search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    என்னடா மைதானமே காலியா இருக்கு.. உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்திற்கு வந்த சோதனை
    X

    என்னடா மைதானமே காலியா இருக்கு.. உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்திற்கு வந்த சோதனை

    • உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.
    • டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று தொடங்கியது. நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் அரங்கேறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

    இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதாவது ரவுண்ட் ராபின் அடிப்படையில் ஒவ்வொரு அணியும் மொத்தம் 9 லீக்கில் மோதும். இதன் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அரைஇறுதி சுற்றை எட்டுவதற்கு 7 வெற்றி தேவை. பல ஆட்டங்கள் மழையால் பாதிக்க வாய்ப்பு இருப்பதால் குறைந்தது 6 வெற்றியாவது பெற வேண்டும்.


    குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

    இந்நிலையில் இந்த போட்டியை காண குறைவான ரசிகர்கள் கூட்டமே வந்துள்ளது. உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் குறைவான ரசிகர்களே வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எந்த ஒரு உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டமும் இப்படி இருந்ததில்லை.

    Next Story
    ×