என் மலர்
விளையாட்டு
- வில்வித்தையில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.
- இந்திய அணி இதுவரை 19 தங்கம் வென்றுள்ளது.
பீஜிங்:
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற வில்வித்தை பெண்கள் காம்பவுண்டு பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணம், அதிதி கோபிசந்த் ஸ்வாமி மற்றும் பர்னீத் கவுர் ஆகியோர் அடங்கிய அணி சீன தைபேயுடன் மோதியது.
இதில் இந்திய அணி 230-228 என்ற கணக்கில் வென்று தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.
இதுவரை இந்திய அணி 19 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 82 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் காலிறுதி போட்டி நடைபெற்றது.
- இதில் இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
ஆசிய விளையாட்டு தொடரில் இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் காலிறுதி போட்டி இன்று நடைபெற்றது.
இந்தியாவின் பி.வி.சிந்துவும், சீனாவின் ஹி பிங்ஜியோவும் மோதினர்.
இதில் பி.வி.சிந்து 16-21, 12-21 என்ற நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் போட்டி தொடரில் இருந்தும் பி.வி.சிந்து வெளியேறினார்.
- 8-ந் தேதி நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது.
- இதற்காக இரு அணி வீரர்களும் இன்று சென்னை வந்தடைந்தனர்.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.
ஐசிசி 13-வது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்கு முன்பு 1987, 1996 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் உலகக் கோப்பையை இந்தியா நடத்தியது. இருப்பினும், அந்த தொடர் மற்ற நாடுகளுடன் இணைந்து நடத்தப்பட்டது. ஆனால் இப்போது நடத்தப்படும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியா முதல் முறையாக தனியாக நடத்துகிறது.
லீக் சுற்று ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும். பங்கேற்கும் பத்து நாடுகளும் மற்ற ஒன்பது அணிகளுடன் ஒரு முறை மோதும். அதன்பிறகு முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் வரும் 8-ந் தேதி நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் இன்று சென்னை வந்தடைந்தனர்.
- 8-ந் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் சென்னையில் பலப்பரீட்சை நடத்துகிறது.
- இதற்காக இரு அணி வீரர்களும் இன்று சென்னை வந்தடைந்தனர்.
10 அணிகள் பங்கேற்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அகமதாபாத்தில் நாளை தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியாக நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.
இதனை தொடர்ந்து வரும் 8-ந் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் சென்னையில் பலப்பரீட்சை நடத்துகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் இன்று சென்னை வந்தடைந்தனர்.
இந்நிலையில் விராட் கோலி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நாளை தொடங்குகிறது. தன்மையுடன் ஒன்று கூறுகிறேன். டிக்கெட் கேட்டு யாரும் என்னை தொந்தரவு செய்யாதீர்கள். வீட்டில் இருந்தே கிரிக்கெட்டை பாருங்கள் என தெரிவித்துள்ளார்.
இந்த இன்ஸ்டா ஸ்டோரி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஆசிய விளையாட்டில் இந்தியா இதுவரை இல்லாத வகையில் அதிக வீரர்களை அனுப்பியுள்ளது.
- ஆசிய விளையாட்டின் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆசிய விளையாட்டில் இந்தியா இதுவரை இல்லாத வரையில் அதிக வீரர்களை சீனாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.88 மீட்டர் தூரமும், கிஷோர் ஜெனா 87.54 மீட்டர் தூரமும் ஈட்டியெறிந்து அசத்தினர்.
ஆசிய விளையாட்டில் இந்திய வீரர்கள் துவக்கம் முதலே அதிகளவில் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இதுவரையில், இந்தியா 81 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 18 தங்கம், 31 வெள்ளி மற்றும் 32 வெண்கலம் பதக்கங்கள் அடங்கும்.
- முதல் போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
- இந்தப் போட்டி பிற்பகல் 2 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் தொடங்குகிறது.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடர் நாளை அகமதாபாத் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
ஒவ்வொரு உலகக் கோப்பை தொடர் ஆரம்பிக்கும் போது அனைத்து அணியின் கேப்டன்களும் உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் ஒருநாள் உலகக் கோப்பையுடன் 10 அணியின் கேப்டன்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படத்தை ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
- இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது.
- இந்த போட்டி சென்னையில் 8-ந் தேதி நடைபெறுகிறது.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி அகமதாபாத் மைதானம் தயார் நிலையில் உள்ளது. நாளைய தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் (பிற்பகல் 2 மணி) பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி சென்னையில் 8-ந் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.
இந்நிலையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டரும் சிஎஸ்கே அணி வீரருமான ஜடேஜா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது வீட்டிற்கு வந்ததாக ஸ்டோரி வைத்துள்ளார். இது தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- குத்துச்சண்டையில் ஏற்கனவே இந்தியா வெண்கலம் வென்றுள்ளது.
- இந்திய அணி இதுவரை 27 வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.
பீஜிங்:
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற குத்துச்சண்டை 75 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெயின், சீனாவிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதுவரை இந்திய அணி 16 தங்கம், 27 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 74 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இந்திய அணி இன்று 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 3 ஆயிரம் மீட்டர் ஸ்பீட் ஸ்கேட்டிங் ஆண்கள் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
- டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன் வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார்.
சென்னை:
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தில் இருந்து 43 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
தமிழக வீரர், வீராங்கனைகள் ஆசிய போட்டிகளில் பதக்கங்களை வென்று முத்திரை பதித்து வருகின்றனர். இதுவரை 12 பேர் பதக்கங்களை பெற்றுள்ளனர்.
நேற்று நடந்த தடகள போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரவீன் சித்ரவேல், வித்யா ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் பிரவீன் சித்ரவேல் 16.68 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கம் பெற்றார். 22 வயதான அவர் திருவாரூர் மாவட்டம், செட்டிசத்திரம் பெரியார் நகரை சேர்ந்தவர் ஆவார்.
பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் வித்யா ராம்ராஜ் 55.68 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப் பதக்கம் பெற்றார். 25 வயதான அவர் கோவையை சேர்ந்தவர் ஆவார்.
டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன் வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார்.
ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் பெற்றது. இந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பள்ளிகல் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இருவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
3 ஆயிரம் மீட்டர் ஸ்பீட் ஸ்கேட்டிங் ஆண்கள் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆனந்த் குமார் இடம் பெற்றிருந்தார்.
இதேபோல 3 ஆயிரம் மீட்டர் ஸ்பீட் ஸ்கேட்டிங் பெண்கள் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த டாக்டர் ஆர்த்தி, கஸ்தூரி ராஜ் மற்றும் கார்த்திகா ஜெகதீஸ்வரன் ஆகியோர் இடம்பெற்றனர்.
துப்பாக்கி சுடும் போட்டியில் ஆண்கள் டிராப் அணிகள் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. இந்த அணியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பிருதிவிராஜ் தொண்டைமான் இடம் பெற்றார்.
தடகள போட்டியின் கலப்பு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த சுபா வெங்கடேசன், வித்யா, ராஜேஷ் ஆகியோர் வெள்ளி பதக்கம் பெற்றனர்.
- துப்பாக்கி சுடுதலில் 7 தங்கமும், தடகளத்தில் 4 தங்கமும், டென்னிஸ், குதிரையேற்றம், ஸ்குவாஷ், பெண்கள் கிரிக்கெட் ஆகியவற்றில் தலா ஒரு தங்கமும் கிடைத்து இருந்தது.
- வில்வித்தை போட்டியில் பெற்ற தங்கப் பதக்கம் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 71 ஆக உயர்ந்தது.
ஹாங்சோவ்:
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் 330 வீரர்களும், 328 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 661 பேர் கலந்து கொண்டுள்ளனர். 35 விளையாட்டுகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
நேற்றைய 11-வது நாள் போட்டி முடிவில் இந்திய அணி 15 தங்கம், 26 வெள்ளி, 28 வெண்கலம் ஆக மொத்தம் 69 பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
போட்டியின் 12-வது நாளான இன்று காலை இந்தியாவுக்கு முதலில் வெண்கலம் பதக்கம் கிடைத்தது. 35 கி.மீ. தூர கலப்பு இரட்டையர் நடைப்பந்தயத்தில் இந்திய ஜோடிக்கு பதக்கம் கிடைத்தது.
ஆசிய விளையாட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போட்டியில் மஞ்சு ராணி, ராம் பாபு ஜோடி 5 மணி 51 நிமிடத்தில் இலக்கை கடந்து வெண்கலப் பதக்கம் பெற்றது. இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 70 ஆக உயர்ந்தது.
இந்த பிரிவில் சீனாவுக்கு தங்கமும், ஜப்பானுக்கு வெள்ளியும் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு 16-வது தங்கப்பதக்கம் கிடைத்தது. வில்வித்தை போட்டி மூலம் இந்த தங்கம் கிடைத்தது.
ஓஜாஸ் தியோடேல்-ஜோதிசுரேகா ஜோடி வில்வித்தை காம்பவுண்டு கலப்பு அணிகள் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்று முத்திரை பதித்தது. இந்த ஜோடி இறுதிப்போட்டியில் 159-158 என்ற கணக்கில் தென்கொரிய ஜோடியை வீழ்த்தியது.
துப்பாக்கி சுடுதலில் 7 தங்கமும், தடகளத்தில் 4 தங்கமும், டென்னிஸ், குதிரையேற்றம், ஸ்குவாஷ், பெண்கள் கிரிக்கெட் ஆகியவற்றில் தலா ஒரு தங்கமும் கிடைத்து இருந்தது.
வில்வித்தை போட்டியில் பெற்ற தங்கப் பதக்கம் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 71 ஆக உயர்ந்தது. இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களை குவித்து புதிய சாதனை படைத்தது.
16 தங்கம், 26 வெள்ளி, 31 வெண்கலம், ஆக மொத்தம் 73 பதக்கங்களை இதுவரை இந்தியா பெற்றுள்ளது. 8-ந் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது. இதனால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2018-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 70 பதக்கம் பெற்றதே சாதனையாக இருந்தது. இந்த சாதனை இன்று முறியடிக்கப்பட்டு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது.
அந்த போட்டியில் இந்தியா 16 தங்கம், 23 வெள்ளி, 31 வெண்கலம் ஆக மொத்தம் 70 பதக்கங்களை பெற்று இருந்தது.
- ஸ்குவாஷ் மற்றும் குத்துச்சண்டையில் இந்தியா வெண்கலம் வென்றது.
- இந்திய அணி இதுவரை 31 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
பீஜிங்:
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற குத்துச்சண்டை 57 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பர்வீன் ஹூடா, சீனா தைபே வீராங்கனையிடம் தோற்று வெண்கலம் வென்றார்.
இதுவரை இந்திய அணி 16 தங்கம், 26 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 73 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- ஸ்குவாஷ் கலப்பு இரட்டையரில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது.
- இந்திய அணி இதுவரை 30 வெண்கலம் வென்றுள்ளது.
பீஜிங்:
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அனாகத் சிங், அபய் சிங் ஜோடி 2-1 என்ற கணக்கில் மலேசியா அணியிடம் தோற்றது. இதன்மூலம் இந்திய அணிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.
இதுவரை இந்திய அணி 16 தங்கம், 26 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 72 பதக்கங்களைப் பெற்றுள்ளது.






