தண்டர்ஸ் அணி 5.5 ஓவர்கள் முடிவில் வெறும் 15 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான தோல்வியை கண்டது. இதன்மூலம் அடிலெய்டு அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அடிலெய்டு அணியில் ஹென்றி தோர்ன்டன் 5 விக்கெட்டும், வெஸ் அகர் 4 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதன்மூலம் பிக்பாஷ் லீக் தொடரில் வெறும் 15 ரன்னில் சுருண்டு சிட்னி அணி மோசமான சாதனையைப் படைத்துள்ளது.

    Next Story
    ×