என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • உலக கோப்பையை வெல்ல வேண்டிய நெருக்கடியில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு இருக்கிறது.
    • கண்காணிப்பு கேமரா மற்றும் டிரோன் மூலம் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை:

    10 நாடுகள் பங்கேற்றுள்ள 13-வது ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அகமதாபாத்தில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது.

    தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஐதராபாத்தில் நடந்த 2-வது போட்டி யில் பாகிஸ்தான் 81 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை தோற்கடித்தது.

    நேற்று 2 போட்டி நடைபெற்றது. தர்மசாலாவில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், டெல்லியில் நடந்த 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா 102 ரன் வித்தியாசத்தில் இலங்கையையும் வீழ்த்தின.

    உலக கோப்பை போட்டியின் 5-வது 'லீக்' ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பிற்பகல் தொடங்குகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருப்பதால் முழு திறமையை வெளிப்படுத்தும். இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி ஐ.சி.சி. கோப்பையை வென்று கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிறது. இதனால் உலக கோப்பையை வெல்ல வேண்டிய நெருக்கடியில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு இருக்கிறது. இதனால் வெற்றியுடன் தொடங்குவது அவசியமாகும்.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான போட்டியை பார்ப்பதற்காக காலையில் இருந்தே சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு ரசிகர்கள் திரண்டனர். காலை 10 மணியளவில் ரசிகர்கள் வர தொடங்கினார்கள். நேரம் செல்ல செல்ல ரசிகர், ரசிகைகள் எண்ணிக்கை அதிகமானது. பெரும் அளவில் சேப்பாக்கத்தில் ரசிகர்கள் திரண்டனர்.

    மைதானத்துக்குள் நுழையும் அனைத்து வாயில்களிலும் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். 12 மணியளவில் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    டிக்கெட் வைத்திருந்த ரசிகர்கள் உற்சாகத்துடன் ஸ்டேடியத்துக்குள் சென்றனர். அவர்கள் எந்த வழியாக எந்த நுழைவு வாசலுக்கு செல்ல வேண்டும் என்பதை போலீசாரும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஊழியர்களும் அறிவுறுத்தினார்கள். கிரிக்கெட் போட்டியையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு கொடிகள் அமோகமாக விற்பனையானது. ரசிகர்-ரசிகைகள் தேசிய கொடியை ஆர்வத்துடன் வாங்கி உற்சாகத்துடன் மைதானத்துக்குள் சென்றனர். இதேபோல வீரர்களின் ஜெர்சி, தொப்பி உள்ளிட்ட பொருட்களும் விறுவிறுப்பாக விற்பனையானது.

    மேலும் ரசிகர், ரசிகைகள் தங்களது முகத்திலும் வர்ணம் பூசிக் கொண்டனர். இதற்கான பணியில் அதற்கான ஊழியர்கள் ஈடுபட்டனர். கிரிக்கெட் போட்டியால் அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைத்தது.

    கிரிக்கெட் போட்டியையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள். கண்காணிப்பு கேமரா மற்றும் டிரோன் மூலம் பாதுகாப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டது.

    மேலும் அந்த பகுதியில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகனம் செல்வதற்கான நுழைவு சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

    • கடந்த 10 ஆண்டாக ஐ.சி.சி.கோப்பை எதனையும் இந்திய அணி வெல்லவில்லை.
    • உலக கோப்பையில் சொந்த மண்ணில் வெற்றியுடன் தொடங்குமா என்று இந்திய ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

    சென்னை:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவின் 10 நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதால் திடமான நம்பிக்கையுடன் இந்தப் போட்டியில் களமிறங்குகிறது.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக ஆடுகிறார்கள்.

    தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதால் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார் என தெரிகிறது. இது இந்திய அணிக்கு இழப்பாகும். அவர் ஆடாவிட்டால் இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களம் காண வாய்ப்புள்ளது.

    பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.

    கடந்த 10 ஆண்டுகளாக ஐ.சி.சி.கோப்பை எதனையும் வெல்லாத குறையை போக்க தீவிரமாக தயாராகி வரும் இந்திய அணி, இந்த உலக கோப்பையில் சொந்த மண்ணில் வெற்றியுடன் தொடங்குமா என ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

    பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலம் பொருந்தியதாக திகழ்கிறது.

    பேட்டிங்கில் டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், மார்னஸ் லபுஸ்சேனும், பந்துவீச்சில் ஹேசில்வுட், சீன் அபாட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    ஆல்-ரவுண்டர்களான மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ் ஆகியோர் அந்த அணியின் ஆணிவேராக உள்ளனர். மொத்தத்தில் வலுவான இரு அணிகள் போட்டியை வெற்றியுடன் தொடங்க கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டிக்கு மழை பாதிப்பு இருக்காது என்று வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இவ்விரு அணிகளும் ஒருநாள் போட்டியில் இதுவரை 149 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 83-ல் ஆஸ்திரேலியாவும், 56-ல் இந்தியாவும் வென்றுள்ளன. 10 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    இரு அணிகளின் உத்தேச பட்டியல் விவரம் வருமாறு:

    இந்தியா:

    ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் அல்லது இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

    ஆஸ்திரேலியா:

    டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித், மார்னஸ் லபுசேன், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் (கேப்டன்), ஹேசில்வுட், ஆடம் ஜம்பா.

    • தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது.
    • தென் ஆப்பிரிக்க அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    புதுடெல்லி:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் 4-வது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் இலங்கை அணியும் மோதின. டெல்லியில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கம் முதலே அதிரடி காட்டிய தென் ஆப்பிரிக்க அணி ரன்மழை பொழிந்தது. குயிண்டன் டாக் (100 ரன்கள்), வாண்டர் உசேன் (108 ரன்கள்) ஏய்டென் மார்கரம் (106 ரன்கள்) ஆகியோர் சதம் அடித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் குவித்துள்ளது.

    இதையடுத்து 429 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் குசல் பெரேரா 7, குசல் மெண்டிஸ் 76, சதீர சமரவிக்ரம 23, தனஞ்ஜெயா டி சில்வா 11, சரித் அசலங்கா 79, தசுன் ஷனகா 68, கசுன் ராஜிதா 33, மதீஷா பதிரனா 5, தில்ஷான் மதுஷங்கா 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

    இந்நிலையில் இலங்கை அணி 44.5 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • அதிகபட்சமாக தடகள போட்டிகளில் 29 பதக்கம், துப்பாக்கி சுடுதலில் 22 பதக்கங்களை இந்தியா வென்றது.
    • பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் சாத்விக்- சிராக் ஜோடி தங்கம் வென்றது.

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் 661 பேர் கலந்து கொண்டனர். 35 விளையாட்டுகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    நேற்றைய 14-வது நாள் போட்டி முடிவில் இந்தியா 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் ஆக மொத்தம் 95 பதக்கங்களைப் பெற்று பதக்க பட்டியலில் தொடர்ந்து 4-வது இடத்தில் இருந்தது. நேற்று ஒரே நாளில் 9 பதக்கங்களைப் பெற்றது.

    ஆசிய விளையாட்டு போட்டியின் 15-வது நாளான இன்று காலை இந்தியாவுக்கு மேலும் 5 பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் 100 பதக்கங்களைக் குவித்து புதிய வரலாற்று சாதனை படைத்தது.

    3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் ஆக மொத்தம் 5 பதக்கம் கிடைத்தது. இதை தொடர்ந்து மேலும் இன்றைய ஆட்ட முடிவில் மேலும் 7 பதக்கள் கிடைத்தன. அதன்படி, இன்றைய நாளில் மட்டும் 6 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என 12 பதக்கங்களை இந்தியா வென்றது.

    இந்நிலையில், இந்தியாவிற்கான ஆட்டங்கள் முடிவடைந்தன. ஆசிய விளையாட்டு போட்டிகளின் முடிவில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கல பதக்கம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று போட்டியை இந்தியா நிறைவு செய்துள்ளது.

    இதில், அதிகபட்சமாக தடகள போட்டிகளில் 29 பதக்கம், துப்பாக்கி சுடுதலில் 22 பதக்கங்களை இந்தியா வென்றது. மகளிர், ஆடவர் செஸ் அணிகள் பிரிவில் வெள்ளி பதக்கம். வில்வித்தையில் ஓஜஸ் மற்றும் ஜோதி தங்கம் வென்றனர். பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் சாத்விக்- சிராக் ஜோடி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    19வது ஆசிய விளையாட்டு போட்டியின் கடைசி நாளான நாளை பிற நாடுகள் விளையாடும் ஒரு சில போட்டிகள் உள்ளன. அதன்பிறகு, ஆசிய விளையாட்டு போட்டியின் நிறைவு விழா நடைபெறும்.

    • 100 பதக்கங்களை குவித்த இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.
    • வருகிற 10-ந் தேதி நமது விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    புதுடெல்லி:

    ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி முதல் முறையாக 3 இலக்க பதக்கத்தை தொட்டு புதிய வரலாறு படைத்தது.

    100 பதக்கங்களை குவித்த இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார். இது அவர் தனது 'எக்ஸ்' பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதனையாகும். 100 பதக்க மைல்கல்லை எட்டி வியக்கத்தக்க சாதனையால் இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்தியாவின் இந்த வரலாற்று சாதனைக்கு வழி வகுத்த நமது அற்புதமான விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொருவரும் நம்மை பெருமைப்படுத்திவிட்டனர்.

    ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தவும், வருகிற 10-ந் தேதி நமது விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 5 ஓவரில் 48 ரன்கள் எடுத்தது.
    • மழை காரணமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வங்காளதேசம் எட்டியது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    மழையால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்திருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    தொடர்ந்து மழை பெய்ததால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வங்காளதேசம் 5 ஓவரில் 65 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஆடிய வங்காளதேசம் கடைசி ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் வங்காளதேச அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவரில் 282 ரன்கள் சேர்த்தது.
    • அடுத்து ஆடிய நியூசிலாந்து 283 ரன்கள் எடுத்து வென்றது.

    அகமதாபாத்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 282 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட்

    77 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 36.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டேவிட் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி சதம் அடித்தனர்.

    இந்நிலையில், வெற்றிக்குப் பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திரா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    எனது பெற்றோர் பிறந்த ஊர் பெங்களூர். உண்மையில் அங்கு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை விளையாடுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிராக பெங்களூருவில் விளையாட இருக்கிறேன். இந்தப் போட்டியில் எனக்கு ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.

    பெங்களூர் என்றால் எனது குடும்பம் தான் நினைவுக்கு வரும். ஏனென்றால் நான் பெங்களூரில் எனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டுள்ளேன்.

    தந்தை ரவி கிருஷ்ணமூர்த்திக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால்தான் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் நினைவாக எனக்கு ரச்சின் ரவீந்திரா என்ற பெயரை சூட்டினார் என தெரிவித்தார்.

    • வில்வித்தையில் இந்தியா இன்று 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் வென்றது.
    • பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடித்து வருகிறது.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் 661 பேர் கலந்து கொண்டனர். 35 விளையாட்டுகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    நேற்றைய 14-வது நாள் போட்டி முடிவில் இந்தியா 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் ஆக மொத்தம் 95 பதக்கங்களைப் பெற்று பதக்க பட்டியலில் தொடர்ந்து 4-வது இடத்தில் இருந்தது. நேற்று ஒரே நாளில் 9 பதக்கங்களைப் பெற்றது.

    ஆசிய விளையாட்டு போட்டியின் 15-வது நாளான இன்று காலை இந்தியாவுக்கு மேலும் 5 பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் 100 பதக்கங்களைக் குவித்து புதிய வரலாற்று சாதனை படைத்தது.

    3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் ஆக மொத்தம் 5 பதக்கம் கிடைத்தது. இதை தொடர்ந்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 100-யை தொட்டது.

    2018-ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடந்த ஆசிய விளையாட்டில் இந்தியா 70 பதக்கம் வென்றதே சாதனையாக இருந்தது. கடந்த 4-ம் தேதி இதை முந்தி இந்தியா சாதனை படைத்து இருந்தது. தற்போது 100 பதக்கங்களைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.

    பெண்கள் கபடியில் இன்று இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. இறுதிப் போட்டியில் சீன தைபேயை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

    இறுதியில் இந்தியா 26-25 என்ற புள்ளிக் கணக்கில் சீன தைபேயை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை பெற்றது. முதல் பாதியில் இந்தியா 14-9 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2-வது பாதி ஆட்டத்தில் சீன தைபே சவால் கொடுத்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆண்கள் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஈரானை எதிர்கொள்கிறது.

    முன்னதாக, வில்வித்தையில் 2 தங்கமும், ஒரு வெள்ளியும், ஒரு வெண்கலமும் கிடைத்தது.

    பெண்கள் காம்பவுண்ட் தனிநபர் வில்வித்தை போட்டியில் ஜோதி சுரேகா தங்கம் வென்றார். அவர் இறுதிப் போட்டியில் 149-145 என்ற புள்ளிக்கணக்கில் தென் கொரியா வீராங்கனை சேவோனை வீழ்த்தினார்.

    இதே இந்தியாவுக்கு வெண்கல பதக்கமும் கிடைத்தது. வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி கோபிசந்த் 146-140 என்ற கணக்கில் இந்தோனேசியாவை சேர்ந்த ரைத் ஜில்காட்டியை தோற்கடித்தார்.

    ஆண்களுக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கமும், வெள்ளியும் கிடைத்தது. இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் ஒஜாஸ் பிரவின்-அபிஷேக் வர்மா மோதினார்கள்.

    இதில் ஒஜாஸ் 149-147 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்று தங்கப் பதக்கம் வென்றார். அபிஷேக் வர்மாவுக்கு வெள்ளி கிடைத்தது.

    வில்வித்தை போட்டியில் மட்டும் இந்தியாவுக்கு 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் ஆக மொத்தம் 9 பதக்கம் கிடைத்தது.

    பெண்கள் கபடி பிரிவில் பெற்ற தங்கம் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 100 ஆக அதிகரித்தது. பிற்பகலில் மேலும் பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை அதிகரிக்கும்.

    நாளையுடன் ஆசிய விளையாட்டு போட்டி முடிவடைகிறது. கடைசி நாளில் கராத்தே போட்டிகள் மட்டும் நடைபெறுகிறது.

    • வில்வித்தை ஆண்கள் ஒற்றையர் காம்பவுண்டு பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் பெற்றது.
    • இதே பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வெள்ளி வென்றார்.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    நேற்று 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றது.

    இந்நிலையில், இன்று காலை வில்வித்தை ஆண்கள் ஒற்றையர் காம்பவுண்டு பிரிவில் இந்தியா தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றது.

    ஏற்கனவே, வில்வித்தை பெண்கள் காம்பவுண்டு தனிநபர் பிரிவில் இந்தியா தங்கமும், வெண்கலமும் வென்றுள்ளது.

    இந்திய அணி இதுவரை 24 தங்கம், 35வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 99 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

    • வில்வித்தை பெண்கள் ஒற்றையர் காம்பவுண்டு பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் பெற்றது.
    • ஏற்கனவே வில்வித்தையில் இந்தியாவின் அதிதி கோபிசந்த் சுவாமி வெண்கலம் வென்றார்.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    நேற்று 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றது.

    இந்நிலையில், இன்று காலை வில்வித்தை காம்பவுண்டு தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம் கொரிய வீராங்கனையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

    காம்பவுண்டு தனிநபர் பிரிவு, பெண்கள் காம்பவுண்டு மற்றும் காம்பவுண்டு கலப்பு அணி ஆகியவற்றில் ஜோதி சுரேகா வெண்ணாம் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே, வில்வித்தை காம்பவுண்டு தனிநபர் பிரிவில் இந்தியாவின் அதிதி கோபிசந்த் சுவாமி வெண்கலப் பதக்கம் வென்றார்.

    இந்திய அணி இதுவரை 23 தங்கம், 34 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

    • விக்ரம்ஜித் சிங் -பாஸ் டி லீடே ஆகியோர் அரை சதம் விளாசினர்.
    • பாகிஸ்தான் அணி தரப்பில் ஹரிஸ் ரவூப் 3 விக்கெட்டும் ஹசன் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    ஐதராபாத்:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்று நடக்கும் 2-வது லீக்கில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48.5 ஓவரில் 286 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து அணி தரப்பில் பாஸ் டி லீடே 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக விக்ரம்ஜித் சிங் - மேக்ஸ் ஓ'டவுட் ஆகியோர் ஆடினர். மேக்ஸ் ஓ'டவுட் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கொலின் அக்கர்மேன் 17 ரன்னில் வெளியேறினார்.

    இந்நிலையில் விக்ரம்ஜித் சிங் உடன் பாஸ் டி லீடே ஜோடி சேர்ந்து பாகிஸ்தான் பந்து வீச்சை சுலபமாக எதிர் கொண்டு விளையாடினார். சிறப்பாக விளையாடிய விக்ரம்ஜித் சிங் அரை சதம் விளாசினார். அரை சதம் அடித்த கையோடு ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பாஸ் டி லீடேயும் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து அணி 41 ஓவர் முடிவில் 205 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • சவுத் சகில், ரிஸ்வான் ஆகியோர் அரை சதம் விளாசினர்.
    • நெதர்லாந்து அணி தரப்பில் பாஸ் டி லீடே 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐதராபாத்:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்று நடக்கும் 2-வது லீக்கில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாகபஹர் ஜமான் - இமாம் களமிறங்கினர்.

    3 பவுண்டரிகள் விளாசிய பஹர் ஜமான் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த பாபர் அசாம் 5 ரன்னிலும் இமாம் 15 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இதனையடுத்து ரிஸ்வான் - சவுத் சகில் ஜோடி சிறப்பான பாட்னர்ஷிப அமைத்தனர். ஒரு பக்கம் ரிஸ்வான் பொறுமையாக விளையாட மறுபக்கம் சவுத் சகில் அதிரடியாக விளையாடினார்.

    சவுத் சகில் 32 பந்துகளில் அரை சதம் விளாசி அசத்தினார்.அதனை தொடர்ந்து ரிஸ்வான் அரை சதம் விளாசினார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 120 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய சவுத் சகில் 52 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் ரிஸ்வானும் 68 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த இப்திகார் அகமது 9 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

    188 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி திணறியது. அதனையடுத்து நாவாஸ் - சதாப்கான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சதாப்கான் 32 ரன்கள் எடுத்திருந்த போது போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். அடித்து வந்த ஹசன் அலி வந்த வேகத்தில் டக் அவுட் ஆனார்.

    இறுதியில் பாகிஸ்தான் அணி 49 ஓவரில் 286 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து அணி தரப்பில் பாஸ் டி லீடே 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ×