என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஆண்கள் கபடியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
    • ஏற்கனவே பெண்கள் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இன்று நடைபெற்ற ஆண்கள் கபடி போட்டி அரையிறுதியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது.

    ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடிய இந்திய அணி 61-14 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் இந்திய அணி ஈரான் அல்லது சீன தைபே அணியுடன் மோத உள்ளது.

    • பேட்மிண்டனில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது.
    • இதுவரை இந்தியா 35 வெண்கலம் வென்றுள்ளது.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    பேட்மிண்டன் ஆண்கள் அரையிறுதியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், சீன வீரருடன் மோதி தோல்வி அடைந்தார். ஆனாலும் அவர் வெண்கலம் வென்றார்.

    இந்திய அணி இதுவரை 21 தங்கம், 32 வெள்ளி, 35 வெண்கலம் என மொத்தம் 88 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

    • இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    • திலக் வர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.

    பீஜிங்:

    சீனாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேசம் 20 ஓவரில் 96 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இந்தியா சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து, 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஜெய்ஸ்வால் டக் அவுட்டானார். கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட், திலக் வர்மா ஜோடி அதிரடியாக ஆடியது. திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். திலக் வர்மா 55 ரன்னும், கெயிக்வாட் 40 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில் இந்தியா 97 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்றது.

    இந்நிலையில், திலக் வர்மா தான் அடித்த அரை சதத்தை தாய்க்கு சமர்ப்பிக்கும் வகையில், தனது உடம்பில் வரைந்திருந்த தாயின் டாட்டூ படத்தை குறிப்பிட்டுக் காட்டினார்.

    • வில்வித்தையில் இந்தியா இன்று 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் வென்றது.
    • பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடித்து வருகிறது.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    கபடி பெண்கள் பிரிவில் இந்தியா, சீன தைபே அணியை போராடி வீழ்த்தி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது.

    ஏற்கனவே, வில்வித்தையில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 1வெண்கலம் வென்றுள்ளது.

    இந்திய அணி இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

    சீனா முதலிடத்திலும், ஜப்பான் 2வது இடத்திலும், தென் கொரியா 3வது இடத்திலும் உள்ளது.

    • வில்வித்தை பெண்கள் ரிகர்வ் பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றது.
    • இதுவரை இந்தியா 34 வெண்கலம் வென்றுள்ளது.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    வில்வித்தையில் பெண்கள் ரிகர்வ் பிரிவில் இந்தியாவின் அங்கிதா பகத், பஜன்கவுர் மற்றும் சிம்ரன்ஜித் கவுர் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

    இந்திய அணி இதுவரை 21 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 87 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

    • முதலில் ஆடிய வங்காளதேசம் 96 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 97 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேசம் 20 ஓவரில் 96 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இந்தியா சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து, 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஜெய்ஸ்வால் டக் அவுட்டானார். கெயிக்வாட், திலக் வர்மா ஜோடி அதிரடியாக ஆடியது. திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். திலக் வர்மா 55 ரன்னும், கெயிக்வாட் 40 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில் இந்தியா 97 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்றது.

    • பெண்கள் கபடியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
    • நாளை இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இன்று நடைபெற்ற பெண்கள் கபடி போட்டி அரையிறுதியில் இந்திய அணி நேபாளத்தை எதிர்கொண்டது.

    இதில் இந்திய அணி 61-17 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஈரான் அல்லது சீன தைபே அணியுடன் மோத உள்ளது.

    • நியூசிலாந்து தரப்பில் கான்வே- ரவீந்தரா ஆகியோர் சதம் அடித்தனர்.
    • நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் இன்று பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோரூட் 77 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் ஹென்றி, பிலிப்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. 2-வது ஓவரின் முதல் பந்தில் வில் யங் டக் ஆகி வெளியேறி நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து கான்வே உடன் 23 வயது இளம் வாலிபர் ரவீந்தரா இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசினார்.

    இருவரும் அதிரடியாக விளையாடி சதம் அடித்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 36.2 ஓவரில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 2019 உலகக் கோப்பைக்கு பழி தீர்த்தது.

    • நியூசிலாந்து தரப்பில் ஹென்றி, பிலிப்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
    • இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் அதிகபட்சமாக 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று தொடங்கியது. இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணி ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பேர்ஸ்டோவ் - மலான் களமிறங்கினர். பேர்ஸ்டோவ் தொடக்க முதலே அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் ஆடிய மலான் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 24 பந்துகளில் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ஜோரூட் பொறுமையுடன் ஆடினார்.

    அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோவ் 25 ரன்னிலும் ஹாரி புரூக் 25 ரன்னுலும் மொயின் அலி 11 ரன்னிலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனையடுத்து ஜோ ரூட்டுடன் - பட்லர் ஜோடி சேர்ந்து சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்தனர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் அரைசதம் அடித்து அசத்தினார். பட்லர் 43 ரன்களில் இருந்த போது ஹென்றி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 77 ரன்னில் அவுட் ஆனார்.

    இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் ஹென்றி, பிலிப்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.
    • டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று தொடங்கியது. நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் அரங்கேறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

    இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதாவது ரவுண்ட் ராபின் அடிப்படையில் ஒவ்வொரு அணியும் மொத்தம் 9 லீக்கில் மோதும். இதன் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அரைஇறுதி சுற்றை எட்டுவதற்கு 7 வெற்றி தேவை. பல ஆட்டங்கள் மழையால் பாதிக்க வாய்ப்பு இருப்பதால் குறைந்தது 6 வெற்றியாவது பெற வேண்டும்.


    குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

    இந்நிலையில் இந்த போட்டியை காண குறைவான ரசிகர்கள் கூட்டமே வந்துள்ளது. உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் குறைவான ரசிகர்களே வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எந்த ஒரு உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டமும் இப்படி இருந்ததில்லை.

    • ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.
    • இந்திய அணி இதுவரை 20 தங்கம் வென்றுள்ளது.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால் சந்து ஜோடி, மலேசியா ஜோடியை 2-0 என வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

    இதுவரை இந்திய அணி 20 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 83 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • ஆண்கள் கபடியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
    • நாளை நடைபெறும் அரையிறுதியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இன்று நடைபெற்ற ஆண்கள் கபடி போட்டி லீக் ஆட்டத்தில் இந்திய அணி சீன தைபே அணியை எதிர்கொண்டது.

    இதில் இந்திய அணி 50-27 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. நாளை நடைபெறும் அரையிறுதியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுகிறது.

    ×